• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • எல்லோருக்குள்ளும் அநேகமாக இதுபோன்ற ஒரு அனுபவம் இருக்கத்தான் செய்யும்......அதை எழுதியிருக்கும் விதம்தான் அருமை. ஆனாலும் அந்தாளை இப்படி கழுவி கழுவி ஊத்தக் கூடாது.இந்தப் பெண்கள் காதலிக்கும் பருவத்தில் மெலோடியாகவும் கல்யாணத்துக்கு பின் ரவுடியாகவும் மாறி விடுகின்றார்கள்.......!  🤣 அவரை மாதிரி எழுதுறதுக்குத்தான் அவர் இருக்கிறார்..... நீங்கள் கிருபன் மாதிரி ஒன்றை எழுதுறது........!   😁
    • நீங்கள் எழுதியது உங்கள் சொந்தக் கருத்து என நினைத்து விட்டேன். வலம்புரி ரணில் + தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இணைந்து விக்கியரை கஷ்டப்படுத்தினர் என்றும் வடக்குக்கு மைத்திரி வரும் போது கூட்டமைப்பினர் கலந்து கொள்ளவில்லை என்றும் எழுதி விட்டு பின் மைத்திரிக்கு ரணில் அக்கிரமங்கள் செய்தார் என்று போகின்ற போக்கில் எழுதியுள்ளனர். அவர்களும் என்னென்ன அக்கிரமங்கள் செய்தனர் குறிப்பிடவில்லை. ஏற்கனவே பெரும் கடனில் மிக மோசமாக தள்ளாடிக் கொண்டிருந்த இலங்கை அரசில் காத்திரமாக எதனையும் செய்யும் திறனற்று ரணில் அரசு தள்ளாடிக் கொண்டு இருக்கும் போது திடீரென மகிந்தவை 2018 ஒக்டோபரில் பிரதமராக்கி அரசியல் கூத்தாடி எல்லாவற்றையும் நாசமாக்கியவர் மைத்திரி. அதன் பின் ஏப்ரலில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான விவரங்களை பெற்றும் பாதுகாப்பு சபையைக் கூட கூட்டாமல் இருந்தவரும் அவர் தான். இவற்றை எல்லாம் விட அடுத்த நாள் அரசியல் தீர்வு திட்டத்தின் நகலை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருந்த போது அதை குழப்பியடிக்கவே மகிந்தவை ஒரே நாளில் பிரதமராக்கியவர் மைத்திரி. இவை எல்லாம் அக்கிரமங்களின் வரிசையில் வராது போல
    • பலமான பொருளாதார பின்னணியின்றி சகட்டுமேனிக்கு மக்கள் தொகையை அதிகரித்தால் எதிர் காலத்தில்  வறுமைக்கோட்டுக்குகீழ் வாழும் பெரும் மக்கள் கூட்டம் உருவாகும்.  வறுமையோடு போராடும் மக்கள் கூட்டத்திலிருப்பவர்கள்  தற்போது கிழக்கில் இடம்பெறுவதுபோல் மிக இலகுவாக பிற இனங்களாலும்  மதமாற்று கோஷ்டிகளினாலும் விழுங்கப்படுவார்கள். அப்போது தானாகவே இனத்தின் ஒருபகுதி பிறரால் விழுங்கப்படுமே ,அப்புறம் இனத்தை விருத்தி செய்து என்ன பயன்?
    • “சதிராட” என்ற சொல் உங்களுக்கு வேதனையளிக்கிறது என்றால், நீங்கள் தமிழ் அறிவை மேம்படுத்த வேண்டிய தேவை வந்திருப்பது தெரிகிறது. தமிழ் அறிவை வளர்த்துக்கொள்ள சபதம் செய்து கொள்வதற்கு  மாவீரர் மாதம் மிகவும் பொருத்தமானது.
    • யாருக்கும் நன்மை செய்யாதவரோடு கூட்டுச் சேர்ந்த தமிழ்க் கூட்டமைப்பை... இந்த நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன இப்போது முன்னாள் ஜனாதிபதி என விழிக்கப்படுகின்றார். மகிந்த ராஜபக்ச ­வோடு போட்டியிட்டு ஜனாதி பதித் தேர்தலில் வெற்றி பெற்றவர் மைத்திரி பால சிறிசேன.   ஜனாதிபதித் தேர்தலில் என்னோடு போட்டி யிட இருக்கின்ற அந்த வீரனை அறிய ஆசைப் படுகிறேன் என மகிந்த ராஜபக்ச ­ கர்ச்சித்த போது அவர் அருகிலேயே நின்றவர் மைத்திரி பால சிறிசேன. மிகுந்த துணிச்சலும் நேர்மையும் அவரிடம் இருந்தன. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர் பில் நேரிய முறையில் சிந்தித்தவர். எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது.   பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்துக்கு வருகின்றபோதெல்லாம் கொழும் பில் இருந்து ஓடிவரும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜ யத்தின் போதெல்லாம் எட்டவே நின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எல்லாம் செய்வார் என்பதுபோல் கூட்டமைப்பு நடந்து கொண்டதைப் பார்க்கும்போது எங்கள் இனத் துக்கான மிகப்பெரும் கேடு இதுவென்று உண ரத் தோன்றும். அதுமட்டுமன்றி வடக்கு மாகாண முதல மைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை ஓரங்கட்டுவதில் கூட்டமைப்பும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் செய்த கூட் டுச்சதியை என்னவென்று சொல்வது.   ஆம், தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றில்; வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் நான் கதைக்கமாட்டேன். முன்பும் கதைத்ததில்லை. இனியும் கதைக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் கூறு கிறார். இதன்போது செவ்வி கண்ட ஊடகவிய லாளர் அதிர்ந்து போனார். ஒரு பிரதமர் என்ற வகையில் நீங்கள் வட மாகாணத்தின் முதலமைச்சரோடு கதைக் காமல் எங்ஙனம் வடக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என்று அந்த ஊடகவிய லாளர் கேட்க, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கள் இருக்கிறார்கள். அவர்களோடு கதைத்து அபிவிருத்தியை ஏற்படுத்துவேன் என்கிறார் ரணில்.   இதன்போதாவது எங்கள் இனத்துக்கு ஈனம் இழைக்கப்படுகிறது என்பதைக்கூட உணரமுடியாதவர்களாக நாம் இருந்தோம்.   அதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக் கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத் தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும். மைத்திரிபால சிறிசேனவோடு மட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் முடியவில்லை. அது சஜித் பிரேமதாஸவையும் நம்ப வைத்துக் கழுத்தறுத்தது. எனவே இத்தகையவரோடு கூட்டு நின்ற நம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் எப்பேற் பட்டவர்கள் என்பதை இனிமேலாவது நம் தமிழினம் உணர்ந்தாக வேண்டும்.   http://valampurii.lk/valampurii/content.php?id=19886&ctype=news   நல்லாட்சியின் கொள்கையையும் சீரழித்து ஐக்கிய தேசியக் கட்சியையும் சீரழித்தது என்னையும் சீரழித்தமையால் நான் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை விரட்டியடித்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் - 4 DEC2018 ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை  நியமித்தது எதேர்ச்சையான நிகழ்வு அல்ல கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடந்து வந்த கசப்பான அனுபவங்களின் விளைவாகும். ரணில் விக்கிரமசிங்க தனக்கு விருப்பமான முறையில் மிக மோசமான நிலைக்கு ஆட்சியை கொண்டு சென்றார். ஒரு கட்டத்தில் என்னையும் அவர் கெடுத்துவிட்டார். மைத்திரி, எங்களை ஏமாற்றி விட்டார் – மாவை!  05 AUG ‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய ஆதரவை ஒக்டோபர் 18ஆம் திகதி மீளப்பெற்றதால் நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தோம். இன்றைக்கு எங்களுடைய நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருகின்றது உண்மைதான். மக்களுக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வதென்று எங்களுக்கும் தெரியாமல் இருகின்றது.