• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • ‘இசிஎம்ஓ’ கருவியைக் கொண்டு மார்ஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சற்று நேரம் கழித்து அந்தப் பெண்ணின் உடல் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கு உயர்ந்தது. அதனால் அவரது இதய இயக்கத்தை மீண்டும் தூண்டவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். படம்: VALL D'HEBRON/TWITTER 6 Dec 2019 21:12 மிகக் கடுங்குளிரில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் பெண்ணின் இதயத் துடிப்பு நின்று ஆறு மணி நேரத்துக்குப் பிறகு அவரது இதயத்தை ஸ்பெயின் மருத்துவர்கள் மீண்டும் இயங்க வைத்துள்ளனர். நேற்று (டிசம்பர் 5) நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண் பிழைத்தது அதிசயம் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆட்ரே மார்ஷ் எனும் அந்தப் பெண் கடந்த மாதம் மூன்றாம் தேதி சுமார் 1 மணியளவில் அவரது கணவருடன் பைரெனீஸ் மலைப்பகுதியில் நடந்துகொண்டிருந்தபோது பனிப்புயலில் சிக்கினார்.   ஆனால், மீட்புக் குழுவினர் அந்தத் தம்பதியினரை அணுகுவதற்கு சுமார் இரண்டரை மணி நேரத்துக்கு முன்பாக அந்த 34 வயதுப் பெண்மணியின் இதய இயக்கம் நின்றுபோனதாகவும் அவர் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் கூறப்பட்டது. அவரது உடல் வெப்பநிலை 18 டிகிரி செல்சியசாக இருந்தது. அவர்களைக் கண்டுபிடித்த மீட்புக் குழுவினர் அங்கேயே மேற்கொண்ட இதய இயக்க மீட்பு சிகிச்சைகள் பலனளிக்காததால் ஒரு ஹெலிகாப்டர் மூலம் பார்சிலோனாவில்  ‘இசிஎம்ஓ’ என அழைக்கப்படும் சிறப்பு ஆக்சிஜனேற்ற சவ்வு கருவி இருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.  நோயாளியின் இதய அமைப்புடன் இணைக்கப்பட்டதும் அவரது இதய, நுரையீரல் செயல்பாடுகளை  ‘இசிஎம்ஓ’ மேற்கொள்ளும். அதன் மூலம் ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கப்பட்டு இரு உறுப்புகளுக்கும் ஓய்வு அளிக்கப்படும். இந்தக் கருவியைப் பயன்படுத்தி ஸ்பெயினில் அதுவரை இதய இயக்க மீட்பு சிகிச்சை யாருக்கும் அளிக்கப்பட்டிருக்கவில்லை. ‘இசிஎம்ஓ’ கருவியைக் கொண்டு மார்ஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சற்று நேரம் கழித்து அந்தப் பெண்ணின் உடல் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கு உயர்ந்தது. அதனால் அவரது இதய இயக்கத்தை மீண்டும் தூண்டவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக அவரது இதயம் இயங்கத் தொடங்கியது.    இதயத் துடிப்பு நின்றுபோன ஒருவரது இதயத்தைச் செயல்பட வைக்க ஸ்பெயினில் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட சிகிச்சை இது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.   கடுங்குளிர் அவரை ‘கொன்றா’லும் குறைந்த வெப்பநிலை காரணமாக அவரது உடல் உறுப்புகளுக்கு மிகக் குறைந்த அளவே ரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் தேவைப்பட்டதால் அவரது மூளை பாதுகாக்கப்பட்டது என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூளை பாதிப்பு ஏதுமின்றி ஆறு நாட்களுக்குள்ளாகவே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரணப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் என்று கூறிய மருத்துவர்கள் அவர் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்புவார் என்றனர்.   #தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity https://www.tamilmurasu.com.sg/world/story20191206-37382.html?fbclid=IwAR21EE6cqvy83WX8ag3-uvRRZpAMucdxIW0fB-bD9UeFgHLJXjrB-03AAHo
    • ரதி, இலங்கை, இந்தியா, மற்றும் தென்னாசிய நாடுகளில் இருக்கும் பிரச்சனையே இவர்கள் உண்மையான குற்றவாளிகளை தப்ப வைக்க அப்பாவிகளை மாட்டி விடுவது தான். இங்கும் இவர்கள் நான்கு பேருமே குற்றவாளிகளா அல்லது ஒரு சிலரா என்பது வெகுசனத்துக்கு தெரியப் போவதில்லை. சுவாதி கொலையில், ராம்குமாரை கைது செய்த பின் அவர் வயரை கடித்து இறந்தார் போன்ற சோடிப்புகள் இங்கும் நிகழ்ந்து இருக்கலாம். ராம்குமாரை ஒரு நாள் கூட நீதிமன்றத்துக்கு கொண்டு வரவில்லை. இப்படியான உடனடி நீதிகளில் தண்டிக்கப்படும்  அனைவரும் பரம ஏழைகளாக இருக்க டெல்லியில் தலித்  சிறுமியை கோவிலில் வைத்து பல நாட்கள் வல்லுறவு செய்து கொன்றதில் துணை போன பிஜேபி பிரமுகர்கள், வக்கீல்கள் எல்லாம் பிணையில் சுந்தந்திரமாக உலாவிக் கொண்டு இருக்கின்றார்கள். பொள்ளாச்சி வழக்கில் கைதானவர்கள் அரசியல் பின் புலம் இருப்பதால் குண்டாஸ் பிரிவில் இருந்தும் அவ் வழக்கை நீக்கியிருகின்றார்கள். இந்திய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீது கூட அவருக்கு உதவியாளராக இருந்த பெண் ஒருவர் பாலியல் வன்முறை குற்றம் ஒன்றை சுமத்தியிருந்தார் (அவர் பிஜேபி யின் செல்வாக்கால் நியமிக்கப்பட்டவர் என்பதால் வழக்கை நிராகரித்து விட்டனர்) இவ்வாறான என் கவுண்டர்கள் மூலம் இத்தகைய குற்றங்கள் குறையாது. வல்லுறவுக்குள்ளாகும் பெண்களை மேலும் கொன்றழிப்பதில் தான் இனி குற்றவாளிகள் அதிகமாக ஈடுபடுவர்.
    • நான் யாழுக்கு இனி வர மாட்டேன். இப்பதிவை பார்த்ததால் இதற்கு மட்டும் பதிலளித்து விட்டு செல்கிறேன். 2016 இல் சீனா 80% இலங்கை 20% என கூறப்பட்டு 2017 இல் சீனா 70% இலங்கை 30% என மாற்றியிருந்தார்கள்.  
    • கேலிச்சித்திரம் பூனையும் எலியுமாக இருப்பது சாத்தியமா? இயல்பில் பூனை எலியை கபாளீகரம் பண்ணிவிடுமல்லவா இலங்கை என்ற எலியை இந்தியா என்ற பூனை விழுங்கக்கூடிய வல்லமையுடன் உள்ளதா? பூனையின் குறியீடும் எலியின் குறியீடும் சொல்ல முற்படுவது ரொம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் கதாப்பாத்திரங்களையா?