• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
 • ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • ஆடாத மனமும் ஆடுதே .......!   😄
  • எவ்வளவு இலகுவாக இழிவு படுத்துகிறோம். உயிரை கொடுக்கத்துணிந்த போது விடுதலைப் போராளிகள், தற்போது கைக் கூலிகள் ? உங்கள் கணிப்பு சரியாகவே இருந்தாலும் அவர்களை இழிவு படுத்தாமல் கூறுவதில் தவறேதும் இல்லையே ?
  • தொடங்கும் தேர்தல் நாடகங்கள்     புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகள் என்று நாம் பேசத் தொடங்கினாலும், யதார்த்தம் நம் முகங்களில் ஆழ அறையும் போது, அச்சமும் கோபமுமே மிஞ்சுகின்றன.    இப்போது, எம் சமூகத்தின் பிரதான பேசுபொருள்களாக இருப்பவை, எவை என்பதை நோக்கின், மூன்று விடயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவியலும்.  முதலாவது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்கள்; இரண்டாவது ஜெனீவாவின் பேராலும் அமெரிக்காவின் பேராலும் கட்டமைக்கப்படுகின்ற நம்பிக்கைகள்; மூன்றாவது, தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டும் பாடுவது தொடர்பானது.    இவை மூன்றும், ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை.  இன்று இலங்கையில், சிங்கள பௌத்த தேசியவாதம் மேலோங்கியுள்ளது. ஆட்சி அதிகாரத்தின் அனைத்துத் தளங்களிலும் அது நீக்கமற நிறைந்துள்ளது.  இந்தச் சவாலை, நாம் எவ்வாறு எதிர் கொள்வது என்பதுபற்றி, சிறுபான்மையினர் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.    அனைத்தையும் தேர்தல் அரசியலாகப் பார்த்துப் பழகிவிட்ட அரசியல் கட்சிகளைக் கொண்டதொரு தேசத்தில், நீண்டநோக்கில் விடயங்களை அலசும் பழக்கம் கிடையாது.  இப்பழக்கம், குறிப்பாகத் தமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் செய்கின்ற கட்சிகளிடம் இல்லை. ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியல், வெற்றுக் கூச்சல்களுக்கும் உணர்ச்சிகர உச்சாடணங்களுக்கும் வெளியே, காத்திரமான பங்களிப்பை வழங்கத் தயாராக இல்லை. இக்கட்சிகளிடையே, அரசியல் வேலைத்திட்டம் என்பது, தேடியும் கிடைக்காத ஒரு விடயமாகி விட்டது.     “அடுத்த தீபாவளிக்குள் தீர்வு” என்று உறுதிபடச் சொன்னார்கள். இன்று தீபாவளிகள் பல கடந்து, பொங்கலும் முடிந்த நிலையில்,‘சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதை’யாய் தமிழர்களின் எதிர்காலம் மாறியுள்ளது.  தீர்வுக்கு நாள் குறித்தவர்களே, எதிர்காலத்தைக் கோடு காட்டியவர்களை ‘அறிவிலிகள்’ என்றும் ‘அரசியல் ஞானம் அற்றவர்கள்’ என்றும் சொன்னார்கள். இன்று நாம் எங்கே வந்து நிற்கிறோம் என்பதை, நின்று நிதானிக்க வேண்டியுள்ளது.     இப்போது அலுவல்கள் தேர்தல்களை மய்யப்படுத்தியே அரங்கேறுகின்றன. சிங்களப் பெருந்தேசியவாத அகங்காரத்துக்கு எதிரான தமிழ்த்தேசிய வெறி, எந்த வகையிலும் பயனற்றது.   எதிர்வரும் தேர்தல்களில், தமிழ்த் தரப்புகள் எத்தனை ஆசனங்களைப் பெற்றாலும், அவை எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்த மாட்டா. அந்த ஆசனங்களை அலங்கரிப்போர், சுகபோகங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அனுபவிப்பார்; அதற்கு மேல் விளையும் பயன் எதுவுமில்லை. இப்போதாவது, எமது நாடாளுமன்ற அரசியல் பிரதிநிதிகள், கடந்த ஏழு தசாப்த காலத்தில் சாதித்தது என்ன என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.  இப்போதே தேர்தலுக்கான நாடகங்கள் தொடங்கிவிட்டன. ஜெனீவாவில் இலங்கையை அமெரிக்கா இறுக்கப்போகிறது என்ற கரடியை, எமது பிரதிநிதிகளும் குத்தகைக்காரரும் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு, இங்குள்ள மேற்குலகத் தூதரகங்களும் ஒத்தூதுகின்றன.    இப்போது இலங்கையில் ஜனநாயகத்துக்கான வெளி, மெதுமெதுவாகக் குறைகிறது. இதைத் தடுத்து நிறுத்துவது அவசியம். ஜனநாயகத்துக்கான வெளி குறைவதும், ஒருவகையில் தமிழ் நாடாளுமன்றத் தலைவர்களுக்கு வாய்ப்பானது. ஏனெனில் குறைவடைகின்ற வெளி, அவர்களின் மீதான விமர்சனங்களுக்கான வாய்ப்பையும் இல்லாமல் செய்யும்.  இன்றைய அவரசத் தேவை, இந்த ஜனநாயக இடைவெளியைத் தக்கவைப்பது. அதற்குப் பரந்துபட்ட மக்கள் ஐக்கியமும் செயற்பாடும் தேவை. இதைத் தேசியவாதங்களின் கால்களில் ஊன்றி நின்றுகொண்டு செய்யவியலாது.    இன்று மக்கள் இன, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு, இலங்கையரின் கருத்துரிமையையும் சுதந்திரத்தையும் தக்கவைப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டாக வேண்டும். எமக்கு இருந்த ஜனநாயக உரிமைகளின் மீது, எதிர்பார்த்தது போலவே, ‘சுருக்கு கயிறு’ வேகமாக இறுகிறது. இதை ஒரு பாராளுமன்றத் தேர்தலால் தடுத்து நிறுத்த இயலாது. இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.    தேர்தல் நெருங்கும் போது, புதிய கதைகள், புதிய தீபாவளிகள், புதிய வாக்குறுதிகள் என அனைத்தும், எம்மைச் சூழும். இந்த நாடகங்களுக்குள் ஆட்பட்டு அரங்காடியாவதா அல்லது அகப்படாமல் சுயமாய் சிந்தித்து செயற்படுவதா என்பதே எம்முன்னுள்ள தெரிவு. ஏனெனில், இனிவரும் நாடகங்களில், பார்வையாளர்கள் என்று யாரும் இருக்க முடியாது.       http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தொடங்கும்-தேர்தல்-நாடகங்கள்/91-244228
  • தமிழ்த் தலைவர்கள் சிந்திப்பார்களா? -இலட்சுமணன் கிழக்கின் அரசியல் நிலைவரங்களைப் புரிந்து கொண்டும் கிழக்குத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்ற கோஷங்களை முன்வைத்துக் கொண்டும், தமிழ் அரசியல் கட்சிகளும் மாற்றுக் கட்சிகளும், ஒன்றுபடாமல், பிரிந்து நின்று பல்வேறு பிரயத்தனங்களையும் தகிடுதத்தங்களையும் நீயா, நானா எனக் கங்கணம் கட்டிக் கொண்டு ஆடுகின்றன.  தமிழர் அரசியல் வரலாற்றில், தேர்தல் காலங்களில் உரிமை, சலுகை பற்றி பேசிக் காலத்தைக் கடத்தியவர்கள் இன்று, அபிவிருத்தி பற்றியும் பேரம் பேசல்கள் பற்றியும் பிரதிநித்துவத்தைக் காப்பாற்றுவது பற்றியும் கருத்துகளை முன் வைக்கின்றார்கள். இருந்தபோதும், இங்கு எல்லோருமே, தமிழரின் ஒற்றுமை விடயத்தில், கீரியும் பாம்பும் போலவே உள்ளனர்.  உண்மையில், தமிழ் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றும் சிந்தனை யாருக்காவது இருந்தால், அவர்கள் அல்லது  தமிழ் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.  போட்டித் தவிர்ப்புகளைச் செய்ய  வேண்டும்; பரஸ்பர விட்டுக்கொடுப்புகள் செய்து, செயலாற்ற வேண்டும். ஆனால், இத்தகையதொரு தர்க்கரீதியான நியாயப்பாட்டுக்கு, தமிழ் மக்கள், தமிழ்த் தரப்புகள் வருவதற்கு, எவரும் தயாராக இல்லை என்பதே, உண்மையான விடயமாகும்.  இந்த வகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் கட்சிகளை விட, எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வரும் தமிழ்க் கட்சிகளின் எண்ணிக்கை, மிகமிக அதிகம் என்ற நிலையே, தற்போது நிலவுகின்றது.  இதைவிட, தமிழ்க் கட்சிகளிடையே கூட்டுகளுக்கான பிடுங்குப்பாடுகளும் போட்டா போட்டிகளும் நிபந்தனைகளும் அதிகமதிகமாகக் காணப்படுகின்றன. இத்தகைய சிக்கல் மிக்க சூழ்நிலையில், எத்தகைய கொள்கைகளும் விளக்கங்களும் இல்லாமல், இன்று அரசியல் கூட்டுகள் உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டுக்குள், எத்தனை கூட்டுகள் வாக்கு வங்கிகள் உள்ள அரசியல் கூட்டுகள் என்பதை எல்லாம், மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.  கிழக்கில் தமிழர் உரிமை தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பாகவும் பேசியபடி மூன்று அல்லது நான்கு கூட்டுகள் இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ள.  இவற்றில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பொதுஜன பெரமுன கூட்டு, ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, சீ. வி விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்றுத் தலைமை அணி, சுயேச்சைக் குழுக்கள் எனப் பல்வேறு குழுக்கள், களமிறங்கத் தயாராகி வருகின்றன.  இருந்தபோதும், கட்சிகளது கொள்கைகள், வாக்குவங்கி, பின்புலம், அடித்தளம் என்பவை, எத்தகையவை என்பது தொடர்பாக, இந்தக் கட்சிகள் அனைத்தும் புரிந்துகொண்டுதான் களமிறங்குகின்றனவா? அல்லது, இம்முறை கிழக்கின் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் நோக்கில் களமிறங்குகின்றனவா? என்றும், தமிழ் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கப் போவதாகவும் தமிழ் மக்களின்  இருப்பும் பிரதிநிதித்துவமும் தமிழ் முதலமைச்சர் ஒருவரைக் கிழக்குக்குப் பெற்றுக்கொடுப்பதில், உறுதியாக நின்று உழைக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அதன் காரணமாக, எந்தவித நிபந்தனையும் அற்ற முறையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளது. இச்சூழ்நிலையில், இச்செயற்பாட்டையும் விட்டுக்கொடுப்புடன் கூடிய முன்மாதிரியான ஆதரவையும் சுயலாபங்களுக்கான காய்நகர்த்தல் என்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆசனத்துக்குக் கிழக்கில் ஆசைப்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனம், ஒற்றுமைச் செயற்பாட்டை சீர்குலைக்கும், பேரினவாத சக்திகளுக்குத் துணைபோகும் தன்மை கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.  கிழக்கின் அரசியல் நிலை தொடர்பாக, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முற்போக்கான இந்த முடிவு, ஒரு அரசியல் கட்சியின், அரசியல் சாணக்கியம் மிக்கதாகவும் ராஜரீக மூலோபாய அணுகுமுறைகளைக் கொண்டதாகவும் இத்தகைய அரசியல் நகர்வுகள் தொடர வேண்டும் என்றே தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறது.  ஒற்றுமையின் அவசியத்தை, கொள்கைகளுக்கு அப்பால் வலியுறுத்தி நிற்கும், கிழக்குத் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் நலன் சார்ந்த சேவைகளின் மூலோபாயமான சிந்தனையும் வடக்கு, கிழக்கு மக்களின் பலத்தையும் உறுதிப்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட ஆரோக்கியமான அரசியல் நகர்வாகவே, இந்த அணுகுமுறை அரசியல் விமர்சகர்களாலும் நோக்கப்படுகின்றது.  இதுவரை, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக வாய்கிழிய கத்தும், எந்தவோர்அரசியல் கட்சியாக இருந்தாலும் இத்தகைய கைங்கரியம் எவராலும், எந்தக் கட்சியாலும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் அரசயல் விமர்சகர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.  இந்நிலையில், கிழக்கின் அரசியல் நிலை தொடர்பாக, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்  மன்னார் மாவட்ட அரசியல் பொறுப்பாளர், கிழக்கின் அரசியல் யதார்த்த நிலை தொடர்பாக, ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்திய கருத்துகள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது அரசியல் நிலைப்பாட்டில், மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளைத் தங்கள் கட்சிக் கொள்கைக்கு  மேலாக முன்னெடுக்கும் ஜனநாயகப் பண்பை வெளிகாட்டி நிற்கிறது. அரசியல் கட்சிகளின் ஒற்றுமைக்கு வலுவூட்டக் கூடய, இந்த அணுகுமுறை என்பது, ‘மக்களுக்காகவே அரசியல்’ என்பதாகவே அமையுமே தவிர, ‘அரசியலுக்காக மக்கள் அல்ல’ என்பதை மிக நிதானமாக வெளிக்காட்டி நிற்கிறது.  உண்மையில், தமிழ்த் தேசிய அரசியல், விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பதிவுகளில் இத்தகைய முன்மாதிரியான முன்னெடுப்புகள் பதியப்பட வேண்டும்.  ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது கொள்கை ரீதியாக அன்றி, செயற்பாடுகள் ரீதியாக முரண்பட்டு, வெளியேறிச் சென்றது என்பதுவே கடந்த கால நிகழ்வாகும். ஆயினும், அச் செயற்பாடு அல்லது விலகலானது, கட்சி நலன் சார்ந்த ஒரு விடயமாகவே நோக்கப்பட்டது.  ஆனால், இத்தகைய போட்டித் தவிர்ப்புகள், பரஸ்பர விட்டுக்கொடுப்புகள் இன்றைய அரசியல் நிலைமைகளில், மிகவும் கருத்தாளமாக ஊன்றிச் சிந்திக்க வேண்டியதாகும்.  அதாவது, கிழக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்க எடுத்த முடிவானது, விடுதலைப் போராட்டமானது அரசியல் ரீதியாகவும் இனரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை உண்மையாக வேண்டிநிற்பதால்,  அந்த இலக்கை அடைவதற்கான ஒரு விட்டுக்கொடுப்பாகவே இந்த ஆதரவை வெளிக்காட்டி நிற்கிறது.  தமிழனம், தொடர்ச்சியான இழப்புகளையும் தியாகங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. தாயகக் கனவுகளுக்கான இலட்சிய வேட்கைகள், ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னும் ஓயவில்லை.  மக்கள் மனங்களுக்குள் பொங்கியும் பொசுங்கியும்  வெந்தும் கொண்டிருக்கின்றனர். நியாயமான அரசியல் தீர்வுகளும் நிம்மதியான வாழ்க்கையும் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன. சர்வதேசம் காப்பாற்றுமா, ஜெனீவா காப்பாற்றுமா, இந்தியா காப்பாற்றுமா, 13 முழுமையாக வருமா, அரசியல்  தீர்வு இன்று வருமா, நாளை வருமா போன்ற நியாயபூர்வமான கனவுகளுடனும் ஏக்கங்களுடனும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்குத்தான் இந்த முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.  ஆனால், தமிழ்த் தேசிய அரசியல், குறுகிய உணர்வையும் உணர்வெழுச்சியையும் வௌிப்படுத்தும்  குதர்க்க அரசியல்வாதிகளுக்கு எவ்வாறு தெரியப்போகிறது; தெரிந்து கொண்டு, எப்போது சரியான பாதையில் பயணிக்கப் போகிறார்கள். தேர்தலில் போட்டியிடுவது என்பது, வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இருக்க வேண்டும். இதுவே, பலரது போராட்டக் கனவுகளாகவும் கொள்கைகளாகவும் இருக்கின்றன.  இதற்கு மறுதலையான, விசம் நிறைந்த கொள்கைகள், நிராகரிக்கப்படும் போதே, மக்களின் உண்மையான விடுதலை என்பது, அதுவும் அரசியல் விடுதலை என்பது நிதர்சனமாகும். எனவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது, தற்போதைய அரியல் சூழலில், தமிழ் மக்களின் தனித்துவத்தையும் அவர்களது நீண்ட நாள் அபிலாசைகளையும் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட வேண்டும்.  துன்பப்படும் மக்களுக்கு, குறைந்தபட்சம் அரசியல் தீர்வாவது கிடைக்க வேண்டும் என்ற சிந்தனை, வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் மனங்களில் என்றும் மறக்கவும் மறைக்கவும் முடியாத உண்மையாக உள்ளது. ஆனால்,  எமது அரசியல் களநிலைவரங்களும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும் ‘விடாக்கண்டன் கொடாக் கண்டன்’ நிலையில் உள்ள, அரசியல் கொள்கைகளற்ற தமிழ்பற்று, தாய்மண் பற்றற்ற செயற்பாடுகளாகவே உள்ளன. இத்தகைய சிந்தனைகளை மழுங்கடித்து, கிழக்கில் ஒருசிலர் எடுத்த தீர்மானம், மக்களின் அபிமானத்தைப் பெற்றிருப்பது, ஏனைய அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு முன்னுதாரணமாகும். எனவே, கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால், மக்கள் நலனுக்காக ஒன்றுபடும் எந்தவோர்அரசியல்வாதியும் எந்தவோர் அரசியல் கட்சியும் மக்களிடமிருந்து பிரிக்க முடியாத ஒரு சக்தியாகத் திகழும். இதை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி செய்திருப்பது, தமிழ்  மக்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றது. எனவே, அரசியல் தலைவர்கள், இம் முன்மாதிரி குறித்து சற்றுச் சிந்திப்பார்களா?    http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தலைவர்கள்-சிந்திப்பார்களா/91-244226
  • தங்கள் கலாச்சாரம் நாற்றமடிப்பதை சிங்களமே வெளியிடுகிறது.