யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
 • ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • மனோவால் முடியுமென்றால்  ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முடியவில்லை - வரதராஜப் பெருமாள் கேள்வி அரசியல் கைதிகளின் விடுதலை தெடர்பில் மனோ கணேசனால் கொடுத்திருக்கின்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமாக இருந்தால் 13 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஏன் நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றது.  ஏன் அவர்கள் சென்று அந்த வாக்குறுதியை அளிக்கவில்லை. மேலும், அமைச்சரவைப் பத்திரம் போடுவது இருக்கட்டும், பிரதமர் இது தொடர்பாக என்ன கூறுகின்றார். அவருடைய சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சர் என்ன கூறுகின்றார். நீதியமைச்சர் என்ன கூறுகின்றார். அவர்கள் எவருமே இது சம்பந்தமாக வாய் திறக்கவில்லை. ஆகவே மீண்டும் தமிழ் அரசியல் கைதிகள் ஏமாற்றப்படப் போகின்றார்கள். என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் வரதராஜப் பெருமாள் தெரிவித்தார். கட்சி அலுவத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில், இப்பொழுது உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அரசியல் கைதிகளை மனோ கணேசன் சென்று பார்த்து வாக்குறுதியளித்து அந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்திருக்கின்றார். ஏனென்றால் இப்பொழுது மனோ கணசேனைத்தான் அனுப்ப வேண்டிய கட்டாய சூழலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காரர்கள் இருக்கின்றார்கள். ஏனென்றால் தாங்கள் போகமுடியாது. இவர்கள் கடந்த காலங்களில் பல தடவைகள் அரசியல் கைதிகளுக்கு இவ்வாறான  வாக்குறுதிகள் கொடுத்து கொடுத்து ஏமாற்றியது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆகையால் அரசியல் கைதிகளுக்கு மீண்டும்மொருமுறை அவர்கள் போய் பொய் வாக்குறுதிகளை அளிக்க முடியாது என்பதால் தாங்கள் ஒளிந்துகொண்டு மனோ கணேசனை அனுப்பியிருக்கிறார்கள் ஆனால் மனோ கணேசன் கொடுத்திருக்கின்ற வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவார். மனோ கணேசனால் நிறைவேற்ற முடியுமாக இருந்தால் 13 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஏன் நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றது. ஏன் அவர்கள் சென்று அந்த வாக்குறுதியை அளிக்கவில்லை.  கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போதும் கூட அந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்திருக்காலாம், ஆனால் எந்தவொரு நடவடிக்கையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை. இப்பொழுது அதைப்பற்றி தெரியாதது போல, அரசியல் கைதிகள் சிறையில் இருப்பதே தாங்கள் அறியாதது போல மறந்து விட்டதுபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காரர்கள் செயற்படுகின்றார்கள். ஆனால் தாங்கள் போக முடியாத இடத்திற்கு, இப்பொழுது அந்தக் குற்றச்சாட்டை மனோ கணேசன் மீது திருப்பி விடுதற்காக மனோ கணேசனை அனுப்பியிருக்கிறார்கள் என்றுதான் கூறமுடியும்.  இந்த நிலையில், அமைச்சரவைப் பத்திரம் போடுவது இருக்கட்டும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பாக என்ன கூறுகின்றார். அவருடைய சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சர் என்ன கூறுகின்றார். நீதியமைச்சர் என்ன கூறுகின்றார். அவர்கள் எவருமே இது சம்பந்தமாக வாய் திறக்கவில்லை. ஆகவே மீண்டும் தமிழ் அரசியல் கைதிகள் ஏமாற்றப்படப் போகின்றார்கள் எனத் தானங்கள் நாங்கள் கருதிகொள்ள வேண்டியதாக இருக்கின்றது என்றார்.     https://www.virakesari.lk/article/61092
  • 36 தென்னிலங்கை மீனவர்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்பு   வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்தார்கள் என குற்றம்சாட்டி தென்னிலங்கையை சேர்ந்த 36 மீனவர்களை பருத்தித்துறை முனை பகுதி மீனவர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போதிலும் பொலிஸார் அவர்களை எச்சரித்து விடுவித்துள்ளனர். நீண்ட காலமாக குறித்த கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் நிலையில் அது தொடர்பில் உரிய தரப்புக்களுக்கு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் , அதனால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தாமே கடலில் இறங்கி சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்தோம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். மேலும், 12 படகுகளில் வந்த 36 பேரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போதிலும், அவர்களை பொலிஸார் எச்சரித்து விடுவித்துள்ளனர் எனவும் தெரிவித்தனர். இனியும் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவார்கள் ஆயின் நாம் பொறுத்துக்கொள்ள மாட்டோம். எனவே உரிய தரப்பினர்கள் அது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவர்கள் கோரியுள்ளனர்.     https://www.virakesari.lk/article/61090
  • வவுனியாவிலிருந்து நீர்கொழும்புக்கு செல்லும் வெளிநாட்டு அகதிகள்   வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர், வவுனியாவிலிருந்து நீர்கொழும்பிற்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக புனர்வாழ்வு நிலையத்தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா நலன்புரி நிலையத்தில் நீர்கொழும்பு பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி  கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் காரணமாக தங்கவைக்கப்பட்டிருந்த 113 பேர் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதில் அண்மையில் வவுனியாவிலிருந்து நீர்கொழும்பு முகாமிற்கு  20 பேர் தமது சுயவிருப்பின் காரணமாக சென்றுள்ளனர்.  இந்நிலையில் தற்போது 15 பேர் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலிருந்து நீர்கொழும்பிற்கு தமது சுயவிருப்பில் செல்ல விரும்பம் தெரிவித்துள்ளதாக பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத் தகவல்கள் தெரிவித்துள்ளன. வவுனியாவில் குறித்த அகதிகளை தங்கவைப்பதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பலவிதமான எதிர்ப்புக்கள் வெளிவந்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/61088