யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
colomban

கத்தார் நாட்டி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Recommended Posts

முள்ளிவாய்க்கால் 10ம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு. தமிழர் கலை அறிவியியல் பேரவையின் ஏற்பாட்டில் கத்தார் நாட்டி நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்வின் பதிவுகள் சில. அகவணக்கத்தோடு நிகழ்வு ஆரம்பமானது.
பொதுச்சுடரினை.மாவீரர் லெப் கேணல் ரொசான் அவர்களின் சகோதரர் திரு. ஜெனா அவர்கள் ஏற்றினார். அத்தோடு ஈகை சுடர்களும் ஏற்றப்பட்டன.

_20022_1558300400_76C7C532-64A7-4D81-B9A9-C545164613D3.jpeg

_20022_1558300400_C4FC73FC-68A4-4672-B1A9-AD4370C9AD19.jpeg

_20022_1558300400_CCAECFF0-68CB-47F4-AD05-C6AE84A2276C.jpeg

_20022_1558300400_36C778FD-DD48-42DB-9A43-36BF8EA74790.jpeg

_20022_1558300400_E09448EE-05B5-49D8-8E0B-FEE29ECE64B5.jpeg

http://battinaatham.net/description.php?art=20022

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • வாகனத்தையும் வீட்டையும் சம்பந்தன் எடுத்துச் சென்றுவிட்டார் – சபையில் மஹிந்த In இலங்கை     June 18, 2019 9:44 am GMT     0 Comments     1589     by : vithushan எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் வீட்டை எதிர்க்கட்சி தலைவராக இருந்த இரா.சம்பந்தன் எடுத்துவிட்டார் என மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார் இதன் காரணமாகவே தான் எதிர்க்கட்சி தலைவருக்கான வாகனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போது, மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சில அமைச்சர்களுக்கும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 57.54 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். எதிர்க்கட்சி தலைவருக்கான வீடு, வாகனம் என்பவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீண்டும் கையளிக்கவில்லை. இந்நிலையிலேயே தான் குறித்த கோரிக்கையை விடுத்ததாக தெரிவித்தார். http://athavannews.com/வாகனத்தையும்-வீட்டையும்/
    • சலசலப்பின்றி நிறைவடைந்தது அமைச்சரவை கூட்டம்! In இலங்கை     June 18, 2019 10:54 am GMT     0 Comments     1076     by : Dhackshala அமைச்சரவைக் கூட்டத்தின்போது, நாடாளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து எந்தவொரு கருத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே கடந்த வாரம் ஜனாதிபதியினால் அமைச்சரவை ஒத்திவைக்கப்பட்டது என்ற பரவலான கருத்து நிலவிவருகின்ற நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூடியது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள ஸ்தாபிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டிருந்தார். இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டதோடு, இந்தக் கூட்டம் சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றது. இதன்போது சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து எந்தவொரு கருத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். வழமையாக அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படுவதைப்போல, அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பாகவே ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். விசேடமாக எந்தவொரு விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவில்லை என்றும் அமைச்சரவை பத்திரங்கள் தொடர்பில் உரிய அமைச்சர்களினால் விளக்கங்கள் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அமைச்சர்களான  லகி ஜயவர்த்தன, அனோமா கமகே மற்றும் காமினி ஜயவிக்ரம ஆகியோரும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கியமாக எதுவும் கலந்துரையாடப்படவில்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அமைச்சரவையில்-சர்ச்சைக்/
    • தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாத அரசு மஹிந்தவுக்கு பில்லியன் ரூபாய்களை ஒதுக்குகிறது – ஜே.வி.பி. In இலங்கை     June 18, 2019 9:24 am GMT     0 Comments     1267     by : vithushan குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈட்டினை வழங்காத இந்த அரசாங்கம் அதிசொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு பில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சில அமைச்சர்களுக்கும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 57.54 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்தபோதே பிமல் ரத்னாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த அரசாங்கம் நஷ்ட ஈட்டினை முழுமையாக வழங்கவில்லை. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய பல இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல எதிர்க்கட்சி தலைவருக்கு வாகனம் வழங்குவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறினார். http://athavannews.com/தாக்குதலில்-பாதிக்கப்பட/
    • கோட்டாவின் மனுக்கள் நிராகரிப்பு – நாளை முதல் தொடர் விசாரணை In இலங்கை     June 18, 2019 10:16 am GMT     0 Comments     1225     by : vithushan முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த இரண்டு மனுக்கள், மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. டீ. ஏ. ராஜபக்‌ஷ நினைவகத்தை நிர்மாணிக்க அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை இரத்துசெய்ய கோரி, கோட்டாபய ராஜபக்‌ஷ குறித்த மனுக்களை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) அந்த மனுவை நிராகரித்துள்ளது. இதன்படி, டீ. ஏ. ராஜபக்‌ஷ நினைவக மோசடி வழக்கு நாளை முதல் தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில் தடை இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கோட்டாவின்-மனுக்கள்-நிரா/