யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
பிழம்பு

ஷரியா பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க வேண்டும் - மஹிந்த

Recommended Posts

(இராஜதுரை ஹஷான்)

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷரியா பல்கலைக்கழகத்தை  முழுமையாக அரசுமடையாக்குவற்கான  நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்விடயத்தில் எதிர்தரப்பினர் முழுமையான  ஆதரவு  வழங்குவோம் என்று  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

IMG_6917.JPG

களனி ரஜமஹா இன்று விகாரையில் வெசாக் தின   வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலினால் தேசிய  வெசாக் பண்டிகையினை  கொண்டாடாமல் இருக்க முடியாது. அனைவரும்  தைரியமாக செயற்பட வேண்டும்.   நிலைமைகளை வெற்றிக் கொள்ள வேண்டும்.   பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு   அனுப்பி வைக்க வேண்டும். தேசிய  பாதுகாப்பை  உறுதிப்படுத்த  அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் இதன்போது கேட்டுக் கொண்டார்.

IMG_6727.JPG

http://www.virakesari.lk/article/56274

Share this post


Link to post
Share on other sites

இந்த பல்கலைக்கழகத்தை வர்த்தமானியில் போட்டு தான் தடை செய்ய வேண்டுமாம்..அது கஷ்டம் என்று நினைக்கிறேன் 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
48 minutes ago, ரதி said:

இந்த பல்கலைக்கழகத்தை வர்த்தமானியில் போட்டு தான் தடை செய்ய வேண்டுமாம்..அது கஷ்டம் என்று நினைக்கிறேன் 

நான் எப்போதே சொல்லி வைத்தேன்.

பாத்திமாவும், பரக்கத்துலவும் அரபி கற்க ஹிஸ்புல்லாவினால், சவூதி பணத்தில் அமைக்கப்படட இந்த பல்கலைக் கழகம் அரசுடைமையாகி பொடிமெனிக்காவும் புஞ்சிபண்டாவும் பௌத்தம் படிப்பார்கள் என்று சொன்னேன்.

அதுவே நடக்கும்.  

இதனை செய்யாதுவிடில் இவ்வாறே பல அமைப்பார்கள் என அரசு, முக்கியமாக சிங்களவர்கள் கருதுவர். 

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

அரசுமடை அல்ல அரசுடமை  (அரசு உடமை )

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ரதி said:

இந்த பல்கலைக்கழகத்தை வர்த்தமானியில் போட்டு தான் தடை செய்ய வேண்டுமாம்..அது கஷ்டம் என்று நினைக்கிறேன் 

தங்கச்சி! ஊர் தகவலின் படி எல்லாம் காலம் கடந்துவிட்டதாம். முஸ்லீம்களின் முன்னேற்றம் சகல படிகளையும் தாண்டி மேலே சென்றுவிட்டதாம்.அவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாதாம். சிறு சிறு கலவரங்களை தவிர.....எல்லாவற்றுக்கும் காரணம் அந்த நான்கு தமிழ் அரசியல்வாதிகளாம்......

10 வருடங்களுக்கு முன்னர் சூட்டோடு சூடாக நிறைய சந்தர்ப்பங்கள் வந்தும் அதை கவனத்தில் எடுக்காததின் விளைவுதான் இதெல்லாம். இப்போது தமிழர் பிரச்சனையை விட முஸ்லீம் பிரச்சனை பெரிய கோடாக அமைந்து விட்டது. 

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ரதி said:

இந்த பல்கலைக்கழகத்தை வர்த்தமானியில் போட்டு தான் தடை செய்ய வேண்டுமாம்..அது கஷ்டம் என்று நினைக்கிறேன் 

இல்லை..நம்ம ஞானதாரர் வந்தால் ..உடன் பறிபடும்....மைத்திரியே ஜெயிலுக்குப்போய் சுகம் விசாரிக்கிற அளவுக்கு நிலமை....இனி புல்லாவும் ,சாத்துவும் அலியும் சிங்களவருக்குத் தேவையில்லை...என்பதே

Share this post


Link to post
Share on other sites

எதிர்காலத்தில் இலங்கையில் முஸ்லிம்களை அரசியல் பலமுள்ள ஒரு சமுதாயமாக கட்டியெழுப்பி அவர்களின் பெரும்பான்மையை இரண்டாவது அல்லது முடிந்தால் முதலாவது இடத்திற்கே கொண்டுபோய்  நாட்டின் அதிகார பலத்தை கத்தியின்றி இரத்தமின்றி கைப்பற்றுவதே முஸ்லிம் தலைவர்களின் நோக்கம். இதற்கு தேவையானது  முஸ்லிம் சனத்தொகை அதிகரிப்பு மற்றும் போதிய குடிசன பரம்பல். இதற்கான ஆதரவும் நிதியுதவியும் அவர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து தாராளமாக கிடைக்கிறது.

முஸ்லிம் குடும்பங்களின் சிங்களவர்களிலும் பார்க்க அதிக குழந்தைகள் பிறப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இது தவிர முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது இனத்தவரை நாடுமுழுவதிலும் குடியேற்றுவதில் முனைப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்காக பல தமிழர் நிலங்கள் பறிபோயிருக்கின்றன அத்துடன் சில இடங்களில் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளன.

சிங்கள அரசு நாட்டின் பெரும்பான்மையின மக்களை இலங்கையின் பல பாகங்களிலும் தமிழர் வெளியேறிய நிலங்களிலும் புதிய குடியேற்றத்திட்டங்களிலும் கொண்டுசென்று குடியேற்றியதுடன் நின்றுவிட முஸ்லிம் இனத்தவர்களோ ஒரு நீண்ட நாள் தொலைநோக்குத் திட்டத்துடன் மேற்சொன்ன இருவிடயங்களையும் சேர்த்து  ஒரே வேளையில் செய்துகொண்டிருக்கிறார்கள். முடிவில் தமிழினம்தான் அழிவின் வழிம்பிற்கு தள்ளப்படும் அபாயத்தை சந்திக்கும்.

இலங்கையில் தமிழரின் சனத்தொகை உள்நாட்டுப் போரின்பின் கணிசமான அளவிற்கு குறைந்துவிட்டது. ஒரு தொகை தமிழர் போரில் கொல்லப்பட்டதுடன் நாட்டைவிட்டு வெளியேறியது இன்னொரு தொகை.  இதே கண்ணோட்டத்துடன் தமிழரின் அரசியல் பலத்தை தக்கவைக்கும் மாற்றுத்திட்டம் எதுவும் எமது தமிழ் அரசியல் தலைவர்களால் இதுவரை முன்வைக்கப்படவுமில்லை அப்படி செய்வதற்கு அவர்கள் அலட்டிக்கொள்ளவுமில்லை. 

  • Like 3

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, பிழம்பு said:

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷரியா பல்கலைக்கழகத்தை  முழுமையாக அரசுமடையாக்குவற்கான  நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்விடயத்தில் எதிர்தரப்பினர் முழுமையான  ஆதரவு  வழங்குவோம் என்று  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ஷ கும்பல் கொள்ளையடித்த சொத்துக்களும் பறிக்கப்படும் காலம் வரும்!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு