யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.  அடுத்த வாரம் ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது. கல்முனை வடக்கு  பிரதேச செயலக விவகாரம் குறித்து கோடிஸ்வரன் எம்.பிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவரையும் கலந்துகொள்ள வேண்டாம் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.  https://www.virakesari.lk/article/60690   கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம்  : ஜனாதிபதியை  சந்தித்து பேச கூட்டமைப்பு தீர்மானம்  அடுத்த வாரம் ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது. கல்முனை வடக்கு  பிரதேச செயலக விவகாரம் குறித்து கோடிஸ்வரன் எம்.பிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவரையும் கலந்துகொள்ள வேண்டாம் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் ஆலய விவகாரம் பாரிய பிரச்சினைகளை எழுப்பியுள்ள நிலையில் இது குறித்து கலந்துரையாட தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  அமைச்சர் மனோ கணேசன் உள்ளிட்ட சில அமைச்சர்களுக்கும் இந்த சந்திப்பில் பங்குபெற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்றய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.  தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியமான சில உறுப்பினர்கள்  வெளிப் பிரதேசங்களில் உள்ள காரணத்தினாலும் வேறு சில முக்கிய காரணங்களுக்காகவும் தாம் கலந்துகொள்ளவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். https://www.virakesari.lk/article/60685     'அழைப்பு விடுத்தும் பல தமிழ் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை' ஜனாதிபதி மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் சுமூகமான தீர்மானங்கள் சில எட்டப்பட்டதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு, அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் அனுப்பியும் பலர் கலந்துக்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான அரவிந்தகுமார், ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளனதாக அறிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மனோ குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் குறித்து, தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ள  அமைச்சர் மனோ கணேசன், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "கன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவித புதிய விகாரை கட்டுமானப்பணிகளும் முன்னெடுப்பது இடை நிறுத்தப்பட்டுள்ளது. 32 பேர் கொண்ட தொல்பொருளாராட்சி திணைக்களத்தின் வழிகாட்டல் ஆலோசனை சபையில் இருக்கின்ற அனைவரும் சிங்கள பெளத்த வரலாற்றாசிரியர்கள் என்ற நிலையை மாற்றி, மேலதிகமாக 5 தமிழ் வரலாற்றாசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த தமிழ் வரலாற்றாசிரியர்களின் பங்களிப்புடனேயே இனி புராதன சின்னங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் மனோ சமர்பிப்பார். கன்னியா பிரதேசத்துக்குள் தமிழ் இந்துக்கள் நுழைவதை தடை செய்ய தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. இந்த திணைக்களத்தின் சிற்றூழியர்கள் சிலர் இத்தகைய அடாவடி நடவடிக்கையில் ஈடுபடுவதை திணைக்கள பணிப்பாளர் தன் திணைக்கள மட்டத்தில் உடனடியாக தடை செய்ய வேண்டும். முல்லைத்தீவு நீராவியடி கோவில் மற்றும் விகாரை அமைந்துள்ள பகுதியில் எந்தவித புராதன சின்னங்களும் அடையாளம் காணபடவில்லை. அப்படி அங்கே புராதன சின்னங்கள் இருப்பதாக விகாரையின் தேரர் சொல்வது உண்மைக்கு புறம்பானது என தொல்பொருளாராட்சி திணைக்கள பணிப்பாளர் ஏற்றுக்கொண்டார். கன்னியா வெந்நீரூற்று கிணறுகளை பாரமரிக்க, தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு அதிகாரமில்லாததால், அவற்றை அந்த பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டும் என, திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார கூறுகிறார். இந்தநிலையில் கிணறுகளை பாரமரிப்பது யாரென தீர்மானிக்க ஜனாதிபதி விரைவில் விசேட கூட்டத்தை கூட்டுவார். மலைநாட்டில் கோட்லோஜ் தோட்டத்தில் அமைந்துள்ள முனி கோவிலில் பெளத்த கொடியை அங்குள்ள விஹாராதிபதி ஏற்றியது பிழையானது. பெளத்த பிக்குகள் சட்டத்தை கையில் எடுப்பது பிழை. இந்த பிக்குக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." ஆகிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. இதேவேளை, இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திலகராஜ், வேலுகுமார், வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். அவர்களுடன், தொல்பொருளாராட்சி திணைக்கள பணிப்பாளர் நாயகம் மாண்டாவெல, இந்து சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் உமா மகேஸ்வரன், அமைச்சர் மனோ கணேசனின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கணேஷ்ராஜா ஆகியோம் பங்கேற்றுள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/அழைப்பு-விடுத்தும்-பல-தமிழ்-உறுப்பினர்கள்-பங்கேற்கவில்லை/175-235531
    • இந்த வருடம் நல்லூர்த்திருவிழாவில் கலந்து கொள்வதுடன்  விட மழைநீரை நிலத்தடி நீராக மாற்ற உங்கள் அறிவை, நேரத்தை,பணத்தை செலவிடுங்கள்.  நிலத்தடி நீரை பாதுகாக்கவேண்டியுள்ளது.   வறட்சியுலிருந்து விடுபடவேண்டும். எஞ்சியமக்கள் பசுமையாக வாழவேண்டும்  நீர் இன்றி உலகமே இல்லை  இதற்கான இயக்கத்தை ஆரம்பியுங்கள்  உங்கள் பிரதேசத்தில் நீங்கள் முன்னெடுத்துச்செல்லவேண்டிய  முக்கியமான பணி நீரை பாதுகாத்தல்.  நீர், நிலம், காற்று, மரங்கள் உயிர்வாழ்வுக்கு மிகவும் அவசியம் ஆளுக்கொரு மரம் ஆண்டு தோறும் நடுங்கள் SAVE Land Air Water
    • ப‌ச்சை த‌ண்ணீர‌ முக‌த்துக்கு ஊத்த‌னா தான் அவ‌ர் விழிப்ப‌டைவார் தாத்தா😁😉 / இனி தான் உல‌க‌மே எதிர் பார்த்து இருக்கும் பினேல் ம‌ச் ந‌ட‌க்க‌ போகுது /  பெரும் பாலும் இந்தியா தான் கோப்பையை தூக்கும் என்று கிரிக்கெட் விம‌ர்ச‌க‌ர்க‌ள் சொல்லுகிறார்க‌ள் 😁😉 /  இத்துட‌ன் காமெடி செய்தி முடிவ‌டைகிறேன் , ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 😜 /
    • நோய்த்தடுப்பு மருந்துகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லாவிட்டால் அதன் வீரியம் குறையும், சிகிச்சை பலனளிக்காமலும் போகும். எனவே, குளிர்சாதன வசதி என்பது சில மருந்துகளுக்கு தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது. இதற்கு மாற்றுவழியாக ஜெல் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது மக்கள் பயன்பாட்டுக்கு வர தயாராகவும் உள்ளது.குளிர்சாதன பெட்டி வசதியில்லாத இடங்களிலும், பயணங்களிலும் தடுப்பு மருந்துகளை பாதுகாப்பாக  வைத்திருக்கக்கூடிய புதிய ஜெல் ஒன்றினை தற்போது கண்டுபிடித்திருக்கிறது அமெரிக்காவின் மெக்மாஸ்டர் வேதி பொறியாளர்களின் குழு.மலைப்பிரதேசங்கள், காட்டுப்பகுதிகள், புறநகர் சிற்றூர்கள் போன்ற போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் நோய் பரவினால், அந்த இடங்களுக்கு தடுப்பு மருந்துகளை குளிர்சாதன வசதியுடன் பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பது எப்போதும் சவால் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக பலவகை தடுப்பு மருந்துகள் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்க வேண்டிய சூழல் இருப்பதே இதற்குக் காரணம். தற்போது இதற்கு சிறந்த மாற்று வசதியாக உள்ள ஒரு புதிய வகை ஜெல்லினை பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து  உருவாக்கியிருக்கிறது இந்த பொறியாளர்கள் குழு. இந்த ஜெல் குளிர்சாதன பெட்டி இல்லாத சூழலிலும், 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் நிலவும் இடங்களிலும் மருந்துகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் இந்த கடும் வெப்பநிலையிலும் 8 வாரங்களுக்கு மருந்துகளை கிருமித் தொற்று ஏற்படாமலும், அதன் தரம் தாழ்ந்துவிடாமலும் காப்பாற்றுகிறது.   எபோலா, ஜிகா, இன்ஃபுளுயென்ஸா போன்ற கடுமையான நோய்களுக்கான மருந்துகளை பத்திரமாக எடுத்துச் சென்று கட்டுப்படுத்த இந்த தடுப்பு ஜெல் மிகவும் உதவியாக இருக்கப்போகிறது. இந்த புதிய ஜெல்லுக்கு அமெரிக்க உணவு மருந்து கட்டுப்பாட்டுக் கழகமும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனவே, இந்த ஜெல் விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருப்பது மகிழ்ச்சியான செய்தி.   http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7257
    • சரவண பவன்’ ராஜகோபால் காலமானார் உலக அளவில் பல கிளைகளை கொண்ட சரவணபவன் ஹோட்டல் குழுமத்தின் அதிபர் ராஜகோபால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. உடல்நலக்குறைவுக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவருக்கு ஒரு கொலைக்குற்றம் தொடர்பாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 2009-ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறை செல்வதற்கு எதிராக அவர் கடுமையாக போராடி வந்தார். கடந்த ஜூலை 9-ஆம் தேதியன்று மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி சிறை செல்வதை தவிர்க்க அவர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது. சரவணபவன் ஹோட்டல் குழுமத்துக்கு உலகெங்கிலும் 80-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது. நியூ யார்க், லண்டன், சிட்னி போன்ற பெரு நகரங்களிலும் இந்த ஹோட்டலுக்கு கிளைகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த குழுமத்தில் பணிபுரிகின்றனர். ஜோதிடர் ஒருவரின் ஆலோசனை பேரில் தனது பணியாளர்களில் ஒருவரின் மனைவியை திருமணம் செய்துகொள்ள அவர் விரும்பியதாக கூறப்பட்டது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த 2001-இல் இப்பெண்ணின் கணவர் காணாமல்போன நிலையில், அதுகுறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். பின்னர் காட்டுப்பகுதி ஒன்றில் அந்த பெண்ணின் கணவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. 2003-ஆம் ஆண்டில் அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தை அச்சுறுத்தியதாக ராஜகோபால் மீது குற்றம்சாட்டப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் ராஜகோபாலுக்கு உள்ளூர் நீதிமன்றம் ஒன்று 10 ஆண்டுகள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை ஆயுள் தண்டனையாக 2009-இல் உயர் நீதிமன்றம் அதிகரித்தது. கடந்த மார்ச் மாதத்தில் இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. https://www.bbc.com/tamil/india-49027217