பிழம்பு

சாதிப்பாகுபாட்டால் நிறுத்தப்பட்டது ஆலய திருவிழா : போராட்டத்தில் மக்கள்

Recommended Posts

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சாதிப்பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது. 

01__5_.jpg

இதையடுத்து பாதிக்கப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த மக்கள் சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது 

கடந்த வருடம் குறித்த வறணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவில் தேர் திருவிழாவின் போது ஒரு சமூகத்தினர் வடம் பிடிக்கக் கூடாது என்பதற்காக (பெக்கோ) இயந்திரம் மூலம் தேர் இழுக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. 

இதனால் இந்த வருட திருவிழா சம்பந்தமாக தென்மராட்சி பிரதேச செயலர் குறித்த ஆலய அனைத்து சமூகத்தினரையும் அழைத்து ஒற்றுமையாக திருவிழாவை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

01__3_.jpg

ஆனால் அதனையும் மீறி நேற்று திங்கட்கிழமை (20)  ஆரம்பமாகவிருந்த வருடாந்த உற்சவம் ஒருதரப்பினால் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்னொரு சமூகத்தைச் சார்ந்த மக்கள் இன்று மதியம் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இதன்போது ஆலயத்தில் அனைவருக்கும் சமவுரிமை வேண்டும் சாதிப்பாகுபாடு பார்க்கக்கூடாது, கடந்த வருடம் இயந்திரத்தால் தேர் இழுக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளப்படமுடியாது அதற்கான தீர்வு என்ன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஏந்தியிருந்தனர். 

01__1_.jpg

போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த பிரதேச செயலர் இந்த ஆலய பிரச்சினையை தம்மால் தீர்க்க முடியாதுள்ளமையால் நீதிமன்றத்தை நாடுமாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில் 

சிமிழ் கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவில் ஏழாந்திருவிழாவினை எமது சமூகத்தை சேர்ந்த மக்கள்தான் செய்கின்றோம். ஆனால் இந்த முறை திருவிழா செய்வதானால் நாம் சுவாமி தூக்கக்கூடாது என்று கூறினார்கள் இதற்கு நாம் உடன்படவில்லை இதனால் நேற்று தொடங்க  வேண்டிய வருடாந்த திருவிழாவையே நிறுத்திவிட்டார்கள் எனத் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/56429

Share this post


Link to post
Share on other sites

சாதிய வேறுபாடுகள் களைய பட வேண்டும்..

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
17 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சாதிய வேறுபாடுகள் களைய பட வேண்டும்..

அடக்குமுறைகளிலிருந்து விடுபட போராடும் இனம் பல்வேறு வடிவங்களில் அடக்குமுறையையின் விழுமியங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் போது இந்த இனம் சுதந்திரத்திற்கு தகுதியானதா என்ற இயல்பாக எழும் கேள்வியை தவிர்க்க முடியவில்லை. 

  • Like 2
  • Sad 1

Share this post


Link to post
Share on other sites

போராட்டத்தின் பின்னடைவுக்கு முக்கிய காரணிகளில் ஒன்று சாதிய ஏற்றத்தாழ்வு.
எங்களுக்கு விடுதலை ஒரு நாளும் கிடையாது, அடிமை வாழ்வு தான்.

  • Sad 1

Share this post


Link to post
Share on other sites

மிகவும் பிற்போக்கான சாதிப்பாகுபாடுகள் மூலம் கோயில் திருவிழாவை நிறுத்தும் அளவுக்கு  2019 இலும் சாதியம் வேரூன்றி உள்ளது. இப்படியான ஏற்றத்தாழ்வுகளை விடுதலைப்போராட்டம்கூட வரணி போன்ற இடங்களில் மாற்றவில்லை. தேசவழமைச் சட்டம், ஷரியா சட்டம் போன்றவற்றை இல்லாமல் செய்து எல்லோருக்கும் பொதுவான நீதி வந்தால்கூட மாற்றம் வருமா தெரியாது

Share this post


Link to post
Share on other sites

வடபகுதியில்   சாதி குளறுபடிகளுக்கு  தென்மராட்சிதான் முதன்மையானது. அதனால் தான்  தென்மராட்சியை குழைக்காடு என்று சொல்வார்கள். இதற்கு காரணம் புரிந்துணர்வு என்பது இரு பகுதிகளுக்கும் இல்லை.

ஆகையால் தாம் தாழ்த்தப்பட்டவர்கள் என நினைப்பவர்கள் தங்களுக்கென கோவில் கோபுரங்களை கட்டி புண்ணியங்களை தேடலாம்.

சுப்பன் கோவிலில் குப்பன் உரிமை கேட்காமல் குப்பனே சொந்த கோவில் கட்டட்டும்.

Share this post


Link to post
Share on other sites

,யாழ்பாணத்தில் பல இடஙகளில் சாதி குறைந்தவர்களுக்கு வீடுகள் விற்கவோ வாடகைக்குவிடவோ படுவதில்லை,ஆனால் முஸ்லீம்களுக்கு தாராளமாக வீடுகள் வாடகைக்கு விடப்படுகின்றன,காலபோக்கில் அவர்கள் காசினை அள்ளி இறைத்து அவற்றை தமது சொந்தவீடு ஆக்கி கொள்வார்கள்.

தமது பிரதேசஙகளில் அந்நியன் விகாரையோ  பள்ளிவாசலோ கட்டகூடாது அது எமது இனத்துக்கு இழைக்கப்படுகின்ற அநீதி என்று போர்கொடி தூக்கும் எமது சமூகம்,சொந்த இன மக்களை சொந்த இனத்தின் வழிபாட்டு தலஙகளுக்குள் நுழையகூடாது வடம் பிடிக்க கூடாது என்பதெல்லாம் எந்த ஊரு நியாயம் ?

  • Like 1
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கு. எங்கட சனம் இன்னும் சாதி பாகுபாட்டிற்குள். இது கூட ஒரு காரணம் எம் மக்கள் முன்னேறாமைக்கு.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, குமாரசாமி said:

ஆகையால் தாம் தாழ்த்தப்பட்டவர்கள் என நினைப்பவர்கள் தங்களுக்கென கோவில் கோபுரங்களை கட்டி புண்ணியங்களை தேடலாம்.

சுப்பன் கோவிலில் குப்பன் உரிமை கேட்காமல் குப்பனே சொந்த கோவில் கட்டட்டும்.

கோயில் என்பது எல்லோரும் வழிபடும் பொதுவான இடம். சாதிக்கொரு கோவில் கட்டலாம் என்று தீர்வு சொல்வது சாதீயத்தை தொடர்ந்து தக்க வைக்கவே சொல்லும் சாட்டு.

சுப்பன் கோவில், குப்பன் கோவில் என்று தனியாரின் கோவில்கள் அமைவது மதவுணர்வை வளர்க்க அல்ல. பிரிவினைகளை வளர்க்கத்தான்.

இவையெல்லாம் 1960, 70 களில் நடந்த சாதீய அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை நினைவுபடுத்தும் சிவா சின்னப்பொடியின் “நினைவழியா வடுக்கள்” என்ற நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அது வரலாறு என்று நினைத்தேன். ஆனால் அது இப்போதும் நிகழ்வதும் அடுத்தடுத்த சந்ததிகளுக்கு காவப்படுவதும் மிகவும் கேவலமானது.

  • Like 5

Share this post


Link to post
Share on other sites

வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..

May 22, 2019

 

வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு காரணமாக ஆலயத் திருவிழாவை நிறுத்தியவர்களுக்கு எதிராக ஊர் மக்களுடன் இணைந்து நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கு அகில இலங்கை சைவ மகா சபை தீர்மானித்துள்ளது.

மேற்படி ஆலய நிர்வாகத்தை தம்வசம் வைத்திருக்கின்ற சிலர் அப்பகுதியில் உள்ள மக்களை சாதீய ரீதியில் வேறுபடுத்திப் பார்க்கின்றனர் என கடந்த காலங்களில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. அதன் ஒரு கட்டமாக கடந்த வருடம் (2018) வருடாந்த திருவிழாவின் போது ஒரு சமூகத்தினர் வடம் பிடித்து தேர் இழுக்கக்கூடாது என்பதற்காக ஜே.சி.பி கனரக இயந்திரத்தின் மூலம் தேர் இழுந்து அனைத்துலக சைவத் தமிழ் மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தினர்.

எனினும், ஆலய வீதியில் புதிதாக மணல் கொட்டப்பட்டதால் தேர் இழுப்பதில் உள்ள சிரமங்களைக் காரணம் காட்டியே கனரக வாகனத்தின் மூலம் தேர் இழுக்கப்பட்டது என அப்போது ஆலய நிர்வாகத்தினரால் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த விடயம் பெரும் பூதாகரமானதைத் தொடர்ந்து அகில இலங்கை சைவ மகா சபையின் அங்கத்தவர்கள் நேரடியாக அங்கு சென்று பல தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொண்டனர். அடுத்த ஆண்டுகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என அப்போது கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வருடம் (2019) வருடாந்த திருவிழாவுக்கான ஏற்பாட்டுக் கூட்டம் நடைபெற்றபோது 7 ஆம் திருவிழா உபயகாரர்களான குறித்த சமூகத்தினர் தேர் வடம் பிடித்து இழுக்கக்கூடாது எனக் கூறப்பட்டது. இதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர்.

இவ்விடயம் தென்மராட்சிப் பிரதேச செயலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் எந்தவித வேறுபாடுகளும் இன்றி திருவிழாவை நடத்துமாறு ஆலய நிர்வாகத்தினரை பிரதேச செயலாளர் அறிவுறுத்தினார் எனக் கூறப்படுகின்றது.

எனினும், ஆலய நிர்வாகத்தினர் திடீரென திருவிழாவை நிறுத்தியிருக்கின்றனர். கடந்த 20 ஆம் திகதி திருவிழா ஆரம்பமாகவிருந்த நிலையில், அது திடீரென நிறுத்தப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். சாதிப் பாகுபாடு இன்றி திருவிழாவை நடத்த அனுமதிக்குமாறு கோரி இப்போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், சாதியப் பாகுபாடு காட்டுவதன் மூலம் எந்தவொரு சமூகத்தையும் ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கருதிய சைவ மகா சபை குறித்த ஆலய நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு தீர்மானித்துள்ளது.

சைவ மகா சபையின் அங்கத்தவர்கள் கூடி இந்த விடயம் குறித்து ஆராய்ந்ததன் அடிப்படையில், வழிபடுவோரின் உரிமையை மறுத்த ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு எதிராக பாகுபாடுகளுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகளின் கீழ் வழக்கைத் தாக்கல் செய்வது எனத் தீர்மானித்துள்ளனர்.

#வரணிசிமிழ்கண்ணகைஅம்மன்ஆலயம் #சாதிப்பாகுபாடு

 

http://globaltamilnews.net/2019/122417/

Share this post


Link to post
Share on other sites

இந்த சிவசேனை, இந்துமாமன்றம், உலக சைவ பேரவை போன்ற அமைப்புகள்  செய்கின்றன?  

இவர்கள் அமைதியாக இருப்பதன் மூலம் இவர்களும் இதை ஆதரிக்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும்!

எனவே சைவர்கள் (இந்துக்கள்) இன்னுமா சாதிப் பாகுபாடுகளை பார்க்கும் மிக மோசமான, மிகக் கேவலமான மனித ஜென்னமங்களாக இருக்கிறார்கள்?

உயர்சாதி என குறிப்பிடப்படும் பிரிவினரின் ஆதிக்க  வெறியும், தாழ் சாதி என குறிப்பிடப்படும் பிரிவினரின் தாழ்வு மனோநிலையால் ஏற்படும் முரண்பாடுகளும் முழுமையாக களையப்பட வேண்டும்! இதற்கு சிவசேனை, இந்துமாமன்றம், உலக சைவ பேரவை போன்ற அமைப்புகள் உடனடி  முயற்சி எடுக்காவிட்டால் அவர்கள் தங்கள் அமைப்புக்களை கலைத்துவிடுவது  நல்லது.

சாதிப் பாகுபாடுகள் வேரோடு அறுத்து எறியப்பட வேண்டும்!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.