பிழம்பு

கொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்

Recommended Posts

உலக வாணிபத்துக்கு மிகவும் முக்கியமானதாக இந்துசமுத்திரம் விளங்குகின்ற நிலையில், கொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் அரசாங்கங்கள் இணங்கியிருப்பதாக டோக்கியோ பங்குப் பரிவர்த்தனையின் சந்தை நிலைவர ' நிக்கீ ' அட்டவணையின் மூலம் தெரியவந்திருக்கிறது.

Colombo_Harber.jpg

 தெற்காசியாவிலும் அதைச் சுற்றியும் கடல் போக்குவரத்தை மேம்படுத்துவதும் கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் பரும அளவை அதிகரிப்பதுமே இந்த கூட்டுச் செயற்திட்டத்தின் இலக்குகளாகும்.

அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் தொடங்கப்படவிருக்கும் திட்டம் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் மூன்று நாடுகளும் விரைவில் கைச்சாத்திடவிருப்பதாக கூறப்படுகிறது.

 இந்த பிராந்தியத்தில் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கு சீனா அதன் நவீன பட்டுப்பாதை திட்டம் என்று வர்ணிக்கப்படுகின்ற மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தை பயன்படுத்துகின்ற அதேவேளை, ஜப்பான் அதன் திறந்த பசுபிக் -இந்து சமுத்திர மூலோபாயத்திட்டத்தை தீவிரப்படுத்தி பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க பாத்திரமொன்றை வகிப்பதில் நாட்டம் காட்ட ஆரம்பித்திருக்கின்ற ஒரு நேரத்தில் மூன்று நாடுகளும் கொழும்பு துறைமுக அபிவிருத்திக்கு இணங்கியிருக்கின்றமை கவனிக்கத்தக்கதாகும். 

புதிதாக விஸ்தரிக்கப்பட்ட கொழும்பு துறைமுகத்தின் தெற்குப்பகுதியில் அமைந்திருக்கும் கிழக்கு கொள்கலன் முனையத்தை மூன்று நாடுகளும் அபிவிருத்தி செய்யும். 

இந்த திட்டத்தில் கோர்ப்பரேட் நிறுவனங்களும் பங்கேற்பதற்கு  வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

http://www.virakesari.lk/article/56515

Share this post


Link to post
Share on other sites

அப்ப இவ்வளவு நாளும் கிண்டிக்கொண்டு இருந்தவன் சைனா காரன் கதை முடிஞ்சு போச்சாக்கும் .

 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
7 hours ago, பெருமாள் said:

அப்ப இவ்வளவு நாளும் கிண்டிக்கொண்டு இருந்தவன் சைனா காரன் கதை முடிஞ்சு போச்சாக்கும் .

கொழும்பு துறைமுக அபிவிருத்தியில் ஒரு பகுதியை மட்டுமே சீனா எடுத்திருந்தது. மிகுதி இலங்கையின் பொறுப்பில்.

ஆரம்பத்தில் கொழும்பு துறைமுக அபிவிருத்தியை சீனா ஆரம்பித்த போது அதை எதிர்த்த இந்தியா பின் 2016 இல் தனது நிறுவனங்களையும் முதலிட வைக்கும் எண்ணத்தில் கதைத்த போது அதை சீனா வரவேற்றிருந்தது. இந்தியா மட்டுமல்ல வேறு நாடுகளின் முதலீடுகளையும் வரவேற்பதாக கூறியது.

2016 ஆம் ஆண்டே கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியில் இந்தியாவுக்கு நாட்டம் இருந்ததால் அதை இந்தியாவுக்கு கொடுக்கும் நோக்கில் கருத்து பகிரப்பட்டது.

பின் போன வருடம் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கு தர முடியாது, வேண்டுமானால் மேற்கு கொள்கலன் முனையத்தை அவர்கள் அபிவிருத்தி செய்யட்டும் என்று மைத்திரிபால சிறிசேன சொல்லி ஒரே புடுங்குப்பாடு நடந்து இப்ப கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியா, ஜப்பானுடன் சேர்ந்து அபிவிருத்தி செய்ய முடிவு செய்திருக்கினம்.

சீனா தனது பக்க அபிவிருத்தியை தொடரும் என நினைக்கிறேன்.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, பெருமாள் said:

அப்ப இவ்வளவு நாளும் கிண்டிக்கொண்டு இருந்தவன் சைனா காரன் கதை முடிஞ்சு போச்சாக்கும் .

 

சிறிலங்காவை இப்ப ஆர் வைச்சிருக்கினம்....சொறி ஆர் இப்ப வைச்சு பராமரிக்கினம்? 🤣

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் கொடிகட்டிப் பறக்கும் இந்தியப் பயங்கரவாதிகள் இலங்கை மண்ணில் இருந்து பூரணமாக அகற்றப்படும்வரை இலங்கையில் அமைதிக்கு சாத்தியமே இல்லை!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, குமாரசாமி said:

சிறிலங்காவை இப்ப ஆர் வைச்சிருக்கினம்....சொறி ஆர் இப்ப வைச்சு பராமரிக்கினம்? 🤣

வந்தவன் போனவன் எல்லாம் வைச்சிருக்கிறான் சொறி வைச்சு பராமரிக்கிறான்.....😄😎

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, போல் said:

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் கொடிகட்டிப் பறக்கும் இந்தியப் பயங்கரவாதிகள் இலங்கை மண்ணில் இருந்து பூரணமாக அகற்றப்படும்வரை இலங்கையில் அமைதிக்கு சாத்தியமே இல்லை!

அப்ப அமெரிக்கா, சீனா, மற்றும் பல நாடுகள் பயங்கரவாதிகள் இல்லையோ? அவர்களும் சேர்ந்து தான் புலிகள் உட்பட தமிழர்களை அழித்தார்கள்.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Lara said:

அப்ப அமெரிக்கா, சீனா, மற்றும் பல நாடுகள் பயங்கரவாதிகள் இல்லையோ? அவர்களும் சேர்ந்து தான் புலிகள் உட்பட தமிழர்களை அழித்தார்கள்.

மெய் தானுங்கோ!
இப்படி கேட்ட படியா, ஒரு பெரிய லிஸ்டே வச்சிருப்பீங்கள் என்டு நினைக்கிறன் எடுத்து விடுங்கோ பாப்பம்.
நானும் தெரிஞ்சுகொள்ளலாம் தானே!
அவை எத்தனை பேரை நேரடியா படுகொலை செய்தவை?
அவை எந்த ஆசுபத்திரிக்கை நோயாளிகளையும் வைத்தியர்களையும் நேரடியா படுகொலை செய்தவை?
அவை எத்தின தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவை?

 

-----

------

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
7 hours ago, Rajesh said:

மெய் தானுங்கோ!
இப்படி கேட்ட படியா, ஒரு பெரிய லிஸ்டே வச்சிருப்பீங்கள் என்டு நினைக்கிறன் எடுத்து விடுங்கோ பாப்பம்.
நானும் தெரிஞ்சுகொள்ளலாம் தானே!
அவை எத்தனை பேரை நேரடியா படுகொலை செய்தவை?
அவை எந்த ஆசுபத்திரிக்கை நோயாளிகளையும் வைத்தியர்களையும் நேரடியா படுகொலை செய்தவை?
அவை எத்தின தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவை?

-----

------

உங்களை பொறுத்தவரை நேரடியாக இவ்வளவையும் செய்பவை மட்டும் தான் பயங்கரவாதி, மற்றவை இல்லை? இவை தாங்கள் இராணுவத்தை அனுப்பிற நாடுகளிலை உதையெல்லாம் நேரடியா செய்தவை தான். அந்தந்த நாட்டு பத்திரிகைகளை பாருங்கோ. அதைவிட நிறைய செய்யினம். உங்களுக்கு உலகத்திலை நடக்கிற ஒன்றும் தெரியாட்டி அதுக்கு நான் ஒன்றும் செய்யேலாது.

இந்தியா தமிழருக்கு கிடைத்த சாபக்கேடு தான். ஆனால் இந்தியாவை குறை சொல்பவர்கள் ஏன் மற்றைய நாடுகளை எளிதில் விட்டு விடுகிறார்கள்?

போர் நிறுத்தம், சமாதான பேச்சு வார்த்தை என்று உள்ளை வந்து புலிகளின் பலம், பலவீனத்தை மதிப்பிட்டு, அங்காலை இலங்கை அரசுக்கும் தகவல் வழங்கி, அவர்களை பலப்படுத்தி புலிகளை பலவீனப்படுத்தினவை.

இலங்கை அரசுக்கு ஆயுதங்கள், இரசாயன குண்டுகள், புலனாய்வுத்தகவல்கள், நிதியுதவி மற்றும் பல உதவிகளை வழங்கினவை. மக்களை இரசாயன குண்டு போட்டு கொல்லும் போது பார்த்து ரசித்துக்கொண்டிருந்த நாடுகள் தான் இவை. புலிகளை சரணடைய சொன்னதிலும் இவையின்ட பங்கு இருக்கு. போர் முடிந்த பின்னும், satellite படங்களை வைத்திருந்தும், நடந்த கொடூரங்கள் பற்றிய காணொளிகள் ஆதாரமாக இருந்தும் இப்ப வரைக்கும் ஒரு நீதி இல்லை. இவையும் போர்க்குற்றவாளியாச்சே.

நேரடியா ஒருத்தனை கொல்லாமை இன்னொருத்தனுக்கு முழு உதவியையும் வழங்கி கொன்றால் அதிலை உங்களுக்கு ok போல.

இந்த நாடுகளின் உதவி இல்லாட்டி இலங்கை அரசு புலிகளை போரில் வென்றிருக்காது, இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டும் இருக்க மாட்டார்கள். அது தன்னும் தெரியுமோ?

Edited by Lara
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, Lara said:

அப்ப அமெரிக்கா, சீனா, மற்றும் பல நாடுகள் பயங்கரவாதிகள் இல்லையோ? அவர்களும் சேர்ந்து தான் புலிகள் உட்பட தமிழர்களை அழித்தார்கள்.

இவற்றுக்கும் இந்திய மிலேச்சப் பயங்கரவாதத்துக்கும் ஒப்பிட முடியாதளவு நிறைய வித்தியாசம் உண்டு!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கிறிஸ்துவுக்கு 6000 வருடங்கள் முன்பு ...........

என்று வரலாறு எழுதுற மாதிரி..
 வர்த்தகம் வணிகம் முதலீடு உலக அரசியல் செய்திதொகுப்பு  தமிழ்மொழி 
கட்டுரை  காவியம் என்பதில் எதுவுமே தெரியாத இணையத்தில் நாலு தமிழ் சொற்கள் 
எழுத தெரிந்த அரைவேக்காட்டு செய்திகளை வைத்து இனியும் தயவு செய்து கருத்து எழுதி உங்கள் 
நேரங்களை வீணாக்காதீர்கள்.
வீரகேசரி என்பது முன்பு பல நல்ல செய்தியாளர்களால் முன்னெடுக்க பட்ட ஒரு பத்திரிகை 
இப்போ வியாபார நோக்கம் கொண்டு இப்படி அசிங்கமாகி சந்தி சிரிக்க நிற்கிறது கவலையானது. 

துறைமுக விரிவாக்கங்கங்கள் பல பில்லியன் டொலர் செலவில் செய்ய படுபவை 
இவை இருக்கும் வீடடை புதுப்பிக்கிற மாதிரி முதலில் குசுனி பின்பு ஆடு மாடு கட்ட கொட்டில் 
விறாந்தை என்று செய்ய முடியாது.

இப்போது சாதாரண வீதி புராணமைப்பு கூட பூர்த்தியான வரைபடத்துடன்தான் செய்ய முடியும் 
காரணம் திரும்ப திரும்ப கிளறினால் ஒவ்வரு முறையும் பல மில்லியன் டொலரை விழுங்கி விடும். 

இலங்கை துறைமுகம் 
காலிமுகத்திடலில் கடலுக்கு உள்ளே போர்ட் சிட்டி 
இரண்டும் சீனா நிறுவனம்தான் செய்கிறது 

துறைமுகத்த்தில் தெற்கு டெர்மினல் முடிவு பெற்று பாவனை நடைபெறுகிறது 
மேற்கு டெர்மினல் முடியும் தருவாயில் இருக்கிறது  
வடக்கு டெர்மினல்  மற்றும் பின் டெர்மினல் என்பதுக்கான வேலைத்திட்டம் 
மேற்கு டெர்மினல் முடியும்போதுதான் தொடங்கப்படும் என்பதும் அதுக்கான முதலீடுகளை 
வெளியில் இருந்து இலங்கை எதிர்பார்ப்பதாகவும் 2016லேயே அறிவித்து இருந்தது.
அப்போதான் இந்திய பிரதமர் மோடி சென்று இந்தியா முதலீடு செய்வதாகவும் குத்தகையாக மேற்கு 
டெர்மினல் வேண்டும் என்றும் குளறுபாடு நடந்தது பழைய செய்தி.
சீனா தொடங்கும்போதே மேற்கு டெர்மினலை குத்ததகைக்கு கையெழுத்து வாங்கிவிட்டே தொடங்கியது 
மற்ற டெர்மினல்களுக்கும் மேற்கு டெர்மினலுக்கும் உள்ள வித்த்தியாசம்  இது ஆழமானது  எந்த பெரிய கப்பலும் வந்து செல்ல வசதி உடையது. 

இந்தியா .... ஜப்பான் ..... சீனா ... அமேரிக்கா ..... அங்கோலா 
என்று அரசியல் நாடகம்  எழுத இதில் ஒன்றும் இல்லை இவை அனைத்தும் 
தனியார் நிறுவனங்களால் இலங்கை அரசின் சம்மதத்துடன் செய்யப்படுபவை 
இந்த நிறுவனங்களுக்கு  தமது சொந்த நாட்டினதும் இலங்கை அரசினதும் பச்சை கொடி 
அசைப்பு  தேவை அவளவுதான். இப்போதும் நிறைய பணம் தேவை முதலீடு செய்ய பலரை 
எதிர்பார்க்கிறார்கள். எதிர்காலத்தில்  சிங்கப்பூர் போல இலங்கை வரியில்லா இறக்குமதி ஏற்றுமதி செய்யப்போகிறது  அப்போ பல நாடுகளின் பண்ட மாற்றம் (Goods Trade) இலங்கையில் நடக்கலாம். 
முதலீடு செய்பவர்கள் எவ்ளவு லாபம் எப்போது லாபம் வந்து சேரும் போன்றவற்றையே பார்ப்பார்கள். 
தவிர முதன்மையாக தமது முதலீட்டுக்கு எவ்ளவு நிச்சய தன்மை அல்லது பாதுக்காப்பு உண்டு என்பதை மட்டுமே பார்ப்பார்கள். 
இங்கே பூதரமாக ஒன்றும் இல்லை எல்லாம் பட்ட பகலில் எமது கண் முன்னாலேயே நடக்கிறது. 
இலங்கை 2050-2075 இல் துபாய் சிங்கப்பூர் போல மாறுவது சாத்தியம் 
மருதடி குளத்து காணிதானே என்று அசதியாக இருக்காதீர்கள் ..... முடிந்த அளவில் முதலீடு செய்து 
லாபம் பெற பாருங்கள். 

 

துறைமுக வேலை தொடங்குமுன்பு வரைபடம் 

Image result for sri lanka colombo harbour development project

கால எல்லைகளுடனான மீளமைப்பு திட்டம் 

Image result for sri lanka colombo harbour development project

நடந்து முடிந்த நடந்துகொண்டு இருக்கிற வேலைகள் 
சென்ற ஆண்டு 2018இல் 

Image result for sri lanka colombo harbour development project

 

Image result for sri lanka colombo harbour development project

பயன்பாட்டில் தெற்கு டெர்மினல் 

Related image

 

 

போர்ட் சிட்டி வரைபடம் 
இது 2040இல் தான் முழுமை பெறும் 

Image result for sri lanka colombo harbour development project

இதுவரையில் முடிந்துவிட்ட வடிவம் ..... 

Related image

துரித கதியில் நடைபெறும் வேலை திட்டம் 

Chinese dredgers work at the construction site of the Colombo Port City project. Photo: Xinhua

 

 

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, போல் said:

இவற்றுக்கும் இந்திய மிலேச்சப் பயங்கரவாதத்துக்கும் ஒப்பிட முடியாதளவு நிறைய வித்தியாசம் உண்டு!

அது உங்கள் பார்வை.

Rajesh என்பவர் எல்லா திரியிலும் ஓடி ஓடிப்போய் உங்கள் பதிவுகளுக்கு like போடுவதையும் நீங்கள் அவர் பதிவை like போடுவதையும் பார்த்தால் உங்களின் மறு அவதாரமோ அவர் என்று ஒரு சந்தேகம். அதாலை எனக்கொரு பிரச்சினையும் இல்லை. சும்மா ஒரு சந்தேகம் மட்டுமே.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
8 hours ago, Maruthankerny said:

துறைமுகத்த்தில் தெற்கு டெர்மினல் முடிவு பெற்று பாவனை நடைபெறுகிறது 
மேற்கு டெர்மினல் முடியும் தருவாயில் இருக்கிறது  
வடக்கு டெர்மினல்  மற்றும் பின் டெர்மினல் என்பதுக்கான வேலைத்திட்டம் 
மேற்கு டெர்மினல் முடியும்போதுதான் தொடங்கப்படும் என்பதும் அதுக்கான முதலீடுகளை 
வெளியில் இருந்து இலங்கை எதிர்பார்ப்பதாகவும் 2016லேயே அறிவித்து இருந்தது.
அப்போதான் இந்திய பிரதமர் மோடி சென்று இந்தியா முதலீடு செய்வதாகவும் குத்தகையாக மேற்கு 
டெர்மினல் வேண்டும் என்றும் குளறுபாடு நடந்தது பழைய செய்தி.
சீனா தொடங்கும்போதே மேற்கு டெர்மினலை குத்ததகைக்கு கையெழுத்து வாங்கிவிட்டே தொடங்கியது 
மற்ற டெர்மினல்களுக்கும் மேற்கு டெர்மினலுக்கும் உள்ள வித்த்தியாசம்  இது ஆழமானது  எந்த பெரிய கப்பலும் வந்து செல்ல வசதி உடையது. 

இந்தியா .... ஜப்பான் ..... சீனா ... அமேரிக்கா ..... அங்கோலா 
என்று அரசியல் நாடகம்  எழுத இதில் ஒன்றும் இல்லை இவை அனைத்தும் 
தனியார் நிறுவனங்களால் இலங்கை அரசின் சம்மதத்துடன் செய்யப்படுபவை 
இந்த நிறுவனங்களுக்கு  தமது சொந்த நாட்டினதும் இலங்கை அரசினதும் பச்சை கொடி 
அசைப்பு  தேவை அவளவுதான்.

கால எல்லைகளுடனான மீளமைப்பு திட்டம் 

Image result for sri lanka colombo harbour development project 

கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியை தான் இந்தியா கேட்டிருந்தது. ரணிலுக்கு அதை அவர்களுக்கு கொடுக்க விருப்பம் இருந்த போது மைத்திரி கிழக்கு கொள்கலன் முனையத்தை இலங்கையே அபிவிருத்தி செய்து தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க விரும்புவதாக கூறி மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியா அபிவிருத்தி செய்ய விரும்பினால் செய்யட்டும் என்றும் கூறியிருந்தார். இதில் ஜப்பானின் முதலீட்டையும் விரும்புவதாக கூறியிருந்தார். பின் இப்ப இந்தியா விரும்பிய மாதிரி கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியையே அதனுடனும் ஜப்பானுடனும் சேர்ந்து செய்ய இணக்கத்துக்கு வந்துள்ளார்கள்.

மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. நீங்கள் இணைத்த படத்தில் கூறப்படும் ஆண்டுகள் ஆரம்பிக்கப்படும் ஆண்டுகள். அதனால் தான் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்திக்கு 2020 என்று போட்டுள்ளார்கள். செய்தியிலும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்திக்கு 2023 என போடப்பட்டிருப்பதால் அவ் ஆண்டு அதை ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது போல. அதற்கான முதலீடுகள் பற்றி கலந்துரையாடுவார்கள் என நினைக்கிறேன். தெற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியை சீனா செய்து வந்தது. கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தியையும் சீனா செய்து வந்தது. (துறைமுக நகரத்தின் நிர்மாண வேலைகள் காரணமாக கொழும்பு நகரம் பூமியில் அமிழ்வதாக ஒரு கதையும் போனவருடம் அடிபட்டிச்சு. உண்மையோ பொய்யோ தெரியேல்லை. 😀)

கொழும்பு துறைமுக அபிவிருத்தி 2050 ஆம் ஆண்டளவில் முற்றாக முழுமையடையும் என்று எதிர்பார்க்கிறார்கள். 

வெளிக்கு அபிவிருத்தியாக தோன்றினாலும் பின்னணியில் அரசியலும் உள்ளது.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, Lara said:

கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியை தான் இந்தியா கேட்டிருந்தது. ரணிலுக்கு அதை அவர்களுக்கு கொடுக்க விருப்பம் இருந்த போது மைத்திரி கிழக்கு கொள்கலன் முனையத்தை இலங்கையே அபிவிருத்தி செய்து தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க விரும்புவதாக கூறி மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியா அபிவிருத்தி செய்ய விரும்பினால் செய்யட்டும் என்றும் கூறியிருந்தார். இதில் ஜப்பானின் முதலீட்டையும் விரும்புவதாக கூறியிருந்தார். பின் இப்ப இந்தியா விரும்பிய மாதிரி கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியையே அதனுடனும் ஜப்பானுடனும் சேர்ந்து செய்ய இணக்கத்துக்கு வந்துள்ளார்கள்.

மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. நீங்கள் இணைத்த படத்தில் கூறப்படும் ஆண்டுகள் ஆரம்பிக்கப்படும் ஆண்டுகள். அதனால் தான் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்திக்கு 2020 என்று போட்டுள்ளார்கள். செய்தியிலும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்திக்கு 2023 என போடப்பட்டிருப்பதால் அவ் ஆண்டு அதை ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது போல. அதற்கான முதலீடுகள் பற்றி கலந்துரையாடுவார்கள் என நினைக்கிறேன். தெற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியை சீனா செய்து வந்தது. கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தியையும் சீனா செய்து வந்தது. (துறைமுக நகரத்தின் நிர்மாண வேலைகள் காரணமாக கொழும்பு நகரம் பூமியில் அமிழ்வதாக ஒரு கதையும் போனவருடம் அடிபட்டிச்சு. உண்மையோ பொய்யோ தெரியேல்லை. 😀)

கொழும்பு துறைமுக அபிவிருத்தி 2050 ஆம் ஆண்டளவில் முற்றாக முழுமையடையும் என்று எதிர்பார்க்கிறார்கள். 

வெளிக்கு அபிவிருத்தியாக தோன்றினாலும் பின்னணியில் அரசியலும் உள்ளது.

நீங்கள் எந்த செய்தியை வைத்து எழுதுகிறீர்கள் என்பது தெரியவில்லை 
மேற்கு டெர்மினல் தான் சர்ச்சைக்கு உரியதாக இந்த திட்டம் தொடங்கிய நாளில் இருந்து 
இருக்கிறது காரணம் பாரிய எண்ணெய் தாங்கிகள் மற்றும் விமானங்கள் இறங்கி எற 
கூடிய கடற்படை கப்பல்கள் இங்குதான் தரிக்க முடியும் மற்றவை அவ்வளவு  ஆழமும் அற்றவை. 
இந்தியாவுக்கு இது தேவையோ இல்லையோ சீனாவுக்கு இது போகாது இருக்க பெரும்பாடு 
பட்டார்கள் என்பது தான் நடந்தது. மற்ற டெர்மினல்கள் எல்லாம் திசைதான் வேறு தவிர பெரிதாக 
அடிபட்டு கைப்பற்ற ஒன்றும் இல்லை 

மேற்கு டெர்மினல் நிலத்தடி வேலைகள் முடிவுற்று விட்டதாகவே சீனா ஹார்பர் எஞ்சினீரிங் 
தளம் சொல்கிறது .. போர்ட் சிட்டி வேலைகள் நில அமைப்பு முடியும்வரை காத்திருப்பதாக அங்கே 
இருக்கிறது மற்றது போர்ட் சிட்டிக்கு 65 மில்லியன் கியூபிக் மீட்டர்ஸ் மணல் தேவை இதை கடலின் அடியில் இருந்துதான் எடுக்கிறார்கள் .. இதனால் துறைமுகத்தை அண்டி கடல் இன்னமும் ஆழமாகிறது. 
தெற்கு டெர்மினல் செயல்பாட்டில் இருக்கும்போது மேற்கு டெர்மினல் கடல் அடி வேலைகள் செய்வது 
இடையூறாக இருக்கும் என்பதால் அதை ஏற்கனவே முடிவுற்றதாக தான் ப்ராஜெக்ட் பிளானிலும் இருக்கிறது.

இதில் அரசியல் இல்லாமல் இல்லை தமிழ் செய்திகள் எழுதும் விசுக்கோத்து அரசியல் 
இல்லை என்பதுதான் நான் சொல்ல வந்தது. ரணில் பிரதமராக வந்தபோது அவருக்கு முண்டு கொடுத்து 
போர்ட் சிட்டி ப்ரொஜெக்ட்டை நிறுத்துவத்துக்கு இந்தியா முயற்சி செய்தது. அதுக்காக கூறப்பட்ட காரணம்தான்  கடலோர வாழ்வாதாரம் அழிகிறது என்பதும் கொழும்பு அமுல்கிறது என்பதும் ரணில் சீனாவுக்கு கூறிய காரணம்கள்  ... அப்போது இந்த ப்ராஜெக்ட் தற்காலிகமாக இடைநிறுத்த பட்டது. 

இவை அனைத்தையும் செய்வது சி சி சி சி  எனும் (சீனா கொம்யூனிகேஷன் கன்ஸ்ட்ரக்ஷன் கொம்பனி) (CCCC China Communication Construction Company)  
இவர் நாள் ஒன்றுக்கு அரை மில்லியன் அளவில் நஷ்ட்ட படுவதாக கூறினார்கள் அதை இலங்கை அரசின் தலையில் கட்டிவிடுவதுக்கு முண்டு கொடுக்கும்போதுதான் ரணில் மீண்டும் இதை தொடர சம்மதித்தார்கள். 

பெருத்த அரசியல்...... எல்லாம் கடனில் நடக்கிறது 
ப்ராஜெக்ட் 2050இல் முடியும் ... இலங்கைக்கு கடன் 
3050வரை தொடர்ந்தாலும் ஆச்சரியம் இல்லை ... முதலீடு செய்வோருக்கு குத்ததகைக்கு கொடுத்தால் 
என்ன வருமானம் எடுத்து கடன் முடிப்பது? என்று எனக்கு புரியவில்லை.
கொழும்பு சனத்தொகை 2040இல் இரட்டிப்பாகும் இப்போது அண்ணளவாக 8 லட்ஷம் என்றால்  2041இல் 
16 லட்ஷம் ஆகும் ஒரு அடுக்குமாடி வீடே அமெரிக்க டாலர் படி மில்லியனுக்கு விற்கலாம். 
அதனால் கூடிய அளவில் எம்மவர்கள் முதலீடு செய்வது மிகுந்த லாபத்தை கொடுக்கும். இப்படி ஒரு சந்தர்ப்பம் மீண்டும் வராது. 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
3 hours ago, Maruthankerny said:

நீங்கள் எந்த செய்தியை வைத்து எழுதுகிறீர்கள் என்பது தெரியவில்லை 
மேற்கு டெர்மினல் தான் சர்ச்சைக்கு உரியதாக இந்த திட்டம் தொடங்கிய நாளில் இருந்து 
இருக்கிறது காரணம் பாரிய எண்ணெய் தாங்கிகள் மற்றும் விமானங்கள் இறங்கி எற 
கூடிய கடற்படை கப்பல்கள் இங்குதான் தரிக்க முடியும் மற்றவை அவ்வளவு  ஆழமும் அற்றவை. 
இந்தியாவுக்கு இது தேவையோ இல்லையோ சீனாவுக்கு இது போகாது இருக்க பெரும்பாடு 
பட்டார்கள் என்பது தான் நடந்தது. மற்ற டெர்மினல்கள் எல்லாம் திசைதான் வேறு தவிர பெரிதாக 
அடிபட்டு கைப்பற்ற ஒன்றும் இல்லை 

மேற்கு டெர்மினல் நிலத்தடி வேலைகள் முடிவுற்று விட்டதாகவே சீனா ஹார்பர் எஞ்சினீரிங் 
தளம் சொல்கிறது .. போர்ட் சிட்டி வேலைகள் நில அமைப்பு முடியும்வரை காத்திருப்பதாக அங்கே 
இருக்கிறது மற்றது போர்ட் சிட்டிக்கு 65 மில்லியன் கியூபிக் மீட்டர்ஸ் மணல் தேவை இதை கடலின் அடியில் இருந்துதான் எடுக்கிறார்கள் .. இதனால் துறைமுகத்தை அண்டி கடல் இன்னமும் ஆழமாகிறது. 
தெற்கு டெர்மினல் செயல்பாட்டில் இருக்கும்போது மேற்கு டெர்மினல் கடல் அடி வேலைகள் செய்வது 
இடையூறாக இருக்கும் என்பதால் அதை ஏற்கனவே முடிவுற்றதாக தான் ப்ராஜெக்ட் பிளானிலும் இருக்கிறது.

இதில் அரசியல் இல்லாமல் இல்லை தமிழ் செய்திகள் எழுதும் விசுக்கோத்து அரசியல் 
இல்லை என்பதுதான் நான் சொல்ல வந்தது. ரணில் பிரதமராக வந்தபோது அவருக்கு முண்டு கொடுத்து 
போர்ட் சிட்டி ப்ரொஜெக்ட்டை நிறுத்துவத்துக்கு இந்தியா முயற்சி செய்தது. அதுக்காக கூறப்பட்ட காரணம்தான்  கடலோர வாழ்வாதாரம் அழிகிறது என்பதும் கொழும்பு அமுல்கிறது என்பதும் ரணில் சீனாவுக்கு கூறிய காரணம்கள்  ... அப்போது இந்த ப்ராஜெக்ட் தற்காலிகமாக இடைநிறுத்த பட்டது. 

இவை அனைத்தையும் செய்வது சி சி சி சி  எனும் (சீனா கொம்யூனிகேஷன் கன்ஸ்ட்ரக்ஷன் கொம்பனி) (CCCC China Communication Construction Company)  
இவர் நாள் ஒன்றுக்கு அரை மில்லியன் அளவில் நஷ்ட்ட படுவதாக கூறினார்கள் அதை இலங்கை அரசின் தலையில் கட்டிவிடுவதுக்கு முண்டு கொடுக்கும்போதுதான் ரணில் மீண்டும் இதை தொடர சம்மதித்தார்கள். 

பெருத்த அரசியல்...... எல்லாம் கடனில் நடக்கிறது 
ப்ராஜெக்ட் 2050இல் முடியும் ... இலங்கைக்கு கடன் 
3050வரை தொடர்ந்தாலும் ஆச்சரியம் இல்லை ... முதலீடு செய்வோருக்கு குத்ததகைக்கு கொடுத்தால் 
என்ன வருமானம் எடுத்து கடன் முடிப்பது? என்று எனக்கு புரியவில்லை.
கொழும்பு சனத்தொகை 2040இல் இரட்டிப்பாகும் இப்போது அண்ணளவாக 8 லட்ஷம் என்றால்  2041இல் 
16 லட்ஷம் ஆகும் ஒரு அடுக்குமாடி வீடே அமெரிக்க டாலர் படி மில்லியனுக்கு விற்கலாம். 
அதனால் கூடிய அளவில் எம்மவர்கள் முதலீடு செய்வது மிகுந்த லாபத்தை கொடுக்கும். இப்படி ஒரு சந்தர்ப்பம் மீண்டும் வராது. 

நான் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகளை வாசித்து வந்ததன் அடிப்படையில் தான் எழுதினேன்.

நீங்கள் இணைத்த படத்தில் கூட கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) 2020 என காட்டுகிறது. செய்தியிலும் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் அத்திட்டம் தொடங்கவிருப்பதாக கூறுகிறார்கள். அதன்படி மேற்கு கொள்கலன் முனையம் (WCT) 2023 என காட்டப்பட்டிருப்பதால் அதை அந்த ஆண்டு ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது என அர்த்தப்பட வேண்டும்.

கிழக்கு கொள்கலன் முனைய பிரச்சினை பற்றி நீங்கள் கேட்பதற்காக google இல் தேடி இணைப்பு தருகிறேன். போன வருட செய்தி.

https://www.pathivu.com/2018/10/Ranil-Maithre.html?m=1

இன்னொரு இணைப்பு.

http://www.virakesari.lk/article/43159

வேறு தமிழ், ஆங்கில ஊடகங்களிலும் இது பற்றி செய்தி வந்தது.

தவிர கொழும்பு துறைமுக நகர நிர்மாண பணிகளால் கொழும்பு நகரம் அமிழ்ந்து செல்வதாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு பொறியியலாளரை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்றே செய்தி வெளியிட்டிருந்தது. அதுவும் போன வருடம். அது உண்மையா பொய்யா என எனக்கு தெரியாது.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, Lara said:

நான் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகளை வாசித்து வந்ததன் அடிப்படையில் தான் எழுதினேன்.

நீங்கள் இணைத்த படத்தில் கூட கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) 2020 என காட்டுகிறது. செய்தியிலும் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் அத்திட்டம் தொடங்கவிருப்பதாக கூறுகிறார்கள். அதன்படி மேற்கு கொள்கலன் முனையம் (WCT) 2023 என காட்டப்பட்டிருப்பதால் அதை அந்த ஆண்டு ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது என அர்த்தப்பட வேண்டும்.

கிழக்கு கொள்கலன் முனைய பிரச்சினை பற்றி நீங்கள் கேட்பதற்காக google இல் தேடி இணைப்பு தருகிறேன். போன வருட செய்தி.

https://www.pathivu.com/2018/10/Ranil-Maithre.html?m=1

இன்னொரு இணைப்பு.

http://www.virakesari.lk/article/43159

வேறு தமிழ், ஆங்கில ஊடகங்களிலும் இது பற்றி செய்தி வந்தது.

தவிர கொழும்பு துறைமுக நகர நிர்மாண பணிகளால் கொழும்பு நகரம் அமிழ்ந்து செல்வதாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு பொறியியலாளரை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்றே செய்தி வெளியிட்டிருந்தது. அதுவும் போன வருடம். அது உண்மையா பொய்யா என எனக்கு தெரியாது.

Image result for sri lanka colombo harbour development project

மேல் இருக்கும் செய்திகள் இலங்கை அரசியல்வாதிகள் பேசுவதை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் 
உள் இருக்கும் அரசியலையே தேவையோ காரணத்தையோ தேடி எழுதுவதில்லை.

நீங்கள் எழுதுவது உண்மைதான் 
நீங்கள் இறுதிவரைக்கும் இருந்து பாருங்கள் மேற்கு முனை 
இது சீனாவுக்கே இதை சீனா ஒருபோதும் விட்டு கொடுக்க போவதில்லை.

கிழக்கு டெர்மினல் வேலைத்திட்டம் இப்போது இடை செருகலாக 
போர்ட் சிட்டி ப்ரொஜெக்ட்டால் முன்னெடுக்க படுகிறது காரணம் வருமானம். 
இது போர்ட் சிட்டி வேலைக்குகளுக்கு இடைஞ்சலாக இருக்காது என்பதாலும் துரித கதியில் 
முடிக்க கூடியதாக இருக்கும் என்பதிலும்  மற்றும் சுங்க சாவடிகள்  போன்றவற்றை 
நிரந்தரமாகவே இந்த வாசலில் கட்ட போவதாலும் இதை முன்னெடுக்கிறார்கள்.

முதலீடாளர்கள் (இந்தியா ஜப்பான்) இதில் கவனம் செலுத்துவத்துக்கு காரணமும் 
உடனடி வருமானம் வரும் என்பதால்தான். 
ரணில் இதில் லூசு மாதிரிதான் பேசிக்கொண்டு இருக்கிறார் 
உடனடி வருமானம் வர கூடிய மற்றும் சுங்க சாவடிகளோடு அமைய கூடிய டெர்மினலை 
சீனாவிடம் கடன் வாங்கி என்றாலும் இலங்கை வைத்திருப்பதே நாட்டுக்கு நன்று. 

நான் இந்த செய்திகள் வாசிப்பது குறைவு 
நான் இவர்களின் ஸ்டாக் வாங்கி வைத்திருந்தேன் (CCCGY
2016 இல் $16 டாலருக்கு வாங்கி  2017 இல் $26 டாலருக்கு விற்றுவிட்டேன் 
இப்போதும் கொஞ்சம் இருக்கிறது மீண்டும் $15 டாலருக்கு வரும்போது வாங்கலாம் என்று இருக்கிறேன்.
ஒவ்வரு 3 மாதத்துக்கும் (Quarter) எமக்கு விலாவாரியான விளக்கம் அனுப்புவார்கள்  என்ன ப்ராஜெக்ட் நடக்கிறது என்ன எதிர்கால திட்டம் என்று .... அதில்தான் இலங்கை லோக்கல் பொலிடிக்ஸ் தாமதபடுத்துவதை சுட்டி காட்டி கொண்டு இருந்தார்கள். 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

சரி சரி, அவை முந்தி செய்தா என்ன பிந்தி செய்தா என்ன. ஏதோ செய்து முடிக்கட்டும். 😀

ஆங்கில ஊடகமொன்றில் சீனா இன்னொரு கொள்கலன் முனைய அபிவிருத்தியை செய்வதற்கான உரிமையை கொண்டிருக்கிறது என வாசித்தேன். அது நீங்கள் கூறுவது போல் மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியாக இருக்கவும் கூடும்.

Edited by Lara
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

The Hindu இல் வெளிவந்துள்ள செய்தி. 

Sri Lanka, Japan, India sign deal to develop East Container Terminal at Colombo Port

Sri Lanka, Japan and India on Tuesday signed an agreement to jointly develop the East Container Terminal at the Colombo Port. The joint initiative is estimated to cost between $500 million and $700 million, a senior official of the Ministry of Ports, Shipping and Southern Development told The Hindu. 

The signing of the Memorandum of Cooperation (MoC) is significant, given that the countries had been negotiating the deal since last year, with little success. As per the agreement signed on Tuesday, the Sri Lanka Ports Authority (SLPA) retains 100% ownership of the East Container Terminal (ECT), while the Terminal Operations Company, conducting its operations, is jointly owned, the SLPA said in a statement. 

Sri Lanka will hold a 51 per cent-stake in the project and the joint venture partners will retain 49%.

The ECT is located some 3 km away from the China-backed international financial city, known popularly as “port city”, being built on reclaimed land on Colombo’s sea front.

“Japan is likely to provide a 40-year soft loan with a 0.1 percent interest rate,” said Sudarshana Gunawardana, Director of Development Communications at the Prime Minister’s office. The SLPA described the “envisaged Japanese loan” as “one of the best loan terms Sri Lanka has obtained”.

Details of India’s contribution to the initiative are awaited, but New Delhi’s interest in partnering the project is well known. Over 70 per cent of the transhipment business at the strategically located ECT is linked to India, according to official sources. 

However, last year, India’s possible role in developing the terminal had become a major flashpoint within the government. President Maithripala Sirisena had opposed any Indian involvement in the project, as roping in foreign actors for developing “national assets” remains a politically sensitive call in the island, especially among nationalist trade unions. Mr. Sirisena and Prime Minister Ranil Wickremesinghe had a heated argument on the matter during a cabinet meeting in October 2018, with the PM apparently more inclined towards allowing Indian participation.

While Japan had been part of negotiations even last year, the project assumed a predominantly ‘Sri Lanka-India’ dimension, especially in the local media. Japan has been a long-standing partner of Sri Lanka, and one of Sri Lanka’s biggest donors in the past decades. Japan also helped develop of the Jaya Container Terminal at the Colombo Port, supporting its operations since the 1980s.

The specific terms of the agreement to jointly develop the ECT will soon be finalised at a joint working group meeting, a diplomatic source said.

https://www.thehindu.com/news/international/sri-lanka-japan-india-sign-deal-to-develop-east-container-terminal-at-colombo-port/article27273794.ece

Share this post


Link to post
Share on other sites

நேற்று சொறிலங்காவும் ஹிண்டியாவும் அலறிமாளிகையில் ஒப்பந்தம் செய்ததா செய்திகள் சொல்லுது. மோடிட வெற்றி சொறிலங்காவை கொஞ்சம் கலங்கடிச்சிருக்கு. இல்லையென்டா ஒப்பந்தம் வழமை போல இழுத்தடிக்கப்பட்டிருக்கும்! இந்த கலக்கம் எத்தின நாளைக்கு என்டு தெரியல்ல.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

கொழும்பு தெற்கு துறைமுகத்தில் அமையப்பெற்றுள்ள கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே கூட்டுறவு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கூட்டுறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றுள்ளது.

http://athavannews.com/கொழும்பு-துறைமுக-அபிவிரு/

Edited by Lara
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பிவிருத்திக்கு, எனக்கு இன்னொரு பெயரும் உண்டு, க்கிரமிப்பு ( உள்ளூர் திறனை அழித்தல்).


ழிச்சவாயர்கள் உள்ளநாடுகளில், உள்நாட்டு சண்டைகளை உருவாக்கி நான் அதில் குளிர் காய்வேன்.  
  

Share this post


Link to post
Share on other sites
On 5/24/2019 at 1:37 PM, Maruthankerny said:

இலங்கை 2050-2075 இல் துபாய் சிங்கப்பூர் போல மாறுவது சாத்தியம் 
 

வரும் என்று நம்புறீங்கள்......50 களில் சிறிலங்கா என்று இருப்பதே சந்தேகம்....லங்கஸ்தான்...

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • புத்தா-(மகனே )சிறுகதை-சாத்திரி..நடு இணைய சஞ்சிகைக்காக ..     பச்சை கம்பளி போன்று தேயிலை செடிகளால் தன்னை போர்த்தியிருந்த சிரிமல்வத்தை கிராமத்தில் அந்த கம்பளிக்கும் மேலால் அழகுக்காக போர்த்தியிருந்த பனி மேகங்கள் விலகிக் கொண்டிருந்தது காலைப்பொழுது. பெரும்பாலும் சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், ஒரு சில தமிழ் குடும்பங்களையும் கொண்டிருந்த அந்தக்கிரமத்தின் மலைச்சரிவில் பாதி கட்டி முடிக்கப்பட்டு முன்பக்கம் மட்டுமே பூசி பெயின்ட் அடிக்கப்பட்டு மேல் மாடி கட்டாமல் கம்பிகள் நீட்டிக்கொண்டிருக்கம் சிறிய வீடுதான் சிங்களவரான குணதாச வீடு. பியசீலி தேனீர் தயாரித்துக்கொண்டிருக்கப் பல் தேய்க்கும் பிரஸ்ஸை வாயில் வைத்தபடியே தொட்டியில் நிரப்பப் பட்டிருந்த தண்ணீரை ஒரு வாளியில் அள்ளிக்கொண்டு போய் கழிப்பறையில் வைத்து விட்டு “அப்பா தண்ணி ரெடி” என்று கத்தினான் குமார. இது அவனது அன்றாட நிகழ்ச்சி நிரலில் முக்கியமானது. இதை எப்போ தொடங்கினான் என்று தெரியாது. அவனுக்கு விபரம் தெரிய வந்த நாளில் ஒரு நாள் காலை வழமையாக பியசீலி தொட்டியிலிருந்து தண்ணீரை அள்ளியதுமே “அம்மா நான் கொண்டு போய் வைக்கிறேன்.” என்று அந்த வாளியை தூக்க முடியாமல் தூக்கி கொண்டுபோய் கழிப்பறையில் வைக்கத் தொடங்கியிருந்தான். இப்போ மூன்று வருடங்களாக அந்த வேலையை ஒரு கடமையாக ஒருவித மன நிறையோடு அவன் செய்து வருகிறான். சத்தம் கேட்டதுமே குணதாச படுக்கையிலிருந்து எழுந்து பக்கத்திலேயே சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருந்த ஊன்று கோல்களை எடுத்து இரண்டு பக்கமும் கைகளுக்கிடையில் வைத்துகொண்டு எழும்பி கொஞ்சம் தடுமாறினாலும் சுதாகரித்துக்கொண்டு ‘டக்….. டக்….’ என்கிற சத்தத்தோடு ஒற்றை காலை நிலத்தில் தடவியபடியே கழிப்பறைக்கு போவதை பல் தேய்த்தபடியே அவர் எங்கும் விழுந்துவிடக்கூடாது என்கிற அக்கறையோடு குமார கவனித்துக்கொண்டிருந்தான். “குமார……. பன்சாலைக்கு போகவேணும் கெதியா வா ” என்கிற பியசீலியில் சத்தம் கேட்டு அவசரமாக தொட்டி தண்ணீரில் குளித்து முடித்தவன், அவள் எடுத்து வைத்திருந்த வெள்ளை ஆடையை அணிந்து கொண்டு அவனது ஆடையை போலவே வெள்ளை வெளேரென முற்றத்தில் மலர்ந்திருந்த நித்தியகல்யாணி பூக்களை பிடுங்கி ஒருதட்டில் நிரப்பியவன் சிலவற்றை எடுத்து ஒரு தட்டில் வைத்து விட்டு, வரவேற்பறையின் மூலையில் பொருத்தப்பட்டிருந்த பலகையின் மேல் சிறிய கண்ணாடி கூண்டில் அமர்ந்திருந்த புத்தர் சிலைக்கு முன்னால் காய்ந்து போயிருந்த பூக்களை எடுத்து எறிந்து விட்டுப் பியசீலி கொடுத்த தேநீரை குடித்து முடிந்ததும் அவள் தலை வாரி விட்டு நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள். காலைக்கடனை முடித்து முகம் கழுவிவிட்டு தட்டில் குமார வைத்த பூக்களை எடுத்து கண்ணாடிக் கூண்டில் அமர்ந்திருந்த புத்தர் முன்னால் வைத்து வணங்கிவிட்டுக் கதிரையில் வந்தமர்ந்த குணதாச முன்னால் பூக் கூடையை தூக்கியபடியே ஓடிப்போய் நின்றான். “உன் கோபத்தை குறைத்து நல்ல புத்தியை கொடுக்கும்படி புத்த பிரானை நன்றாக வேண்டிக்கொள்.” என்று பியசீலி வாரிவிட்ட தலையை லேசாய் கலைத்துவிட்டு ஒரு முத்தம் கொடுத்து அனுப்பிவைத்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குணதாச கடை திறக்கவேண்டியதில்லை எனவே தொலைக்காட்சியை போட்டுவிட்டு கதிரையில் சாய்ந்துவிட பியசீலி சமையலில் இறங்கிவிட்டாள். சிறிது நேரத்திலேயே வீதியில் எதோ சத்தம் கேட்டது “நோனா….. நோனா….. ஓடியாங்க உங்களோட மகன் என்னோட மகனை போட்டு அடிக்கிறான். தயவு செய்து ஓடியாங்க”. என்கிற சத்தத்தோடு அதே தெருவிலிருக்கும் ரமணி ஓடி வந்துகொண்டிருந்தாள். சத்தம் கேட்டு சமையலறையிலிருந்த பியசீலி வெளியே போய் ரமணியோடு சேர்ந்து ஓடினாள். குமார கொண்டுபோன மலர்தட்டு கீழே விழுந்து பூக்கள் எங்கும் சிதறிப்போய் கிடக்க அவன் ரமணியின் மகனை குப்புறப்போட்டு முதுகில் ஏறியிருந்து மாறி மாறி குதிக்கொண்டிருந்தான். பெரும்பாடு பட்டு அவனை பிரித்தெடுத்த பியசீலி “எதுக்கடா அவனை அடிக்கிறாய்? உனக்கு கோபம் குறைந்து நல்ல புத்தி கொடுக்க தானே பன்சாலைக்கு போ என்று அனுப்பினேன். எதுக்கடா?” என்றபடி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தாலும் அது அவனுக்கு வலிக்கவில்லை . “அம்மா அவன் அப்பாவை கிண்டல் பண்ணினான்.அப்பா போல தாண்டி தாண்டி நடந்து காட்டினான். அதுக்காக அடிச்சது பிழையா?” என்று சத்தமாகவே கேட்டான் . “இல்ல நோனா அவன் நேற்று பந்து விளையாடும்போது உண்மையிலேயே மகனுக்கு காலில் அடிபட்டு விட்டது. அதுதான் தாண்டியபடி நடக்கிறான்”. என்று பயந்தபடியே ரமணி சொல்லி முடிக்க. “சரி உன்னைப்பார் ஒரே அழுக்கு, இனி பன்சாலை போகவேண்டாம்.” என்றபடி கீழே விழுந்திருந்த தட்டை தூக்கியவள் குமாரவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வரும்போதே தடியை ஊன்றியபடி குணதாச பாதி வழிக்கு வந்து விட்டிருந்தான். “என்ன நடந்தது?” என்கிற அவனது கேள்விக்கு, “எல்லாம் உங்களாலைதான் .” என்றுவிட்டுப் பியசீலி வேகமாக கடந்து சென்றுவிட, தடியை ஊன்றி வேகமாக நடந்ததால் தோள் பட்டைகள் வலியெடுக்க அப்படியே கொஞ்ச நேரம் குனிந்து நின்று ஆறுதல் படுத்திக்கொண்டு மீண்டும் வீட்டிற்குதிரும்பியிருந்தான். வீட்டுக்குள் நுழையும்போதே பியசீலிக்கும் குமாரவுக்கும் நடந்த கோபமான உரையாடல் அவன் காதில் விழுந்தது. “அம்மா நீ சொல்வது போல அவர்கள் ஒன்றும் நல்லவர்களில்லை. அவன் வேணுமெண்டே அப்பாவை கிண்டலடித்தான்..” “இல்லை மகனே அவர்கள் நல்லவர்கள். “எங்களுக்கு நிறைய உதவியிருக்கிறார்கள் ..” “இல்லை கெட்டவர்கள்…. அவர்களால் தான் அப்பாவுக்கு இந்த நிலைமை. அவரை பார் எவ்வளவு சிரமப்படுகிறார்?” “அது வேற. இது வேறடா. புரிஞ்சுகொள் ……” “இல்லை அவர்கள் எல்லாமே அப்பிடிதான். அவர்களை அடிக்க வேணும். முடிந்தால் கொலை கூட …..” “டேய்…… நீ கூட ………?” என்று பியசீலி ஆத்திரத்தில் கத்தும் போது உள்ளே வந்து விட்டிருந்த குணதாச “வேண்டாம் நிப்பாட்டு……..” என்று அதை விட சத்தமாக கத்தினான். வேகமாக வீட்டினுள் புகுந்து தன்னுடைய கால்பந்தை எடுத்துக்கொண்டு பின்புறமாக சென்ற குமார சுவரோடு பந்தை அடிக்கத் தொடங்கியிருந்தான். அவனுக்கு கோபம் வரும்போதெல்லாம் தன் கோபத்தை குறைக்க அவன் செய்யும் வேலையது. சுவரில் பந்தை அடித்து அடித்து அது டமாலென வெடித்த பின்புதான் அவன் கோபம் ஆறும். பந்து சுவரில் மோதும் சத்தம் கேட்கத் தொடங்கிருந்தது. குணதாச கைத்தடிகளை கீழே போட்டு விட்டு நிலத்தில் அமர்து கொண்டு “என்ன பியசீலி நீ கூட….?” என்று சொல்லும்போதே அவன் கண்கள் கலங்க தொடங்கியிருந்தது. “இல்லை இப்போ அவன் வளர்த்துவிட்டான். எல்லாம் தெரிந்துகொள்ளும் வயதும் வந்து விட்டது. இனிமேலும் எல்லாத்தையும் மறைக்க முடியாது. அவனாக தெரிந்து கொண்டால் எங்கள் மீது வெறுப்பு வரும். எனவே சொல்லிதானே ஆகவேணும் ..?” “சரி சொல்லலாம். கொஞ்ச நாளில பள்ளிக்கூட விடுமுறை வந்துவிடும். நாங்கள் எல்லோரும் ஒரு சுற்றுலா போகலாம். அப்போ நானே பக்குவாமா அவனுக்கு சொல்லுறேன். அதுவரை பொறுமையா இரு”. டமாலென்று பந்து வெடிக்கும் சத்தம் கேட்டது. சரி இன்னொரு பந்து வாங்கவேண்டும் என்றபடி பியசீலி வீட்டின் பின்புறமாக போனாள். ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ இதே கிராமத்தில் இதே காணியில் இருந்த சிறிய குடிசையில் தன் தாய் சகோதரியோடு தான்  குணதாச வாழ்ந்தான். தந்தை யாரென்றோ அதைப்பற்றி அறியும் ஆவலோ அவனுக்கு இருந்ததில்லை. நீ வயிற்றில் இருக்கும்போதே, “அப்பா யாரோடோ ஊரை விட்டு ஓடிப்போய் விட்டார்.” என அம்மா சொன்னதை தவிர வேறெந்த தகவலும் அவனுக்கு தெரியாது. தேயிலை பதனிடும் சிறிய தொழிற்சாலை ஒன்றில்தான் அவன் அம்மா வேலை செய்தார். குணதாசவுக்கும் படிப்பில் பெரிய ஆர்வமில்லாததால் எட்டாவது வகுப்போடு நிறுத்திவிட்டு அம்மாவோடு அதே தொழிற்சாலைக்கு வேலைக்கு போக தொடக்கி விட்டிருந்தான். அவன் அக்கா பத்தாவது படித்து விட்டு வீட்டிலிருந்தபோது பன் சாலையில் வணங்க வந்த ஒரு போலிஸ் காரர் அவளைப் பிடித்துப்போய் பெண் கேட்டு வந்து திருமணமும் நடந்து அவர்களோடு அம்மாவும் கண்டி நகருக்கு போய்விட. வாழ்கையில் எந்த இலட்சியமும் இல்லாமல் வெறுமனே நாட்களை கடதிக்கொண்டிருந்த குணதாசவுக்கு தேயிலை தொழில்சாலையில் வேகமாக சுற்றிக்கொண்டிருந்த இயந்திரத்தின் பட்டி அறுந்து தோள்பட்டையில் அடிதபோதுதான் வாழ்கையின் முதல் வலி தெரிந்தது . அவசரமாக அவனை வைத்தியசாலைக்கு கொண்டு போனதும் வலியை குறைப்பதுக்காக மென்மையான வலியோடு ஊசி மருந்தை செலுத்திய தாதி பியசீலியை முதன் முதலாக சந்தித்தான். பின்னர் அவளை சந்திப்பதுக்காகவே வலிக்கான வழியை தேடி கண்டுபிடித்து வைத்திய சாலையின் வாடிக்கையாளன் ஆனான். தினமொரு வலியோடு தன்னை சந்திக்கவே வழி தேடி வருவதாக பியசீலி உணர்ந்துகொண்ட தருணத்தில் அவளுக்கும் அவனை பிடித்துப்போய் விடவே, “அடிக்கடி அடிபட்டு வராதே அன்பே. அன்போடு நானே உனை தேடி வருகிறேன். அப்பாவை வந்து பார்.” என்று அவள் சொல்லி விட்டாள். அவன் அவளின் அப்பாவை தேடிப்போனான். அவரோ, “வேலையென்ன? சம்பளமென்ன? இப்போவெல்லாம் வசதியான பெண்களை வழைத்து போட்டுக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கிறதே உங்களுக்கு வேலையாய் போச்சு. போய் முடிந்தால் ஒரு வசதியான வீட்டை கட்டி முடி. அப்போதான் என் மகளை கட்டிக்கொடுக்க முடியுமென்று கறாராக சொல்லி விட்டார்”. கூரை பிய்ந்து தொங்கிய குடிசையில் குந்தியிருந்து யோசித்தான். தேயிலை கொம்பெனியில் வேலை செய்து கூரை கூட வேயமுடியாது. வீடு எப்பிடி காட்டுறதாம்..? அப்போ தான் வாகனத்தில் வந்தவர்கள் வீசி விட்டு போன விளம்பரத்தை எடுத்தான். ‘எம் தேசத்தை நாமே மீட்க வேண்டும். இருக்கும் இந்த தீவு மட்டுமே எமக்கான இருப்பிடம். நான்கு பக்கமும் கடலால் மட்டுமல்ல எதிரிகளாலும் சூழப்பட்டிருக்கிறோம். இது அவசர தேவை. அதிக சம்பளம்.’ படித்து முடித்ததுமே கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி கைகளை மடக்கி மேலே உயர்த்தி தசைகள் புடைக்கிறதா என பார்த்து விட்டு அடுத்த நாளே அந்த விளம்பரதிலுள்ள விலாசத்துக்கு போவதென முடிவெடுத்திருந்தான். அன்றிரவே அவன் கனவில் அந்த இடத்தில் ஒரு மாடி வீடு பிளஸ் மொட்டை மாடியில் பிய சீலியை அணைத்தபடி அவன்………. 000000000000000000000 இராணுவத்தில் சேர்ந்து விட்டிருந்தவன் பயிற்சிகள் முடிந்ததுமே கட்டாய சேவையாக வடக்குக்கு அனுப்பப் பட்டிருந்தான். புதிதாக சேர்ந்தவர்களின் கடமையே இரவுநேர காவல் நிலைகளில்தான் தொடங்கும். சண்டை தொடக்கி விட்டால் முன்னுக்கு செல்பவர்களும் அவர்கள் தான். மூன்று வருடங்கள் லீவு எடுக்கமால் அவ்வப்போது பியசீலிக்கு மட்டும் கடிதமெழுதி அனுப்பி விட்டு கல்வீட்டை கட்டி காதலியை மனைவியாக்கும் கனவோடு கடமையிலிருந்தானே தவிர நாட்டை பற்றிய கவலையேதுமிருக்கவில்லை. சண்டை தொடங்கி விட்டாலே எரிச்சலாவிருக்கும். முடிந்தவரை எங்காவது பதுங்கி விடுவான். “சண்டையில் என்ன கிழித்தாய்?” என்று அவன் அதிகாரி கேட்கும் கேள்விக்காக வானத்தை நோக்கி சுட்டு விட்டு துப்பாக்கி ரவை தீர்ந்த கணக்கை காட்டுவான். சமாதான பேச்சுவார்த்தை தொடங்கலாமென பேச்சு அடிபட்டுகொண்டிருந்த நேரம் தொடர்ச்சியாக விடுமுறையே எடுக்காத அவனுக்கு விடுமுறை கிடைத்தது. நேரடியாக பியசீலியின் வீட்டுக்கு சென்றவன் அவள் தந்தையிடம் “இதோ பொறுப்பான வேலையிலிருக்கிறேன். நல்ல சம்பளம். நாளையே ஒரு இஞ்சினியரை அழைத்துவந்து வீட்டுக்கு பிளான் கீறி அத்திவாரம் போடப்போகிறேன். தனி வீடு அல்ல மாடி வீடு”. என்று வாசலில் நின்றபடி சத்தமாகவே சொன்னான். இராணுவ உடையில் துப்பாக்கியோடு வேறு வந்திருக்கிறான். இதுக்கு மேலையும் முடியாது என்று சொன்னால் சுட்டாலும் சுட்டு விடுவான் என்கிற பயத்தில் உடனே அவர் ‘சரி’ சொல்லிவிட, எளிமையாக அவர்களின் திருமணம் நடந்து முடிந்து விட்டிருந்தது. வீடு கட்டும் வேலைகளும் ஆரம்பித்து விட்டதால் அவன் பியசீலி வீட்டிலேயே தங்கியிருந்தான். ஒரு மாத லீவு ஓடித் தீர்ந்துவிட அவளை வங்கிக்கு அழைத்துப்போய் அவள் பெயரை தன் கணக்கில் இணைத்தவன், “பணத்தை எடுத்து வீட்டு வேலைகளை கவனித்துக் கொள். அடுத்த விடுமுறைக்கு வரும்போது புது வீட்டுக்கு குடி போய் விடலாமென்றவன்.”, புதிய காதல் மனைவியை கண்ணீரோடு விடை பெற்றான். அப்போ சமாதான காலமென்பதால் அவனுக்கு அடிக்கடி விடுமுறை கிடைத்தது. கீழ் தளம் மட்டுமே கட்டி முடிக்கப்படிருந்த வீட்டுக்குள் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை போய்க்கொண்டிருந்தாலும் வருடங்கள் செல்ல செல்ல அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லையே என்கிற கவலை மனதுக்குள் புகுந்து கொள்ளத் தொடங்கியிருந்தது . அங்கங்கே சிறு மோதல்களும் நடந்து பேச்சு வார்த்தை குழம்பி மீண்டுமொரு யுத்தம் தொடங்குவதுக்கான அறிகுறிகள் தோன்றியிருந்ததால் விடுமுறையில் போயிருக்கும் இராணுவத்தினர் அனைவரையும் உடனடியாக கடமைக்கு திரும்புமாறு அறிவித்தல்களும் வெளியாகியிருந்தது. சண்டை தொடங்கி விட்டால் இனி அடிக்கடி விடுமுறை கிடைக்காது எனவே வைத்தியரை போய் பார்த்து விடலாமென்று உள்ளுரிலிருந்த வைத்தியசாலையில் போய் பரிசோதனை செய்து பார்த்தார்கள். குறைபாடு குணதாசவிடமே என்றதும் அவனுக்கு மடியிலேயே ஒரு குண்டு விழுந்து வெடித்தது போலவிருந்தது. “இல்லை இவன் சரியில்லை. கொழும்பு போய் பெரிய வைத்திய சாலையில் பார்க்கலாமென்று” பியசீலி அவனை தேற்றினாள். மீண்டும் ஒரு சிறு நம்பிக்கையோடு கொழும்பு போனார்கள். அந்த வைத்தியசாலை பரிசோதனை முடிவுகளும் குணதாசவை நோக்கியே கையை நீட்டியது. அவன் வாழ்நாளில் நினைவு தெரிந்து முதன் முதலாக அழுதான். முழுதாய் உடைந்து போனவனை பியசீலி அணைத்து அழைத்து வந்தாலும் வீட்டில் மாட்டியிருந்த இராணுவ உடையில் கம்பீரமாக நின்றிருக்கும் அவனது படம் அவனைப்பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பது போலவேயிருந்தது. கண்ணை மூடும் போதெல்லாம் பியசீலியின் தந்தை, “நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா ? உனக்கெதுக்கு ராணுவ உடுப்பு? கையில துப்பாக்கி தூ ………” என்று துப்புவது போலவேயிருந்தது. ஒரு நாள் முழுதும் துவண்டுபோய் வீட்டிலேயே படுத்திருந்தவனுக்கு பியசீலியின் நிலையை யோசித்தான். பாவம் என்னை நம்பி வந்தவள், அவளை சமாதானப் படுத்த வேண்டும்என்பதுக்காக, “சரி விடு. எல்லாம் புத்தபகவான் பார்த்துக்கொள்ளுவார். மருத்துவத்தால் மாற்ற முடியாததையும் அவர் மாற்றுவார்.” என்று தேற்றியவன், மறு நாளே சில வேலைகளை திட்டமிட்டு செய்யத் தொடங்கியிருந்தான். வீடு மேல் தளம் கட்டுவதை இப்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்று முடிவெடுத்தவன் தன் பெயரில் ஆயுள் காப்புறுதி செய்துவிட்டு அன்றே வேலைக்கு திரும்பி விட்டிருந்தான். சில நாட்களிலேயே யுத்தமும் தொடக்கி விட்டிருக்க அவனை மன்னார் தளத்துக்கு அனுப்பி விட்டிருந்தார்கள். இராணுவம் மன்னாரிலிருந்தே களமுனையை திறந்து விட்டிருந்தது. இந்தச் சண்டையில் எப்படியும் செத்துப்போய் விடவேண்டும் அப்போதான் அவளுக்கு காப்புறுதி பணம் கிடைக்கும். வேறு யாரையாவது திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்பது மட்டுமே அவனது நோக்கம். இதுவரை காலமும் பதுங்கியிருந்து வானத்தை நோக்கி சுட்டவன் இப்போ முன்னுக்கு வந்து மூர்க்கமாகக் களமாடத்தொடங்கியிருந்தான். அவனது திறமையை பார்த்த அதிகாரியே அசந்துபோய் ஊடுருவி தாக்கும் சிறிய குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை கொடுத்திருந்தார். இராணுவம் மடுவைத் தாண்டி பல குறுக்கு பாதைகளாலும் கிளிநொச்சியை அண்மித்துக்கொண்டிருந்தது. அவனும் யுத்த களத்தில் திறமையால் குவித்த வெற்றிகளை பாராட்டி குறுகிய காலத்திலேயே ஒரு படையணியை வழிநடத்தும் அதிகாரியாகி விட்டிருந்தான். பியசீலிக்கு அவ்வப்போது குறுஞ் செய்தி அனுப்புவதோடு அவனுக்கு கிடைத்த பாராட்டுக்களும் பதவிகளாலும் ‘நான் வீரமான ஒரு ஆண்மகன். எனக்கு எந்தக்குறையுமில்லை.’ என நம்பத் தொடங்கியிருந்தான். கிளிநொச்சியின் பாரிய மண் அணையை உடைத்து உள்ளே புகுந்த அணியில் அவனது அணியும் முக்கியமானது. பொது மக்களை சரணடையும்படி அறிவித்தல் கொடுத்ததுமே எங்காவது ஒரு வழி கிடைக்காதா என காயங்களோடும் பசியோடும் ஏங்கயிருந்த மக்கள் சாரை சாரையாக சரணடையத் தொடங்கியிருந்தார்கள். இராணுவத்தினர் ஆண்களை, பெண்களை, வயதானவர்களை, காயமடைந்தவர்களை எனத் தனித்தனியாகப் பிரிக்கத் தொடங்கியிருந்தார்கள். நடைப்பிணங்களாக நகர்ந்து கொண்டிருந்தவரிசையில் ஒரு சலசலப்பு. அவன் என்னவென்று விசாரித்தான். யாரோ ஒரு இளம்குடும்பம் பெண் நிறைமாத கர்ப்பிணியாம். கணவன் அவளை தனியாக விடமாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தான். அனைத்தையும் கவனிதுக்கொண்டிருந்தவன் நேராகப்போய் அடம்பிடிதுக்கொண்டிருந்தவனை எட்டி உடைத்து விட்டு இழுத்துக்கொண்டு போங்கள் என்று கட்டளையிட்டான். “ஐயா பெறு மாசம் ஐயா. இண்டைக்கோ நாளைக்கோ பிறந்திடும். அவள் வேற நோஞ்சான இருக்கிறாள். நான் பக்கத்திலை பாத்துக்கொள்ளுறேன். விடுங்கோ ஐயா.” எண்டு புலம்பியபடியே இருந்தவனை இராணுவத்தினர் தள்ளிக்கொண்டு போனார்கள். அவள் மொத்தமாக அழுது கண்ணீர் தீர்ந்திருக்க வேண்டும். வயிற்றைப்பிடித்தபடி பற்களால் உதட்டை கடித்து கண்களை மூடி நின்றிருந்தவளை இராணுவ பெண்ணொருத்தி அழைத்துக்கொண்டு போனாள். இரவானதும் சரணடைவு நிறுத்திவைக்கப்பட்டு மறுநாள் வரும்படி அறிவித்தார்கள். இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்த துப்பாக்கிகளின் சத்தம் அன்று கொஞ்சம் ஓய்ந்திருந்தது. அவர்களது தலைநகரம் வீழ்ந்து விட்டது. இன்னும் கொஞ்சம்தான் முற்றாக முடித்துவிடுவோம் என்று வெற்றிக்களிப்பில் நிறைந்திருந்த தன் அணியினர்ருக்கு வாழ்த்து சொன்னவன். தற்காலிக தங்குமிடமாகப் பாதி இடிந்தவீடு ஓன்றில் ஓய்வெடுக்க சென்றிருந்தான். ஜெனறேற்றரில் ஒரேயொரு பல்ப்புமட்டும் மெல்லிய வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது. லேசாகக் கண்ணயர்த்து போகும் நேரம் மீண்டும் சலசலப்பு. வேகமாக வந்த ஒருவன் சலூட் அடித்துவிட்டு, “சேர் .. சரணடைந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கப்போகிறது. வலியில் கத்துகிறாள் என்ன செய்யலாம்? ” என்றான். பல நாட்களுக்கு பின்னர் கழற்றி மாட்டியிருந்த சட்டையை போட்டுக்கொண்டு பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு போனவன் வலியில் துடிதுக்கொண்டிருந்தவளைப் பார்த்தான். அவன் அடித்து விரட்டியவனின் மனைவியேதான். “ராணுவ மருத்துவருக்கு தகவல் கொடுங்கள். அவளை என் தங்குமிடத்துக்குத் தூக்கிவாருங்கள்.” என்று கட்டளையிட்டு விட்டு மீண்டும் இருப்பிடம் திரும்பி விட்டான். அவளைக் கொண்டுவந்து நிலத்தில் கிடத்தி விட்டிருந்தார்கள். வைத்தியர் வந்து சேரும்போது வலியில் முனகிக்கொண்டிருந்தவள் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தாள். வைத்தியர் வந்ததுமே அவள் நாடித்துடிப்பை தொட்டுப்பார்த்து விட்டு வேகமாக இயங்கத் தொடங்கினார். குளுக்கோஸ் பையை எடுத்து ஒரு தடியில் கட்டி ஊசியை குழாயில் இணைத்து அவள் கையில் நரம்பை தேடிப்பிடித்து ஏற்றி விட்டு. சிறு பிளேட்டை எடுத்து அவளின் அடி வயிற்ரைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்தவர், அதே பிளேட்டால் தொப்பிள் கொடியை வெட்டி விட்டு தண்ணீர் வேணுமென்றதும் குணதாசவே வாளியில் தண்ணீரை கொண்டு வந்து வைத்தான். அதில் குழந்தைதையை அமிழ்த்தி கழுவத்தொடங்கியதுமே அழத் தொடங்கியிருந்தது. “குழந்தைக்கு பால் கொடுக்க உடனே ஏற்பாடு செய்யுங்கள்” என்று வைத்தியர் சொன்னதுமே, காவலுக்கு நின்ற ஒருவனை அழைத்து, “கைதானவர்களில் பால் கொடுக்கக் கூடிய தாய் யாராவதிருந்தால் உடனே வேகமாக அழைத்து வா..” என்று கட்டளையிட்டான். சில நாட்களுக்கு முன்னர் பிறந்த கைக்குழந்தையோடு ஒரு தாயை அவன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவன் சைகை செய்ததுமே ஒருவன் அவளிடமிருந்த குழந்தையை வாங்கிக்கொள்ள அழுதுகொண்டிருந்த குழந்தையை அவள் கையில் கொடுத்ததும் அங்கிருந்து ஓரமாக அவள் சென்றுவிட குழந்தையின் அழுகை சத்தம் நின்று போய் விட்டிருந்தது. தன் கடமைகளை முடித்த வைத்தியர் அவனிடம் வந்து, “தையல் போட்டிருக்கிறேன். நிறைய இரத்தம் வெளியேறியிருக்கிறது. ஏற்கனவே அந்தப்பெண் பலவீனமாக இருக்கிறாள். உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டும். இல்லா விட்டால் உயிருக்கு ஆபத்து. வசதியுள்ள பெரிய வைத்திய சாலைக்கு எடுத்துப்போங்கள்.” என்று சொல்லிவிட்டு அவனுக்கு முன்னால் சல்யூட் அடித்து விட்டு விடை பெற்றுக்கொண்டான். வைத்தியர் போனதும் சுற்று முற்றும் பார்த்தான். மங்கலான வெளிச்சத்தில் காவலுக்கு நின்றவர்களும் குழந்தைக்குப் பால் கொடுக்கும் பெண்ணும் சிறிது தூரத்திலேயே நிற்பது தெரிந்தது. அறைக்கு திரும்பி அசைவற்றுக்கிடந்த அவளையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தவன் மீண்டும் வெளியே பார்த்தான். அருகாக யாருமில்லை. கதவை மெதுவாக சாத்தி விட்டு இடுப்பிலிருந்த சிறிய கத்தியை எடுத்து அவளின் அடி வயிற்றின் கீழே செருகி மேல் பக்கமாக இழுத்தான். அப்போதுதான் போடப்பட்டிருந்த தையல்கள் கத்திக்கு வழி விட்டு இலகுவாக ஒவ்வொன்றாக அறுத்துக்கொண்டு சில அங்குலங்கள் அதையும் தாண்டி வந்து நின்றது. கத்தியை இழுத்தெடுத்து குளுக்கோஸ் குழாயை அறுத்தவன், அதிலிருந்து வழிந்த குளுக்கோசில் கழுவி மீண்டும் இடுப்பில் செருகி விட்டு குனிந்து பார்த்தான். அவள் அவனை வெறித்துப் பார்த்தபடியே உடல் ஒரு தடவை அசைந்தது. எதோ சொல்ல முயற்சித்தது போலவிருந்தது. கழுதுப்பக்கத்தில் விரல்களை வைத்துப் பார்த்தான். நாடித் துடிப்பு அடங்கிப்போயிருந்தது . வெளியே வந்து லேசாக விசிலடித்ததும் ஓடி வந்த பாது காவலனிடம், ‘அவள் இறந்து விட்டாள். கொண்டு போய் புதைத்துவிடு.’ என்று சைகையிலேயே சொன்னதும், இயந்திரம் போல இயங்கிய பாதுகாவலன் இறந்தவளின் உடலை அவள் கிடத்தியிருந்த துணியிலேயே சுருட்டி தோளில் சுமந்தபடி இருளில் மறையத் தொடங்கியிருந்தான். அவளுடலில் வழிவதற்கு இரத்தம் இருந்திருக்கவில்லை. வெளியே பாலுட்டி முடித்திருந்தவளிடம் அவளின் குழந்தையையும் எடுத்துக்கொண்டுபோய் உள்ளே படுக்கசொன்னதும் அவள் குழந்தைகளோடு உள்ளே நுழைந்து இரண்டு குழந்தைகளையும் அணைத்தபடி நித்திரையாகிப்போனாள். அரையிருளில் அறுந்துபோன குளுக்கோஸ் குழாயிலிருந்து இன்னமும் துளிகள் விழுந்துகொண்டிருந்தது. 0000000000000000000000000 நீண்ட நாளின் பின் குணதாச தொலைபேசியில் பிய சீலியை அழைத்ததும் அதிகாலை நேரம் பயத்தில் பரபரத்து, “உங்களுக்கு ஒன்றுமில்லையே…….? என்றவளிடம் , “இல்லை காலை விடிந்ததும் ஒரு வண்டியை பிடித்துக்கொண்டு கொஞ்சம் பணமும் எடுத்துக்கொண்டு வவுனியா வந்துவிடு. இராணுவ அலுவலகத்துக்கு போக வேண்டாம். ரயில் நிலைய பக்கமாக வந்துவிடு. அங்கேயே காத்திரு. நான் வந்துவிடுகிறேன்.” என்று விட்டு தொலை பேசியை துண்டித்து விட்டான் . நடந்த முழு உண்மையையையும் பியசீலியிடம் சொல்ல முடியாது. எனவே அவளுக்கு சொல்வதுக்ககவே ஒரு கதையை தயார் செய்ய வேண்டியிருந்தது .யோசித்தான். கதை இதுதான் : ‘பயங்கரவாதிகளிடமிருந்து அப்பாவி பொது மக்களை மீட்டுக்கொண்டிருந்தோம். அப்போ ஒரு கர்ப்பிணி பெண்ணும் கணவனோடு ஓடி வந்துகொண்டிருந்தாள். அப்போ பயங்கரவாதிகளின் சூடு பட்டு கணவன் இறந்து போய் விடக் காயமடைந்த கர்ப்பிணி பெண்ணை மட்டும் என்னால் காப்பாற்ற முடிந்தது. ஆனால் அன்றிரவே குழந்தை பிறந்துவிட பலவீனமாக இருந்த அந்தப்பெண் இறந்து விட்டாள். எவ்வளவோ முயன்றும் என்னால் அவளை காப்பாற்ற முடியவில்லை. குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. புத்த பிரானே எமக்காக இந்த குழந்தையை என் கையில் கொடுத்ததாக நினைத்தேன். இனி இவன் எங்கள் குழந்தை……” இதை பலமுறை அவன் சொல்லிப் பார்த்துக்கொண்டான். அதிகாலையே எழுந்தவன் நித்திரையிலிருந்த பெண்ணிடம், “உன் குழந்தையை கொண்டுபோய் முகாமில் உன் உறவினர் அல்லது தெரிந்தவரிடம் கொடுத்துவிட்டு வா.” என்றவன் பழைய துணியால் சுற்றியபடி நித்திரையிலிருந்த குழந்தையை தன்னுடைய இராணுவ சீருடை ஒன்றில் சுற்றி கையில் எடுத்து பார்த்தபடியே நிற்றிருக்கும்போதே அவள் வந்து விட்டிருந்தாள். குழந்தையை அவள் கையில் கொடுத்து ஜீப்பில் ஏற சொன்னவன், வண்டியை இயக்கியதும் அது ஏ 9 பாதையால் ஓடத் தொடங்கியிருந்தது. வழி நெடுகலும் அங்காங்கு இருந்த இராணுவ தடை கம்பங்கள் எல்லாமே அவனின் அடையாளத்தை உறுதி செய்து வழி விட்டுக்கொண்டிருந்தது. வவுனியா இரயில் நிலையத்துக்கு அருகில் வந்தவன் தொலைபேசியில் பியசீலியை தொடர்பு கொண்டதுமே, அருகிலிருந்த ஒரு வாகனத்திலிருந்து இறங்கி சுற்று முற்றும் பார்த்து விட்டு, வண்டியிலிருந்தவளிடம் குழந்தையை வாங்கும்போதே அது வீரிட்டு அழத் தொடங்கியிருந்தது. கொஞ்சம் பலவந்தமாகவே குழந்தையை பிரித்தெடுக்கும் போது அவள் உதடுகளை கடித்து கண்களை மூடிய படியே பேசாமலிருந்தாள். பியசீலியின் கைகளில் குழந்தையை கொடுத்தவன், பியசீலிக்காக சொல்வதுக்கு தாயார் செய்து வைத்திருந்த கதையை வேகமாக சொல்லி முடித்துவிட்டு , “நீ ஊருக்கு போக வேண்டாம். அமாவிடம் விபரம் சொல்லியுள்ளேன். நேராக அவர்கள் வீட்டுக்கு போ. போகிற வழியில் குழந்தைக்கு வேண்டிய பால்மா, பால் போச்சி வாங்கி கொள்.” என்றவனிடம் குழந்தைக்கு என்ன பெயர் என்ற பியசீலியின் கேள்விக்கு, “குமார………..” என்று விட்டு ஜீப்பில் போய் ஏறிக்கொண்டான். மீண்டும் கிளிநொச்சி சென்றுகொண்டிருந்த வாகனத்தை யாருமற்ற காட்டுப் பகுதியில் நிறுத்தி அவளை கீழே இறங்கசொன்னவன் துப்பாக்கியை அவள் தலையில் வைத்தான். எந்த அசைவுமற்று நின்றவளிடம் “உனக்கு சாக பயமில்லையா?” என்றதும் அவளது உதடுகள் லேசாய் விரிந்தது. அதை சிரிப்பென்று அவன் எடுத்துக்கொண்டான். “என்ன பெயர்?” என்று அவளிடமிருந்து வந்த உணர்வுகளற்ற குரலுக்கு. “என்பெயரா….?” என்று கோபமாய் கேட்டான். “இல்ல… உன் பெண்சாதி பெயர் ..” கம்பீரமாய் துப்பாக்கியை நீட்டியபடி நின்றிருந்தவன் கொஞ்சம் தடுமாறி, “எதுக்கு….? என்றான். “அந்தக் குழந்தையைப் பத்திரமா பார்த்துக்கொள்ள சொல்.” என்றதும் துப்பாக்கியை மீண்டும் இடுப்பில் செருகிவிட்டு, “சரி வந்து ஜீப்பில் ஏறு.” என்றான்.அவள் ஏறி அமர்ந்ததும் ஜீப் நகரத்தொடங்கியது. இருவரிடமும் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் வார்த்தைகளை வீணாக்க இருவருமே விரும்பவில்லை. ஜீப் மீண்டும் கிளிநொச்சி முகாமுக்குள் நுழைந்ததும் அவளை இறங்கி போகசொன்னவன், “உன் விசாரணைகளை விரைவாக முடித்து விடுதலை செய்ய சொல்கிறேன். நீ போகலாம்.” என்றதும் தன் பிள்ளை இருக்கும் இடத்துக்கு வேகமாக போய் கொண்டிருந்தவளிடம், “கொஞ்சம் நில்லு.” என்றவன், அருகில் போய், “அவள் பெயர் பியசீலி…… குழந்தையை பத்திரமா பார்த்துக்கொள்வாள். இதை பற்றி நீ யாரிடமும் சொல்லக்கூடாது. போ என்றான்.” எபோதாவது செத்து தொலைந்து விட வேண்டும் என்பதுக்காகவே முன்னரங்கில் மூர்க்கமாக படை நடத்தி வெற்றிகளை குவிதுக்கொண்டிருந்தவன் இப்போதெல்லாம் மெதுவாகவும் பாதுகாப்பாகவும் நகரத் தொடங்கியிருந்தான். ஒரு துப்பாக்கி ரவை கூட உரசிப் பார்க்கமேலேயே வாழ்க்கை வெறுத்துப்போயிருந்த காலங்கள் கடந்து போய் விட்டிருந்தது. இனி வாழ்ந்து விட வேண்டுமென முடிவெடுத்திருந்த அன்றிரவே அவனுக்கு பக்கத்தில் விழுந்து வெடித்த குண்டுச் சத்தத்தில் எழுந்த வலியோடு மயங்கிப் போயிருந்தான். ராணுவ வைத்திய சாலையில் கண்விழித்த போது, ஒற்றை காலடியில் குழந்தையோடு பியசீலி நின்றிருந்தாள். வலப்பக்கமாக பெரும் வலி. வலக்கால் பக்கமாக தொடைக்குக் கீழே வெள்ளை போர்வை மட்டுமே தெரிந்தது. ஆனாலும் விரல்கள் இருக்குமென்கிற நம்பிக்கையோடு அசைத்துப் பார்த்தான். முறிந்த பல்லியின் வால் போல அவனது தொடை மட்டும் கொஞ்சம் அசைந்தது. என்ன நடந்ததென ஞாபகங்கள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்றாக கோர்த்து பார்க்க முயன்றதில் குண்டு வெடித்தது வரை மட்டுமே ஞாபகத்தில் வந்தது. அறுந்து போயிருந்த நினைவு மீண்டும் ஓட்ட வைத்ததில் ஒற்றைக் கால் இல்லாதவனாகப் படுக்கையில். அதுக்கு மேல் அவனால் நினைவுகளை மீட்க முடியவில்லை. பியசீலி குழந்தையை அவனருகில் கிடத்தியதும், அது இரண்டு கால்களையும் அடித்து எதோ சத்தம் போட்டபோது அவன் ஒற்றைக் கால்வலியை மறந்து போனான். காயம் ஆறும்வரை சில மாதங்கள் வைத்திய சாலையிலேயே கழிக்க வேண்டியிருந்தது. ஒருநாள் வெளியே வீதியெங்கும் பட்டாசு சத்தம். காவலரணில் நின்றிருந்த இராணுவத்தினரும் வானத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார்கள். வைத்திய சாலை ஊழியர்களும் மகிழ்ச்சியோடு ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடி முடித்த மறுநாள் வைத்திய சாலைக்கு வந்திருந்த ராணுவ அதிகாரி காயமடைந்திருந்த அனைத்து வீரர்களின் வாயிலும் ‘பயங்கர வாதத்தை வென்று அரக்கனை கொன்று விட்டோம்.’ என்ற படியே பால்ச்சோற்றை ஊட்டி விட்டுச் சென்று விட்டார். காயம் ஆறிப்போனதும் வீடு திரும்பியிருந்தவனுக்கு காயமடைந்த இராணுவத்தினருக்கு கொடுக்கும் ஊக்கதொகையும் வேறு தொழில் தொடங்குவதுக்காக கைத்தொலைபேசி திருத்தும் பயிற்சியும் அரசால் வழங்கப்பட்டது. கிடைத்த தொகையில் வீட்டுக்கு முன்னாலேயே சிறிய தொலைபேசி திருத்தும் கடை ஒன்றை போட்டுக் கொண்டவனுக்கு ஒய்வுதியமும் கிடைதுக்கொண்டிருந்ததால் வாழ்க்கை சுமுகமாகப் போய்கொண்டிருந்தது. நாட்கள் செல்ல நடந்த சம்பவங்களும் நினைவிலிருந்து விலகிப்போய் இன்றுவரை நிம்மதியாகவே இருந்தான். இன்றைய சம்பவம் மீண்டும் அவனை பழைய நினைவுகளுக்கு இழுத்துக்கொண்டு செல்லவே, அடுத்த லீவுக்குக் குடும்பமாக கிளிநொச்சிக்குச் சுற்றுலாபோய் பியசீலிக்கு அவன் சொல்லி வைத்திருந்த அதே கதையை அங்குவைத்து நம்பும் படியாக குமாரவுக்கு சொல்லிவிடுவதென முடிவெடுத்திருந்தான். 0000000000000000000000000000 வாகனம் கிளிநொச்சி நகரை அண்டியிருந்தது. குணதாசவுக்கும் பியசீலிக்கும் நடுவில் கையில் பந்தை வைத்து உருட்டியபடியே குமார வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். குணதாசவோ இறுகிய முகத்தோடு பல வருடங்களுக்கு பின்னர் ஒரு இடத்தைக்காட்டி “இதோ……. இங்குதான் நீ கிடைத்தாய்.” என மீண்டும் சொல்லப்போகும் அந்த கதையையே மனதுக்குள் திரும்ப சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தான். கிளிநொச்சி சந்தியில் சனக்கூட்டமாகவும் சத்தமாகவும் இருக்க, சந்தியில் இருந்த உணவகத்தில் ஏதாவது சாப்பிடலாமென நினைத்து வண்டியை நிறுத்துமாறு சொல்லிவிட்டுத் தன் கைதடியைகளை எடுத்துக்கொண்டு இறங்கிய போது, வீதியின் மறுபக்கம் சனக்கூட்டமாக இருந்தது. “அங்கே என்ன நடக்கிறது?” என்று ஒருவரை கேட்டதும் , “ஒ……… அதுவா? காணமல் போனவர்களுக்கான போராட்டம். இதுவே இவங்களுக்கு வேலையா போச்சு.” எண்டு சொன்னபடி போய் விட்டார். குமார வண்டியிலிருந்து இறங்கும்போது கையிலிருந்த பந்து நழுவி வீதியில் குறுக்கே உருண்டோட தொடங்கியதும் அதை பிடிப்பதுக்காக அவன் வீதியில் பாய மறுபக்கமிருந்து வேகமாக வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து ஓன்று பிரேக் அடித்து நிக்க, ஓடிப்போன குமார திரும்பவும் மறுபக்கம் வந்து விழுந்திருந்தான். என்ன நடந்தது என எல்லோருமே யோசிக்க முதல் அது நடந்து விட்டிருந்தது. அனைவருமே உறைந்து போய் நின்றிருக்கும் போது குணதாச வீதியில் கிடந்தவனை பார்த்தார். குறுக்கே ஓடிய குமாரவை காப்பாற்ற அவனை தள்ளி விட்டு பேருந்தில் ஒருவர் அடி பட்டு கிடந்திருந்தார். யாரோ போனடித்து விட்டிருக்க அம்புலன்ஸ் அவரை ஏற்றிக்கொண்டு போனதும் அங்கு வந்த போலிசார் பேருந்து ஓட்டுனரை கைதுசெய்து விசாரிக்க தொடங்கியிருந்தார்கள். குறுக்கே போன குணதாச தன் இராணுவ அடையாள அட்டையை காட்டி “என் மகனில் தான் பிழை. அவரை விட்டு விடுங்கள்.” என்றதும் போலிசாரும் “விசாரணைக்கு அழைக்கும்போது வரவேணும்.” என்று அவனை விட்டு விட்டார்கள். குமரவை காப்பாற்ற குறுக்கே விழுந்தவன் கையில் வைத்திருந்த எதையோ எறிந்து விட்டதை கவனித்திருந்த குணதாச அதை போய் எடுதுப்பார்த்தான். ஒரு பதாதையில் படம் ஒட்டியிருந்ததது. கீழே சிலவசனங்கள் . அந்த படம் அவனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. அன்றைய இரவின் மங்கிய வெளிச்சத்தில் அவனிடம் எதையோ சொல்ல முயற்சி செய்து அப்படியே அடங்கிப்போனவளின் முகம். இன்னும் அவனின் நினைவிலிருந்தது. அங்கிருந்த ஒருவரிடம் “என்ன எழுதியிருக்கு?” என்று கேட்டான். “என் மனைவியும் பிள்ளையும் எங்கே……”? என்று எழுதியிருக்கு என்று சொல்லிவிட்டு அவன் போய் விட்டான். அக்கம் பக்கம் பார்த்து விட்டு அந்த படத்தை தனியாக பிரித்தெடுத்து சட்டைபைக்குள் மறைத்து வைத்துக்கொண்டான் . உணவகத்தில் சாப்பிட அமர்திருந்தாலும் அவனால் சாப்பிட முடியவில்லை. பியசீலியும் குமாரவும் கூட சரியாக சாப்பிடவில்லை. அரை குறையாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்திருந்தவர்கள் வண்டியில் ஏறியதும் “திரும்பவும் ஊருக்கே போ………” என்று ஓட்டுனரிடம் சொல்லிவிட எதுவும் புரியாமல் அவனும் வந்த வழியே வண்டியை செலுத்த தொடங்கியிருந்தான். குணதாச மடியிலேயே தலை வைத்து படுத்திருந்த குமார, “அப்பா……. எல்லாம் என்னால தானே…? அவருக்கு ஒண்டும் ஆகியிருக்காதே..?” என்றான். இல்லை ஒண்டும் ஆகியிருக்காது. அவர்களும் நல்லவர்கள் தான்”. என்று சட்டையை தடவிப் பார்த்துக் கொண்டான் குணதாச. ஊரை அடைந்திருந்தபோது இரவாகி விட்டிருந்தது. நீண்ட நேர மௌனத்தை உடைத்தவன், “இன்றைக்கு கொஞ்சம் குடிக்கவேண்டும்.” என்று பியசீலியிடம் மெதுவாக அனுமதி கேட்டான். அவளும் எதுவும் சொல்லவில்லை. வாகனம் சாராய கடையை அண்மித்தபோது றைவரின் தோளில்த் தட்டிப் பணத்தைக் கொடுத்தான். வண்டியை நிறுத்தியவன் ஓடிப்போய் வாங்கி வந்து அவனிடம் கொடுத்து விட்டு வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டான். இரவு பியசீலி அறைக்குள் போய் படுத்துவிட, அவன் குடிப்பதை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்த குமாரவை “வா…” என்று அழைத்தவன், அவனை இறுக்கி அணைத்து முத்தமிட்டு, அப்பா இப்போ உனக்கொரு கதை சொல்லப் போகிறேன்.” என்று சொல்லத் தொடங்கியிருந்தான் 000000000000000000000 மறுநாள் காலை வழமையை விட தாமதமதமாக எழும்பிய குமார குணதாசவை பார்த்தபோது அவன் மூலையில் சிறிய கண்ணாடி கூண்டிலிருந்த புத்தர்சிலையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அதில் புதிதாக பிடுங்கி வைக்கப்பட்டிருந்த நந்தியாவட்டை பூக்கள் நிரம்பியிருந்தது. அருகில் ஒரு பெண்ணின் படம். ” குமார முகம் கழுவி விட்டு வா. தேநீர் தயார் செய்கிறேன்.” என்கிற பியசீலி சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாதவன் பந்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு பின்புறமாக சென்றிருந்தான். பந்து சுவரில்மோதும் சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது. குணதாச பியசீலியை திரும்பிப் பார்த்தான். அவள் முகட்டை வெறித்துப்பார்த்தபடி சுவரில் சாய்ந்திருந்தாள். குணதாச நினைவு தெரிந்து வாழ்கையில் இரண்டாவது தடவையாக அழ ஆரம்பித்திருந்தான். டமால் என்று பந்து வெடிக்கும் சத்தம் கேட்டது .
  • Mulvaney brashly admits quid pro quo over Ukraine aid as key details emerge White House acting chief of staff Mick Mulvaney made a stunning admission Thursday by confirming that President Donald Trump froze nearly $400 million in US security aid to Ukraine in part to pressure that country into investigating Democrats. Mulvaney insisted that he only knew of a US request to investigate the handling of a Democratic National Committee server hacked in the 2016 election, but text messages between US diplomats show efforts to get Ukraine to commit to an investigation into Burisma, the company on whose board former Vice President Joe Biden's son sat. There is no evidence of wrongdoing in Ukraine by either Biden. "That's why we held up the money," Mulvaney said after listing the 2016-related investigation and Trump's broader concerns about corruption in Ukraine. After weeks during which Trump denied the existence of any political quid pro quo in his withholding of security aid to Ukraine, Mulvaney confirmed the existence of a quid pro quo and offered this retort: "Get over it."   "We do that all the time with foreign policy," Mulvaney said of the influence of politics in the Trump administration. In an unusual statement expressing public distance from the White House, a senior Justice Department official responded: "If the White House was withholding aid in regards to the cooperation of any investigation at the Department of Justice, that is news to us." Trump's attorney Jay Sekulow told CNN's Jim Acosta: "The legal team was not involved in the acting chief of staff's press briefing."   https://www.cnn.com/2019/10/17/politics/mick-mulvaney-quid-pro-quo-donald-trump-ukraine-aid/index.html
  • (நா.தனுஜா) சர்வதேச ஊடகங்களின் முன்னிலையில் கோத்தபாய ராஜபக்ஷ நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுத்துவிட்டதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, இவ்வாறு செய்வதற்கு அவருக்கு வெட்கமில்லையா? முதுகெலும்பு இல்லையா? எனவும் கேள்வி எழுப்பினார். புதிய ஜனநாயக முன்னணியினால் கெகிராவ நகரில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  இதன்போது மேலும் உரையாற்றிய அவர், கடந்த செவ்வாய்கிழமை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் முன்நிலையில் கோத்தாபய ராஜபக்ஷ தலைகுனிய நேர்ந்த சம்பவத்தை அனைவரும் அறிவீர்கள்.  அடிப்படைவாதம் மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அனைத்து பக்கமும் திரும்பினாரே தவிர, அவரிடமிருந்து பதிலில்லை. இவ்வளவு காலமும் அவர்கள் தேசிய பாதுகாப்பு குறித்தே பேசிவந்தார்கள். எனினும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உண்மைகள் அனைத்தும் வெளிவந்துவிட்டது.  கடந்த காலத்தில் அவர்கள் யாருக்கு ஜம்பர் அணிவித்து, யாரை சிறையில் அடைத்தார்களோ அவரே போருக்கு தலைமைத்துவம் வழங்கிய யுத்தவீரர் என்று சர்வதேச ஊடகங்களின் முன்நிலையில் அவர்களுடைய வாயாலேயே ஏற்றுக்கொள்ளளும்படி நேர்ந்துவிட்டது.  இராணுவத்தினரை தண்டிப்பார்கள், மின்சாரக்கதிரையில் ஏற்றுவார்கள் என்றெல்லாம் கடந்த காலத்தில் கூறினார்கள். அவ்வாறு மின்சாரக்கதிரையில் ஏற்றுவதற்காகவே அந்தக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கோத்தபாய ராஜபக்ஷ வழங்கிய பதில் 'காட்டிக்கொடுப்பு'.  ஆனால் பிரேமதாசவினர் யாருக்கும் பயந்தவர்கள் அல்ல. யாருடைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்படக்கூடியவர்கள் அல்ல. சர்வதேசத்தில் எவரொருவரைக் கண்டும் நான் அஞ்சவில்லை இராணுவத்தினருக்காக என்னுடைய கழுத்தைக் கொடுப்பதற்குக்கூட தயாராக இருக்கின்றேன் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/67112
  • (இராஜதுரை ஹஷhன்) அனைத்து இன மக்களின் பாதுகாப்பினையும் பலப்படுத்திய எம்மை நாட்டு மக்கள் மீண்டும் தெரிவு செய்வார்கள் என  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குளியாப்பிடிய நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தி  மக்களை  அச்சுறுத்தலுக்குள்ளாக்கிய முறையற்ற அரசாங்கம்  புறக்கணிக்கப்பட வேண்டும். எமது ஆட்சியில் பாரிய போராட்டத்தின் மத்தியில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று அரசியல் தேவைகளுக்காக பலவீனப்படுத்தியுள்ள தேசிய பாதுகாப்பு மீண்டும் பலப்படுத்தப்படும். நாட்டுக்க  வருமானத்தை ஈட்டும் அபிவிருத்திகளை மாத்திரம்  நிர்மாணித்தோம். துறைமுகம், அபிவிருத்திகள் அனைத்தும் தேசிய வருமானத்தை ஈட்டும் விதமாக காணப்பட்டது. ஆட்சி மாற்றததினை தொடர்ந்து தேசிய  வளங்கள் அனைத்தும் பிற நாட்டவருக்கு  விற்கும்  முயற்சிகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டது. நாட்டை விற்கும் சட்டத்தை தவிர்த்து ஏனைய சட்டங்கள் அனைத்தும்   பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். https://www.virakesari.lk/article/67118