Jump to content

ரொரண்டோவில் தீபச்செல்வனின் நடுகல் புத்தக வெளியீடு (26/05/2019)


Recommended Posts

நடுகல் நாவலுக்கு கனடாவில் அறிமுக நிகழ்வு!

ஈழத்து இளம் எழுத்தாளர் தீபச்செல்வனின் நடுகல் நாவல் உலகின்  பல்வேறு நாடுகளில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றது. அந்த வகையில் கனடா, டொரன்ரோவில் நடுகல் நாவல் அறிமுகம் எதிர்வரும் ஞாயிறு 26 ஆம் திகதி நடைபெறுகின்றது.

எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பொன்னைய்யா விவேகானந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் வரவேற்புரையை ஊடகவியலாளர் கந்தசாமி கங்கதரனும் தீபச்செல்வன் குறித்த அறிமுகத்தை இயக்குனர் ரஞ்சித் யோசப்பும் வழங்கவுள்ளனர்.

 

நூல் அறிமுகத்தினை எழுத்தாளர் ரதனும் வழங்கவுள்ளார். அத்துடன் நடுகல் பெறுமானம் என்ற தலைப்பில் காலம் இதழின் ஆசிரியர் செல்வம் ஆய்வு ஒன்றினை நிகழ்த்தவுள்ளார். மேலும் ஆய்வுரைகளை  ஈழக் கலைஞர் மேர்லின் மற்றும் அன்பு ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

நூலினை ஈழத்துக் கவிஞர் சா.வே. பஞ்சாட்சரம் வெளியிட்டு வைக்க, கவிஞர் தீபச்செல்வனின் ஏற்புரையும் இடம்பெறவுள்ளது

http://globaltamilnews.net/2019/122668/?fbclid=IwAR182poZU-iIcsL8hbm1-RR8FTay3wyvZaIliITwe9DR6NJPYaT1abDQvEs

Link to comment
Share on other sites

யாழ் உறவுகள் யாராவது இவ் நிகழ்வுக்கு செல்கின்றீர்களா?

நான் செல்கின்றேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎26‎/‎2019 at 1:13 PM, நிழலி said:

யாழ் உறவுகள் யாராவது இவ் நிகழ்வுக்கு செல்கின்றீர்களா?

நான் செல்கின்றேன்...

போயிற்று வந்து சத்தத்தை காணோம்

Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

போயிற்று வந்து சத்தத்தை காணோம்

போய் நிகழ்வில் உரைகளை கேட்டு விட்டு புத்தகத்தையும் வாங்கிக் கொண்டு வந்துவிட்டேன். ஞாயிறு காலை 10 மணிக்கு நிகழ்வு என்பதால் வழக்கமாக இப்படியான நிகழ்வுக்கு வருகின்றவர்கள் கூட வரவில்லை. 

யாழ் உறவுகளில் வேறு ஒருவரும் வரவில்லை என்பது ஏமாற்றத்தை தந்தது..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.