Jump to content

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவினால் சபாநாயகர் கருஜயசூரியவிடம் சற்று முன்னர் கையளிக்கப்பட்டுள்ளது.

anura.jpg

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களும், அதனைத் தொடர்ந்து நாட்டில் நிலவும் அசா­தா­ரண சூழ்­நி­லையும் இந்த அர­சாங்­கத்தின் தோல்­வியைத் தெளி­வாக உணர்த்­து­கின்­றன. தாக்­கு­தல்­களால் உயி­ரி­ழப்­புக்கள், சொத்­துக்­க­ளுக்குச் சேதம் என்­பன ஏற்­பட்­ட­துடன், அதனைத் தொடர்ந்து நாட்டின் பொரு­ளா­தாரம் வெகு­வாகப் பாதிக்­கப்­பட்­டது. சிறு­வ­ணிக முயற்­சி­யா­ளர்கள் தமது வரு­மா­னத்தை இழந்­தனர். மக்கள் மனங்­களில் அச்சம் குடி­கொண்­டது. 

இவற்­றுக்கு மேலாக உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் நடை­பெற்று 21 நாட்­களின் பின்னர் முஸ்லிம் மக்­க­ளையும், அவர்­க­ளது சொத்­துக்­க­ளையும் இலக்­கு­வைத்துத் திட்­ட­மி­டப்­பட்ட முறையில் வன்­முறைத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. குண்டுத் தாக்­கு­தல்­களை அடுத்து உட­ன­டி­யாக இத்­த­கைய வன்­மு­றைகள் வெடித்­தி­ருப்பின், அத்­த­ரு­ணத்தின் கோபம் உள்­ளிட்ட உணர்ச்­சி­களின் வெளிப்­பாடு என்று  அதனை  கூற­மு­டியும். எனினும் சுமார் 20 நாட்­களின் பின்னர் தாக்­குதல் இடம்­பெ­று­வ­தென்­பது நன்கு திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­ட­தையே வெளிக்­காட்­டு­கின்­றது.   

பயங்­க­ர­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தொடர் குண்­டுத்­தாக்­கு­தல்கள் திடீ­ரென்று திட்­ட­மி­டப்­பட்ட தாக்­கு­த­லொன்­றல்ல. இஸ்­லா­மிய அரசு (ஐ.எஸ்) இயக்­கத்தில் பயிற்சி பெற்­ற­வர்கள் இலங்­கைக்கு திரும்­பி­யி­ருப்­பது தொடர்பில் தான் அறிந்­தி­ருந்­த­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார். அதே­போன்று கடந்த 2014 ஆம் ஆண்டில் சஹ்­ரானின் குழு­வினர் ஏற்­பாடு செய்­தி­ருந்த கூட்­ட­மொன்றில் இடம்­பெற்ற தக­ரா­றை­ய­டுத்து அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த மூவர் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். இது­கு­றித்து பொலிஸ் நிலை­யத்­திலும் முறைப்­பாடு  செய்­யப்­பட்­டுள்­ளது. 

மாவ­னல்லை புத்­தர்­சிலை உடைப்பு விவ­கா­ரத்தில் குற்­ற­வா­ளி­களைக் கைது செய்­வதில் அர­சி­யல்­வா­தி­களால் இடை­யூறு ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக அமைச்சர் கபீர் காசிம் குறிப்­பிட்­டி­ருந்தார். அந்த விவ­கா­ரத்­துடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் நெருங்­கிய தொடர்­பி­ருப்­பது தற்­போது விசா­ர­ணை­களில் தெரிய வந்­தி­ருக்­கி­றது. வனாத்­த­வில்லு பிர­தே­சத்தில் பெரு­ம­ளவு ஆயு­தங்கள் உள்­ளிட்ட பொருட்கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன. அங்கு பயங்­க­ர­வா­திகள் பயிற்சி பெற்­றி­ருப்­பது தற்­போது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இவை­ய­னைத்­திற்கும் மேலாக தாக்­குதல் குறித்த எச்­ச­ரிக்கை அறி­வு­றுத்தல் வெளி­நாட்டுப் புல­னாய்வு நிறு­வ­னங்­களால் பாது­காப்புப் பிரி­விற்கு அனுப்­பப்­பட்­டி­ருக்­கின்­றன.

எனவே   குண்­டுத்­தாக்­கு­தல்­களைத் முன்­கூட்­டியே தடுப்­ப­தற்குத் தேவை­யான அனைத்துத் தக­வல்­களும் அர­சாங்­கத்­திடம் இருந்­தும்­கூட, அர­சாங்­கத்தின் கவ­ன­யீனம், அச­மந்­தப்­போக்கு என்­ப­வற்­றினால்  பல உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டுள்­ளன. ஆகவே தாக்­கு­தலைத் திட்­ட­மிட்ட பயங்­க­ர­வா­திகள் குற்­ற­வா­ளிகள் என்று கரு­தப்­படும் அதே­வேளை, தாக்­குதல் குறித்து அறிந்­தி­ருந்தும் அதனைத் தடுக்­காத அர­சாங்­கமும் குற்­ற­வா­ளி­யா­கவே கரு­தப்­பட வேண்டும். 

தாக்­கு­தலின் பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்கள் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வி­டப்­பட்­டன. சில ஊட­கங்­களும் இன வன்­மு­றையைத் தூண்டும் வகை­யி­லேயே செயற்­பட்டு வந்­தன. அர­சாங்கம் இவற்றை முறை­யாகக் கண்­கா­ணித்து உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்தால் அண்­மையில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­முறைத் தாக்­கு­தல்­களைத் தடுத்­தி­ருக்க முடியும். 

இந்த அர­சாங்கம் முழு­மை­யாகத் தோல்­வி­ய­டைந்­தி­ருக்­கி­றது என்றே கூற­வேண்­டி­யி­ருக்­கின்­றது. மக்­களின் பாது­காப்புத் தொடர்பில் எவ்­வித அக்­க­றை­யு­மில்­லாத இந்த அர­சாங்கம் தொடர்ந்தும் பத­வி­யி­லி­ருக்க வேண்­டுமா என்­பதை மக்கள் தான் தீர்­மா­னிக்க வேண்டும். அதற்கு மக்கள் தேர்தல் வரை காத்­தி­ருக்க வேண்டும். ஆனால் அர­சாங்­கத்தைத் பத­வி­யி­றக்­கு­த­வற்கு பாரா­ளு­மன்­றத்­திற்கு வாய்ப்­புள்­ளது. அந்­த­வ­கையில் இந்த ஒட்­டு­மொத்த அர­சாங்­கத்­திற்கும் எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை இன்­றைய தினம் சபா­நா­ய­க­ரிடம் கையளித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

 

http://www.virakesari.lk/article/56375

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில தாக்குதல் செய்ய தளமாக இலங்கை பாவிக்கப்படுவதாக நம்ப வைக்கப்பட்டிருக்கலாம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.