Jump to content

ஐரோப்பிய வாக்காளர்களுக்கு பிரித்தானியாவில் வாக்களிக்க அனுமதி மறுப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

stream_img-6-720x450.jpg

ஐரோப்பிய வாக்காளர்களுக்கு பிரித்தானியாவில் வாக்களிக்க அனுமதி மறுப்பு!

பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பியர்கள் இன்று இடம்பெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு பிரித்தானிய வாக்குப்பதிவு நிலையங்களில் அனுமதிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஐரோப்பிய வாக்காளர்கள் அனுமதி மறுக்கப்பட்டு வாக்குப்பதிவு நிலையங்களிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடைவதற்கு இன்னும் ஐந்து மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில் அனுமதி மறுக்கப்பட்ட வாக்காளர்கள் தமது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

http://athavannews.com/ஐரோப்பிய-வாக்காளர்களுக்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வைக்கற்பட்டறைகளில் தொல்லை  தாங்க  முடியலையப்பா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப இந்த கிழக்கு ஐரோப்பிய கள்ளனுகளும் கள்ளிகளும்.. குடுக்காரன்களும்.. குடிகாரங்களும் வெளியேறுவாங்கள் என்று இருக்குது.

விடிஞ்சதும்.. வொட்காவும் கையுமாவே அலையுறாங்கள். ஒரு வீட்டை வாடைக்கு எடுத்திட்டு 20 பேர் இருப்பாங்கள். ஆனால்.. இதில் சுவாரசியம் என்ன என்றால்.. நம்மாக்கள் அநேகர்... அதிகம் வருமானம் வருமென்றிட்டு இப்படியான ஆக்களுக்கு வாங்கின இரண்டாம் மூன்றாம் நான்காம் வீடுகளை வாடைக்கு விட்டு பிழைப்பை ஓட்டினம்.

இவங்கள் வெளியேற இருக்கு விளையாட்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nedukkalapoovan said:

எப்ப இந்த கிழக்கு ஐரோப்பிய கள்ளனுகளும் கள்ளிகளும்.. குடுக்காரன்களும்.. குடிகாரங்களும் வெளியேறுவாங்கள் என்று இருக்குது.

விடிஞ்சதும்.. வொட்காவும் கையுமாவே அலையுறாங்கள். ஒரு வீட்டை வாடைக்கு எடுத்திட்டு 20 பேர் இருப்பாங்கள். ஆனால்.. இதில் சுவாரசியம் என்ன என்றால்.. நம்மாக்கள் அநேகர்... அதிகம் வருமானம் வருமென்றிட்டு இப்படியான ஆக்களுக்கு வாங்கின இரண்டாம் மூன்றாம் நான்காம் வீடுகளை வாடைக்கு விட்டு பிழைப்பை ஓட்டினம்.

இவங்கள் வெளியேற இருக்கு விளையாட்டு. 

இவனுகளுக்கு சட்டமும் தெரியவில்லை. முன்னுக்கு ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து, அதுக்குள்ள இன்னும் இரண்டு குடும்பம். ஒவொருவரும் கார் வைத்துருக்கினம். 

வாடைக்கு எடுத்தவர் தண்ட காரை வீட்டுக்கு முன்னால் விடவேண்டுமாம் எண்டு, வேற யாரும் விட்டால் துண்டு வைக்கிறதும், குப்பை பின்னை இழுத்து வச்சிட்டு போறதுமாக இருந்தார். இவ்வளவுக்கும் அவர் ஒரு DHL டெலிவரி டிரைவர். அந்த வானை வீட்டுக்கு முன் விட்டால் வசதியாம்.

அவரது மத்த இரண்டு வாடகைக்காரர்களும், தங்களது காரை அடுத்தவர்கள் வீடுகள் முன்னாள் விடுவினம்.

ஒரு நாள் எனது காருக்கும் துண்டு வைத்தார். வந்த விசருக்கு போய், இந்த ஊர் சட்டம் தெரியுமா, தெரியாவிடில் தெரிந்துகொள், இந்த துண்டோடு போலிஸைக் கூப்பிட்டால், £1000 தண்டம், உனக்கும் வேலை போயிடும் எண்டேன். உனது வீட்டின் இரண்டு கார்கள் அடுத்தவன் வீட்டு முன் நிறுத்தி இருக்கும்போது நீ எப்படி இப்படி துண்டை வைப்பாய் என்று கேட்க, 'முழுசுறான் பாவி'.

அவனது ஐடியா, தன்னிடம் வாடகைக்கு எடுத்தவயல் வேறு, தான் வேறு. போலீஸ், சட்டம் என்றதும் பதறிப்போன அவர், சாரி என்றான்.

இவர்களில் ருமேனியா காரர் வேற விதம். கார் வைப்பர் இரண்டையும் அப்படியே windscreen ல்  இருந்து இழுத்து விட்டால், அவர்கள் ஊரில் எனது வீட்டின் முன் பார்க் பண்ணி இருக்கிறாய், அடுத்த முறை அப்படி செய்யாதே என்று அர்த்தமாம்.

ஒரு வெள்ளைக்கு இப்படி செய்ய, அந்தாள் குழம்பி போலிஸைக் கூப்பிட, காலில விழுந்து கெஞ்சாக் குறை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.