யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • ஆடிப்பிறப்பும் தமிழர் வாழ்வும் ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் தொடக்கதினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. இந் நாளில் ஈழத் தமிழ் மக்கள் ஆடிக்கூழ், கொழுக்கட்டை என்னும் உண்டிவகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தல், உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணுவது வழக்கமாகும். ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற் பச்சையரிசி இடித்துத் தெள்ளி வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச் சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப் பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டுமா வுருண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக்கவா யூறிடுமே குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் படைப்பும் படைப்போமே வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! – நவாலியூர் சோமசுந்தரப்புலவர்   http://athavannews.com/ஆடிப்பிறப்பும்-தமிழர்-வா/  
    • ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை காப்பாற்றியது போல் கன்னியா விவகாரத்தில் தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் முயற்சி எடுக்க வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அரசாங்கத்தை காப்பாற்றுவதில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காட்டும் அக்கறை தனது சொந்த தொகுதியில் தமிழ் மக்களுக்கு எதிராக பிக்குமார் முன்னெடுத்திருக்கும் ஆர்ப்பாட்டத்தில் காட்டாமல் இருப்பது சம்பந்தன் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இன்று நாட்டில் முக்கியமான பிரச்சினையாக திகழ்ந்து கொண்டிருக்கும் கன்னியா விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். இல்லாவிடில் இது ஒரு இனக்கலவரத்தை நோக்கி நகரக்கூடிய அபாயம் உள்ளது. ஆகவே இது சம்பந்தமாக அரசாங்கத்துடன் பேசி முடிவெடுக்க வேண்டிய தேவை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு உள்ளது. குறிப்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சம்பந்தனுக்கு பாரிய கடப்பாடு உள்ளது. கடந்த சில வருட காலமாக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை காப்பாற்றி வரும் இவர் இந்த பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க தவறுவாராயின் வரலாறு இவரை மன்னிக்காது. குறைந்த பட்சம் இந்து கலாச்சார அமைச்சரிடம் கூட இவர் இது சம்பந்தமாக கலந்துரையாடவில்லை என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம். ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி இப்பிரச்சினையில் நேர்மையான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பௌத்த பிக்குமார்கள் களத்தில் இறங்கிய பொழுது அதனை தமிழர்கள் ஆதரித்தால், அது தமிழ் மக்களுக்கு எதிராக நிச்சயம் திரும்பும் என்று நான் ஊடகங்கள் வாயிலாக எச்சரிக்கை விடுத்திருந்தேன். இன்று அது இடம்பெற்று வருகின்றது. ஆகவே அரசியலில் பௌத்த பிக்குமார்களின் தலையீட்டை நிறுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் சரி, எதிர்க்கட்சியும் சரி சிங்கள பௌத்த வாக்குகளுக்கு பயந்து நேர்மையான முறையில் செயல்படுவதற்கு தயங்குகின்றார்கள். அதே நேரம் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை காப்பாற்றியது போல் இந்த கன்னியா விவகாரத்தில் தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் முயற்சி எடுக்க வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/statements/01/220749?ref=home-latesthttps://w
    • பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் விடயத்தில் குற்றம் காணல் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூலை 17 புதன்கிழமை, பி.ப. 05:36 Comments - 0 நாடு முழுவதிலும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பாரியளவில் வன்செயல்கள் வெடிக்கும் அபாயம் ஏற்பட்ட நிலையில், அந்த நிலைமையைத் தனிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் மூன்றாம் திகதி, கூட்டாகப் பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் மீண்டும் தத்தமது பதவிகளை ஏற்பது பற்றிய சர்ச்சையொன்று தற்போது கிளப்பப்பட்டுள்ளது.  பதவிகளை இராஜினாமாச் செய்தவர்கள், மீண்டும் பதவியேற்க முடிவு செய்ததாக, அவர்களின் கூட்டமொன்றை அடுத்து, முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்ததன் பின்னரே, இந்தச் சர்ச்சை உருவாகியிருக்கிறது. அவ்வாறு அவர்கள், மீண்டும் பதவிகளை ஏற்றால், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராகவிருந்த ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்தன தேரரும் டிலான் பெரேராவும் கடந்த வாரமே கூறியிருந்தனர்.  இவ்வாறு ரத்தன தேரர் மிரட்டுவதை விளங்கிக் கொள்ளலாம். பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயற்பட்டார் என்று குற்றஞ்சாட்டி, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினர், கடந்த மே மாதம், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைத்திருந்தனர்.  இந்த நிலையிலேயே கிழக்கு மாகாண ஆளுநராகவிருந்த எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநராகவிருந்த அஸாத் சாலி, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராகவிருந்த ரிஷாட் பதியுதீன் ஆகியோர், பயங்கரவாதத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள் என்று குற்றஞ்சாட்டி, அவர்களை அப் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி கண்டி, தலதா மாளிகை வளவில் ரத்தன தேரர் உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்திருந்தார்.  இந்த உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்தே, இரண்டு ஆளுநர்களும் முஸ்லிம் அமைச்சர்களும் ஜூன் மூன்றாம் திகதி, பதவிகளை இராஜினாமாச் செய்தனர். முஸ்லிம் சமூகம் மீதான ஒரு மோசமான அழுத்தம், அதன் மூலம் தளர்த்தப்பட்டது. எந்தவித ஆதாரத்தையும் முன்வைக்காமலேயே ரத்தன தேரர், இந்த மூவரும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.  எனவே தான் அவர், ரிஷாட் பதியுதீன் மீண்டும் பதவியேற்றால், மீண்டும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதாக, இப்போதும் கூறுகிறார்.  ஆனால், விந்தை என்னவென்றால், இரண்டு ஆளுநர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விட, மிக மோசமான குற்றச்சாட்டுகள் அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு இருந்தும் இரண்டு ஆளுநர்கள் பதவி துறந்த உடனேயே, (ரிஷாட் இராஜினாமாச் செய்வதற்கு முன்னரே) ரத்தன தேரர் தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டிருந்தார்.   ரிஷாட்டுக்கும் இரண்டு ஆளுநர்களுக்கும் எதிராகக் குற்றஞ்சுமத்தியவர்கள், ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் கூச்சலிட்டார்களேயல்லாது, பொலிஸிலோ, இரகசியப் பொலிஸிலோ, பயங்கரவாத் தடுப்புப் பிரிவிலோ அவற்றைப் பற்றி முறைப்பாடு செய்யவில்லை. ஏனெனில், அக்குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, அவர்களிடம் ஆதாரம் எதுவும் இருக்கவில்லை. அதேவேளை, ஒரு குறிப்பிட்ட கட்சியை (முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச்) சேர்ந்தவர்களும் அவர்களுக்கு ஆதரவான ஊடகங்களுமே உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முஸ்லிம் விரோத பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஓரங்கமாகவே, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, இவை வெறும் இனவாதப் பிரசாரம் என்பது, தெளிவாக இருந்தது.  ரிஷாட் குற்றமற்றவர் என, இப்போது பொலிஸ் தெளிவாகக் கூறியிருக்கிறது. இந்தநிலையில், நீண்ட காலமாக இனவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த டிலான் பெரேராவும் ரிஷாட்டுக்கு எதிராக, மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதாகக் கூறுவதானது, அவர் எந்தளவுக்குத் தரங்குறைந்து போயுள்ளார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.  பதவிகளை இராஜினாமாச் செய்தவர்கள், மீண்டும் பதவியேற்க முடிவு செய்துள்ளதாக அமீர் அலி கூறியபோதிலும், இராஜினாமாச் செய்த அனைவரும், அதனை உறுதிப்படுத்தவில்லை. முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எச்.எம். ஹரீஸ், தாம் மீண்டும் பதவியேற்கப் போவதில்லை எனக் கூறியிருக்கிறார். கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை, முஸ்லிம்களின் ஏனைய பிரச்சினைகள் தீராத நிலையில், தாம் மீண்டும் பதவியேற்கப் போவதில்லை என அவர் கூறியிருக்கிறார்.  அதேவேளை, பதவி துறந்தவர்கள் மீண்டும் பதவி ஏற்பதற்கான இறுதி முடிவை எடுக்கவில்லை என, முன்னாள் பிரதி அமைச்சர் பைஸல் காஸிம் தெரிவித்ததாக மற்றொரு செய்தி கூறியிருந்தது.  இது, முஸ்லிம்களைக் குழப்பியடிக்கும் செயலாகவே தெரிகிறது. ஒருவர், முடிவு செய்ததாகக் கூறுகிறார்; மற்றவர், இறுதி முடிவு எடுக்கவில்லை என்கிறார்.  தாம் எதை செய்ய விரும்புகிறாரோ, அதைப் பொதுவாக எல்லோரினதும் முடிவாகக் காட்டுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.  மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக, இராஜினாமாச் செய்யவேண்டும் என நெருக்குவாரம் ஏற்பட்ட போது, சகல முஸ்லிம் அமைச்சர்களும் ஏன் இராஜினாமாச் செய்ய வேண்டும் என, ஆரம்பத்தில் பெரும்பான்மையின அரசியல்வாதிகள்  கேள்வி எழுப்பினர். பௌத்த மக்களின் ஆன்மிகத் தலைவர்களாகக் கருதப்படும் நான்கு பௌத்த நிக்காயாக்களின் மகா நாயக்க தேரர்கள் குற்றம் சுமத்தப்படாதவர்கள், மீண்டும் பதவியேற்க வேண்டும் எனக் கூட்டறிக்கையொன்றின் மூலம் கேட்டுக் கொண்டனர்.  குற்றஞ்சாட்டப்பட்டவரைப் (ரிஷாட்டை) பாதுகாக்கவே சகல முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமாச் செய்தனர் எனப் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் சிலர் கூறினர்.  எல்லோரும் இராஜினாமாச் செய்தமை, ஒரு நாடகம் எனவும் சிலர் கூறினர். இன்னமும் கூறி வருகின்றனர்.  குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணைகள் முடிவுறாத நிலையில், பதவி துறந்தவர்கள் மீண்டும் பதவியேற்கப் போகிறார்கள் என, இப்போது கூறுகின்றனர். எனவே, முஸ்லிம்கள் எதைச் செய்தாலும், அதில் குற்றம் காண்பதே, அவர்களின் நோக்கம் என்பது தெளிவாகிறது. இதன் மூலம், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டி, எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசியல் இலாபம் அடைவதையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  மஹிந்த அணியினருக்கு, கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. குறிப்பாக, முஸ்லிம்கள் தமக்கு வாக்களிக்காதமையினாலேயே தாம் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததாக மஹிந்த ராஜபக்‌ஷ பலமுறை கூறியிருக்கிறார்.  மூன்றாண்டுகளுக்குப் பின்னர், கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, சிங்கள மக்கள் பெருமளவாக ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகியிருந்த நிலையிலும், சிறுபான்மை மக்களின் வாக்குகள் பொதுஜன பெரமுனவுக்குக் கிடைக்கவில்லை. எனினும், அவர்கள் அத்தேர்தல்களில் பெரும்பாலான சபைகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.  எனவே, தொடர்ந்தும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை நம்பியிராது, சிங்கள - பௌத்த மக்களின் வாக்குகளால் மட்டும், எதிர்வரும் தேர்தல்களை வெற்றிபெறலாம் என, பொதுஜன பெரமுனவினர் நினைக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை, அது அவ்வளவு இலேசான விடயமும் அல்ல.  எனினும், இந்த நிலையில் இனவாதத்தைத் தூண்டி, ஐ.தே.கவை ஆதரிக்கும் சிங்கள வாக்காளர்களைக் கவர்ந்திழுப்தே அவர்களது நோக்கமாக இருக்கிறது. இதன் காரணமாகவே, அவர்கள் முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாகப் பதவி துறந்ததையும் எதிர்த்தார்கள். தற்போது அவர்கள், மீண்டும் பதவி ஏற்றாலும் அதையும் எதிர்க்கும் நிலையில் இருக்கிறார்கள். அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் இருந்தால் கிராக்கி அதிகரிக்கும் ரத்தன தேரர் ஆரம்பித்த உண்ணாவிரதத்தை அடுத்து, நாடு முழுவதிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் இதோ வெடித்துவிட்டன; அதோ வெடித்துவிட்டன என்றதொரு நிலையிலேயே ஜூன் மூன்றாம் திகதி, முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்தனர்.    “முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராகச் சுமத்தப்பட்டு இருந்த, பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் விடயத்திலான விசாரணைகள், எவ்விதத் தலையீடும் இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவே, நாம் எல்லோருமாகப் பதவி துறக்கிறோம்” என அப்போது அவர்கள் கூறினர். ஒரு மாத காலத்துக்குள், விசாரணைகளை முடித்துவிடுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  அதன் பின்னர், அரசாங்கத்தின் ஆலோசனையின்படி, பதில் பொலிஸ்மா அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக உயர் பொலிஸ் அதிகாரிகள் மூவரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.  குற்றம் சுமத்துவோர், அந்தக் குழுவினரிடம் முறைப்பாடு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலர், அக்குழுவிடம் முறைப்பாடுகளையும் முன்வைத்தனர். ஆனால், அவற்றில் மிகச் சில முறைப்பாடுகளே பயங்கரவாதம் சம்பந்தமானவையாக இருந்தன. ஏனையவை, ஊழல், மோசடிகள் தொடர்பானவையாகவே இருந்தன. அதேவேளை, 4/21 தாக்குதல்களைப் பற்றி, விசாரணை செய்வதற்காகவென நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. அதிலும் சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழைக்கப்பட்டு இருந்தார்.  ரிஷாட் தொடர்பாக விசாரணை செய்தததாகவும் அவர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கு, எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் அறிக்கையொன்றை அனுப்பியிருந்ததாகவும் தெரிவுக்குழுவின் தலைவர் சாட்சியமளிக்கச் சென்ற போது தெரிவித்திருந்தார்.  இது முறையான செயலா, என்ற கேள்வி எழுகின்ற போதிலும், ரிஷாட் அந்த விடயத்தில் குற்றமற்றவர் என்று, பொலிஸார் முடிவு செய்திருப்பதாக அதன் மூலம் தெரிய வந்தது.  இரகசியப் பொலிஸாரும் இதேபோல் ரிஷாட் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கின்னியா மத்திய கல்லூரியல் புதிய கட்டடம் ஒன்றைத் திறந்து வைக்கும் வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.  அதேபோல், இப்போது முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி ஆகியோருக்கு எதிராகவும் எவரும் கூச்சலிடுவதாகத் தெரியவில்லை.  இந்த நிலையில், முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவி ஏற்கலாம் எனச் சிலர் கூறலாம்.  ஆனால், பேரினவாத சக்திகள் அதனை ஏற்கப் போவதில்லை. சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடிவுறாத நிலையில், எவ்வாறு அவர்கள் மீண்டும் பதவி ஏற்க முடியும் என, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்  ஷெஹான் சேமசிங்க, கடந்த வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றும் போது, கேள்வி எழுப்பியிருந்தார்.  சில வழக்குகள் இன்னமும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவுக்குழு விசாரணை இன்னமும் முடியவில்லை என்றும் அவர் வாதிட்டு இருந்தார். இவை முடிவுற்று முஸ்லிம் அரசியல்வாதிகள் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்பட்டாலும் இவர்கள் விடப்போவதில்லை.  சிங்களப் பெண்களுக்கு கருத்தடை ஏற்படும் வகையில் சிசேரியன் சத்திர சிகிச்சைகளை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், பயங்கரவாத நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்டதாக ஆதாரம் இல்லை என, இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்த போது, ரத்தன தேரர் இரகசியப் பொலிஸார் மீது சீறிப் பாய்ந்தார்.  அதற்கு முன்னர், ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய, சுகாதார அமைச்சு மருத்துவர் குழுவொன்றை நியமித்த போது, அதையும் பேரினவாதிகள் எதிர்த்தனர். பின்னர், நீதிமன்றம் அதைக் கலைத்துவிட்டது. டொக்டர் ஷாபிக்கு எதிரான கருத்தடை குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, ஆதாரங்கள் இல்லை என இரகசியப் பொலிஸார் கூறிய போது, அதையும் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். ரிஷாட் பயங்கரவாதச் செயல்களோடு தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கு, ஆதாரம் இல்லை எனப் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவுக்குழுவுக்கு தெரிவித்த போது, அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் கூறினர்.  2003ஆம் ஆண்டு சோம தேரர் ரஷ்யாவில் உயிரிழந்த போது, அது சதி என்றார்கள். ரஷ்ய மருத்துவர்களின் அறிக்கையை ஏற்க முடியாது என்றனர். இலங்கை மருத்துவர்கள் விசாரணை செய்து, இது இயற்கை மரணம் என்று கூறியபோது, அந்த அறிக்கையையும் ஏற்க முடியாது என்றனர். இலங்கை நீதிமன்றமும் அதே தீர்ப்பை வழங்கிய போது, அதனையும் ஏற்க முடியாது என்றனர்.  முஸ்லிம்களுக்கு எதிரான தற்போதைய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை  அறிக்கைகளையும் அவர்கள் தொடர்ந்து நிராகரிப்பார்கள். எனவே, அவர்களைச் சமாதானப்படுத்தி, முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் பதவி ஏற்க முடியாது.  முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் பதவி ஏற்றால், அவர்களைத் தம் பக்கம் ஈர்த்துக் கொள்வது கஷ்டம் எனப் பொதுஜன பெரமுனவினர் நினைக்கலாம். அவர்கள் பதவி ஏற்காமலிருந்தால் அவர்களுக்கு ஓரளவு கிராக்கி ஏற்படலாம். அது சிலவேளை முஸ்லிம் விரோத பிரசாரத்தையும் தளர்த்தலாம்.     http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பதவி-துறந்த-முஸ்லிம்-அமைச்சர்கள்-விடயத்தில்-குற்றம்-காணல்/91-235491
    • கஜனின் சந்தேகத்துக்குரிய பிடிவாதம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூலை 17 புதன்கிழமை, பி.ப. 05:23 Comments - 0   தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக, பலமான அணியொன்றைக் கட்டமைக்க வேண்டும் என்கிற சிந்தனையின் வழி செயற்பட்டவர்களில் அநேகர், இன்றைக்கு விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள். புலிகள் இல்லாத அரங்கில், கூட்டமைப்பு ஏகநிலையை அடைந்தது முதல், மாற்று அணியொன்றுக்கான தேவை, தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாற்று அணியொன்றைக் கட்டமைக்கும் காட்சிகளை, மாற்று அணிக்கான கோசத்தை எழுப்பிய தரப்புகளே, கலைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் பெரும் சோகம்.   அரசியல் என்பது, நண்பர்களைக் காட்டிலும், எதிரிகளும் துரோகிகளும் நிறைந்திருக்கும் களம். சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப, எதிரிகளோடு கைகோர்க்கவும் துரோகிகளை மன்னிக்கவும் வேண்டி வரலாம். அதற்கான உதாரணங்கள், தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் அதிகம் உண்டு.    ஒருவரையொருவர் கொலை செய்யும் அளவுக்குச் சென்ற தரப்புகள் கூட, கடந்த காலங்களை மன்னித்து, மறந்து, அரசியல் தேவைகளுக்காக ஒன்றாகக் கைகோர்த்து, கூட்டணிகளை அமைத்திருக்கின்றன. அதன் இறுதிச் சாட்சியாக, ‘கூட்டமைப்பு’ என்கிற அடையாளம், இன்னமும் எஞ்சியிருக்கின்றது.    அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாற்று அணிக்கான கோசத்தை எழுப்பிய தரப்புகள், தங்களுக்குள் உப்புச் சப்பில்லாத காரணங்களுக்காக, முரண்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனை, மாற்று அணிக்காக இயங்கிய பேரவைக்காரர்களும் கல்வியாளர்களும் அரசியல் பத்தியாளர்களும் தற்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.   கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் விக்னேஸ்வரனுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் புலமையாளர் ஒருவர் முன்னெடுத்திருந்தார்.அது, பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முதல் நாளே, ஒன்றுமேயில்லாமல் முடிந்து போயிருக்கிறது.  அன்றுமுதல், தொடர்ச்சியாக இரு தரப்பும் மாறிமாறிக் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன; ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அவற்றில் வெளிப்படுவது எல்லாமும் கடந்த காலத்தில் ஒப்புவிக்கப்பட்ட அதே பதில்கள் மாத்திரமே ஆகும். அவற்றைக் காணும் போது, மாற்று அணி குறித்து, நம்பிக்கை கொண்டிருந்த மக்கள் ஏமாற்றமடைவார்கள்.   கடந்த காலத்தில், பேரவையில் ஒன்றாக இயங்கிய விக்னேஸ்வரனும் கஜனும், தமக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே, நிபந்தனைகளை விதித்துக் கொள்கிறார்கள்.    புலிகள், கூட்டமைப்பைக் கட்டமைப்புச் செய்தபோது, புலிகளுக்கு எதிராக, அரச படைகளோடு ஒத்து இயங்கிய புளொட் உள்ளிட்ட தரப்புகளைக் கூட, அழைத்துப் பேசினார்கள். அப்போதுகூட, நிபந்தனைகளை எல்லாம் விதித்துக் கொண்டிருக்கவில்லை.    ‘காலமும் களமும் தங்களின் முன்னால், கூட்டமைப்பு என்கிற ஜனநாயக வடிவ அரசியல் சக்தியொன்றை அமைக்க வேண்டிய பொறுப்பை வழங்கியிருக்கின்றது; ஆகவே, சில இடங்களில் இறங்கிச் செயற்படுவதில் தப்பில்லை’ என்றே புலிகள் கருதினார்கள்.    அன்றைக்கு, கூட்டமைப்பில் இணைந்து கொள்ளாமைக்கு புளொட்டே காரணம். வரலாறு இப்படியிருக்க, “ஈ.பி.ஆர்.எல்.எப் இருக்கும் எந்தவோர் அணிக்குள்ளும் தங்களால் வரமுடியாது; ஏன், பேச்சுவார்த்தை நடத்தவே வரமுடியாது” என்று, முரண்டு பிடித்துக் கொண்டிருப்பது என்பது, கஜனின் மீதும், முன்னணி மீதும் பல கேள்விகளை எழுப்புகின்றது.   தொடர்ச்சியாகக் ‘கொள்கைக் கூட்டு’ப் பற்றி, கஜன் பேசி வருகிறார். அப்படியானால், கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், புளொட்டை அழைத்து, புலிகள் கலந்துரையாடியது, கொள்கைகளைக் கைவிட்ட நிலையிலா? தமிழ்த் தேசிய அரசியலிலும், அதற்கான போராட்டக் களத்திலும் புலிகள் அளவுக்குக் கொள்கை பற்றியும் அதற்கான அர்ப்பணிப்புப் பற்றியும் பேசும் தரப்புகள் இதுவரை எழவில்லை. அப்படியான நிலையில், கஜனின் நிலைப்பாட்டை, மக்கள் இரசிப்பார்களா என்பது தொடர்பிலாவது, அவரின் ஆலோசகர்கள் எடுத்துக்கூற வேண்டும்.   வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு, கஜன் வழங்கியிருக்கின்ற செவ்வியில், ‘சுரேஷ் பிரேமசந்திரன் இந்தியாவின் ஆணைகளை ஏற்றுச் செயற்படுகிறார்’ என்று தொடங்கி, ‘கொள்கைகளைக் கைவிட்டுவிட்டார்’ என்பது வரை, மீண்டும் ஒப்புவித்திருக்கிறார். ‘அவர் அங்கம் வகிக்கும் அணிக்குள், தங்களால்ச் செல்ல முடியாது’ என்கிறார். ‘எந்தவொரு காரணத்துக்காகவும் விக்னேஸ்வரன் தவிர்ந்து, வேறொரு தரப்புடன், தங்களால் கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியாது. அல்லது இணங்க முடியாது’ என்கிறார். ஏனெனில், பொ.ஐங்கரநேசன் ஆரம்பித்திருக்கிற ‘தேசிய பசுமை இயக்கம்’ என்கிற கட்சியையோ, அனந்தி சசிதரனின் ‘ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்’ என்ற கட்சியையோ தனித்தனிக் கட்சிகளாக அங்கிகரித்துக் கைச்சாத்திட முடியாது என்கிறார்.    ஐங்கரநேசனும் அனந்தியும் விக்னேஸ்வரனின் அணியாகவே கருத்தில் எடுக்கப்படுவார்கள் என்று தெளிவாகவே கூறியிருக்கின்றார். இந்த விடயம், புதிய கூட்டுக்குள் விக்னேஸ்வரனும் தானும் மாத்திரமே சம பங்காளிகள் என்கிற வரையறைகளைக் கஜன் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகின்றது. அதனைத்தாண்டி, இன்னொருவர் பங்காளிக் கோசத்தை எழுப்புவதை அவர் விரும்பவில்லை. அதன்போக்கில்தான், அவர் ஈ.பி.ஆர்.எல்.எப்பினை சில காரணங்களைச் சொல்லிக் கொண்டு தவிர்க்கிறார் என்பது மீண்டும் வெளிப்படுகின்றது.   கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்துக்கே, மீண்டும் செல்ல வேண்டியிருக்கின்றது. அதாவது, கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், புலிகளுக்குப் பின்னர், ஓரளவுக்கு மக்கள் ஆதரவு பெற்ற தரப்பாக (தேர்தல் வழியில் வெற்றிபெற்ற) தமிழர் விடுதலைக் கூட்டணியே இருந்தது.    ஆனால், அப்போது, கூட்டமைப்புக்கான உருவாக்கத்துக்கான ஒப்பந்தத்தில் அங்கம் வகித்த அனைத்துக் கட்சிகளும் கைச்சாத்திட்டன; சம அந்தஸ்தும் வழங்கப்பட்டது. அதுதான், தேர்தல் வெற்றிகளையே பல ஆண்டுகளாகக் கண்டிராத அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைக் கூட்டமைப்பில் சம பங்காளியாக்கியது. அந்தக் கூட்டமைப்பின் வழி, அரசியற்களம் கண்ட கஜன், இன்றைக்கு ஐங்கரநேசன், அனந்தியின் கட்சிகளை அங்கிகரிக்க மாட்டேன்; கைச்சாத்திடும் அந்தஸ்தை வழங்க மாட்டேன் என்கிற தோரணையில் பேசுகிறார்.    கட்சியொன்று, தனக்குள்ள ஆதரவின் அடிப்படையில், தேர்தலின் போது ஆசனங்களைக் கோருவது என்பதுவும் கூட்டணியொன்றுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது, தரநிலைப்படுத்தியே அங்கிகரிப்பேன் என்பதுவும் வெவ்வேறானவை.   தேர்தல்களில், காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தயார் என்று குறிப்பிட்டு விக்னேஸ்வரன், தனக்குக் கடிதம் எழுதியதாக (அந்தக் கடிதத்துக்கு பதிலளிக்காது) ஊடகங்களில் வெளிப்படுத்தி, தன்னுடைய கனவான்(?) தன்மையையும் அரசியல் நாகரிகத்தையும்(?) கஜன் அண்மையில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதன்பின்னரே, அந்தக் கடிதம் குறித்து விக்னேஸ்வரன் ஊடகங்களில் பேசினார்.   தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில், தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட சமஷ்டி அதிகாரப் பரவலாக்கம் குறித்தோ, அதன் பின்னரான தனிநாட்டுக் கோரிக்கை குறித்தோ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்றைக்குமே நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி இருக்கவில்லை.    சமஷ்டிக் கோரிக்கையை, தமிழரசுக் கட்சி முன்வைக்கும் போது, காங்கிரஸின் ஸ்தாபகரான ஜீ.ஜீ பொன்னம்பலம், தென் இலங்கையோடு சேர்ந்து, அதனை எதிர்த்திருக்கிறார். இன்றைக்கும் காங்கிரஸின் யாப்பில், அரசியல் இலக்குகளில் சமஷ்டியோ, தனிநாட்டுக் கோரிக்கையோ இல்லை. அப்படியான நிலையில், காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடும் கட்டத்துக்கு, விக்னேஸ்வரன் இறங்கி வந்தது என்பது, மாற்று அணியொன்றைப் பலப்படுத்தும் தேவைகளின் அடிப்படையிலானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.   கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த போது, அதனைப் புலிகள் அனுமதிக்கவில்லை. கூட்டமைப்புக்காக எழுதப்பட்ட யாப்பு வரைபுகள், கிடப்பில் போடப்பட்டன. ஆனால், புலிகளின் காலத்துக்குப் பின்னர், கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்யுமாறு பலமான கோரிக்கைகள் எழுந்தன. அது, தமிழரசுக் கட்சியால் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்டு வந்திருக்கின்றது.    ஆனால், கூட்டமைப்புக்கு மாற்றாகத் தன்னை முதன்முதலில் அடையாளப்படுத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஏன் இன்னமும் ஒரு கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதுவும், சின்னத்தைப் பெறவில்லை என்பதுவும் சந்தேகத்துக்குரிய விடயங்களாகவே தொடர்கின்றன. காங்கிரஸின் கடந்த கால வரலாற்றில் உள்ள கறுப்புப் பக்கங்களைக் கடப்பதற்காக, முன்னணி என்கிற கூடாரம் அமைக்கப்பட்டிருக்கின்றதா என்கிற கேள்வியும் எழுகின்றது.   ஏனெனில், புதிய கூட்டுக்காகச் சிலவேளை கஜன் உடன்பட்டால், அவர் அந்தக் கூட்டின் பங்காளியாக, எந்தக் கட்சியின் பெயரோடு கைச்சாத்திடுவார்? தேர்தல் ஆணையகத்தில், கட்சியாக அங்கிகாரம் பெறாத முன்னணியைக் கூட்டணியொன்றின் பங்காளியாக, உத்தியோகபூர்வமாக எப்படி  இணைத்துக் கொள்ள முடியும்? இப்படிப் பல கேள்விகளுக்கு, கஜன் பதில் சொல்ல வேண்டியிருக்கின்றது. நேர்மைத் தன்மை குறித்து, மற்றவர்களுக்குப் போதிப்பதற்கு முதல், அவர், அதற்கான பதிலை மக்களிடம் சொல்ல வேண்டும். அப்படியான நிலையில், கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியை உருவாக்கும் கட்டத்தில், கஜன் காட்டும் முரட்டுத்தனம், முட்டாள்தனமானது மாத்திரமல்ல; சந்தேகத்துக்கும் உரியது.       http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கஜனின்-சந்தேகத்துக்குரிய-பிடிவாதம்/91-235481  
    • பிள்ளையாருக்கும் கூட்டமைப்புக்கும் என்ன சம்பந்தம்.? ஒரே ஒரு சம்பந்தம்தான் தெரிகிறது. பிள்ளையார் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டார். கூட்டமைப்பும் இருந்த இடம் தெரியாமல் அழியப் போகிறது.