• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Lara

அபார வெற்றி பெற்ற மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து

Recommended Posts

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினருக்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்கான எங்கள் பங்களிப்பு தொடரும்’ என தெரிவித்துள்ளார்.

https://www.google.fr/amp/s/www.maalaimalar.com/amp/News/Election2019/2019/05/23231312/1243120/US-President-Donald-Trump-Congratulations-to-Prime.vpf

Share this post


Link to post
Share on other sites

ட்ரம்ப்பின் வாழ்த்து பதிவு

3EDD8431-9186-4FA9-B7CD-B3C88E405BED.jpg

Share this post


Link to post
Share on other sites

மோடி ட்ரம்ப்பிற்கு நன்றி தெரிவிக்கும் பதிவு.

286FEB1D-56F4-449D-AE12-3A39FAD81708.jpg

Share this post


Link to post
Share on other sites

சீன அதிபர் ஜி ஜின்பிங்

17-வது நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு என்னுடைய இதயபூர்வ வாழ்த்துகள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கும் உங்களது ஒவ்வொரு வெற்றிக்கு வாழ்த்துகள்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தலில் வெற்றி அடைந்ததற்காக எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். தெற்கு ஆசியாவில் அமைதி மற்றும் முன்னேற்ற ஏற்பட உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கி உள்ளேன்.

https://tamil.thehindu.com/world/article27221570.ece/amp/

ரஷ்ய அதிபர் புடின்

நாடாளுமன்றத் தேர்தலில் வலிமையான வெற்றியைப் பெற்ற பாஜகவுக்கு வாழ்த்துகள். 

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மற்றும் ஆப்கானிஸ்தானின் நட்புறவு எப்போதும்போல உறுதியாக இருக்கும்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு இதயப்பூர்வ வாழ்த்துகள். 

மேலும், ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே தொலைபேசியில் தொடர்புகொண்டு மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

https://tamil.thehindu.com/world/article27218582.ece

Share this post


Link to post
Share on other sites

C733D0A7-0FC5-4A9F-B541-CF02334BC0D8.jpg

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, text

 

Image may contain: 4 people, people smiling, text

நரேந்திர மோடி.. வெற்றி பெற்ற, இரகசியம்...
அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப்,  சீன அதிபர் ஜி ஜின்பிங்க்,  
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,  ரஷ்ய அதிபர் புட்டின்.... 
போன்ற ஆட்களுக்கு,  இன்னும்.....  தெரியாது  போலை கிடக்கு.  :grin:

 

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
53 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text
 

சிங்களவர்களே இதை நக்கலடிக்கினம். 😀😀

D7QgNA3XkAczDgR?format=jpg&name=large

Share this post


Link to post
Share on other sites
45 minutes ago, Lara said:

சிங்களவர்களே இதை நக்கலடிக்கினம். 😀😀

D7QgNA3XkAczDgR?format=jpg&name=large

60890506_1048352962028302_6163202886357483520_n.jpg?_nc_cat=104&_nc_ht=scontent-frx5-1.xx&oh=5f2283d5e441ae5afe8a017912295b14&oe=5D5797FA

Image may contain: 5 people, meme and text

லாரா....  தமிழ்நாட்டில் இருந்து வரும், மீம்ஸ்´சை  பாருங்கள். 
சிங்களவன், தோத்துப் போயிடுவான்.  :grin:

டேய்... சண்முகம், எட்றா வண்டியை...   ஜப்பானுக்கு. 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
55 minutes ago, தமிழ் சிறி said:

லாரா....  தமிழ்நாட்டில் இருந்து வரும், மீம்ஸ்´சை  பாருங்கள். 
சிங்களவன், தோத்துப் போயிடுவான்.  :grin:

டேய்... சண்முகம், எட்றா வண்டியை...   ஜப்பானுக்கு. 🤣

இதே மக்கள் தான் ஓட்டு போட்டு வண்டில போய் யப்பானில தேத்தண்ணி குடிச்சிட்டு வாங்க சார் என்கிறார்களே நான் என்ன தான் செய்ய என்று அலுத்துக் கொண்டே போகிறார்.பாவம்.

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இதே மக்கள் தான் ஓட்டு போட்டு வண்டில போய் யப்பானில தேத்தண்ணி குடிச்சிட்டு வாங்க சார் என்கிறார்களே நான் என்ன தான் செய்ய என்று அலுத்துக் கொண்டே போகிறார்.பாவம்.

Image may contain: 3 people, meme and text

ஈழப்பிரியன்... மோடியின் அரசியல் வியூகம் மிக விசாலமானது
அவர் பதவியில் இருந்த காலத்தில், ஒரு நாளும் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்ததில்லை. 
அத்துடன்.. அவர் எங்கு போனாலும், அதனை செய்தியாக கொண்டு வர,  
இந்திய  பம்மாத்து ஊடகங்கள், மோடி கொடுத்த காசுக்காக,  கடுமையாக உழைத்தார்கள். 
அதில் வெற்றியும் பெற்றார்.... மோடி.

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 2 people, meme and text

 

61041446_2188656707856321_8926593520437821440_n.jpg?_nc_cat=103&_nc_ht=scontent-frx5-1.xx&oh=48df35867c0fe128b759ef2f4b33c78b&oe=5D627B89

மோடி....  திரும்ப ஆட்சிக்கு வரமாட் டார் என்று...  அவசரப் பட்டு,
ராகுல் காங்கிரஸ் பக்கம், நைசாக.. நழுவிய...
உலக கோடீஸ்வரன், அம்பானி தான் பாவம்.

இனி... என்ன நடக்கப் போகுதென்று,  பொறுத்திருந்து பார்ப்போம்.  :grin:

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, தமிழ் சிறி said:

அத்துடன்.. அவர் எங்கு போனாலும், அதனை செய்தியாக கொண்டு வர,  
இந்திய  பம்மாத்து ஊடகங்கள், மோடி கொடுத்த காசுக்காக,  கடுமையாக உழைத்தார்கள். 
அதில் வெற்றியும் பெற்றார்.... மோடி.

வெளிநாடுகளிலும் ஒருவரை தேர்தலில் வெற்றிபெற வைக்க ஊடகங்கள் பங்கு அதிகம். மக்களை மூளைச்சலவை செய்யுமளவுக்கு அந்நபரை பற்றி நல்ல மாதிரி காட்டிக்கொண்டிருப்பார்கள்.

ட்ரம்ப் விதிவிலக்கு. மற்றவர்கள் அவர் செய்யும் அனைத்தையும் எதிர்க்க வெளிக்கிட்டதால் அவர் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் இருக்கிறார்.

ட்ரம்பின் 80, 90 களில் வந்த சில பேட்டி முன்னர் பார்த்தேன். அன்றும் அவர் அமெரிக்காவுக்கு முன்னுரிமை கொடுத்து தான் கதைக்கிறார். ஆனால் பவ்யமாக. இப்ப அதையே கதைக்கிறார், ஆனால் பார்ப்பவர்கள் அவரை முட்டாள் என்று சொல்லும் விதமாக.

ஊடகவியலாளர் ஒருவர் ட்ரம்ப் க்கு ஜனாதிபதியாக வரும் எண்ணம் உள்ளதா என 90 களில் கேட்ட போது, தனக்கு ஜனாதிபதியாக வரும் எண்ணம் இல்லை, ஆனால் அமெரிக்கா தொடர்ந்து இதே போக்கில் செல்லுமானால் தான் ஜனாதிபதியாக வருவேன் என கூறியிருந்தார். சொன்னபடி ஜனாதிபதியாக வந்து இப்ப அமெரிக்காவுக்கு முன்னுரிமை கொடுத்து அரசியல் செய்கிறார்.

முன்னர் கூறியிருந்தாராம் தான் ஜனாதிபதியாக வந்தால் மக்கள் எதை கேட்க விரும்புகிறார்களோ அதை கதைப்பேன் என. (இது பற்றி உண்மை பொய் தெரியவில்லை)

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites
17 minutes ago, Lara said:

--ட்ரம்ப் விதிவிலக்கு. மற்றவர்கள் அவர் செய்யும் அனைத்தையும் எதிர்க்க வெளிக்கிட்டதால் அவர் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் இருக்கிறார்.

ட்ரம்பின் 80, 90 களில் வந்த சில பேட்டி முன்னர் பார்த்தேன். அன்றும் அவர் அமெரிக்காவுக்கு முன்னுரிமை கொடுத்து தான் கதைக்கிறார். ஆனால் பவ்யமாக. இப்ப அதையே கதைக்கிறார், ஆனால் பார்ப்பவர்கள் அவரை முட்டாள் என்று சொல்லும் விதமாக. 😀---

 

அமெரிக்க மக்களுக்கு,  "ட்ரம்ப்"  போன்ற, லூசு  "டிரெஸ்லிங்" ஆட்கள் தான்,  தேவை.
முட்டாள் பயல்  ட்ரம்புடன்,  தோற்ற..  ஹிலாரி  கிளின்டனுக்கு, ஆழ்ந்த அனுதாபங்கள்.  🤣

Share this post


Link to post
Share on other sites

உந்த காணொளியிலை காட்டப்படுவதெல்லாம் முன்கூட்டியே சொல்லி வைச்சு செய்யிறது. Show Business.

ஹிலாரி கிளின்டனின் வண்டவாளங்கள் தெரிஞ்சதாலையும் ஒபாமா செய்த அக்கிரமத்தாலையும், democrats மேலிருந்த கோபத்தாலையும் கூட ட்ரம்புக்கு சனம் vote போட்டது. 

இவர் ஒரு Business man என்பதால் அந்தப்பக்கத்தாலையும் ஆதரவு கிடைச்சது.

வெளிக்கு rasist ஆ கதைச்சாலும் இவர் african american community க்கு அதிக உதவி செய்தவராம்.

தவிர வருமானம் குறைந்த மக்களுக்கென தனியா building கள் கட்டி குறைந்த வாடகைக்கு வீடுகள் கொடுத்தவராம். தேர்தலுக்காக இல்லை, முன்பிலிருந்தே. இவையெல்லாம் இவருக்கு vote போட்டிருப்பினம்.

நாங்கள் தான் ஹிலாரி, ட்ரம்ப் என்று இரு துருவங்களை பார்ப்பது போல் பார்க்கிறோம். உண்மையில் அவர்கள் இருவரும் உறவினர்கள்.

இப்ப இவர் போற போக்கை பார்த்தால் சனம் அடுத்தமுறை மாத்தி vote போட நினைக்கினமோ தெரியேல்லை. ஆனால் இப்பவும் இவருக்கு ஆதரவு இருக்கு. என்ன நடக்குமெண்டு வாற வருசம் தெரியும்.

இதை பாருங்கோ. 1980 லை ட்ரம்ப் எப்பிடி கதைக்கிறார் என்று. இந்தாள் எப்பிடி இப்ப இப்பிடி ஆச்சு என்று ஷொக் ஆயிடுவீங்கள். 

 

Edited by Lara
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இதையும் பாருங்கோ

 

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, தமிழ் சிறி said:

நரேந்திர மோடி.. வெற்றி பெற்ற, இரகசியம்...
அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப்,  சீன அதிபர் ஜி ஜின்பிங்க்,  
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,  ரஷ்ய அதிபர் புட்டின்.... 
போன்ற ஆட்களுக்கு,  இன்னும்.....  தெரியாது  போலை கிடக்கு.  :grin:

நரேந்திர மோடி.. வெற்றி பெற்ற, இரகசியம்... மற்றவர்களை விட....
அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்புக்கு மட்டும் தெரியும்.

பாம்பின்கால் பாம்பறியும். :grin:

ஆதாரம் பல மீடியாக்கள்.

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 2 people, meme and text

இவர் மலையுச்சிக்கு போனதும், குகையில் தியானம் இருந்ததும், இப்பிடி ஒற்றைக்கண்ணை (அதுவும் இடது பக்க கண்ணை) மட்டும் திறந்து காட்டுவதும் எனக்கு இலுமினாட்டியை நினைவு படுத்துது. அமெரிக்க டொலரிலேயே அது இருந்தாலும் நான் சொன்னால் நம்ப மாட்டார்கள்.

Dollarnote_siegel_hq.jpg

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites
33 minutes ago, Paanch said:

நரேந்திர மோடி.. வெற்றி பெற்ற, இரகசியம்... மற்றவர்களை விட....
அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்புக்கு மட்டும் தெரியும்.

பாம்பின்கால் பாம்பறியும். :grin:

ஆதாரம் பல மீடியாக்கள்.

நீங்கள் வெளிநாட்டில் புலவும் “பாம்பு” பற்றி சொல்றீங்களோ? 😀 

நான் இன்னும் ட்ரம்பை முற்றுமுழுதாக பாம்பு என நம்பவில்லை. ஈரானில் போர் ஆரம்பிச்சார் என்றால் சரி. அதுக்கு பிறகு ஆள் முற்று முழுதான பாம்பு என நானே ஒப்புக்கொள்வேன். அது வரை வெயிட்டிங். 

Share this post


Link to post
Share on other sites
17 minutes ago, Lara said:

நீங்கள் வெளிநாட்டில் புலவும் “பாம்பு” பற்றி சொல்றீங்களோ? 😀 

நான் இன்னும் ட்ரம்பை முற்றுமுழுதாக பாம்பு என நம்பவில்லை. ஈரானில் போர் ஆரம்பிச்சார் என்றால் சரி. அதுக்கு பிறகு ஆள் முற்று முழுதான பாம்பு என நானே ஒப்புக்கொள்வேன். அது வரை வெயிட்டிங். 

மக்கள் ஆதரவை விடவும், நவீன உலகும் அதன் தொழில்நுட்ப வளர்ச்சியுமே ட்ரம்பை சனாதிபதியாக்கிதாக வந்த செய்திகள்..... ஆச்சரியம் தரவில்லை.  

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, Paanch said:

மக்கள் ஆதரவை விடவும், நவீன உலகும் அதன் தொழில்நுட்ப வளர்ச்சியுமே ட்ரம்பை சனாதிபதியாக்கிதாக வந்த செய்திகள்..... ஆச்சரியம் தரவில்லை.  

சாதாரணமாக நீங்கள் சொல்வது சரி. ஆனால் மோடியின் வெற்றிக்கும் ட்ரம்பின் வெற்றிக்கும் வேறுபாடு உள்ளது. மோடி தேர்தலில் போட்டியிடும் போது மோடிக்கு ஆதரவாக மீடியா பிரச்சாரம் செய்தது. ஆனால் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிட்ட போது ஹிலாரிக்கு ஆதரவாக மீடியா செயற்பட்டு அவரை ஜனாதிபதியாக கொண்டுவர முயற்சித்தது. அதே நேரம் ட்ரம்ப்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்து அவரை வீழ்த்த முயற்சித்தது. ட்ரம்பின் வெற்றிக்கு வேறு பல காரணிகள் இருந்தன.

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.