Jump to content

நாம் தமிழர் - தேர்தல் 2019

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் எங்கள் ஊரவன் இல்லை தமிழ்நாட்டான். ஆனால் எங்கள் ஊரவன் எங்களை இப்பவும் ஏமாத்திப்பிழைக்கிறான் தலைவர் இருக்கிறார் இன்னும் கொஞ்சநேரத்தில் வருவார் எனக்கூறுபவர்களும் புலம்பெயர் தேசங்களில் இப்பவும் அமைப்பு நடாத்துபவர்களும் நாங்கள் அடுத்து எல்லாம் என்பவர்களும் இவர்களுக்கு வைகோ திருமா சுபவீரபாண்டியன் நெடுமாறன் குளத்தூரார் வீரமணி ஆகியோர் எப்போதோ கைவிட்ட இனிமேல் வேலைக்காவாது என ஒதுங்கிச் சொல்ல மறுத்த தேசியத்தலைவரது பெயர அந்த ஒற்றை மனிதனாகுதல் அஞ்சுக்கும் பத்துக்கும் புறியாணிப்பொட்டலத்துக்கும் இருபது ரூபாய் டோக்கனுக்கும் குவாட்டருக்கும் அலையும் மக்களுக்கு அடிக்கடி நினைவூட்டுகிறாரே அந்தமட்டில் சந்தேசம்.

சீமான் தமிழ் நாட்டை ஆள்வதால் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு பாலாறும் தேனாறும் ஓடப்போவதில்லை ஆனால் திராவிடக்கட்சிகளது கபடத்தனத்திலிருந்து அவர்கள் விடுதலைபெறலாம். அவ்வளவே 

ஈழத்தமிழர் உரிமைகளை ஈழத்தமிழந்தான் போராடிப்பொறவேண்டும் மாற்றான் இல்லை 

நாங்கள் ஓட்டுப்போட்டு உரிமைக்காகப் போராடு எனக்கூறியவர்களே ரணிலுக்கு மைத்திரிக்கும் சொம்பு தூக்கும்போது சீமான் வந்து உரிமை பெற்று எனக்கனவு காணக்கூடாது.

ஈழத்தமிழினம் புலம்பெயர்ந்து வேறுநாடுகளுக்குப் போக எத்தனிக்கையில் வறுமையான நாடுகளுக்கோ அல்லது வளர்முக நாடுகளுக்கோ செலவில்லை ஏற்கனவே யாராலோ அபிவிருத்தியடையப்பண்ணிய, பொருளாதாரத்தில் தற்சார்பான நாடுகளுக்கேதான் சென்றனர் காரணம்

யாரோ கையில் உள்ள நெல்லுப்பொரியில் தன் கையிலுள்ள உமியைக் கலந்து ஊதி ஊதித் தின்று பழகியவர்கள் நாங்கள் 
அதுபோலவே இப்போதும் யாராவது அறுதாலி பெத்தது போராடும் நாங்கள் யூரோபியன்ஸ் கனேடியனஸ் எனப் பீற்றிக்கொண்டு திரியலாம் என நினைக்கூடாது. 

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, சண்டமாருதன் said:

ஈழத்தமிழரின் வலிமை என்பது தமிழகத்திலேயே உள்ளது. தனியே ஈழத்தமிழர் என்பது எங்கும் எடுபடாது குறிப்பாக புலிகளின் முடிவுக்குப் பின்னர் எடுபடாது. புலிகளின் முடிவு ஒரு அமைப்பின் முடிவு மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் அசியலின் முடிவும் அதுவே.  ஒரு வலுவான அரசியல் இயங்குதளத்திற்குரிய நிலப்பரப்போ இல்லை மக்கள் தொகையோ அற்றவர்கள். இருக்கும் மக்கள் தொகைக்குள்ளும் சாதி மத பிரதேசவாதங்களால் பிளவுபட்டு இனத் தேசியத்தை இரண்டாம் மூன்றாம் நிலையில் வைதிருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்.. பாதுகாப்பு பொருளாதரா நலன்கள் சார்ந்து  பாரம்பரிய நிலத்தை விட்டு குடிபெயர்வதில் ஈடுபடுபவர்கள். நாம் ஏற்கனவே குடிபெயர்ந:து தான் இதையும் எழுதுகின்றோம். அதிகமான நிலப்பரப்பும் அதிகமான மக்கள் தொகையும் கொண்ட தமிழகமே ஈழத்தமிழருக்கு தெரியும் நம்பிக்கை. தமிழகமும் இந்தியத்துக்குள் சிக்குப்பட்டிருப்பதால் அங்குள்ள அரசியலில் ஆர்வம் ஏற்படுகின்றது. நாம் ஈழத் தமிழர் என்பது ஒரு ஒப்பனைப் பேச்சு தவிர அதில் எந்த தனித்துவமும் கிடையாது. சற்று தனித்துவத்தை சுரண்டினால் யாழ்பாணி மட்டக்கிளப்பான் அந்த சாதி இந்த சாதி அந்த மதத்தவன் இந்த மதத்தவன் அல்லது அந்த இயக்கம் இந்ந இயக்கம் என்று வேறு எல்லைகளுக்குள் தனித்துவம் சென்றுவிடும். அதனால் இனத்துக்கென்று பொது அரசியல் கிடையாது.  ஈழத்துக்கான அரசியல் என்பது ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்தல் என்பது மட்டும் தான். அது ஒல்லாந்தரை அண்டிப் பிழத்தாலும் சரி பின்னர் ஆங்கிலேயர்  இன்று சிங்களவர்களளை அண்டிப்பிழைத்தாலும் சரி இதுவே பாரம்பரிய அரசியல். புலிகள் இதற்கு விதி விலக்கு. அதனால் தான் புலிகளின் முடிவு இனத்துக்கான அரசியலின் முடிவாகின்றது. புலிகளின் முடிவுக்கு பின்னர் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இனத்துக்கான அரசியலையும்  நில வளங்களை பாதுகாக்கும் பரப்புரைகளையும் முடிந்தளவு செய்வதால் அதன் மீது ஆர்வம் ஏற்படுகின்றது. 

சோ கால் புத்திஜீவிகள் , தேசீயத்தை குத்தகைக்கு எடுத்துவர்கள் தேசீயத் தலைவரை குத்தகைக்கு எடுத்தவர்கள் சொட்டை  நொட்டை  நையாண்டிகள் செய்துகொண்டே இருப்பார்கள் தவிர யார் சரியானவர் அல்லது எது சரியான திசை என்பதை சுட்டிக்காட்ட மாட்டார்கள் ஏனெனில் சுட்டிக் காட்ட முடியாது. அவ்வாறு எதுவும் இல்லை.

(இது உங்களுக்கான பதில் இல்லை, எனது கருத்துக்கு உங்கள் கருத்து வலிந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது)

எமது தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தியாக இந்தியாவின் அரசியல் இருப்பதுபற்றித்தான் நான் அங்கலாய்த்து எழுதியிருந்தேன். மற்றும்படி, சீமான் செய்யும் அரசியலில் எனக்கும் நாட்டமிருக்கிறது. அவருக்கு இன்று தமிழகத்திலி இருக்கும் ஆதரவென்பது பற்றி எனக்கு எப்போதுமே வியப்பும், கூடவே தமிழக வாக்களர்கள் மீது கோபமும் இருக்கிறது. முட்டாள்கள், பணத்தின்பின்னாலும், சம்பிரதாய கட்சி அரசியலின் பின்னாலும் இழுபடுபவர்கள், சரியான பாதையைப் பார்க்கத்தெரியாமல், அன்றாட நண்மைகளுக்காகவும் இலவசங்களுக்காகவும் அரசியல் செய்பவர்கள் என்கிற ஆதங்கம் இருக்கிறது.

ஆனால், நான் மேலே எழுதியது இதுபற்றியல்ல. பூகோள ரீதியாக நாம் இந்தியா எனும் அகம்பாவமும், மேலாதிக்கமும் கொண்ட ஒரு பெரு நாட்டின் காலடியில்  மாட்டிக்கொண்ட எமது துர் அதிஷ்ட்டம் பற்றி. காலத்திற்கும் எமது கைகள் அடிமைகளாக அந்தப் பெருநாட்டால் விலங்கிடப்பட்டது பற்றி. எம்மால், அவற்றை உடைத்துக்கொண்டு வெளியேற முடியாதது பற்றி. இந்தியாவிடமிருந்து எமக்கேது நண்மைகள் கிடைக்கமுடியாதது பற்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரெல்லாம் மோடி அலை, ஆனால் தமிழகத்தில் துளிகூட வரவில்லை.  இதை வெறும் மோடி எதிர்ப்பென்றோ, திராவிடக் கட்சிகளின் மீதான மாயை என்றோ தள்ளிவிட்டுப் போகமுடியவில்லை. 

இதைவிட வேறொன்றிருக்கிறது.

தமிழருக்கு மட்டுமே இருக்கும் அந்தக் குணம். 

சீமானைத் தமிழகத் தமிழர்கள் கைவிட்டதற்கு ஆத்திரம் இருந்தாலும், அடங்காத் தமிழினம் குறித்துப் பெருமைப்படுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

இது கரணம்  தப்பினால் மரணம் என்ற வகையானது

சீமானும்  படிப்படியாக  வளரணும்

தற்பொதைக்கு  ஒரு  பேரம் பேசும்  சக்தியாக வளர்ந்திரப்பதே போதுமானது தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

60882699-1856694121098153-89683643236593

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

ஊரெல்லாம் மோடி அலை, ஆனால் தமிழகத்தில் துளிகூட வரவில்லை.  இதை வெறும் மோடி எதிர்ப்பென்றோ, திராவிடக் கட்சிகளின் மீதான மாயை என்றோ தள்ளிவிட்டுப் போகமுடியவில்லை. 

இதைவிட வேறொன்றிருக்கிறது.

தமிழருக்கு மட்டுமே இருக்கும் அந்தக் குணம். 

சீமானைத் தமிழகத் தமிழர்கள் கைவிட்டதற்கு ஆத்திரம் இருந்தாலும், அடங்காத் தமிழினம் குறித்துப் பெருமைப்படுகிறேன். 

தென் மாநிலங்களில் ஆந்திராவும் தமிழ்நாடும் இந்திய தேசிய கட்சிகளுக்கு சிம்மசொற்பனமாக திகழ்கின்றது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

60913651-2352006818412518-22195202525327

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சண்டமாருதன் said:

ஈழத்தமிழரின் வலிமை என்பது தமிழகத்திலேயே உள்ளது. தனியே ஈழத்தமிழர் என்பது எங்கும் எடுபடாது குறிப்பாக புலிகளின் முடிவுக்குப் பின்னர் எடுபடாது. புலிகளின் முடிவு ஒரு அமைப்பின் முடிவு மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் அசியலின் முடிவும் அதுவே.  ஒரு வலுவான அரசியல் இயங்குதளத்திற்குரிய நிலப்பரப்போ இல்லை மக்கள் தொகையோ அற்றவர்கள். இருக்கும் மக்கள் தொகைக்குள்ளும் சாதி மத பிரதேசவாதங்களால் பிளவுபட்டு இனத் தேசியத்தை இரண்டாம் மூன்றாம் நிலையில் வைதிருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்.. பாதுகாப்பு பொருளாதரா நலன்கள் சார்ந்து  பாரம்பரிய நிலத்தை விட்டு குடிபெயர்வதில் ஈடுபடுபவர்கள். நாம் ஏற்கனவே குடிபெயர்ந:து தான் இதையும் எழுதுகின்றோம். அதிகமான நிலப்பரப்பும் அதிகமான மக்கள் தொகையும் கொண்ட தமிழகமே ஈழத்தமிழருக்கு தெரியும் நம்பிக்கை. தமிழகமும் இந்தியத்துக்குள் சிக்குப்பட்டிருப்பதால் அங்குள்ள அரசியலில் ஆர்வம் ஏற்படுகின்றது. நாம் ஈழத் தமிழர் என்பது ஒரு ஒப்பனைப் பேச்சு தவிர அதில் எந்த தனித்துவமும் கிடையாது. சற்று தனித்துவத்தை சுரண்டினால் யாழ்பாணி மட்டக்கிளப்பான் அந்த சாதி இந்த சாதி அந்த மதத்தவன் இந்த மதத்தவன் அல்லது அந்த இயக்கம் இந்ந இயக்கம் என்று வேறு எல்லைகளுக்குள் தனித்துவம் சென்றுவிடும். அதனால் இனத்துக்கென்று பொது அரசியல் கிடையாது.  ஈழத்துக்கான அரசியல் என்பது ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்தல் என்பது மட்டும் தான். அது ஒல்லாந்தரை அண்டிப் பிழத்தாலும் சரி பின்னர் ஆங்கிலேயர்  இன்று சிங்களவர்களளை அண்டிப்பிழைத்தாலும் சரி இதுவே பாரம்பரிய அரசியல். புலிகள் இதற்கு விதி விலக்கு. அதனால் தான் புலிகளின் முடிவு இனத்துக்கான அரசியலின் முடிவாகின்றது. புலிகளின் முடிவுக்கு பின்னர் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இனத்துக்கான அரசியலையும்  நில வளங்களை பாதுகாக்கும் பரப்புரைகளையும் முடிந்தளவு செய்வதால் அதன் மீது ஆர்வம் ஏற்படுகின்றது. 

சோ கால் புத்திஜீவிகள் , தேசீயத்தை குத்தகைக்கு எடுத்துவர்கள் தேசீயத் தலைவரை குத்தகைக்கு எடுத்தவர்கள் சொட்டை  நொட்டை  நையாண்டிகள் செய்துகொண்டே இருப்பார்கள் தவிர யார் சரியானவர் அல்லது எது சரியான திசை என்பதை சுட்டிக்காட்ட மாட்டார்கள் ஏனெனில் சுட்டிக் காட்ட முடியாது. அவ்வாறு எதுவும் இல்லை.

(இது உங்களுக்கான பதில் இல்லை, எனது கருத்துக்கு உங்கள் கருத்து வலிந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது)

மாருதன், சும்மா இணையத்தில் வந்து நாங்களும்,அவர்களும் ஒன்று என எழுதலாம் ஆனால் யதார்த்தத்தில் நாங்கள் வேற,அவர்கள் வேற...அவர்கள் தம்மை தமிழன்,நாம் தமிழால் ஒன்று பட்டவர்கள் என்று சொன்னாலும் அவர்கள் முதலில் இந்தியன் பிறகு தான் தமிழர்...அதே போல நாம் தனி நாட்டுக்காய் போராடி சிங்களவன் எமக்கு எதிரியாய் இருந்தாலும்,நாம் முதலில் இலங்கையர் அதன் பிறகே தமிழர்...சும்மா எல்லோரும் சொல்கின்ற மாதிரி நாம் தமிழர்,தமிழால் ஒன்றுபட்டோம்/படுவோம் என்று சொல்வதில் ஒரு பிரயோசனமும் இல்லை ...சொல்லப் போனால் இப்படி சொல்வதால் எங்களுக்கு பாதிப்பு தான் அதிகம்...சீமான் மட்டும் இல்லை நாளைக்கு விஜய் அரசியலுக்கு வந்தாலும் இது தான் என் கருத்து.

எங்கட தமிழர்களுக்கு ஒரு பழக்கம் இருக்கு...எப்பவும் யாருக்கும் விசிலடிச்சு கொண்டே இருக்க வேண்டும்...இப்ப ஈழத்தில் ஒருத்தரும் இல்லை சீமான் இருக்கார் அவருக்கு விசிலடிக்கினம்,,,,நாளைக்கே ஈழத்தில் சீமானையும் விட கதைக்க கூடிய ஒருவர் வந்தால் அவருக்கு விசிலடிப்பினம்...சீமான் தமிழகத்தில் அரசியல் செய்யட்டும். முதல்வராக வரட்டும்...ஆனால் வந்தால் எங்கட மக்களுக்கு ஏதாவது கிழிப்பார் என்று மட்டும் எதிர் பார்க்க வேண்டாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

மேலே யாராவது  அப்படி  எழுதி  இருக்கிறார்களா  ரதி??

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

பிரிட்டிஸ்காரன் தான் அவுஸ்திரேலியாவில், நீயூசிலாந்தில், கனடாவில், அமேரிக்காவில் குடியேறினான். ஆனாலும் நாம் ஆங்கிலயர்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை.

தமிழக, ஈழ வரலாறைப் பார்த்தால், எப்போதுமே, சிங்களவர்கள் கொட்டம் தமிழக சேனைகளினால் தான் அடக்கப்பட்டுள்ளன என்கிறார் அரசியல் விமர்சகர் திருநாவுக்கரசு.

ஈழ விடுதலையின் சாவி, கொழும்பில் இல்லை, தமிழகத்தில் தான் உள்ளது என்கிறார் அவர்.

அதனாலேயே, சீமானுடன் அவரறியாமல் ஒரு உளவாளியை நெருக்கமாக பழக வைத்து, அவரை மதிப்பீடு செய்தே தலைவர் அழைத்து பேசினார் என்று சீமான், தான் தலைவரிடம் அறிந்ததாக சொன்னார்.

கிருபன் சொல்வது நடந்தது தான், ஆயினும் இந்த உண்டியல் கோஸ்டிகள் குறித்து தெளிவான புரிதல் இப்போது சீமானுக்கு உள்ளது.

சீமானுக்கு வாக்களித்தவர் தொகை, ஈழத்தமிழர் தொகையிலும் அதிகம். இவர்கள் பணத்துக்கு வந்தவர்கள் அல்ல. ஆகவே இந்த தொகை கூடும்.

கூடி, ஒரு காலத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரக்கூடிய அளவு வளர்ந்தாலே நமக்கு போதும்.

சந்திரிக்கா தருவார், மகிந்த கிழிப்பார், மைத்திரி புடுஙகுவார், இனி ரணில் வந்தா ஓகே, கோத்தா வந்தாலும்.... அவர் துணிவான ஆள், நிணைச்சா செய்வார் என்று சப்பை கொட்டாமல், நம்மவன் சீமானையும் வளர்ந்து வரட்டும். வந்தால் டெல்லியை அசைப்பார் எனவும் நம்புவோம். அதனால் குடிமுழுகப்போவதில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சண்டமாருதன் said:

ஈழத்தமிழரின் வலிமை என்பது தமிழகத்திலேயே உள்ளது. தனியே ஈழத்தமிழர் என்பது எங்கும் எடுபடாது குறிப்பாக புலிகளின் முடிவுக்குப் பின்னர் எடுபடாது. புலிகளின் முடிவு ஒரு அமைப்பின் முடிவு மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் அசியலின் முடிவும் அதுவே.  ஒரு வலுவான அரசியல் இயங்குதளத்திற்குரிய நிலப்பரப்போ இல்லை மக்கள் தொகையோ அற்றவர்கள். இருக்கும் மக்கள் தொகைக்குள்ளும் சாதி மத பிரதேசவாதங்களால் பிளவுபட்டு இனத் தேசியத்தை இரண்டாம் மூன்றாம் நிலையில் வைதிருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்.. பாதுகாப்பு பொருளாதரா நலன்கள் சார்ந்து  பாரம்பரிய நிலத்தை விட்டு குடிபெயர்வதில் ஈடுபடுபவர்கள். நாம் ஏற்கனவே குடிபெயர்ந:து தான் இதையும் எழுதுகின்றோம். அதிகமான நிலப்பரப்பும் அதிகமான மக்கள் தொகையும் கொண்ட தமிழகமே ஈழத்தமிழருக்கு தெரியும் நம்பிக்கை. தமிழகமும் இந்தியத்துக்குள் சிக்குப்பட்டிருப்பதால் அங்குள்ள அரசியலில் ஆர்வம் ஏற்படுகின்றது. நாம் ஈழத் தமிழர் என்பது ஒரு ஒப்பனைப் பேச்சு தவிர அதில் எந்த தனித்துவமும் கிடையாது. சற்று தனித்துவத்தை சுரண்டினால் யாழ்பாணி மட்டக்கிளப்பான் அந்த சாதி இந்த சாதி அந்த மதத்தவன் இந்த மதத்தவன் அல்லது அந்த இயக்கம் இந்ந இயக்கம் என்று வேறு எல்லைகளுக்குள் தனித்துவம் சென்றுவிடும். அதனால் இனத்துக்கென்று பொது அரசியல் கிடையாது.  ஈழத்துக்கான அரசியல் என்பது ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்தல் என்பது மட்டும் தான். அது ஒல்லாந்தரை அண்டிப் பிழத்தாலும் சரி பின்னர் ஆங்கிலேயர்  இன்று சிங்களவர்களளை அண்டிப்பிழைத்தாலும் சரி இதுவே பாரம்பரிய அரசியல். புலிகள் இதற்கு விதி விலக்கு. அதனால் தான் புலிகளின் முடிவு இனத்துக்கான அரசியலின் முடிவாகின்றது. புலிகளின் முடிவுக்கு பின்னர் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இனத்துக்கான அரசியலையும்  நில வளங்களை பாதுகாக்கும் பரப்புரைகளையும் முடிந்தளவு செய்வதால் அதன் மீது ஆர்வம் ஏற்படுகின்றது. 

சோ கால் புத்திஜீவிகள் , தேசீயத்தை குத்தகைக்கு எடுத்துவர்கள் தேசீயத் தலைவரை குத்தகைக்கு எடுத்தவர்கள் சொட்டை  நொட்டை  நையாண்டிகள் செய்துகொண்டே இருப்பார்கள் தவிர யார் சரியானவர் அல்லது எது சரியான திசை என்பதை சுட்டிக்காட்ட மாட்டார்கள் ஏனெனில் சுட்டிக் காட்ட முடியாது. அவ்வாறு எதுவும் இல்லை.

(இது உங்களுக்கான பதில் இல்லை, எனது கருத்துக்கு உங்கள் கருத்து வலிந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது)

மிக உண்மையான கருத்து. சண்டமாருதன்.   அழகாக  எழுதியுள்ளீர்கள். :)

Link to comment
Share on other sites

13 hours ago, putthan said:

தென் மாநிலங்களில் ஆந்திராவும் தமிழ்நாடும் இந்திய தேசிய கட்சிகளுக்கு சிம்மசொற்பனமாக திகழ்கின்றது...

தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் மட்டுமே பாஜக விற்கு ஆசனங்கள் எதுவும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, அபராஜிதன் said:

தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் மட்டுமே பாஜக விற்கு ஆசனங்கள் எதுவும் இல்லை

தமிழ் நாட்டிலும், கேரளாவிலும், ஆந்திராவிலும் பாஜகவுக்கு பூச்சியம்தான். தெலுங்கானாவில்தான் 7.

ஆனால் தேசிய கட்சிகள் தனித்து ஒரு சீட்டும் பெற முடியாமல் தவிக்கும் இடங்கள் என்றால் 80 களுக்கு பிந்திய தமிழ்நாடும், தெலுங்கான பிரிந்த பின் எஞ்சியுள்ள ஆந்திராவும்தான்( ராயல சீமா மற்றும் கரையோர ஆந்திரா).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, அபராஜிதன் said:

தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் மட்டுமே பாஜக விற்கு ஆசனங்கள் எதுவும் இல்லை

கேரளாவில் இந்திய தேசியகட்சி((காங்கிரஸ்) அநேக இடங்களை கைப்பற்றியுள்ளது....(காங்கிரஸ்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு விழுந்த வாக்கு வெறித்தனமான வாக்கு 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎24‎/‎2019 at 3:53 PM, Nathamuni said:

பிரிட்டிஸ்காரன் தான் அவுஸ்திரேலியாவில், நீயூசிலாந்தில், கனடாவில், அமேரிக்காவில் குடியேறினான். ஆனாலும் நாம் ஆங்கிலயர்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை.

தமிழக, ஈழ வரலாறைப் பார்த்தால், எப்போதுமே, சிங்களவர்கள் கொட்டம் தமிழக சேனைகளினால் தான் அடக்கப்பட்டுள்ளன என்கிறார் அரசியல் விமர்சகர் திருநாவுக்கரசு.

ஈழ விடுதலையின் சாவி, கொழும்பில் இல்லை, தமிழகத்தில் தான் உள்ளது என்கிறார் அவர்.

அதனாலேயே, சீமானுடன் அவரறியாமல் ஒரு உளவாளியை நெருக்கமாக பழக வைத்து, அவரை மதிப்பீடு செய்தே தலைவர் அழைத்து பேசினார் என்று சீமான், தான் தலைவரிடம் அறிந்ததாக சொன்னார்.

கிருபன் சொல்வது நடந்தது தான், ஆயினும் இந்த உண்டியல் கோஸ்டிகள் குறித்து தெளிவான புரிதல் இப்போது சீமானுக்கு உள்ளது.

சீமானுக்கு வாக்களித்தவர் தொகை, ஈழத்தமிழர் தொகையிலும் அதிகம். இவர்கள் பணத்துக்கு வந்தவர்கள் அல்ல. ஆகவே இந்த தொகை கூடும்.

கூடி, ஒரு காலத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரக்கூடிய அளவு வளர்ந்தாலே நமக்கு போதும்.

சந்திரிக்கா தருவார், மகிந்த கிழிப்பார், மைத்திரி புடுஙகுவார், இனி ரணில் வந்தா ஓகே, கோத்தா வந்தாலும்.... அவர் துணிவான ஆள், நிணைச்சா செய்வார் என்று சப்பை கொட்டாமல், நம்மவன் சீமானையும் வளர்ந்து வரட்டும். வந்தால் டெல்லியை அசைப்பார் எனவும் நம்புவோம். அதனால் குடிமுழுகப்போவதில்லையே.

நாதம்ஸ், திருநாவுக்கரசு சொல்வது எல்லாம் உங்களுக்கு வேத வாக்கா?...கொஞ்சம் விளக்கமாய் சொல்லுங்கள் எங்கே,எப்போது சிங்களவர்களது கொட்டத்தை தமிழக சேனைகள் அடக்கிய வரலாற்றை?...சீமான் இப்படி எத்தனை புளுகுக் கதைகள் கதைச்சவர்?

புலத்தில் உங்களை மாதிரி நல்ல வசதியாய்,நல்ல  வேலையில் இருப்பவர்கள் தான் பொழுது போகாமல் அவருக்கு பின்னாலே வால் பிடித்து திரியினம்...ஈழத்தில் இருக்கிற ஒரு சனமும் அவரை கணக்கிலும் எடுப்பதில்லை...உப்ப நீங்கள் ,இவருக்கு பின்னால் வால் பிடிப்பது மாதிரி அந்த நேரம் கருணாநிதிக்கும்,எம்ஜியாருக்கும் பின்னால் கொஞ்ச பேர் வால் பிடித்தவை?... அப்ப, உப்ப மாதிரி இணைய வசதிகள் இருக்கேல்ல.

சிங்களவர்கள் எமக்கான உரிமையை தரப்பு போவதில்லை...அதை நாம் தான் போராடிப் பெற வேண்டும். நாம் என்றால் நாம் தான் ..சீமான் தமிழ் நாட்டில் முதல்வராய் வரட்டும்...முற் கூட்டிய வாழ்த்துக்கள் ...காசை வேண்டிக் கொண்டு வோட் போட்டு விட்டு முதல்வர் ஒன்றும் செய்யேல்ல,அமைச்சர்கள் ஒன்றும் செய்யேல்ல என்று புலம்பிற சனம் தமிழ் நாட்டு சனம்...அவர்கள் மூலம் ஈழ மக்களுக்கு விமோசனம் கிடைக்கப் போகுது?...தங்களையே ஒழுங்காய்  காப்பாற்ற தெரியாதவர்கள் எங்களுக்கு ஈழம் பெற்று கொடுத்திடுவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
1 hour ago, ரதி said:

நாதம்ஸ், திருநாவுக்கரசு சொல்வது எல்லாம் உங்களுக்கு வேத வாக்கா?...கொஞ்சம் விளக்கமாய் சொல்லுங்கள் எங்கே,எப்போது சிங்களவர்களது கொட்டத்தை தமிழக சேனைகள் அடக்கிய வரலாற்றை?...சீமான் இப்படி எத்தனை புளுகுக் கதைகள் கதைச்சவர்?

சிங்களவர்கள் எமக்கான உரிமையை தரப்பு போவதில்லை...அதை நாம் தான் போராடிப் பெற வேண்டும். நாம் என்றால் நாம் தான் ..சீமான் தமிழ் நாட்டில் முதல்வராய் வரட்டும்...முற் கூட்டிய வாழ்த்துக்கள் ...காசை வேண்டிக் கொண்டு வோட் போட்டு விட்டு முதல்வர் ஒன்றும் செய்யேல்ல,அமைச்சர்கள் ஒன்றும் செய்யேல்ல என்று புலம்பிற சனம் தமிழ் நாட்டு சனம்...அவர்கள் மூலம் ஈழ மக்களுக்கு விமோசனம் கிடைக்கப் போகுது?...தங்களையே ஒழுங்காய்  காப்பாற்ற தெரியாதவர்கள் எங்களுக்கு ஈழம் பெற்று கொடுத்திடுவார்கள் 

உங்களுக்கு தாரு சொன்னது, சீமான் வந்து எங்களுக்கு ஈழம் பெற்று கொடுத்திடுவார்கள் எண்டு நாங்கள் சொன்னது எண்டு. சீமானே அப்படி சொல்லும் முட்டாள் இல்லை.

சிலவேளை சீமானின், அம்மான் மேலான சில கருத்துக்கள் உங்களுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். அது வேறு விடயம். 

நான் ஒருபோதும் சொல்லவில்லையே. சீமான், சிங்கத் தமிழால் கவரப்பட்டேன். கருணாநிதி, வைகோ போல இல்லாமல் அவர் உண்மையாக பேசுகிறார் என்பதால் அவரை ஆதரிக்கிறேன்.

அதேவேளை அவர் ஒரு அழுத்தம் கொடுக்கக்கூடிய அரசியல் சக்தியாக வந்தால், எமக்கு ஒரு சிறு ஆதரவு கிடைக்கலாம். MGR தம்மால் முடிந்தளவு 4 கோடி பணம் தந்தாரே அது போல ஒரு சிறு துரும்பு கிடைத்தாலும் நன்றே.

முதலில் வரலாறை கொஞ்சம் வாசித்து பாருங்கோ. எல்லாளன் ஒரு சோழ மன்னன். ராசராசன் ஒரு சோழ மன்னன். முதலாமவர் அனுராதபுரத்தினையும், இரண்டாமவர் பொலன்னறுவையும் தலைநகரமாக கொண்டு ஆண்டார்கள். 

அடுத்து பல பாண்டிய மன்னர்கள் படை எடுப்புகள் குறித்து மகாவம்சம் சொல்கிறது.

அண்மையில், கண்டி மன்னன், ஸ்ரீ விக்கிரம ராசசிங்கன், கண்ணப்பன் என்ற பெயர் கொண்ட நாயக்கர் வம்சம். ஆங்கிலேயர்கள் அவரை தமிழகம் கொண்டு சென்று, இறந்த பின் புதைத்த இடம் வேலூர்.

ஐரோப்பியர்களுக்கு எதிரான போரில், சிங்கள மன்னர்களுக்கு உதவ வந்து, கண்டி ராஜ்யத்தினை மடக்கி மன்னர் ஆனவர்கள் இந்த தென் இந்திய அரசர்கள்.

ஆகவே ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இந்திய அரசியலில், மோடி, கடந்தமுறையும் இந்தமுறையும் சொந்தமாக தேவையான MP கள் வென்று வைத்திருப்பதால், தமிழ்நாட்டின் ஜெயலலிதாவோ, இந்தமுறை ஸ்டாலினோ உதவி செய்ய வேண்டிய தேவையில்லை. ஆகவே அழுத்தம் தர முடியாது.

ஆனால் 2009ல் கருணாநிதி, காங்கிரசுக்கு தேவையான MP கள் வைத்திருந்தார், கொடுத்தார். எமக்காக அழுத்தம் கொடுக்காமல், தனது உறவினர்களுக்கு பதவியினை கேட்டு வாங்கி கொண்டார். அதனால் தான் இன்றும் பலிக்கப்படுகின்றார்.

ஒருகாலத்தில், மத்திய அரசமைக்க வேண்டும், பெரும்பான்மை இல்லை என்ற அந்த 2009 நிலை வந்தால், அதை ஒரு தமிழக கட்சி தரும் என்ற நிலையில், அந்த கட்சி சீமான் கட்சி ஆக இருந்தால், நிச்சயம் எமக்காக அழுத்தம் தருவார் என்று உறுதியாக சொல்லமுடியும்.

இந்திய மத்திய அரசின் அழுத்தம் இன்றி, எமக்கு ஒரு உரிமையும் கிடைக்கப்போவதில்லை என்ற நிலையில், இவ்வகை அழுத்தம் தான், திருநாவுக்கரசர் சொன்ன சாவி.

இப்போது தமிழகத்தில் அகதியாக இருக்கும் திருநாவுக்கரசு சொல்லும் 'தமிழகத்து சாவி' என்பது வன்னியில் புலிகள் இருக்கும் போது, அவர்களது தொலைக்காட்சியில் தெரிவித்த கருத்து. அதாவது, நீங்கள் என்னதான் சண்டை செய்தாலும், தமிழ்நாடு அழுத்தம் தந்து, மத்திய அரசு ஏதாவது செய்தால் தான், எமது விடுதலை சத்தியம் என்றார்.

அதனை அங்கீகரித்தே, சீமானை தலைவர் சந்தித்ததாகவும் சொல்வார்கள்.

சீமான் 1.2% வாக்குகள் வாங்கிய போது எமது விடயத்தில் என்ன சொன்னாரோ, அதனையே 4% வாங்கிய போதும் சொன்னார். மாறவில்லை.

பணம் சம்பாதிக்க பல வழிகள் உண்டு. அதுவும் இந்தியாவில் அரசியல் வாதிக்கு பலவழிகள். உங்களுக்கு ஈழம் வாங்கி தருகிறேன் என்று காசு பார்க்க வேண்டிய தேவை அவருக்கு இல்லை என்றே நம்புகிறேன்.

அவரது அரசியலை மழுங்கடிக்கவே கமலை இறக்கினார்கள். இனி ரஜனியையும் இறக்குவார்கள். இதுக்கு இலங்கை அரசும் பணம் கொடுக்கலாம், யாருக்கு தெரியும்.

முதலில், ஒரு விடயத்தினை மறுத்து எழுத முன்னர், அதுகுறித்து விளக்கம் கேட்பது நல்லது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரத்தமிழர் முன்னணி என்ற பெயரில் செந்தமிழன் சீமானின் அடிப்பொடிகள் புலம்பெயர் நாடுகளில் உள்ளனர். அதில் ஈழத்தமிழர்களும் உள்ளனர்தானே. இந்த முன்னணிமூலம் பணம் போனதாம்!

நாம் தமிழர் கட்சிக்கு திமுக, அதிமுக ஆதரவாளர்கள் திரண்டுவரப்போவதில்லை. இடையில் இருக்கும் protest வாக்காளர்கள் தங்கள் அதிருப்தியைக் காட்ட சிலவேளைகளில் NOTA க்குப் பதிலாக மூன்றாவது இடத்திற்கு வந்த சில்லறைக் கட்சிகளுக்கு வாக்குப் போட்டிருக்கலாம்!

மூன்றாவது இடத்தைக் கைப்பற்றிய கட்சிகள் இரண்டாம் இடத்திற்கு வரமுடியுமோ? முடியவே முடியாது என்பதுதான் எனது பதில்!

ஒட்டுமொத்தமாக அ.ம.மு.க. 5.16% வாக்குகளோடு 3ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. அத்துடன் நாம் தமிழர் கட்சி 3.89 சதவீதமும், மக்கள் நீதி மய்யம் 3.72 சதவீதமும் வாக்குகளைப் பெற்றுள்ளன.

——

ஆய்வாளர் திருநாவுக்கரசு சொல்லும் திறவுகோலை வைத்து முதலில் தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு தீர்வைப் பெறமுடியுமா பார்த்தால் நல்லது. அவர்களை இந்தியப் பிரஜைகளாக்க வேண்டும் அல்லது அவர்கள் விரும்பும்பட்சத்தில் தாயகத்தில் குடியமர உதவிசெய்யவேண்டும். 

இன்னும் பத்தாண்டுகளில் தாயகத்தில் திறவுகோலை வைத்து திறக்க எதுவும் இருக்காது. ஜெராவின் கட்டுரையில் கடந்த பத்தாண்டு காலத்தில் நடந்தவற்றின் சுருக்கமான வரலாற்றை பார்க்கும்போது ஈழத்தமிழர்கள் இன்னும் பின்னோக்கித்தான் செல்வார்கள் என்றுதான் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.