Jump to content

தொலைபேசியூடான மருத்துவ ஆலோசனைகள்.

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Over the phone referrals.!!
தொலைபேசியூடான மருத்துவ ஆலோசனைகள்.
**********************************

..................... ( புள்ளிக்கோட்டில் பிடித்த ரிங்டோனை நிரப்பிக் கொள்ளவும்).
போன் ரிங்க, எடுத்தால் தெரியாத இலக்கமொன்று திரையில் மின்னியது.

"ஹலோ"
"ஹலோ, சஜீதன் டொக்டரா"
"ஓம், சொல்லுங்க, நீங்க?"
" நான் ரமணி அன்ரி, ஞாபகம் இருக்கா, உங்கட அம்மாவோட வேல செஞ்சநான், உங்கட வீட்டயெல்லாம் வந்திருக்கனே, நீங்க சின்னப்புள்ள அப்ப"

சத்தியமாக ஞாபகம் இல்லை.

" ஆ, ஓம் அன்ரி, தெரியும்.. என்ன விஷயம்"
" இல்ல, எங்கட அக்கா ஒராளுக்கு கொஞ்சம் பிரச்சனை, அதக் கேட்கத்தான்.."

எதிர்பார்த்தது தான்..!

" என்ன பிரச்சனை"
" கொஞ்ச நாளா தலையிடியாம், வேலைக்கு போறதெல்லாம் கஷ்டமா இருக்காம், இரவுல நித்திரையும் வரல்லியாம், டொட் டொட் டொட்ட்ட்ட்...."
அவர் முடிக்கும் வரை கேட்டு விட்டு,
" எவ்வளவு காலமா? எந்தப் பக்கம்".. என்று வழமையாக கேட்கும் ஓரிரு கேள்விகளை கேட்டேன்.
" அக்கா இப்ப நித்திர கொள்ளுவா, எழும்புன உடனே கேட்டு சொல்லட்டா"?

நேரம் அப்போது காலை 10 மணி.

" என்ன இந்த நேரத்துல நித்திரை கொள்ளுறா" என்று கேட்டேன்.
" என்ன இப்பிடி கேக்கீங்க, இந்த நேரத்துல தானே நித்திரை கொள்ளணும்" என்றார்.
ஒருவேளை நைட் டியூட்டி செய்பவராக இருக்குமோ என்று நினைத்து,
"ஒருவேளை இரவு கண்முழிச்சி வேலை செய்றதாலயும் தலையிடி வரலாம் " என்றேன்.
" என்ன டொக்டர் சொல்றீங்க? என்ன இரவு கண்முழிக்கிறது?அவ இரவுலதானே நித்திரை கொள்றா.."

எனது கடிகாரம் இப்போது காலை 10.06 என்றது.

" இப்ப இரவா காலையா" என்றேன்.
" நமக்குத்தான் காலை, அவக்கு இரவு தானே" என்றவர், " என்ன டொக்டர், எங்கட அக்காவ தெரியாதா உங்களுக்கு.. நீங்க சின்னப்புள்ளையா இருக்கக்குள எத்தின தரம் தூக்கியிருக்கா.. ஒருக்கா அவட சட்டையில சூ போய்.. ஞாபகம் இல்லியா..
அவ யூ.எஸ் போனது கூட தெரியாதா உங்களுக்கு " என்றார்.

இப்போது எனக்கு தலையிடித்தது.
***********************

தலைப்புள் நுழையுமுன் சிறு சம்பவத்துடன் வருவோமென்று தொடங்கினால், அது அனுமார் வால் போல நீண்டு விட்டது.

தொலைபேசியூடான மருத்துவ ஆலோசனைகள்.. இதுதான் தலையங்கம்!

மருத்துவத்துறை சார்ந்த அனைவரும் இதை எதிர்கொண்டிருப்பார்கள்.
மற்றவர்கள் தங்கள் மருத்துவ நண்பர்களுக்கோ, உறவினருக்கோ, தெரிந்தோருக்கோ இல்லை தெரிந்தவரின் தெரிந்தவருக்கோ இது தொடர்பாக போன் போட்டிருப்பீர்கள்.

முதலில் ஒரு நோய் எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது என்று பார்ப்போம் ( மருத்துவ துறைசார்ந்தோர் இப்பகுதியை ஸ்கிப் செய்து உங்கள் வாழ்நாளின் இரண்டு நிமிடங்களை சேமித்துக்கொள்ளுங்கள்)

😊 நோயாளி நோய்க்கான அறிகுறிகளுடன் வைத்தியரை சந்திப்பார். இங்கு அவரின் நோய்க்குணங்குறிகள் கேட்டறியப்படும்.
இதை history என்போம்.

இதிலிருந்து நமக்கு ஒரு "வடிவம்" கிடைக்கும். ஆனால் உள்ளடக்கம் இன்னும் தெரியாது.

😊😊 அதன் பின் நோயாளி வைத்தியரால் பரிசோதிக்கப்படுவார். Examination எனப்படும்
இது மிகவும் முக்கியமான கட்டம். நோய் தொடர்பான பல முடிவுகள் இங்கு எடுக்கப்படும். ஒரு வைத்தியரின் அனுபவம் வெளிப்படுத்தப்படும் படிமுறை இது.
இங்கு நோயாளியின் பொதுவான உடல்நிலை, நாடித்துடிப்பு, குருதியமுக்கம், இதயத்துடிப்பு, நுரையீரல்கள் என்று நிறைய விடயங்கள் பரிசோதிக்கப்படும்.

😊😊😊 அதன்பின் தேவையான பரிசோதனைகள் செய்யப்படும்.
குருதி மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், ஈசீஜீ, எக்ஸ்ரே எல்லாம் இதில் அடங்கும்.

இவை அனைத்தையும் வைத்தே நோய் நிர்ணயிக்கப்பட்டு, மருந்து முடிவு செய்யப்படும்.

***************

இப்போது நமது " தொலைபேசி மருத்துவத்துக்கு" வந்தால், இங்கு மேற்கூறிய இரண்டாவது படியான examination ( நேரடியான உடல் பரிசோதனை) நடைபெற சாத்தியமேயில்லை.

உதாரணமாக, " நான்கு நாட்களாக காய்ச்சல், வயிற்று வலி, பசியில்லை, தலைசுற்றுகிறது" என்ற முறைப்பாட்டின் காரணம் - சாதாரண சிறுநீர்ப்பாதை கிருமித்தொற்றாகவும் இருக்கலாம், அல்லது டெங்கு குருதிப்பெருக்கின் அறிகுறியாகவும் இருக்கலாம். இதை நேரில் பார்த்தாலொழிய கண்டுபிடிக்க முடியாது.

இன்னும் சிலர் நாலைந்து இரத்த மற்றும் சிறுநீர் ரிப்போர்ட்டுகளை வட்சப்பில் அனுப்பி, மருந்து கேட்பார்கள்.
ஒருவேளை மருத்துவ பாடத்திட்டத்தில் சாத்திரம், மந்திர தந்திரம் எல்லாம் இருக்கும் என்று நினைத்திருப்பார்களோ தெரியாது.

இதில் மிக அபாயமான விடயம் சிறுவர்களின் நோய் தொடர்பானது.
" டொக்டர், பிள்ளைக்கு ஆறுமாசம் இப்ப. ரெண்டு நாளாக தொடர்ந்து அழுது கொண்டே இருக்கு. பால் குடிக்கிறதும் குறைய.."
" மகன் நாலைஞ்சி நாளா ஒரே சோர்வா இருக்கான். எப்ப பார்த்தாலும் தூங்கிக்கொண்டே இருக்கான்..."

இப்படி சில முறைப்பாடுகள் வரும். இவை சில பாரதூரமான நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இவர்களுக்கு நான் சொல்லும் பதில், " உடனே அருகிலுள்ள வைத்தியசாலைக்கு பிள்ளையை கொண்டு செல்லுங்கள்" என்பதே!

***************
யோசித்துப் பாருங்கள்..!
அமரிக்காவில் இருக்கும் அக்காவின் தலையிடியை மட்டக்களப்பில் இருந்து கொண்டு சுகமாக்க வேண்டுமானால் , நான் வைத்தியராக இருக்க வேண்டுமா இல்லை மந்திரவாதியாக இருக்கவேண்டுமா?

மருத்துவம் என்பது ஒரு கலை. அனுபவித்துச் செய்ய வேண்டியது.
ஒரு ஓவியனிடம் ஒரு காட்சியை விவரித்து அதை படமாக வரையச் சொல்வதற்கும், காட்சியை நேரில் பார்த்து , அனுபவித்து வரைவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இரண்டாவதில் தான் உயிரோட்டமான ஓவியம் உருவாகும்.

மருத்துவமும் அதே போலதான்.

நோயாளி நம்மை நோக்கி வருகையில், அவரின் நடையை அவதானிப்பதிலிருந்து மருத்துவம் தொடங்குகிறது. அவரது பேச்சு, தொனி, உடல்மொழி எல்லாவற்றிலும் மருத்துவம் கலந்திருக்கிறது.
ஒருவரின் நாடித்துடிப்பு நிறைய விடயங்களை நமக்கு சொல்லும்.

இவையொன்றுமில்லாமல் வெறுமனே ரிப்போர்ட்டுகளை மட்டும் வைத்து மருத்துவம் பார்க்கவேண்டுமானால் அதை ஒரு கம்பியூட்டர் செய்துவிடுமே..!

விஞ்ஞானம் இவ்வளவு முன்னேறியிருந்தும் ஏன் ஒரு " ரோபோ மருத்துவரை" உருவாக்க முடியவில்லை?
ஏனெனில் ஒரு குறித்த நோய் ஒவ்வொருவரிடமும் வெளிப்படுத்தப்படும் விதம் ஆளுக்காள் வேறுபடும். அதைக் கண்டுபிடிக்கக் கூடிய அல்கோரிதம் இன்னும் உருவாக்கப்படவில்லை.

************

சாதாரண மருத்துவ ஆலோசனைகளை தொலைபேசியில் கேட்பது பிரச்சனையில்லை.

உதாரணமாக " எனக்கு சீனிவருத்தம் இருக்கிறது, மெட்போர்மின் குளிசை பத்துவருடங்களாக பாவிக்கிறேன், மெட்போர்மின் கிட்னியை பாதிக்கும் என்று சொல்கிறார்கள், அதனால் குளிசை போடப் பயமாக இருக்கு.. என்ன செய்யலாம்" என்று ஒருவர் கேட்டார்.
அவருக்கு ஏறத்தாழ 15 நிமிடங்கள் மெட்போர்மினும், கிட்னியும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினேன் - தொலைபேசியூடாகத் தான்..!😆

இவ்வாறான ஆலோசனை கேட்கும் அழைப்புகள் ஆபத்தற்றவை; ஏற்றுக்கொள்ளக்கூடியவை.

*****************

எனவே, இயலுமான வரை தொலைபேசியூடான நோய்நிர்ணய முயற்சிகளை தவிர்க்கப்பாருங்கள்.
நோயாளியை வைத்தியரிடம் நேரடியாக காட்டுங்கள்.
முக்கியமாக நெஞ்சுவலி, மூச்சு கஷ்டம், திடீர் மயக்கம், காய்ச்சல் போன்ற ஆபத்தான அறிகுறிகளுக்கு ஒருநாளும் தொலைபேசி ஆலோசனைகளை நாட முயற்சிக்காதீர்கள்.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் பொறுப்பு!

DR சஜிதனின் முகப்புத்தகத்தில் இருந்து சுட்டேன் 
 
206
 
Show More React

Comments
 
 •  
   
  Hide or repor
   
  •  

 •  
   
 • Haha 1
Link to post
Share on other sites

இவர் என்ன ஊர் டாக்குத்தரோ..?!

-------------------

அண்மையில் ஊருக்குப் போயிருந்த வேளை.. நுளம்புக் கடியோ என்னவோ தெரியவில்லை.. உடம்பில் குறித்த சில பாகங்களில்..குறிப்பாக கை.. கால்...நெற்றி..  சிறிய சிவப்புக் கொப்புள வீக்கங்கள். சொறிய ஆரம்பித்தால்.. சொறிந்து கொண்டே இருக்கனும்.. அவ்வளவு சொறி. அது தாங்கேலாமல்..

ஒவ்வாமையாத்தான் இருக்கும் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால்.. ஒவ்வாமை எதுக்கு வந்தது.. வித்தியாசமா ஒன்னும் சாப்பிடவும் இல்லை.. என்பது தான் புரியாத புதிராக இருக்க..

ஓர் நாள் மாலை.. யாழ் நல்லூரடியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருந்தகத்திற்கு ஒவ்வாமை மருந்து வாங்கச் சென்றேன்.

அந்தம்மா பார்த்திட்டு.. இது அலேர்ஜியா தான் இருக்கும்.. ஆனால்.. மருந்தெடுக்கனும் என்றால்.. டாக்டரிடம் துண்டு கொண்டு வரனும். இங்கையே உள்ள டாக்டர் இருக்கிறார்... நீங்கள் உடன புக் பண்ணிக்காட்டலாம் என்றார்.

இல்லை.. இல்லை.. டாக்டர் தேவை இல்லை.. நீங்கள் நான் கேட்கிற மருந்தை தந்தாலே காணும்.. என்றேன்.

இல்லை.. டாக்டரின் பிரிஸ்கிரிப்சன் இல்லாமல்.. அது தரேலாது.. நீங்கள் உள்ள போய் புக் பண்ணி டாக்டரிடம் காட்டுங்கள் என்றார்.

சரி.. என்னவோ.. தொலையுது என்றுவிட்டு..

உள்ள போய் டாக்டரிடம் புக் பண்ணி.. ஒரு 30 நிமிடம் வெயிட் பண்ணி..

டாக்டர் ரூமுக்குள்ள போனால்..

டாக்டர் என்பவர்.. ஓர் இளைஞர் தான்.. ஆனால்.. ஊரில மதில் மேல சில காவாலிகள் இருக்குங்கள்.. அது போல இருக்கார். ஒரு ஊத்தை ரீசேட்..முழுக்காற்சட்டை அப்படி இப்படின்னு..

மனதுக்குள்.. ஐயையோ.. உதட்ட வந்து மாட்டிட்டமே... என்று நினைக்கிறத்துக்குள்ள..

டாக்டர்.. தமிழின தான் கேட்டார்.. என்ன பிரச்சனை என்று.

நானும் பிரச்சனையை சொன்னன்.

உடம்பு பூரா கடியோ இல்ல.. சில இடங்கள் தானோ என்று. 

உடம்பு பூரான்னு இல்ல.. முக்கியமா உடுப்புக்கு வெளியில்.. வெளிப்படும்.. பாகங்களில் என்றேன்..

பெரும்பாலும்.. உது நுளம்புக்கடியாத் தான் இருக்கும்.. நீங்கள் யோசிக்கத் தேவை இல்லை என்றார்.

நான் சொன்னேன்.. இல்லை நான் நுளம்பு வலைக்குள்ள தான் தூங்கிறனான். இந்தளவுக்கு நுளம்பு கடிக்கிறதுக்கு வாய்ப்புக் குறைவு என்றேன்..

இது எப்ப இருந்து ஆரம்பிச்சது என்றார்...

இந்த நாட்டுக்கு வந்திறங்கின நாளில இருந்து ஆரம்பிச்சுட்டு என்றேன்..

அப்ப நீங்கள் வெளிநாடோ என்றார்..

ஓம்.. வெளிநாட்டில் இருந்து தான் வந்திருக்கிறேன்.. என்றேன்..

உள்ள வரேக்கையே தெரிஞ்சது... நான் நீங்கள் தப்பா நினைப்பீங்களோ என்று கேட்கவில்லை.. இது பெரும்பாலும் நுளம்புக்கடி தான். வேற பிரச்சனை இருக்கோ என்றார்.

ஆம் தொண்டை நோவும்.. இருக்குது என்றேன்.

-- அப்படியா.. என்று வாயை திறந்து ரோச் அடிச்சுப் பார்த்திட்டு..--

பெரிசா ஒன்னுமா தெரியல்ல.. வைரல் தாக்கமா இருக்கும்.. அதுக்கு மருந்து தாறன்.. என்றார்.

வைரல் தாக்கத்துக்கு மருந்தா.. அல்லது நோவுக்கு மருந்தா என்றேன்..

நோவுக்கு என்றார்.

நான் சொன்னேன்.. இது அலேர்ஜியா இருக்கலாம்.. தூசி சம்பந்தப்பட்டு.. இங்க காற்றில சரியான தூசு.. எதுக்கும் நான் கேக்கிற மருந்தையும் எழுதுங்கோவன் என்றேன்.. நான் மருந்தின் பெயரைச் சொன்னதும்..

அதுக்கு... நீங்கள் பிரிஸ்கிரிப்சன் கொடுக்கத் தேவையில்லை.. கவுன்டரில் கேளுங்கள் தருவினம் என்றார்.

இல்லை.. அவை தான் கேட்டவை என்றேன்.

அவை.. மாறிக் கேட்டிட்டினம்.. போல.. 

நீங்கள் நான் சொன்னது என்று சொல்லுங்கோ.. தருவினம்.

அப்ப நன்றி டாக்டர் என்று அவர் எழுதின மருந்துத் துண்டோடு வெளியில் வந்து..

அந்த மருந்தக அம்மையாரிடம்... சென்று.. அந்த துண்டையும் கொடுத்து நான் முன்னர் கேட்ட மருந்தையும் கேட்க.. ஒரு சத்தமும் இல்லாமல்.. இரண்டையும் தந்தார். அத்தோடு... டாக்டர் பார் கூலி 1500 + மருந்து + உதவியாளர் கொடுப்பனவு = 2500 ரூபாக்கு பில்.

நான் கேட்டேன்.. இந்த மருந்தை முதலே தந்திருந்தால்.. நான் 250 ரூபா செலவோடு போயிருப்பன்.  இப்ப 2500 ரூபா செலவு. எதுக்கு.. 

இல்லை.. நாங்கள் வெளியார் வந்தால்.. செக் பண்ணித்தான் மருந்து கொடுக்கிறது என்றார்.

இதுக்கு மேல.. அவர்களுடன் நின்று தகராறுப்பட விருப்பாமல்.. நான் வெளியேறிப் போய் விட்டேன்.

நான் நினைக்கிறேன்.. குறித்த மருந்தகம்.. மற்றும் தனியார் வைத்தியசாலை மாலை நேரத்தில்.. பயிலுனர் டாக்டர்களை வைச்சு இப்படிப் பிழைப்பை ஓட்டுதுன்னு. 

இதை ஏன் இங்க எழுதிறேன் என்றால்..

மக்கள் மட்டுமல்ல.. நம் டாக்டர்களும் பலே கில்லாடிகள் தான். அதுவும் ஊரில்..... சப்பா.. பார்த்திருக்கப் பகற்கொள்ளை நடக்கும். 😂

----------------------

ஆ... அந்தக் கடிக்கு என்னாச்சுது... என்றால்.. அது எந்த மருந்து சாப்பிட்டும் நிற்கவில்லை. மருந்து சும்மா சாப்பிட்டது தான் மிச்சம். தொண்டை நோவும் மாறவில்லை. ஊரில் இருந்து கிளம்பி.. மீண்டும் வாழிடம் வந்து இரண்டு நாளில் எல்லாம் அடியோடு ஓடிவிட்டது.

இன்னும்.. அதற்கான காரணம்.. புரியவில்லை. ஒன்றில்.. தூசி.. சம்பந்தப்பட்ட ஒவ்வாமை..இல்ல.. தூசி சம்பந்தப்பட்ட தொற்றுகள் காரணமாக இருக்கலாம். அல்லது நுளம்புக்கடி.. + மற்றைய காரணிகள்.. கூட்டு. 

ஆனால்.. அது யாழ்ப்பாணத்தூசி என்றில்லை.. கொழும்புத் தூசி.. கண்டித்தூசி.. குருணாகல் தூசி.. எல்லாத்துக்கும் கடிதான். 

Edited by nedukkalapoovan
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவரின்ட  தமிழ் வித்தியாசம் தெரியவில்லையா?...மட்டக்களப்பு தமிழ் அங்கால பகுதியில் வைத்தியராய் வேலை செய்கிறார் 

On ‎5‎/‎21‎/‎2019 at 10:23 PM, nedukkalapoovan said:

இப்ப அங்கு டாக்குத்தர்மார் வலு சிம்பிள் தெரியுமோ?...நீங்கள் போட்ட சோப் ஒத்துக் கொள்ளவில்லையாக்கும் 

Edited by ரதி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் தன்ர ராசி பாக்கிறது நல்லது.

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் பள்ளியில் படிக்கிற காலத்தில எங்கட வீட்டுக்கு முன்னால கொஞ்சாம் தள்ளி இருந்த ஒரு அன்டிக்கு வேலை ரோட்டுல நின்று கொண்டு போற , வாற ஆட்களை பற்றி கிரந்தம் கதைக்கிறது அதுவும் பொம்பிளை பிள்ளையளை பற்றி கண்ணு,மண்ணு தெரியாமல் கதைக்கிறது...ஒரு நாள் பள்ளிக்கு போன அவன்ட மகள் வீட்டுக்கு வரேல்ல...அந்த அக்காவை யாரோ அண்ணா தள்ளிட்டு போயிட்டாங்களாம் 

நந்தனுக்கு நான் என்ன சொல்ல வாறன் என்று விளங்கி இருக்கும்...விளங்காட்டில் பெருமாள் விளங்கப்படுத்துவார் 
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் பள்ளியில் படிக்கிற காலத்தில எங்கட வீட்டுக்கு முன்னால கொஞ்சாம் தள்ளி இருந்த ஒரு அன்டிக்கு வேலை ரோட்டுல நின்று கொண்டு போற , வாற ஆட்களை பற்றி கிரந்தம் கதைக்கிறது அதுவும் பொம்பிளை பிள்ளையளை பற்றி கண்ணு,மண்ணு தெரியாமல் கதைக்கிறது...ஒரு நாள் பள்ளிக்கு போன அவன்ட மகள் வீட்டுக்கு வரேல்ல...அந்த அக்காவை யாரோ அண்ணா தள்ளிட்டு போயிட்டாங்களாம் 

உந்த கதையை எங்கையோ கேள்விப்பட்டமாதிரி கிடக்கு......அது சரி அந்த ஆன்டியை டாக்குத்தர் தனிய கூப்பிட்டு வருத்தம் பாத்தவரோ? tw_glasses:

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.