யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
 • ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • ஜப்பான் நிதியுதவியுடன் கண்ணிவெடியகற்றும் பணி துரித கதியில் முன்னெடுப்பு இலங்கையின் வடபகுதியில் ஜப்பானின் நிதியுதவியுடன்  மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலையின் பல பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றனர்.  இந்நிலையில், இலங்கையின் வடபகுதியில் ஜப்பானின் நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனம் செய்பட்டு வந்தது.  கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2019 யூலை மாதம் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும் ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் எட்டு இலட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து நூற்று அறுபத்து எட்டு  சதுரமீற்றர் பரப்பளவில் (848,168Sqm) இருந்து பத்தொன்பதாயிரத்து  அறுபத்து நான்கு (19,064)  அபாயகரமான வெடிபொருட்களை அகற்றி அழிக்கப்பட்டுள்ளது என ஸார்ப்  நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார். தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலையின் பல பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/61073
  • ''நீண்டகாலம் இடம்பெயர்ந்த திட்டத்திற்குள் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவு உள்வாங்கப்படும்'' முல்லைத்தீவு - கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராம மக்கள் நீண்டகால இடப்பெயர்வுத் திட்டத்திற்குள் இவ்வருடம் உள்வாங்கப்படுவார்கள் என கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் உமாமகள் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.  முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற தமிழ்க் கிராமங்களான கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் போன்ற கிராமங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தமது வாழிடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். இருப்பினும் இம்மக்கள் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் என்னும் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் என்னும் திட்டத்தினுள் கடந்த 1990ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்தவர்களான நீராவிப்பிட்டி, ஹிச்சிராபுரம் போன்ற பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களே உள்வாங்கப்பட்டிருந்தனர்.  இவ்வாறு நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் என்னும் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு, இத் திட்டத்திற்கு பொறுப்பாக இருந்த அமைச்சின் அமைச்சரான, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதுடன், விசேடமான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந் நிலையில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் கி.சிவலிங்கம் இது தொடர்பில் கேள்வி எழுப்பினார். இந் நிலையில் அதற்குப் பதிலளித்த கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மணிவண்ணன் உமாமகள், இவ்வருடம் குறித்த கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களும் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் திட்டத்திற்குள் உள்வாங்கப்படும் என்று தெரிவித்தார்.   https://www.virakesari.lk/article/61071
  • விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி மிகக் குழப்பமானது - சித்தார்த்தன் எம்.பி முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.  முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலையிலான  கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னனி அதன் செயலாளர் கஜேந்திரன் அடிக்கடி  பத்திரிகைகளில் விக்கினேஸ்வரன் ஐயா றோ என்று சொல்கின்றார். அதன் பின் தலைவர் பேசுகிறார். இந்த நிலையில் இது எப்படியான கூட்டணியாக அமையப் போகிறது. கஜேந்திரகுமார் அதற்குள் செல்ல மாட்டேன் எனக் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.  இதனால் அது பலமான கூட்டணியாக வர வாய்ப்பில்லை. தற்போது விக்கினேஸ்வரனும், சுரேஸ் பிறேமச்சந்திரனும் தான் அந்த கூட்டணி. வேறு எந்தக் கட்சியும் சேரும் என்று தெரியவில்லை.  ஆனால்  தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசியக்  கூட்டமைப்பில் மனக்கசப்பு இருந்தாலும் கூட, ஒரு மாற்றீடு இல்லை என்ற எண்ணப்பாடு உள்ளது. அந்த மாற்றைக் கொடுக்கக் கூடிய சக்தி வாய்ந்த கூட்டு உருவாகுமா என்ற கேள்வி இருக்கின்றது. அப்படியொரு பலமான கூட்டு உருவாகுமாக இருந்தால் அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பலமான ஜனநாயக ரீதியான போட்டியாக அமையும். அதை அவர்கள் செய்வார்களா என்பது கேள்வியே? எனத் தெரிவித்தார்.    https://www.virakesari.lk/article/61069  
  • புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட நீர்­மூழ்கிக் கப்பல் வடகொரியத் தலை­வரால் பரி­சோ­தனை   வடகொரியத் தலைவர் கிம் யொங் உன்  தனது நாட்டால்  புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப ட்ட நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்றை பார்­வை­யிட்டு அதன் தந்­தி­ரோ­பாய ஆற்­றல்கள்  மற் றும்  ஆயுத முறை­மை­களை பரி­சோ­தனை செய்­த­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம்  நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தது.அந்த நீர்­மூழ்கிக் கப்­பலை கிம் யொங் உன் பரி­சோ­தனை செய்யும்போது  அவ­ரது உத்­தி­யோ­கத்­தர்கள் அவ­ர­ருகே நடந்து சென்று  அவரால் வழங்­க­ப்­பட்ட குறிப்­பு­களை எழு­து­வதில் ஈடு­பட்­டனர். கிம் யொங் உன்னின் விசேட மேற்­பார்­வையின் கீழ்  நிர்­மா­ணிக்­கப்­பட்ட  அந்த நீர்­மூழ்கிக் கப்பல்  ஜப்­பா­னிய கடல் என அழைக்­கப்­படும் கிழக்கு கடலில் செயற்­ப­ட­வுள்­ள­தாக  வடகொரிய அர­சாங்க ஊட­க­மான கே.சிஎன்.ஏ. தெரி­விக்­கி­றது. ஆனால் அந்த நீர்­மூழ்கிக் கப்­பலில் எத்­த­கைய ஆயு­தங்கள் உள்­ளன என்­பது தொடர் பில் அந்த ஊடகம் விபரம் எத­னையும் வெளியி­ட­வில்லை. இதன்­போது கிம் யொங் உன்  மேற்­படி நீர்­மூழ்கிக் கப்பல் அமைக்­கப்­பட்­டுள்ள விதம்  குறித்து  பெரும் திருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக  கூறப்­ப­டு­கி­றது. கிழக்கு மற்­றும் மேற்குப் பிராந்­தி­யங்கள்  கடலால் சூழப்­பட்ட நிலை­யி­லுள்ள  நாடு என்ற வகையில் தேசிய பாது­காப்பில்   செயற்­ பாட்டுத் திறனும் நீர் மூழ்கிக் கப்­பல்­களும் முக்­கி­யத்­துவம் வகிப்­ப­தாக கிம் யொங் உன் தெரி­வித்தார். வடகொரி­யா­வா­னது  நீர்­மூழ்கிக் கப்­பல் கள் உள்ளடங்கலான கடற்படை  ஆயுத வசதிகளை அபிவிருத்தி செய்வதில் தொட ர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி யுள்ளதாக  அவர் மேலும் கூறினார்.     https://www.virakesari.lk/article/61091