யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
போல்

இந்துகுடி மக்களே இலங்கையின் பூர்வீக குடிகள் -முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டு

Recommended Posts

இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் இந்துத் தமிழ் மக்களே என்றும் அவர்கள் புத்தபிரான் பிறக்கமுதலே இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர், முன்னாள் முதலமைசசர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்த ஊடகவியலாளர்களின் கேள்விக்கு வழங்கியுள்ள பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதமானது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டபோது, அந்த மதத்தை தமிழர்கள் தான் முதன்முதலில் தழுவினர்.

தேவநம்பியதீசன் ஒரு தமிழ் மன்னன்.

சில நூற்றாண்டு காலங்கள் இலங்கையின் வடகிழக்கைச் சேர்ந்த இந்துத் தமிழர்கள் பௌத்தர்களாக மாறி தமிழ் பௌத்தர்களாகவே வாழ்ந்தார்கள்.

அந்த காலத்தில் வழக்கில் இருந்த தொல்லியல் பௌத்த எச்சங்களே இன்று வடமாகாணத்தில் அடையாளப்படுத்தப்படும் பௌத்த எச்சங்களாகும்.

அவை தமிழ் பௌத்தர் காலத்து பௌத்த எச்சங்களாகும் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் பேராசிரியர் சுனில் ஆரியரத்தின 'தெமளபௌத்தயோ' அதாவது தமிழ் பௌத்தர்கள் என்ற நூலை சிங்கள மொழியில் வெளியிட்டிருந்தார்.

தமிழர்கள் பௌத்தர்களாக ஒருகாலத்தில் வாழ்ந்து வந்தமை பற்றி அந்த நூலில் அவர் ஆராய்ந்துள்ளார்.

'தெமளபௌத்தயோ' காலக்கிரமத்தில் பௌத்ததைக் கைவிட்டு இந்து சமயத்தை மீண்டும் தழுவினர்.

சிங்கள மொழியானது கிறிஸ்துவுக்கு பின் 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டிலேயே நடைமுறைக்கு வந்தது.

அதற்கு முன்னர் எழுதப்பட்ட மகாவம்சம் என்ற நூல் பாளிமொழியிலேயே எழுதப்பட்டது.

அப்போது சிங்கள மொழி பிறக்கவில்லை.

இந்த நாட்டில் பேசப்பட்ட தமிழ் மொழியை அத்திவாரமாக வைத்து அதன் மேல் பாளிமொழியினால் அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த மொழியே சிங்கள மொழியாகும்.

பாளிமொழியில் சிகல என்றால் சிங்கம்.

முதன் முதலில் சிகல என்ற சொல் கிறிஸ்துவுக்கு பின் 4ஆம் 5ஆம் நூற்றாண்டுகளின் படைப்பான பாளி மொழியில் வெளிவந்த தீபவம்சத்தில் குறிப்பிடப்படுகிறது

சிங்கள மொழியோ அல்லது சிங்கள இனமோ இந்த இரண்டு பாளிமொழி நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், துட்டகைமுனுவை சிங்கள அரசன் என்று குறிப்பிடுவது தவறானது.

எல்லாளன் இந்துத் தமிழன் துட்டகைமுனு பௌத்த தமிழன் என்பதே உண்மையாகும்.

எனவே, சரித்திர ரீதியாகப் பார்த்தால் மொழி ரீதியாகவும் மத ரீதியாகவும் இலங்கையில் ஆதியில் குடிகொண்டிருந்தவர்கள் தமிழ் மொழி பேசிய இந்துக்கள் என்பதையும் விட சைவ சமயிகளே என்று கூறினால் அதுவே பொருத்தமானது.

இதனால்தான் வடகிழக்கை இணைத்து தமிழ் மக்களின் தாயகப் பகுதியை அடையாளப்படுத்தி, அதற்கென ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்கி அவர்களின் சுயாட்சிக்கு வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுவருவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கட்டமைப்பினுள் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு ஒரு தனி அலகை ஒதுக்கவேண்டும் என்றும் கேட்டு வருகின்றோம்.

அவ்வாறான ஒரு அரசியல் தனித்துவம் வழங்கப்பட்டால், தமிழர்களின் அலகு சமயச் சார்பற்ற ஆனால் எல்லா சமயங்களையும் சமமாகக் கருதும் ஒரு அலகாகச் செயற்படும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/120509

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நீதியரசர் உஷாராத்தான் இருக்கிறார்!
சிங்களவன்டை பொய்களை பிரிச்சு மேய்கிறார்!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஸ்ரீலங்கா பௌத்தநாடே அல்ல! - மீளவும் உறுதிப்படுத்தினார் அமைச்சர் மங்கள!

ஸ்ரீலங்காவில் பெரும்பான்மையினமாக பௌத்த மக்கள் இருந்தாலும் இதனை பௌத்த நாடு என்று அழைக்க முடியாது என்று தற்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் நிதியமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் அடித்துக் கூறியுள்ளார்.

மீண்டுமொரு கறுப்புஜுலை இனக் கலவரத்தையும், மோதல்களையும் ஏற்படுத்தும் முயற்சியில் வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் முயற்சி செய்து வருவதாகவும் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை சுமத்திய நிதி அமைச்சர் மங்கள, இந்த முயற்சிகளை முறியடித்துக்காட்டுவதாகவும் சிறிலங்கா நாடாளுமன்றில் இன்றைய தினம் சூளுரைத்துள்ளார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 அளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடி யது. இதற்கமைய நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றிய நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஸ்ரீலங்கா என்பது பௌத்த நாடே அல்ல என்று அறிவித்தார்.

ஏற்கனவே மாத்தறையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஸ்ரீலங்கா நாடானது ஒரு பௌத்த நாடே கிடையாது என்றும்,ஸ்ரீலங்காவில் வாழும் அனைத்து பிரஜைகளினுடையது நாடே இது எனவும் தெரிவித்திருந்தார்.

நிதியமைச்சரின் இந்தக் கூற்றுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த – கோட்டா விசுவாசிகளான கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும்,சிங்கள பௌத்த தலைமை பீடங்கள் உட்பட தலைமை பௌத்த பிக்குகளும், தென்னிலங்கையிலுள்ள சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களும் கடும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியிருந்தன.

இந்த நிலையில் இந்த எதிர்ப்புக்களை மீறி இன்றைய தினம் சிறிலங்கா நாடாளுமன்றில் தனது நிலைப்பாட்டை அமைச்சர் மங்கள் சமரவீர மீண்டும் முன்வைத்தார்.

“சர்வதேச தீவிரவாதத்தை நாம் தற்போது கட்டுப்படுத்தியுள்ள போதிலும் இந்த நாட்டிலுள்ள வங்குரோத்து நிலை யை அடைந்திருக்கும் கட்சிகளும், அரசியல்வாதிகளும் மீண்டுமொரு கறுப்பு ஜுலையை ஏற்படுத்த முயற்சிக்கி ன்றனர். இம்முறை சிங்கள – முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்தவும், முஸ்லிம் மக்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று முத்திரையை குத்துவதற்கும் முயற்சி செய்து வருகின்றனர். முஸ்லிம் மக்களில் 90 வீதமானவர்கள் எம்முடன் இருக்கின்றனர். அவர்கள் வழங்கிய தகவ லின் அடிப்படையிலேயே தீவிரவாதிகளை முடக்கினோம். எனினும் மஹாசோன் படையணி போன்றன இந்த நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. மினுவாங்கொடையில் இனவாதிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்ட தொழிற்சாலையில் பணிபுரிந்த பலரும் சிங்களவர்கள்.

முஸ்லிம் மக்களின் வர்த்தகங்களினால் 3 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வருவாய் வருடாந்தம் கிடைக்கிறது. சிலோன் டீ ஏற்றுமதி செய்யும் நிறுவனம்கூட முஸ்லிம்களுடையது. அதேபோல ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார,மஹேல ஜயவர்தன உள்ளிட்டோர் முஸ்லிம் வர்த்தக முயற்சிகளுக்கான விளம்பரங்களில் தோன்றுகின்றனர். இந்த நாடு சிங்கள பௌத்த நாடல்ல.

ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா பிரஜைகளினதும் நாடாகும் என்று நான் கூறுகையில் தூஷண வார்த்தைகளால் என்னைத் திட்டித் தீர்க்கின்றனர். எனினும் இந்த நாட்டில் பௌத்த மக்கள் பெரும்பான்மையாக உள்ளமை உண்மைதான். ஆனாலும் இந்த நாடு ஸ்ரீலங்கா பிரஜைகளுக்குரியது.

புத்த பெருமானால் போதிக்கப்பட்ட பௌத்தம் என்பது ஒரு மார்க்கமே தவிர அது மதமாகாது என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் மங்கள சமரவீர,அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சி முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முஸ்லீம் மக்களுக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டினார்.

பௌத்த மதம் என்று கூறினால் அது தவறாகும். பௌத்த மார்க்கம் என்று சொல்வதே சரியானதாகும். பௌத்த தர்மம் என்பது மதமல்ல. புத்த பெருமான் வழங்கிய இந்த தர்மமானது இனத்துக்கு, மதத்துக்கு வரையறுக்கப்பட்டதல்ல. அதனால் பௌத்தர்கள் என்று கூறுவதற்கு நாம் வெட்கமடைய வேண்டும். ஏனென்றால் சில பௌத்த பிக்குமார்கள் இந்த புனிதமான பௌத்த தர்மத்தை விற்பனை செய்கின்றனர். முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனிலும் எமது பௌத்த தர்மத்திலுள்ள விடயங்கள்தான் உள்ளன.

எனவே நீங்கள் கொண்டுவருகின்ற இந்தப் பிரேரணையானது ரிஸாட் பதியுதீனுக்கு விரோதமானதல்ல மாறாக முஸ்லிம் மக்களுக்கு விரோதமானதாகும். முஸ்லிம் மக்களை இந்த அரசாங்கத்திலிருந்து பிரிக்கவே பார்க்கின்றனர்.யார் எவ்வகையான கனவுகளைக் கண்டாலும் இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்று சவால் விடுக்கின்றேன்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்த உரைக்கு மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச பலதடவை குறுக்கீடு செய்தார்.இருப்பினும் நாடாளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதலை நடத்திய கீர்த்தி அபேவிக்ரமவின் மைத்துனரான விமல் வீரவன்ச, அவருடைய மரபணு உறவுமுறையின் உந்துதலே இந்தக் குறுக்கீடுகளுக்கு காரணம் என கூறிய அமைச்சர் மங்கள சமரவீர, விமல் வீரவன்சவின் குறுக்கீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/120574

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இவ்வாறு உண்மையை - வரலாற்றுச் சான்றைத் துணிந்து கூறுவதற்கு ஒரு தலைவன் வேண்டும்.


அதுதான் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களைத் தமிழ் மக்களில் பலரும் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்வதற்குக் காரணமாகிறது.

 
பெளத்தத்துக்கே முன்னுரிமை என்று அவர்கள் கூறட்டும். அதுபற்றி நமக்குக் கவலை யில்லை. 
 
ஆனால் இலங்கையின் பூர்வீகம் இந்துத் தமிழ் என்பதை எப்போதும் நாம் கூற வேண்டும். அதுவே உண்மை. அதுவே தமிழனைத் தமிழனாக வாழ வைக்கும். 

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, ampanai said:

ஆனால் இலங்கையின் பூர்வீகம் இந்துத் தமிழ் என்பதை எப்போதும் நாம் கூற வேண்டும். அதுவே உண்மை. அதுவே தமிழனைத் தமிழனாக வாழ வைக்கும். 

தமிழனை இந்துத் தமிழன் என்று கூறுவதே தவறு. தமிழன் தமிழன்தான்.  அதுதான் அவன் பூர்வீகம் என அறியக்கிடக்கிறது. ஏனெனில் அவன் இயற்கையோடு இணைந்து அது வழங்கும் இன்ப துன்பங்களையும் அனுபவித்து வாழ முற்பட்டவன். இடையே மதங்கள் புகுந்து அவனையும் இன்று மதம்பிடித்து வாழ வைத்துள்ளது. இருப்பினும் அதனை உணர்த்தி தமிழனைத் தமிழனாக வாழவைக்கும் முயற்சிகளும் அங்காங்கே எழத்தான் செய்கிறது. இந்நூற்றாண்டில் அதனை ஈழத்திலும் காண முடிந்தது.

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, Paanch said:

தமிழனை இந்துத் தமிழன் என்று கூறுவதே தவறு. தமிழன் தமிழன்தான்.  அதுதான் அவன் பூர்வீகம் என அறியக்கிடக்கிறது. ஏனெனில் அவன் இயற்கையோடு இணைந்து அது வழங்கும் இன்ப துன்பங்களையும் அனுபவித்து வாழ முற்பட்டவன். இடையே மதங்கள் புகுந்து அவனையும் இன்று மதம்பிடித்து வாழ வைத்துள்ளது. இருப்பினும் அதனை உணர்த்தி தமிழனைத் தமிழனாக வாழவைக்கும் முயற்சிகளும் அங்காங்கே எழத்தான் செய்கிறது. இந்நூற்றாண்டில் அதனை ஈழத்திலும் காண முடிந்தது.

மனிதர்களால் உருவாக்கப்பட்டதே அனைத்து சமயங்களும் மதங்களும். காலப் போக்கில் தங்களால் அறியமுடியாத ஒரு இயற்கைச் சக்தியை கடவுள் என அழைக்கத் தலைப்பட்டனர்! இவ்வாறான ஒரு நம்பிக்கையினூடாக சில ஒழுக்கநெறிகளை மக்கள் பின்பற்றும் சூழலும் உருவாக்கப்பட்டது.

உலகில் மிகமிகத் தொன்மையான இனம், மொழியாக தமிழும் தமிழினமும் கருதப்படும் நிலையில் ஆதிகாலத்து தமிழன் இந்த சமயம் அல்லது மதம் என்பதற்கு அப்பாற்பட்டவனாக இருக்க வேண்டும்!

மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறு சமயங்கள் அல்லது மதங்களைக் கருதும் போது, சைவ சமயம் (இந்து சமயம்) ஆனது பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்களைவிட மிகவும் தொன்மையானதாக இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கமுடியாது.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • இந்த நீதிமன்றத் தீர்ப்பு நீதியின்பால் உள்ளதா? சட்டத்தின்பால் உள்ளதா? நீதிபதிகளில்கூட, மனிதமனம் கொண்ட நீதிபதி, மிருகமனம் கொண்ட நீதிபதி என்று இனம்பிரிக்கலாம் போல் தெரிகிறது.
  • Hotel near Buckingham Palace serves $ 200 cup of Ceylon tea by P.M. David Silva & Sons The rare tea is weighed with scales and brewed in a silver tea pot. It’s served to customers using gold tweezers – Courtesy The Rubens At The Palace   CNN: It’s no secret that the British are very serious about their tea. Now a London hotel has taken this dedication to new heights by offering what’s been dubbed the UK’s most expensive cuppa. The Rubens at The Palace is now serving a rare tea blend for £ 500 ($ 620) per pot, which works out to around $ 200 a cup. http://www.ft.lk/front-page/Hotel-near-Buckingham-Palace-serves-200-cup-of-Ceylon-tea-by-P-M-David-Silva-Sons/44-682175  
  • ஐக்கியதேசிய கட்சியை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்க முயல்கின்றதா அமெரிக்கா- தூதுவரின் பதில் என்ன? இலங்கையில் ஆட்சிமாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க நிதிவழங்கவில்லை என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சியில் நீடிப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபடவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களே 2015 இல் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்தனர் இன்னும் சில மாதங்களில் அவர்களே புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முகநூல் உரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மக்களின் விருப்பத்திற்கு அமெரிக்காவின் ஆதரவுள்ளது என தெரிவித்துள்ள அவர் மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசாங்கத்துடனும் அமெரிக்கா இணைந்து செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் சோபா உடன்படிக்கை குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு சீனா ஒரு காரணமல்ல என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். வலுவான சுதந்திரமான இறைமையுள்ள இலங்கையை  அமெரிக்கா ஆதரிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பிற்கான  இலங்கையின் பங்களிப்பை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.   இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இலங்கை மேலும் வலுவானதாக விளங்குவதை உறுதி செய்வதற்காகவே இலங்கையுடன் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/60643    
  • தனது தந்தையாரான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி அமெரிக்காவின் மத்திய கலிபோர்னியாவில் மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தன்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கும் இலங்கையில் நடத்தப்படக் கூடிய எந்தவொரு தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இலங்கையில் இதுவரை எந்த தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எந்தவொரு கட்சியும் ஜனாதிபதி வேட்பாளரை இதுவரையில் அறிவிக்கவுமில்லை என்றும் அவரது மகள் அகிம்சா விக்கிரமதுங்க கூறியிருக்கிறார். பத்திரிகையொன்றுக்கு நேற்று புதன்கிழமை பிரத்தியேக பேட்டியொன்றை அளித்திருக்கும் அகிம்சா, கோதாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக வருவதை தடுப்பதற்கான அரசியல் நோக்கத்துடனேயே அமெரிக்காவில் வழக்கு தொடுத்திருப்பதாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன்னால் கலிபோர்னியாவில் வழக்கு தொடுக்கப்பட்டதன் பின்னரே கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பை செய்தார்.  ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களைப் பயன்படுத்தி தனது பிரசாரங்களை முன்னெடுப்பது பொருத்தமானது என்று கூட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நினைத்தார். எனக்கு தெரிந்தவரை அவரை வேட்பாளராக எந்த கட்சியும் அறிவிக்கவில்லை என்றும் 2009 ஜனவரியில் கொடூரமாக கொல்லப்பட்டதாக விக்கிரமதுங்கவின் மகள் கூறியிருக்கிறார். இலங்கையில் வழக்கை தாக்கல் செய்யாமல் அமெரிக்காவில் தாக்கல் செய்ததின் காரணங்கள் எவை என்று அகிம்சாவிடம் கேட்ட போது, இலங்கை நீதிமன்றங்களில் கோத்தாபய தனித்துவமான விலக்கீட்டு உரிமையை அனுபவிக்கிறார் போன்று தெரிகிறது. பல ஊழல் விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளில் அவர் கைது செய்யப்படுவதை தடுத்து குற்றவியல் விசாரணைகளையும் நிறுத்தியதன் மூலம் நூற்றாண்டுக்கும் அதிகமான கால பாரம்பரியத்தை இலங்கை நீதித்துறை மீறிவிட்டது. கோதாபய சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதியான விசாரணையை இலங்கையில் எதிர்பார்ப்பது பயனற்றது என்றே நான் நம்புகிறேன் என்று அவர் பதிலளித்திருக்கிறார். கோதாபய மீதான வழக்கிற்கு அரசியல் சாயம் பூசுவது ஏன் வசதியாக இருக்கின்றது என்பதை என்னால் விலங்கிக் கொள்ள கூடியதாக இருக்கிறது. எனது தந்தையின் மரணத்திற்கு பொறுப்பானவர் என்று நான் நம்புகின்ற நபர் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் நீதியை பெறுவது சாத்தியமில்லை என்ற எனது நிலைப்பாட்டை பலப்படுத்துவதாகவே அது அமையும். எனது நடவடிக்கையால் தாங்கள் விரும்புகின்ற வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் ஏதோ சில வழிகளில் பாதிக்கப்படக் கூடும் என்று சிலர் கவலைக் கெண்டுள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன். மஹிந்த ராஜபக்ஷவை தவிர வேறு எவராவது இலங்கையின் ஜனாதிபதியாக வருவது என்ற யோசனை கூட ஒரு சில வருடங்களுக்கு முன்னர் தோன்றிய புதியதொரு சாத்தியப்பாடாகும். இப்போது 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எனது குடும்பமும் நானும் பல்வேறு சட்ட நிறுவனங்கள் உட்பட சகல வகையான அதிகாரிகளையும் சந்தித்து பேசி அவர்களது உதவியின் மூலம் நீதியை பெறுவதற்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா என்பது குறித்து முயற்சித்துக் கொண்டே வருகின்றோம். அது நீண்ட தேடலாகவே இருக்கிறது என்று அகிம்சா கூறியிருக்கிறார். கேள்வி : 2015 தேர்தல்களில் உங்களது தந்தையாரின் கொலை முக்கியமான ஒரு பிரசார சுலோகமாக இருந்தது. அந்த தேர்தலுக்கு பிறகு கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்தும் விலகவேண்டி ஏற்பட்டது. பதவிக்கு வந்த அரசாங்கத்திற்கும் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை இல்லை என்று நீங்கள் உணர்கிறீர்களா? பதில் : இந்த கொலையை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள் அசாதாரணமான துணிச்சலை வெளிக்காட்டினார்கள் உண்மையை வெளிக் கொணர்ந்து வழக்கை பூரணப்படுத்துவதில் அவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கினார்கள். அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து போராடவில்லை, அரசாங்கத்துடன் போராடுகிறார்கள் என்பதை அடிக்கடி நான் உணர்ந்தேன்.அரசாங்கத்தின் பல நிறுவனங்கள் கொலையை விசாரணை செய்த விசாரணையாளர்களுக்கு தேவையான சான்றுகளை வழங்க மறுத்திருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனது தந்தையாரின் நெறுங்கிய நண்பர்களில் ஒருவர். இராஜதந்திர விலக்கீட்டு உரிமையை கோதாபய ராஜபக்ஷ கோருவதற்கான வழிகளை தேடுவதன் மூலமாக இந்த வழக்கில் குற்றப்பழியிலிருந்து அவரை விடுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா? மறுபுறத்திலே அதிர்ஷ்ட வசமாக ஜனாதிபதி மற்றும் முக்கியமான அமைச்சர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது நீதியை விரும்புகிறார்கள் போல் தெரிகின்றது. கேள்வி : நீங்கள் அமெரிக்காவில் தொடுத்த வழக்கு வெற்றி பெறாமல் போகக் கூடும் என்றும் உங்களது தந்தையாரின் கொலைக்கு கோதாபய ராஜபக்ஷ ஒரு போதுமே கிறிமினல் பொறுப்புக் கூறலைக்கப்படாமல் போகலாம் என்றும் கவலைப்படுகிறீர்களா? பதில் : அரசியல அனுகூலத்துக்காக ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கு முன்னுரிமை கொடுக்க கூடிய ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கையில் என்றாவது ஒரு நாள் தெரிவு செய்யப்படுவார்கள் என நான் நம்புகிறேன். அத்தகைய நேரம் வரும் வரை சுயாதீனமான நியாயாதிக்கமொன்றில் சிவில் நடவடிக்கைகயை முன்னெடுப்பதே நீதியான விசாரணைக்கு எமக்கு இருகக்கூடிய ஒரே வாய்ப்பாகும். கேள்வி : கலிபோர்னியாவில் நீங்கள் தொடுத்த வழக்கு வெற்றிகரமான முடிவைக் எட்டுமேயானால் , இந்த வழக்கின் சான்றுகளின்; அடிப்படையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்காக குற்றவியல் வழக்கை தொடர்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் தனது சொந்த பிரஜையை பொறுப்புக்கூற வைக்குமா? பதில் : எனது தந்தையாரின் கொலையுடன் கோதாபய ராஜபக்ஷவிற்கு இருக்கக்கூடிய தொடர்பு பற்றி நீதிமன்றத்தில் தீர்க்கமான சான்றுகளை நாம் முன்வைப்போம். அதற்கு பின்னர் குற்றவியல் செயன்முறைகள் தொடங்கும். குற்றவியல் விசாரணைக்கான சரியான இடம் இலங்கைதான். ஆனால் அமெரிக்க அரசாங்கம் அதன் சட்டங்களின் கீழ் அத்தகைய குற்றச் சாட்டுகள் பொருத்தமானவை என்று பரிசீலிக்கும் என நான் நம்புகிறேன். கேள்வி : நீங்கள் தொடுத்திருக்கும் வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தால் நஷ்ட ஈடுகளை கோதாபயவிடமிருந்து கோரமுடியும். அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. அந்த நாட்டில் அவரது சொத்துக்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா? பதில் : எனது தந்தையார் கொல்லப்பட்ட நேரத்தில் கோதாபய ராஜபக்ஷவின் சொத்துகள் குறித்து விசாரணைகள் மேற்கொண்டிருந்தார். லொஸ் ஏஞ்சசில் உள்ள வீடொன்றை 2006 ஆம் ஆண்டில் பௌத்த பிக்கு ஒருவருக்கு கொள்வனவு விலையில் மூன்று மடங்கு அதிக விலைக்கு அவர் விற்பனை செய்ததை தந்தையார் கண்டுப்பிடித்தார். நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்வதால் அவரது சொத்துகளின் தற்போதைய நிலைப்பற்றி நான் இதுவரை அறிந்தவற்றை கூறமுடியாது.   https://www.virakesari.lk/article/60648  
  • ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அன்றூ மியுரிசன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். மனித உரிமை பேரவைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கையை வலியுறுத்தி வருவதுடன் ஆதரவு வழங்கி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நீதி மற்றும் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதுவே மிகச்சிறந்த கட்டமைப்பு என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஸ் அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திற்கு இதனை வலியுறுத்தி வருகின்றது  பிரிட்டிஸ் தூதுவரும் இதனை தெரிவித்து வருகின்றார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை இன்னமும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இலங்கைஅரசாங்கத்தை அரசமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வை வழங்குமாறு  பிரிட்டனின் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/60694