Jump to content

நாம் தமிழர் - தேர்தல் 2019

Recommended Posts

சீமான் தனது அரசியலுக்கு தான் தலைவர் பிரபாகரன் பெயரை பயன்படுத்துகிறார். இவர் தமிழக முதல்வராக வந்தால் இவரும் சுயநலவாதியாகவே செயற்படக்கூடும். இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்க முற்படுவார். தமிழீழ மக்களுக்கு எதுவும் செய்வார் என நினைக்கவில்லை. இவர் ஒரு முதல்வராக தமிழீழ தமிழர்களுக்கு குரல் கொடுக்க வெளிக்கிட்டால் றோ இவரை போட்டுத்தள்ளி விட்டு இன்னொருவரை முதல்வராக கொண்டு வரும். 

ஆனால் ஏனைய திராவிடக்கட்சிகள் படு கேவலம் என்பதால் இவரை மட்டும் இங்கு விமர்சித்து இவரை தரம் தாழ்த்த வேண்டியதில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தனி மனித துதிபாடல் மனோநிலையில் இருக்காமல் எதையும் சமன் செய்து சீர்தூக்கி பார்க்கும் கண்ணோட்டம் கைவரப் பெறும் போது நல்லன நடக்கும் போது ஒத்துகொள்வதும், தவறானது நடக்கும் போது சுட்டிக் காட்டுவதும் இயல்பாக வரும் சகோ 😂.

டொட் டொட்.

இரண்டு  டொட்  போட்ட  பின்பும் தொடர்வதற்கு  மன்னிக்கவும்

மேலே  நீங்க குறிப்பிட்ட

அல்லது  சந்தேகம்  தெரிவித்த

அத்தனை கோணங்களிலும்  எனக்கும் சீமான்  மீது வேறு பார்வையுண்டு

ஏனெனில்  நாம்  ஏமாறுவது  அல்லது  ஏமாற்றப்படுவது  இது  முதல்முறையல்லவே??

ஆனால்  கண்ணுக்கெட்டிய  தூரம்

பாழுங்கிணற்றிலிருந்து வெளியில்  வர  வேறு  ஒரு  துரும்பும்  தெரிவில்லையே  சகோ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறு வழி தெரியவில்லை -எனக்கும்தான்.

இந்த வழியும் அது பாட்டுக்கு ஓடட்டும். அதிலும் எனக்கு உடன்பாடுதான்.

ஆனால் இந்த ஒரு வழிக்காக, நாம் தமிழ் நாட்டின் அத்தனை சக்திகளையும் பகைவர்கள் ஆக்குகிறோம். 

2009 இன் நரித்தனத்துக்கு கலைஞர் ஆட்சியில் இருந்தார் செய்யவில்லை ஓகே. பசி சதி செய்தார் ஓகே. முள்ளிவாய்க்கால நேரம் எதிர்கட்சி தலைவி ஜெயா - தன் ஆள் அம்பு டிவி சேனையை வைத்து தமிழ்நாட்டை கிடுகிடுக்க வைத்திருக்க முடியாதா?

வைகோ, கம்யூஸ்ட்கள், திகவினர் தம்மால் இயலுமானவரை போராடினார்கள். அப்போ 2008 இல்நா ன் தமிழ்நாட்டில் நின்றேன்.

ஆனால் ஜெயாவுக்கு சப்போர்ட். மகிந்தவின் பங்காளி மணல் மாபியா காரன் வீட்டு திருமணத்தில் விருந்தாளி, லைக்காவுக்கு சப்போர்ட். கேட்டால் விஜை தமிழன். அப்போ விஜையின் அம்மா மலையாள வந்தேறி இல்லையா?

பூராவும் சுத்த சுத்துமாத்து சகோ. இந்த சுத்துமாத்து கோஸ்டிக்காக மேலும் மேலும் நண்பர்களை பகைவர் ஆக்குகிறோம்.

கேட்டால், முள்ளிவாய்க்கால் நேரத்தில் எங்கே போனார்கள் என்று ஈசியாய் ஒரு கேள்வி.

பிரபாவை 2006 சந்தித்து, தமிழ்நாட்டுக்கான விநியோக உரிமையை பெற்றவர் போல பேசும் சீமான் 2006-2009 எங்கே இருந்தார் என்றால் பதிலில்லை.

அவர்கள் இருக்கும் வரைக்கும் பம்மிக் கொண்டு இருந்து விட்டு, இப்போ ஆமை ஓட்டில் சவாரி செய்தேன் என்று அவர்களை விற்றுப் பிழைப்பு நடத்துகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமான் வ‌ன்னிக்கு வ‌ந்த‌ 2008ம் ஆண்டு ஆர‌ம்ப‌ கால‌ ப‌குதியில் / போர் உச்ச‌ க‌ட்டத்த‌ தொட்ட‌து 2008ம் 9 மாச‌ம் / 

2008ம் ஆண்டு க‌ட‌சியில் இருந்து 2009ம் ஆண்டு வ‌ர‌ அண்ண‌ன் சீமான் குள்ள‌ ந‌ரி க‌ருணாநிதியால் கைது செய்து சிறையில் அடைக்க‌ ப‌ட்டார் / 

அண்ண‌ன் சீமான் அப்போது த‌னி ம‌னித‌ர் , ஒரு க‌ட்ட‌த்தில் த‌மிழ் நாட்டில் மூன்றாவ‌து பெரிய‌ க‌ட்சியா இருந்த‌ மாதிமுக்கா என்ன‌ செய்திச்சு 2009ம் ஆண்டு , வேடிக்கை பார்த‌த‌ த‌விர‌ வைக்கோ கோபால‌சாமி வேர‌ என்ன‌த்த‌ செய்தார் / முத்துக்குமார் தீ மூட்டிய‌ போது பெரும் புர‌ட்சி வெடிச்சு இருக்கும் / அதையும் குள்ள‌ ந‌ரி க‌ருணாநிதி அட‌க்கினார் ஏவ‌ல்துறையை வைச்சு / 

ஒரு சில‌  விம‌ர்ச‌னம் அண்ண‌ன் திருமாள‌வ‌ன் மேல‌ இருந்தாலும் போர‌ நிப்பாட்ட‌ த‌னி ஆளா போராடினார் , ம‌ருத்துவ‌ர் ராம‌தாஸ்சையும் கேட்டார் வாங்க‌ன்ன‌ இர‌ண்டு பேருமா உண்ணா விர‌த‌ம் இருப்போம் ஏதாவ‌து மாற்ற‌ம் வ‌ரும் என்று / அதுக்கு ராம‌தாஸ் ச‌ம்ம‌திக்க‌ வில்லை / இது உண்மையும் கூட‌ / ராம‌தாஸ் இன்னொரு போலி

இன‌ அழிவில் ஆர‌ம்பிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியை ப‌ல‌ர் வாய்க்கு வ‌ந்த‌ ப‌டி வ‌சை பாடுவ‌து ஏற்று கொள்ள‌ முடியாது / 
போன‌ பேருந்துக்கு கை காட்டி என்ன‌ பிரோச‌ன‌ம் / 

எம் இன‌ம் எம் க‌ண் முன்னே துடி துடிக்க‌ அழிந்து போனார்க‌ள் / 2009ம் ஆண்டு ஓல‌ குர‌ல் கேக்காத‌ இட‌மே இல்லை /
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ்நாட்டு அரசியலில் சீமானை ஆதரிக்காதவர்கள் வேறு யாரை ஆதரிக்கின்றோம் என வெளிப்படையாக இங்கு தெரிவித்தால் பல விதண்டாவாதங்களை தவிர்க்கலாம் என நான் நினைக்கின்றேன். இதை சொல்ல நீ யார் என்று கேட்டாலும் என்னிடம் பதில் இருக்கு அல்லது இல்லை.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே குமாரசாமி அண்ணை கேட்ட கேள்வியே முகாந்திரம் இல்லாதது. நான் தமிழ்நாட்டின் ஒரு வாக்காளன் என்றால் நிச்சயமாக என் வாக்கு நாம்தமிழருக்கே.

அது ஏன் என்பதற்க்கான விளக்கத்தை மணிமாறன் மேலே எழுதிய பதிவு தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

சீமான் தமிழ்தேசியத்தை தேவையான அளவு மட்டும் பயன்படுத்தி விட்டு தான் முதலமைச்சர் ஆகலாம் என நினைக்கிறார்.  நாம் சீமானை தேவையான அளவுக்கு பயன்படுத்தி, தமிழ் தேசியத்தை வேரூன்ற செய்ய முயற்சிக்க வேண்டும். ஆனால் சீமான் எப்படிபட்டவர் என்ற தெளிவு இருந்தால் மட்டுமே நம்மால் இந்த ஆடு புலி ஆட்டத்தில் வெல்ல முடியும். இது சீமானுக்கும் தெரியும். ஆகவேதான் புலிகளுடன் கொஞ்சமேனும் நெருக்கமாக இருந்தோரை அவர்கள் புலம் பெயர்ந்தவராயினும் , தமிழ்நாட்டவர் ஆயினும் சீமான் கொத்தி கலைகிறார். இதுதான், வைகோ, கொளத்தூர் மணி, வேல்முருகன், திருமுருகன் என எல்லாரையும் சீமான் தமிழ் தேசியத்தின் எதிரியாக சித்தரிப்பதன் அடிப்படைக்காரணம். 

சீமானை பற்றிய இந்த தெளிவான பார்வை இருந்தாலே போதுமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

2010ம் ஆண்டு ஆர‌ம்ப‌ கால‌ ப‌குதியில் ஜ‌யா கொள‌த்தூர் ம‌னிய‌ முன்னுக்கு நில்லுங்கோ தான் பின்னுக்கு நிக்கிறேன் என்று அண்ண்ன் சீமான் கொள‌த்தூர் ம‌னியிட‌ம் சொன்னாரா இல்லையா என்று கேட்டு வ‌ந்து சொல்லுங்கோ ( கோஷ‌ன் சே )

பெரியாரின் வாரிசுக‌ள் , அண்ண்ன் சீமானோடு ஒரு போதும் ப‌ய‌ணிக்க‌ மாட்டார்க‌ள் / அவ‌ர்க‌ளின் கொள்கை வேறு அண்ணன் சீமானின் கொள்கை வேறு / 

அண்ண‌ன் சீமான் திராவிட‌த்தை 
ஆதார‌த்தோடு விம‌ர்ச‌ன‌ம் செய்து விட்டு அவ‌ர்க‌ளோடு போய் நின்றால் கால‌ போக்கில் அண்ணன் சீமானையும் ந‌ம்ப‌ மாட்டின‌ம் ம‌க்க‌ள் / அது தான் அண்ண‌ன் சீமான் எல்லாத்திலும் தெளிவா இருக்கிறார் / அண்ண‌ன் சீமான் ப‌ய‌ணிக்கும் பாத‌ மிக‌ ச‌ரி 👏🙏  / 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது பையன்,

இங்கே சீமானையும் தமிழ்நாட்டையும் பற்றி போதுமான அளவு கதைத்து விட்டோம்.

இன்னொரு திரியிலும் கூட இன்னும் கதைக்கிறோம்.

பார்க்கலாம் காலம் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை. நன்றி வணக்கம்.

நேரத்துக்கு நன்றி. கிரிகெட் திரியில் சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

வேறு வழி தெரியவில்லை -எனக்கும்தான்.

இந்த வழியும் அது பாட்டுக்கு ஓடட்டும். அதிலும் எனக்கு உடன்பாடுதான்.

ஆனால் இந்த ஒரு வழிக்காக, நாம் தமிழ் நாட்டின் அத்தனை சக்திகளையும் பகைவர்கள் ஆக்குகிறோம். 

10 hours ago, goshan_che said:

மேலே குமாரசாமி அண்ணை கேட்ட கேள்வியே முகாந்திரம் இல்லாதது. நான் தமிழ்நாட்டின் ஒரு வாக்காளன் என்றால் நிச்சயமாக என் வாக்கு நாம்தமிழருக்கே.

அது ஏன் என்பதற்க்கான விளக்கத்தை மணிமாறன் மேலே எழுதிய பதிவு தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

சீமான் தமிழ்தேசியத்தை தேவையான அளவு மட்டும் பயன்படுத்தி விட்டு தான் முதலமைச்சர் ஆகலாம் என நினைக்கிறார்.  நாம் சீமானை தேவையான அளவுக்கு பயன்படுத்தி, தமிழ் தேசியத்தை வேரூன்ற செய்ய முயற்சிக்க வேண்டும். ஆனால் சீமான் எப்படிபட்டவர் என்ற தெளிவு இருந்தால் மட்டுமே நம்மால் இந்த ஆடு புலி ஆட்டத்தில் வெல்ல முடியும். இது சீமானுக்கும் தெரியும். ஆகவேதான் புலிகளுடன் கொஞ்சமேனும் நெருக்கமாக இருந்தோரை அவர்கள் புலம் பெயர்ந்தவராயினும் , தமிழ்நாட்டவர் ஆயினும் சீமான் கொத்தி கலைகிறார். இதுதான், வைகோ, கொளத்தூர் மணி, வேல்முருகன், திருமுருகன் என எல்லாரையும் சீமான் தமிழ் தேசியத்தின் எதிரியாக சித்தரிப்பதன் அடிப்படைக்காரணம். 

சீமானை பற்றிய இந்த தெளிவான பார்வை இருந்தாலே போதுமானது.

தமிழ்த்தேசியம் அல்லது  ஈழ  உணர்வு

தமிழகத்தில் முதலமைச்சர்  ஆக்கும்  என்பதே உங்களது பெரிய எதிர்பார்ப்புத்தானே  சகோ??

என்னைப்பொறுத்தவரை

தமிழுணர்வை

ரத்த பாசத்தை  நம்பலாம்  என்பது தான் சகோ

பார்க்கலாம்

Link to comment
Share on other sites

5 hours ago, பையன்26 said:

அண்ண‌ன் சீமான் திராவிட‌த்தை 
ஆதார‌த்தோடு விம‌ர்ச‌ன‌ம் செய்து விட்டு அவ‌ர்க‌ளோடு போய் நின்றால் கால‌ போக்கில் அண்ணன் சீமானையும் ந‌ம்ப‌ மாட்டின‌ம் ம‌க்க‌ள் / அது தான் அண்ண‌ன் சீமான் எல்லாத்திலும் தெளிவா இருக்கிறார் / அண்ண‌ன் சீமான் ப‌ய‌ணிக்கும் பாத‌ மிக‌ ச‌ரி 👏🙏  / 

சீமான் அவர்கள் முதலமைச்சராக வந்தால் தமிழ்நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படும் என்பது உண்மைதான். தமிழன் பயணிக்கப்போகும் பாதையும் சீராகச் செப்பனிடப்படும். ஆனால் செப்பனிடும் பணியில் விலைமதிப்பில்லாத உயிர்கள் காவுகொள்ளப்படும் என்பதையும் மறுக்க முடியாது. ஏனெனில் இந்தியன் என்ற பாம்பின் நிர்வாகம்தான் இன்று தமிழ்நாட்டைச் சுற்றி நிற்கிறது. அது கடிக்காமல் விடாது. ஈழப்போராட்டத்தையும் கடித்துக் குதறியதில் இந்தப்பாம்புக்குப் பெரும் பங்கிருப்பதை அனைவரும் அறிவர்.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

உண்மை தான் உற‌வே / 
உங்க‌ளின் பார்வை மிக‌ ச‌ரி /
அண்ண‌ன் சீமானின் பாதுகாப்பில் இப்ப‌வே தொண்ட‌ர்க‌ள் மிக‌ க‌வ‌ன‌மாய் இருக்கிறார்க‌ள் / த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர‌ கொள்கையாய் கொண்டு ப‌ய‌ணிக்கிர‌ க‌ட்சி மேல் உள‌வுதுறையில் இருந்து ப‌ல‌ரின் க‌ண் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி மேல் இருக்கு ம‌றுப்ப‌துக்கு இல்லை / 
அண்ண‌ன் சீமான் பிரிவினை வாத‌ம் பேசாம‌ த‌ந்திர‌மாய் காய் ந‌க‌ர்த்தி ம‌க்க‌ளின் ஆத‌ர‌வை பெற்று கொண்டு வ‌ருகிறார் ,

இப்போது உள்ள‌ த‌மிழ் நாட்டு அர‌சை விஜேப்பி தான் இய‌க்குது 
அது தான் ம‌க்க‌ள் விரும்பாத‌ ப‌ல‌
நாச‌கார‌ திட்ட‌ங்க‌ள் த‌மிழ் நாட்டில் , தூத்து குடி துப்பாக்கி சூட்டு ச‌ம்ப‌வ‌த்தை இப்போது உள்ள‌ த‌மிழ் நாட்டு முத‌ல் அமைச்ச‌ர் தொலைக் காட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டாராம் , இதில் இருந்து என்ன‌ தெரியுது , 

அர‌சிய‌லில் அண்ண‌ன் சீமான் பெரிய‌ இல‌க்கை அடைஞ்சு ம‌க்க‌ளின் ஆத‌ர‌வை பெற்று விட்டால் , வ‌ட‌ நாட்டான் அட‌க்கி தான் வாசிப்பான் / 
 ஊழ‌ல‌ வைச்சும் மிர‌ட்ட‌ ஏலாது , ஏன் என்றால் அண்ண‌ன் சீமான் போன்ற‌வ‌ர்க‌ள் ஊழ‌லுக்கு அப்பாள் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் , நான் சொன்னா நீ கேக்க‌னும் என்ர‌  வ‌ட‌ நாட்டானின் ஆனுவ‌ பேச்சும் இருக்காது / 

திராவிட‌த்தால்  த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கும் ச‌ரி ஈழ‌த்து ம‌க்க‌ளுக்கும் ச‌ரி ஒரு ந‌ன்மையும் ந‌ட‌க்க‌ போர‌து இல்லை /

திராவிட‌ குள்ள‌ ந‌ரிக‌ள் அவ‌ங்க‌ உல்லாச‌மா வாழ்ந்து போட்டு போவாங்க‌ள் , ஆனா பாதிக்க‌ ப‌ட‌ போர‌து த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் தான் /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://tamil.oneindia.com/news/chennai/actress-kasthuri-praises-naam-tamilar-party-members-activities/articlecontent-pf382279-353861.html 

குண்டி கழுவ நீர் இல்லை.. குந்திய இடத்தில் இந்தி திணிப்பு.. சீமானின் தம்பிகளோ அபாரம்.. கஸ்தூரி ட்வீட்

HemavandhanaUpdated: Wed, Jun 12, 2019, 15:13 [IST]

Actress Kasthuri about Seeman: யாரை கேட்டு களத்தில் இறங்கினீர்கள்?.. கஸ்தூரி அடடே ட்வீட்- வீடியோ

சென்னை: "சீமானின் தம்பிகளை பார்த்து கேட்கிறேன்.. யாரை கேட்டு இப்படி களத்தில் இறங்கினீர்கள்? உங்களை எல்லாம் என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை" என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

பொதுவாக கஸ்தூரியின் ட்வீட், ஃபேஸ்புக் பதிவு என்றாலே காரசாரமாக இருக்கும். சில சமயங்களில் எதையாவது ஆர்வ கோளாறினால் பேசி நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொள்வார். சில சமயங்களில் புத்திசாலித்தன கருத்துக்களால் கைதட்டல்களையும் வாங்கி விடுவார்.

இப்போது நாம் தமிழர் கட்சியைதான் மனசார பாராட்டி இருக்கிறார். சும்மா இல்லை, அக்கட்சியினர் செய்து வரும் நல்ல காரியங்களை பட்டியலிட்டுள்ளார். மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு தொண்டர்கள் செய்த பணிகளை போட்டோவுடன் போட்டு சபாஷ் சொல்லி உள்ளார். கஸ்தூரியின் ஃபேஸ்புக் பதிவுதான் இது:

  • ஆட்டுமந்தை

    'தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களுக்கு அரசியல் என்றாலே ஒரு நல்ல பிசினஸ் என்றுதான் தெரியும். பொது சொத்தை ஆட்டையை போடும், பொதுமக்களை ஓட்டுப்போடும் ஆட்டுமந்தையாக பாவிக்கும் தலைவர்களையே பார்த்து பழகிய நமக்கு நாம் தமிழரின் தடாலடி சமூக சேவையெல்லாம் இன்ப அதிர்ச்சியாக தான் உள்ளது.

  • சாதி மதம்

    குண்டி கழுவ நீர் இல்லாமல் தமிழன் தவித்துக்கொண்டிருக்க, குந்திய இடத்தில் இந்தியை வைத்து நம்மை திசைதிருப்புவோர் மத்தியில் சீமானின் தம்பிகள் வேளச்சேரியில் நீர்நிலைகளை தூர் வாருகிறார்கள்! மரம் நடுகிறார்கள், ஆண் பெண் சாதி மதம் கடந்து இணைந்து பார்க்காமல் குப்பை அள்ளுகிறார்கள் சாக்கடை அடைப்பை சுத்தம் செய்கிறார்கள்...

  • மருத்துவ கல்லூரி

    ஒரு ஏரி என்று ஒன்று இருந்தால் அதை என்ன செய்ய வேண்டும்? முதலில் திருட்டுத்தனமாக தண்ணீரை விற்க வேண்டும். பிறகு ஏரி மணலை விற்க வேண்டும். அப்புறம் குப்பையால் நிரப்பி ஏரியை காணாமலடிக்க வேண்டும் . பிறகு அதை வாகாக வளைத்து ஏரி இருந்த இடத்தில் மருத்துவ கல்லூரி மல்டிப்ளெஸ் மாடிவீடு என்று கட்டிக்கொள்ள வேண்டும். இதுதானே காலம் காலமாக நடக்கிறது?

  • தொலைநோக்கு பார்வை

    இப்போது திடீரென்று ஒரு அரசியல் அமைப்பு மக்கள் பணியில் இறங்கினால் எப்படி சமாளிப்பது? நாம் தமிழர் தொண்டர்களை நான் கேட்கிறேன், யாரை கேட்டு இப்படி களத்தில் இறங்கினீர்கள்? அப்புறம் மக்கள் எல்லா அரசியல்வாதிகளிடமும் சமூக பொறுப்பு , சுற்றுசூழல் விழிப்புணர்வு, தொலைநோக்கு பார்வை எல்லாம் எதிர்பார்க்க மாட்டார்களா? 20 ஆண்டுகளாக இந்த ஏரியை காட்டி காண்ட்ராக்ட் விட்டு கமிஷன் பார்த்துக்கொண்டிருக்கும் அதிகாரிகள் நிலைமையை எண்ணி பார்த்தீர்களா?

  • கமல்ஹாசன்

    ரத்த தானம் என்ற நல்ல வழக்கத்தை தன் ரசிகர் மன்றத்தில் விதைத்தவர் கமல்.மக்கள் நீதி மைய்யத்தின் சமூக செயல்பாடுகளில் ரத்ததானத்துக்கு மிக முக்கிய இடமுண்டு.அதே போல நா த க வினரும் குருதிக்கொடைக்கென ஒரு பாசறையே வைத்து செயல்படுகிறார்கள் .

  • நல்ல விஷயம்

    நாம் தமிழர் கட்சியின் குறுகிய இனவாதத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. தமிழ் என்பது இனமல்ல , உணர்வு என்று நினைப்பவள் நான். ஆனால் அந்த கட்சியின் செயல்பாட்டை வியக்காமல் இருக்க முடியவில்லை. தமிழர்கள் மட்டுமா உள்ளனர்? பழமொழிபேசுபவர், பல ஊர் காரர், ஏன், பசு பறவைக்கு கூட நல்லது நடந்துள்ளதே.

  • மகேசன் சேவை

    பெரிது பெரிதாய் வாய்கிழிய கொள்கை பேசுபவர்கள் என்னத்தை கிழித்தார்கள், தேர்தலுக்கு தேர்தல் கொள்கையை அடகுவைத்து சமரசங்கள் செய்வதை தவிர? மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கை மட்டுமே தேவை. அது எங்கு இருப்பினும் வரவேற்கப்படவேண்டியது' என்று பதிவிட்டுள்ளார்.

  •  

    தமிழகத்தை பொறுத்தவரை ,பொது சொத்தை ஆட்டையை போடும், பொதுமக்களை ஓட்டுப்போடும் ஆட்டுமந்தையாக பாவிக்கும் தலைவர்களையே பார்த்து பழகிய நமக்கு நாம் தமிழரின் தடாலடி சமூக சேவையெல்லாம் இன்ப அதிர்ச்சியாக தான்...https://www.facebook.com/actresskasthuri/posts/1263525470491926?__xts__[0]=68.ARBFNQlFAbRATFdR0XFW0xTE4gkBaTUSi15Z4IhlpqDz1IX0IwbmrQ7fSo8B05OfF4prql_JgmjRaE8RWB4z7SqnYATbxgetwN7WnyDqNMe_6eDsgQsKTC8rigCONukqkcTo0ZTl5BRz7oxtNBd_yKHOug7mxcY7gi8xERFw_2jdAbm1d1-01n9X-VtvrvtnPazFr6tF3gCC7WWqJ79FNrVIcsiPE7A4IJ0v4ANmPVOYjWxy1mkjVW76qSemwDyiz3gu55qHIOw7n_X-M0zibSkb_1ZNvnIqybHMDuofhsiqNYd7IzGQRfjFeKnFtH0tt2LQZqL5y0YEeD4pSErs7Zokbg&__tn__=-R 

    சபாஷ்

    சீமானை கஸ்தூரி பாராட்டினாலும், அதே சமயம் கமலையும் விட்டுக் கொடுக்காமல் பதிவிட்டுள்ளதற்கு, இரு கட்சிகளின் தொண்டர்களும் வரவேற்று கஸ்தூரிக்கு சபாஷ் சொல்லி வருகிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.