Lara

இரத்த ஆறு பெருக்கெடுக்கும்! - எச்சரிக்கிறது ஜேவிபி

Recommended Posts

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டு வென்றால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு பெருக்கெடுக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கி வென்றதும் இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதே தனது முதல் இலக்கு என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

கோத்தாபய ஜனாதிபதித் தேர்தலில் வென்றால் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் மீண்டும் அரங்கேறும். இஸ்லாமிய தீவிரவாதிகளுக்குத் தீனிபோட்ட கோத்தாபய, ஜனாதிபதியானால் மீண்டும் அந்தத் தீவிரவாதிகளுக்குத் தீனிபோட்டே தீருவார். அந்தத் தீவிரவாதிகளை இல்லாதொழிப்பேன் என்று அவர் கூறுவது நகைப்புக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

http://seithy.com/breifNews.php?newsID=224379&category=TamilNews&language=tamil

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்க முன்னாள் தூதுவரும் கோத்தாவை ஆதரிக்கின்றார். ஆனால், அமெரிக்க வழமையாக ஐ.தே.க வை ஆதரிப்பது வழக்கம். இந்தியா யாரை ஆதரிக்கும் என்பது ஒரு காரணியாக இருக்கும்.   சீனாவும் தந்து பொருளாதார நலன்களை பேண விரும்பும். 

ஆனால், சிறுபான்மையான தமிழர்களும் முஸ்லீம்களும் தொடர்ந்து இரத்தம் சிந்துவதே வழமை.  

அமெரிக்காவின் அரசியலில் யார் வெல்வது என்பதை உருசியா தீர்மானிக்கும் என்றால் இன்னொரு சக்தியும் இலங்கையின் தலை விதியை தீர்மானிக்கலாம். 

ஆக மொத்தத்தில் இலங்கையில்  சனநாயகம் ஒரு கேலிக்குரிய விடயமே. 

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, ampanai said:

அமெரிக்க முன்னாள் தூதுவரும் கோத்தாவை ஆதரிக்கின்றார். ஆனால், அமெரிக்க வழமையாக ஐ.தே.க வை ஆதரிப்பது வழக்கம். இந்தியா யாரை ஆதரிக்கும் என்பது ஒரு காரணியாக இருக்கும்.   சீனாவும் தந்து பொருளாதார நலன்களை பேண விரும்பும். 

அமெரிக்கா, இந்தியா, சீனா மூன்றுக்கும் கோத்தா வருவது தான் விருப்பம்.

Share this post


Link to post
Share on other sites

மூன்று மாதத்துக்கு ஒரு முறை வரும் அமேரிக்க குடியுரிமை இழந்தோர் லிஸ்டில் கோத்தா பெயர் இல்லை என்கிறது அல்ஜஸிரா.

அடுத்தது ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என நினைக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Lara said:

அமெரிக்கா, இந்தியா, சீனா மூன்றுக்கும் கோத்தா வருவது தான் விருப்பம்.

இந்த மூன்று முக்கிய நாடுகளுக்கும் கோத்தா கதாநாயகன் எண்டால்.... வில்லன் யார்? மாலை தீவா?

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, குமாரசாமி said:

இந்த மூன்று முக்கிய நாடுகளுக்கும் கோத்தா கதாநாயகன் எண்டால்.... வில்லன் யார்? மாலை தீவா?

கோத்தா இவர்களின் கதாநாயகன் கிடையாது. மாலைதீவு இவர்களின் வில்லனும் கிடையாது. 😂 

தமிழர்களுக்கு கோத்தா வருவதில் உடன்பாடில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 😎

Share this post


Link to post
Share on other sites

மைத்திரிபால சிறிசேன SLFP சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் சஜித் பிரேமதாச UNP சார்பில் போட்டியிடுவார் என்றும் ஒரு கதை அடிபடுது. இதில் எவ்வளவு உண்மைத்தன்மை உள்ளது என தெரியாது.

போட்டியிடுவோரில் மாற்றம் வந்தால் சர்வதேச நிலைப்பாடுகளும் அதற்கேற்ப மேற்கொள்ளப்படும்.

வழமை போல் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகள் யாருக்கு என்பதிலும் இலங்கை தேர்தல் தங்கியிருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

சொறீலங்காவில் மனித இரத்தம் ரெம்ப சீப்பா போச்சு. 

ஆளாளுக்கு ஆறா ஓட விடுறாய்ங்க. 🙄

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, Lara said:

அமெரிக்கா, இந்தியா, சீனா மூன்றுக்கும் கோத்தா வருவது தான் விருப்பம்.

அவை மூன்றுபேரும் விரும்பித்தான் மைத்திரியை கொண்டுவந்தவை வந்தபின் அவர் சைனாவுக்கு வாலாட்டுறார் என்று கோத்தாவை கொண்டுவந்தால் நாளைக்கு அதுவும் சைனா பக்கம் போகாது என்று என்ன நிச்சயம் ?

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, nedukkalapoovan said:

சொறீலங்காவில் மனித இரத்தம் ரெம்ப சீப்பா போச்சு. 

ஆளாளுக்கு ஆறா ஓட விடுறாய்ங்க. 🙄

இரத்த ஆறு தெற்கில் மட்டும் பட்டி தொட்டியெல்லாம் பாய்ந்து ஓடட்டும். அதற்கு முதல்
வடக்கையும் தெற்கையும் தமிழர்கள் கையில் ஒப்படைத்து விடட்டும்.:(

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, பெருமாள் said:

அவை மூன்றுபேரும் விரும்பித்தான் மைத்திரியை கொண்டுவந்தவை வந்தபின் அவர் சைனாவுக்கு வாலாட்டுறார் என்று கோத்தாவை கொண்டுவந்தால் நாளைக்கு அதுவும் சைனா பக்கம் போகாது என்று என்ன நிச்சயம் ?

மகிந்த, கோத்தா போன்றோர் ஏற்கனவே சீன ஆதரவு நிலைப்பாடுடையவர்கள், இதில் கோத்தாவுக்கு அமெரிக்க ஆதரவும் இருக்கு, இந்திய ஆதரவும் இருக்கு.

ஆனால் இலங்கையில் ராஜபக்‌ஷ குடும்பம் செய்த அட்டூழியங்களால் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் இவரைப்பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. அதேநேரம் இனவாத சிங்களவர் மத்தியில் இவருக்கு இன்னும் ஆதரவு இருக்கு.

இலங்கை தேர்தலை பொறுத்தவரை சிறுபான்மை இனத்தவரின் வாக்குகள் தேர்தல் முடிவில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் இவரை தவிர்த்து வேறொருவரை ஜனாதிபதியாக்குவது இலகு. 

ஆனால் அண்மையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் மைத்திரி, ரணில் அரசு மேலும் கடும் விமர்சனத்தை உருவாக்கியதால் அவர்களும் இப்ப சிங்களவர் மத்தியில் ஆதரவை இழந்து செல்கிறார்கள். இந்திய அரசின் வால் சுப்ரமணிய சுவாமியும் இது தான் சாட்டென்று கோத்தபாய ஜனாதிபதியாக வரவேண்டும் என்று கூறியிருந்தார்.

மைத்திரி இப்ப அமெரிக்காவுடன் இசைந்து போகிறார். ஒருவேளை இவர் தேர்தலில் போட்டியிட்டால் மைத்திரி-ரணில் கூட்டு உருவான மாதிரி நாளை மைத்திரி-கோத்தபாய கூட்டு உருவாகாது என்று சொல்லவும் முடியாது.

சர்வதேசம் யாரை ஜனாதிபதியாக்க விரும்புகிறதோ அது பற்றி தமிழ், முஸ்லிம் தலைமைகளுடனும் கலந்துரையாடுவர். அத்தலைமைகளும் அவர்கள் காட்டும் ஒருவரை மக்களுக்கு காட்டி வாக்களிக்க கேட்பார்கள். தமிழர்களை கோத்தபாயவுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க முடியாது.

எனவே என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

யார் ஜனாதிபதியாக வந்தாலும் அமெரிக்காவின் John Bolton, Mike Pompeo போன்றவர்கள் ஆபத்தானவர்கள். என்ன திட்டம் வைத்திருக்கிறார்களோ தெரியாது.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 5/20/2019 at 12:20 AM, Nathamuni said:

மூன்று மாதத்துக்கு ஒரு முறை வரும் அமேரிக்க குடியுரிமை இழந்தோர் லிஸ்டில் கோத்தா பெயர் இல்லை என்கிறது அல்ஜஸிரா.

அடுத்தது ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என நினைக்கிறேன்.

இது பற்றிய அல்ஜஸிரா பதிவு.

Rajapaksa has to renounce his US citizenship in order to run for president. His name does not appear on the most recent quarterly filing to the US registry on those who have lost their citizenship, which covers the three months until the end of March.

https://www.aljazeera.com/news/2019/05/gotabaya-rajapaksa-confirms-presidential-run-anxious-sri-lanka-190517033533121.html

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.