Jump to content

மதரீதியான அடிப்படைவாத குழுக்களின் உறுப்பினர்கள், உதவி ஒத்தாசை புரிபவர்களை பாரபட்சமின்றி கைதுசெய்ய வேண்டும் - முன்னாள் இரா­ணுவத் தளபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மதரீதியான அடிப்படைவாத குழுக்களின் உறுப்பினர்கள், உதவி ஒத்தாசை புரிபவர்களை பாரபட்சமின்றி கைதுசெய்ய வேண்டும் - முன்னாள் இரா­ணுவத் தளபதி

மதரீதியான அடிப்படைவாத குழுக்களின் உறுப்பினர்கள், உதவி ஒத்தாசை புரிபவர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாரபட்சமின்றி கைதுசெய்ய வேண்டுமென முன்னாள் இரா­ணுவத் தள­பதி லெப்­டினன்ட் ஜெனரல் தயா ரத்­நா­யக்க வீர­கே­சரிக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியில் தெரி­வித்தார். 

daya-ratnayake.jpg

அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு:

கேள்வி:- நாட்டின் தேசிய பாது­காப்பில் காணப்­பட்ட குறை­பா­டுகள் கார­ண­மா­கவே உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா?

பதில்:- ஆம், பாதுகாப்பு சரியாக இருந்திருந்தால் இத்­த­கைய தாக்­குதல்­களை யாராலும் செய்­தி­ருக்க முடி­யாது. 

கேள்வி:- தேசிய பாது­காப்பு கட்­ட­மைப்பில் எத்­த­கைய குறை­பா­டுகள் காணப்­பட்­டன என்று கூறு­வீர்­களா? 

பதில்:- பல கார­ணங்கள் உள்­ளன. நாட்­டிற்கு தலைமை தாங்கும், ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­ச­ரவை ஆகிய தரப்­புக்கள் தேசிய பாது­காப்பு தொடர்பில் கொண்­டி­ருக்கும் மன­நிலை, அனு­பவம், புரிதல், இலக்கு ஆகி­ய­வற்றில் பல குறை­பா­டுகள் உள்­ளன. இது மிகப்­பெரும் பிரச்­சி­னை­யாகும். 

அடுத்து, எமது நாட்டில் தேசிய பாது­காப்பு குறித்த விசேட கலா­சா­ர­மொன்று காணப்­பட்­டது. அந்த கலா­சாரம் போர் நிறைவின் பின்­ன­ரான சூழலில் பாரி­ய­ளவில் சிதைய ஆரம்­பித்­தது. 

இதனால் நாட்டின் தேசிய பாது­காப்பு குறித்து தலை­வர்கள், அதி­கா­ரிகள், பொது­மக்கள் என அனை­வ­ரி­னதும் அவ­தானம் இல்­லாது போகும் சூழல் மேலெ­ழுந்­தி­ருந்து. இந்த சூழலைத் தான் அடிப்­ப­டை­வா­தி­க­ளாக இருந்­த­வர்கள் தீவி­ர­வாத தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்­காக பயன்­ப­டுத்­தி­யுள்­ளார்கள். இரா­ணு­வத்தில் சேவை­யாற்றிய ஒருவர் என்ற அடிப்­ப­டையில் தாக்­குதல் சம்­பவம் குறித்து நான் கொண்­டுள்ள புரி­த­லாக உள்­ளது. 

கேள்வி:- குண்­டுத்­தாக்­குதல் குறித்த தக­வல்கள் ஏற்­க­னவே கிடைத்தும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்ற பாரிய குற்­றச்­சாட்டு உள்ள நிலையில் புல­னாய்வு தக­வ­லொன்று கிடைக்­கப்­பெற்றால் அது எவ்­வாறு பரி­மாற்­றத்­திற்கு உள்­ளா­கு­மெனக் கூறு­வீர்­களா?

பதில்:- முத­லா­வ­தாக எமக்கு தகவல் தான் கிடைக்கும். தகவல் கிடைத்­ததும் அதனை ஆய்­வுக்கு உட்­ப­டுத்­துவோம். அத­னை­ய­டுத்து, தலை­மை­யொன்றால் அத்­த­க­வலை புல­னாய்வு செய்­வ­தற்­கான வழி­காட்­டுதல் செய்­யப்­படும். அத­ன­டிப்­ப­டையில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு புல­னாய்வு கட்­ட­மைப்­புக்கள் ஊடாக உரிய தரப்­புக்­க­ளுக்கு எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்து அறி­விப்புச் செய்­யப்­படும். கீழ் மட்­டத்­தி­லி­ருந்து மேல் மட்டம் வரையில் உள்ள அனைத்து அதி­கா­ரி­க­ளுக்கும் இது பொறுப்­பான கட­மை­யாகும். உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து எமக்கு முன்­கூட்­டியே தக­வல்கள் கிடைத்­துள்­ளன. 

ஆனால், அதற்கு சட்டச் செயற்­பா­டுகள் முறை­யாக இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை. கிடைக்­கப்­பெற்ற தக­வல்­களை நகைச்­சு­வை­யாக பார்த்­த­மையால் பாரிய அழி­வுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது என்­பது வெளிப்­ப­டை­யா­கி­யுள்­ளது. 

கேள்வி:- உள்­நாட்டு புல­னாய்­வா­ளர்­களின் தக­வல்­க­ளுக்கு அப்பால் இந்­திய புல­னாய்வுத் தரப்­பி­லி­ருந்து மூன்று தட­வைகள் முன்­னெச்­ச­ரிக்கை தக­வல்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­தல்­லவா? 

பதில்:- ஆம், இந்­திய புல­னாய்வுத் துறை­யி­னாலும் கூறப்­பட்­டுள்­ளது. ஆனாலும் நாட்டில் உள்­ள­வர்­களின் பொருட்­ப­டுத்­தாத தன்­மையே விளை­வு­க­ளுக்கு கார­ண­மா­கின்­றது. தேசிய பாது­காப்பு விட­யத்­தினை பொருட்­ப­டுத்­தாது இருக்­க­மு­டி­யாது. மிக­முக்­கி­ய­மா­ன-­வி­ரி­வான தகவல் கிடைத்­துள்­ள­போதும் மக்­களை குழப்­பக்­கூ­டாது என்ற அடிப்­ப­டையில் பொருட்­ப­டுத்­தாது விடப்­பட்­டுள்­ளது. தேசிய பாது­காப்பு விட­யத்தில் அவ்­வாறு சிந்­திக்க முடி­யாது. தீவி­ர­மாக கவனம் செலுத்தி பாது­காப்­புத்­துறை, பொது­மக்­க­ளுக்கு அறி­வித்­தி­ருக்க வேண்டும். அவ்­வா­றான எந்த செயற்­பாடும் நடை­பெற்­றி­ருக்­க­வில்லை. 

கேள்வி:- பாது­காப்­புத்­து­றையின் தலை­மையை ஜனா­தி­பதி கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அவ­ருக்கு இத்­த­கைய தகவல் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்­கிறார். பிர­தமர் தனக்கும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்­கிறார். பாது­காப்பு செய­லா­ளரே தவ­றி­ழைத்­த­தாக கூறப்­ப­டு­கின்­றது. இந்த நிலை­மை­களை எப்­படி பார்க்­கின்­றீர்கள்? 

பதில்:- ஜனா­தி­பதி, பிர­தமர் தமக்கு தகவல் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்று கூறி­னாலும் பாது­காப்புச் செய­லாளர் தகவல் தெரிவித்­த­தாக கூறு­கின்றார். இதில் யார் சரி, யார் தவறு என்று என்னால் கூற­மு­டி­யா­துள்­ளது. மிக முக்­கி­ய­மான விட­ய­மொன்றில் நாட்டின் தலை­வர்கள் பொறுப்­பற்ற வகையில் செயற்­ப­டு­கின்ற சூழல் எத­னையும் செய்ய முடி­யாது. 

பாது­காப்புச் செய­லா­ள­ருக்கு தகவல் கிடைத்து, அதனை அவர் ஜனா­தி­பதி உள்­ளிட்ட உரிய தலை­வர்­க­ளுக்கு மறைத்­தி­ருந்தால் அது தேசத்­து­ரோ­க­மாகும். அத­ன­டிப்­ப­டையில் அவரை சிறைக்கு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால், அவ்­வா­றான எந்த செயற்­பா­டு­களும் இடம்­பெ­ற­வில்­லையே. பரஸ்­பர கருத்­துக்­களே வெளி­யி­டப்­ப­டு­கின்­றன. ஆகவே, நாட்டை சரி­யாக நிர்­வாகம் செய்­ப­வர்­களை ஆட்­சிக்கு கொண்டு வரு­வ­துதான் மக்­க­ளுக்கு உள்ள ஒரே தெரி­வாகும். 

கேள்வி:- உங்­க­ளு­டைய பார்­வையில் இலங்கை இலக்கு வைக்­கப்­ப­டு­வ­தற்கு என்ன காரணம் என்று கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- போரின் பின்­ன­ரான சூழலில் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­ட­மையால் அர­சுக்கு எதி­ரான தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது என்று கொள்­ள­மு­டி­யாது. உல­கத்­ தீ­வி­ர­வாத அமைப்­பான ஐ.எஸ் உள்­ளூரில் உள்­ள­வர்­களை பயன்­ப­டுத்தி தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளது. ஐ.எஸ் அமைப்பு ஈரான், சிரியா போன்ற நாடு­களில் தோல்­வி­களைக் கண்­டுள்­ளது. அதற்கு பழி­ தீர்க்க வேண்டும் என்­பது அவர்­களின் மன­நிலை. 

ஆகவே, அமெ­ரிக்கா உள்­ளிட்ட மேற்­குலக நாடுகள், கிறிஸ்­த­வர்கள் மீது தாக்­குதல் நடத்­த­வேண்டும் என்­பதே இலக்­காகும். இதற்­காக அமெ­ரிக்கா உள்­ளிட்ட மேற்­கு­லக நாடு­க­ளுக்குச் செல்ல வேண்டும் என்­றில்லை. தீவி­ர­வா­தி­களின் பார்­வையில் இலங்கை போன்று வேறெங்கும் வாய்ப்­புக்கள் நிறைந்த நாடு இல்­லாமல் இருந்­தி­ருக்­கலாம். 

தேசிய பாது­காப்பு என்­ப­தையே நாம் மறந்­தி­ருந்தோம்.  ஆகவே, மிகவும் சாது­ரி­ய­மாக செப்­டெம்பர் 11 இரட்­டைக்­கோ­புர தாக்­கு­த­லுக்கு பின்னர் மிகப்­பெரும் அளவில் நடை­பெற்ற தாக்­கு­த­லொன்­றாகும். அத்­துடன் சொற்ப இடை­வெ­ளியில் பாரிய இழப்­பினை ஏற்­ப­டுத்தும் வகையில் உல­கத்­தி­லேயே முதற்­த­ட­வை­யாக இடம்­பெற்ற தாக்­கு­தல்­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றது. உல­கத்தில் முதல்­நிலை போராட்ட அமைப்­பாக காணப்­பட்ட விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பு கூட இவ்­வா­றான தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தில்லை. ஆகவே, எமது தவ­றி­னா­லேயே இத்­த­கைய தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றுள்­ளன. 

கேள்வி:- ரி.ஏ.ரி.பி எனப்­படும் குண்­டுகள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்ற நிலையில், இவ்­வா­றான குண்­டுகள் இலங்­கை­யினுள் தயா­ரிப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ள­னவா?

பதில்:- இந்தக் குண்­டுகள் பாரிய பொருட்­களைப் பயன்­ப­டுத்தி தயா­ரிக்­கப்­பட்­டவை அல்ல. சாதா­ர­ண­மாக தயா­ரிக்க கூடி­யவை தான். எமது நாட்டில் முப்­பது வருட போர் நடை­பெற்­றது. தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்­காக குண்­டுகள் இங்கு தான் முதலில் செய்­யப்­பட்ட வர­லாறும் இருக்­கின்­றது. குண்­டுகள் தொடர்­பி­லான விட­யங்­களை அன்­றாடம் கேட்­ட­றிந்தும், நேர­டி­யாக பார்த்தும் பல அனு­ப­வங்கள் உள்­ள­வர்கள் இல்­லா­ம­லில்லை. 

எனவே, இத்­த­கைய குண்­டு­களை தயா­ரிப்­ப­தற்கு வெளியில் இருந்து தான் நபர்கள் வர­வேண்டும் என்­றில்லை. மேலும் இந்தக் குண்­டுகள் சிறிய அள­வி­லேயே   உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­மையால் இவற்றை ஓரி­டத்­தி­லி­ருந்து பிறி­தொரு இடத்­திற்கு கொண்டு செல்­வ­திலும் பிரச்­சி­னைகள் காணப்­பட்­டி­ருக்­க­வில்லை. குண்டு தயா­ரிப்­ப­தற்­கான நிதி பிரச்­சி­னையும் இருந்­தி­ருக்­காது என்று கரு­து­கின்றேன். 

கேள்வி:- விடு­த­லைப்­பு­லி­களின் போராட்­டத்­திற்கும் தற்­போ­தைய தாக்­கு­தல்­க­ளுக்கும் இடையில் பாரிய வேறு­பா­டுகள் இருப்­ப­தனை உணர்­கின்­றீர்­களா?

பதில்:- விடு­த­லைப்­பு­லிகள் இனப்­பி­ரச்­சி­னையை முன்­னி­லைப்­ப­டுத்தி தனி இராஜ்­ஜியம் ஒன்றைக் கோரியே போராட்­டத்­தினை நடத்­தி­யி­ருந்­தார்கள். ஆனால், ஈஸ்டர் தாக்­கு­தலில் ஈடு­பட்­ட­வர்கள் மதத்தின் மீதான நம்­பிக்­கையில் அடிப்­ப­டையில் கருத்­தியல் ரீதி­யாக தீர்­மா­னித்தே தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இதுவே பிர­தான வேறு­பா­டாக இருக்­கின்­றது. சாதா­ரண மக்­களை படு­கொலை செய்­வது தீவி­ர­வாத செயற்­பா­டே­யாகும். ஆனால், பயங்­க­ர­வாதச் செயற்­பா­டுகள் என்ற அடிப்­ப­டையில் நோக்­கினால் இரண்டும் சம­னா­கவே உள்­ளன. 

கேள்வி:- விடு­த­லைப்­பு­லி­களின் போர் அணு­கு­மு­றை­க­ளுடன் ஒப்­பிட்டுப் பார்க்­கையில் தீவி­ர­வாத தாக்­கு­தல்கள் நேரெ­தி­ராக இருக்­கையில், அதற்கு முகங்­கொ­டுக்கக் கூடிய ஆற்றல் படைத்­த­ரப்­புக்கு உள்­ளதா? 

பதில்:- விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் தரை, ஆகாய, கடல் மார்க்­க­மாக போரிட்டு வெற்றி பெற்ற படை­யி­ன­ருக்கு தீவி­ர­வா­தக்­ கும்­பல்­களை ஒழிப்­ப­தென்­பது பெரிய விட­யமன்று. ஆனால்  படை­யினர் ஆயு­த­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு முன்­ன­தாக புல­னாய்வுக் கட்­ட­மைப்பு, பாது­காப்பு துறை அதி­கா­ரிகள், அர­சியல் தரப்­பினர் ஆகியோர் சரி­யாக செயற்­பட்­டாலே தீவி­ர­வா­தத்தை கட்­டுப்­பாட்­டுக்குள் கொள்­ளக்­கூ­டிய நிலை­மை­களே தற்­போ­துள்­ளன. இந்தச் சூழலை சரி­யாக கையாள்­வதே புத்­தி­சா­து­ரி­ய­மான விட­ய­மாகும்.

1983இல் உரு­வான பிரச்­சி­னையை சரி­யாக கையாண்­டி­ருக்­கா­ததன் விளைவு 2009 வரையில் நீடித்­தி­ருந்­தது. இதனால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான நாட்டு மக்கள் உயி­ரி­ழக்க நேரிட்­டது. 30 ஆயிரம் படை வீரர்கள், 34 ஆயி­ரத்­திற்கு மேற்­பட்ட விடு­த­லைப்­பு­லிகள் உள்­ளிட்ட ஆயு­தப்­ப­டை­யினர் மர­ணிக்க நேரிட்­டது. நாட்­டிற்­காக செயற்­ப­ட­வல்ல சிறந்த பலரை இக்­கா­லத்­தினுள் இழக்க நேரிட்­டுள்­ளது. 

போரின் கார­ண­மாக தமிழ் மக்­களின் கலா­சாரம், கல்வி உள்­ளிட்ட பல விட­யங்கள் பாரி­ய­ளவில் சிதை­வுக்­குள்­ளா­கி­யுள்­ளன. உல­கத்தில் சிறந்த ஒழுக்கம், குணாம்­சங்கள், நெறி­க­ளுடன் மேலாண்­மை­யுடன் வாழ்ந்த சமூ­கமே தமி­ழி­னத்­த­வர்கள். போரினால் அவர்கள் மிகவும் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதே­போன்று சிங்­கள சமூகத்­திலும் ஆயி­ரக்­க­ணக்­கான இழப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ளன. இப்­ப­டி­யி­ருக்க, மீண்டும் முஸ்லிம் சமூ­கத்­துடன் மோத­லுக்குச் செல்­வது பொருத்­த­மற்ற செயற்­பா­டாகும். இதனை முஸ்லிம் தலை­மைகள் புரிந்து கொண்டு தமது சமூகம் சார்ந்த உரிய வழி­காட்­டல்­களை செய்­வ­தற்கு முன்­வர வேண்டும். 

கேள்வி:- தாக்­கு­தலின் பின்னர் படை­யினர் முன்­னெ­டுத்து வரும் செயற்­பா­டு­களை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- குண்­டுத்­தாக்­கு­தலின் பின்னர் உட­ன­டி­யாக செயற்­பட்டு வரும் படை­யினர் ஆயு­தங்கள், குண்டு தயா­ரிப்­ப­தற்­கான பொருட்கள் உள்­ளிட்ட அனைத்­தையும் கண்­ட­றிந்து அவற்றை கைப்­பற்றி வரு­கின்­றனர். அத்­துடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் கைது செய்­யப்­பட்டும் வரு­கின்­றார்கள். ஆகவே, தீவி­ர­வாத தரப்­பினர் மீண்டும் குழு­வாக இணை­யாத வகை­யிலும், மற்­று­மொரு தாக்­கு­தலை செய்ய முடி­யாத வகை­யி­லு­மாக கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்டு வந்­து­விட்­டனர். தற்­கா­லி­க­மாக இந்த விடயம் சிறப்­பான மட்­டத்தில் இருக்­கின்­றது. 

கேள்வி:- தீவி­ர­வாத தாக்­கு­தல்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்கு உட­ன­டி­யாக எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும்? 

பதில்:- மத­ரீ­தி­யான அடிப்­ப­டை­வாத தீவி­ர­வா­தக்­கு­ழுக்கள் ஒரே இரவில் உரு­வாக்­கப்­ப­டு­பவை அல்ல. ஆகவே உட­னடிச் செயற்­பா­டு­க­ளாக, தாக்­கு­தல்கள் மேற்­கொள்ள தயா­ராக இருப்­ப­வர்­களை பார­பட்­ச­மின்றி, கைது­செய்ய வேண்டும். அத்­துடன் அவர்­க­ளுக்கு உதவி ஒத்­தாசை புரி­ப­வர்கள் என அனை­வ­ரையும் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர­வேண்டும். 

இத­னை­விட, தீவி­ர­வாதச் செயற்­பா­டு­க­ளுக்குள் சாதா­ர­ண­மா­ன­வர்­களை மூளைச் சலவை செய்து உள்­ளீர்க்கும் கருத்­தியில் ரீதி­யான விட­யங்­களை முற்­றாக நிறுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும். பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­ப­வர்­களே தீவி­ர­வா­த­கு­ழுவில் இணையும் அள­விற்கு சிந்­திப்­பார்கள். அவர்­களின் பிரச்­சி­னை­களை கண்­ட­றிந்து தீர்­வு­களை வழங்க வேண்டும்.  பொறுப்­புள்ள நாட்டின் தலை­வர்கள், அதி­கா­ரிகள் தமது பொறுப்­புக்­க­ளி­லி­ருந்து தவ­று­கின்­ற­போது அவர்­களை சட்­டத்தின் முன்­நி­றுத்­து­வ­தற்­கான சட்ட ஏற்­பா­டு­க­ளையும் ஏற்­ப­டுத்த வேண்டும். 

மேலும், போர்க்­கா­லத்தில் நாம் பொது­மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்­வு­களை ஏற்­ப­டுத்தி அவர்­களின் ஒத்­து­ழைப்­புடன் பாது­காப்பு வலை­ய­மைப்பு செயற்­பா­டு­களை முறை­யாக அமைத்து செயற்­ப­டுத்தி வந்­தி­ருந்தோம். அத்­த­கைய வலை­ய­மைப்­பினை செயற்­ப­டு­த்­து­வதும் அத்­த­கைய திட்­ட­மிட்ட தாக்­குதல் செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்த உதவும். 

கேள்வி:- ஆனால், தற்­போது இன­மு­று­கலை ஏற்­ப­டுத்தும் வகையில் தாக்­கு­தல்கள் தொடர்ச்­சி­யாக நடை­பெ­று­கின்­ற­னவே?

பதில்:- இருப்­பினும், பொறுப்­புள்ள அர­சாங்கம் என்ற வகையில், இனங்­க­ளுக்கு இடை­யி­லான முறு­கல்­களை  கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­றிட்­டத்­தினை முன்­னெ­டுக்க வேண்டும். தாக்­கு­தல்­களின் பின்னர் அர­சாங்கம் அந்த விடயத்தில் போதியளவு கவனம் எடுத்து செயற்படவில்லை என்பதையே அவதானிக்க முடிகின்றது. இதனால் தான் முரண்பாடான, மோதல் நிலைமைகள் தோற்றம் பெறுகின்றன. இந்த விடயத்தினை மிகக் கவனமாக கையாளுவதிலிருந்து விலகி நின்றால், இந்த நாட்டில் மீண்டும் 1983ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரம் போன்று மீண்டுமொரு மோசமான நிலைமைக்கு வித்திடுவதாக அமைந்து விடும். போர் எமக்கு வேண்டாம் என்ற மனநிலையில் தற்போது உள்ளோம். எனவே, மீண்டும் வன்முறைச் சூழலுக்கு இடமளிக்கக் கூடாது என்பதை அனைவரும் மனரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். 

கேள்வி:- குண்டுத்தாக்குதல்கள் மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக சில தரப்புக்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். உண்மையில் நாடு இன்னமும் அச்சுறுத்தல் நிலையில் தான் உள்ளதா? 

பதில்:- நான் சான்றிதழ் வழங்க முடியாது. எனினும், தீவிரவாத செயற்பாடுகளை முடக்கும் வகையில் நான் ஏற்கனவே கூறியவாறான உரிய நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்பட வேண்டும். நாட்டின் தலைமை நேர்த்தியாக செயற்படுவதுடன், இதற்கான கொள்கையொன்றை வகுத்து அதன் பிரகாரம் செயற்பட வேண்டும். மக்கள் அச்சத்துடன் இருக்கின்ற இந்த தருணத்தில் வெவ்வேறு பட்ட கருத்துக்கள் வெளிப்படுவதானது நிலைமைகளை மோசமாக பாதிப்படையச் செய்துவிடும்.  ஆகவே, அரசாங்கம் சரியான நிருவாக கட்டமைப்பில் அவற்றைக் கையாள வேண்டும். தற்போதைய தருணத்தில் சரியான தீர்மானங்களை எடுக்கத்தவறுகின்ற பட்சத்தில் நிலைமைகள் கை மீறிச் சென்று கட்டுப்படுத்த முடியாத சூழலை உருவாக்கி விடும். இது  முழு நாட்டின் நடைமுறையையும் பாதிக்கும் ஆபத்துள்ளது. 

 

- நேர்காணல் - ஆர். ராம்

 

http://www.virakesari.lk/article/56242

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.