Jump to content

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு வழக்கு ஒத்திவைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Navatkuli.jpg?zoom=0.9024999886751175&re

நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் தொடர்பிலான சாவகச்சேரி நீதிவானின் விசாரணைகள் வரும் ஓகஸ்ட் முதலாம் இரண்டாம் திகதிகளில் இடம்பெறும் என்று திகதியிடப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சாவகச்சேரி நீதிமன்றில் நீதிவான் ஜெகநாதன் கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது, வழக்குகளின் முதலாவது பிரதிவாதியான இராணுவ அதிகாரி  துமிந்த கெப்பிட்டிவலான, இரண்டாவது பிரதிவாதி இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும் சட்ட மா  மன்றில் முன்னிலையாகவில்லை.
 
இன்றைய தினம் மன்றில் முன்னிலையாகுமாறு பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் கிடைக்கவில்லை என்று இராணுவம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.
“மேல் நீதிமன்ற நீதிபதியால் எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடிதத்தில் பிரதிவாதிகளை இன்று இந்த மன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று நீதிவான் எடுத்துரைத்தார்.
“மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளையில், பிரதிவாதிகளை இன்று சாவகச்சேரி நீதிமன்றில் முன்னலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மன்றின் அறிவுறுத்தலை ஏற்று அதனைப் பிரதிவாதிகளிடம் சேர்ப்பிப்பதாகவும் உறுதி செய்வதாகவும் இராணுவ சட்டத்தரணி மேல் நீதிமன்றில் அன்றைய தினம் மன்றுரைத்திருந்தார்.
 
ஆனால் இன்று பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் கிடைக்கவில்லை என்று அவர்களது சட்டத்தரணி குறிப்பிடுகிறார்” என்று மனுதாரர்களின் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் மன்றுரைத்தார்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்று, பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பும் ஆவணங்களை மனுதாரர்களின் சட்டத்தரணியை மன்றில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியது.“இந்த மனுக்களில் முதலாம் பிரதிவாதியான இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவலான மற்றும் மூன்றாம் பிரதிவாதி சட்ட மா அதிபர் ஆகியோர் சார்பில் முன்னிலையாகும் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகர வெளிநாடு ஒன்றில் இடம்பெறும் கருத்தமர்வுக்குச் சென்றுள்ளதால், அவர் இந்த மன்றில் முன்னிலையாக வசதியாக வழக்கு விசாரணையை வரும் ஓகஸ்ட் முதலாம், இரண்டாம் திகதிகளில் ஒத்திவைக்குமாறு இராணுவம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விண்ணப்பம் செய்தார்.

 

“இந்த மனுக்கள் மீதான விசாரணைகளை துரிதமாக முடிக்க மனுதாரர்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால் 4 வாரங்களில் அடுத்த தவணையை மன்று வழங்கவேண்டும்” என்று மனுதாரர்களின் சட்டத்தரணி மன்றுரைத்தார்.
இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் ஜெகநாதன் கஜநிதிபாலன், மனுக்கள் மீதான விசாரணையை வரும் ஓகஸ்ட் முதலாம் இரண்டாம் திகதிகளுக்கு ஒத்திவைத்தார்.
 
பின்னணி.
1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவலான தலைமையிலான படையினர், கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களில் 3 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அவர்களது பெற்றோரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு எழுத்தாணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி எஸ்.சுபாசினியின் ஏற்பாட்டில் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் மனுக்களை நெறிப்படுத்தினார். 2017ஆம் திகதி நவம்பர் மாதம் இந்த ஆள்கொணர்வு மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.
 
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இந்த ஆள்கொணர்வு மனுக்களை பூர்வாங்க விசாரணையுடன் தள்ளுபடி செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் பல ஆட்சேபனைகளை முன்வைத்தது.எனினும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனைத்து ஆட்சேபனைகளையும் நிராகரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுதாரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் விசாரணை ஒன்றை முன்னெடுத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு உரிய பரிந்துரையை வழங்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டார்.
 
மனுதாரர்கள் மற்றும் பிரதிவாதிகள் அனைவரும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இன்று மே 24ஆம் திகதி முன்னிலையாக உத்தரவிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், , அன்றைய தினம் வழக்கின் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பை நீதிவான் வழங்குவார் என்று குறிப்பிட்டது.
 
“காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டு பிடித்துத்தருமாறு மனுக்கள் செய்தவிடத்து எதிர்மனுதாரர்கள் பொறுப்புடன் செயற்பட்டு, உள்ளவற்றை உள்ளபடியாங்கு உரைத்து இந்த மனுக்களை எதிர்கொள்ளவேண்டுமே தவிர, தேவையற்ற சட்ட ஓட்டைகளை முன்வைத்து, விடயங்களைப் பெரிப்பித்து, காலத்தை இழுத்தடித்து, மேலும் சோதனைகளை ஏற்படுத்துவதனை யதார்த்தமான வழி ஒன்றாகக் கருத முடியாது என்று சுட்டிக்காட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுதாரர்களின் விண்ணப்பங்கள் 2 வருடங்கள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டமையைக் கண்டித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
    • தனிப்பட்ட செல்வாக்கு? அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.    
    • எங்களுடைய கட்சியின் பலம் பலவீனங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளே பல இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். திகதியை மறுத்த சுமந்திரன் அடுத்தடுத்த கலந்துரையாடல்கள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்றினை கொழும்பில் உள்ள சம்பந்தன்(R.Sampanthan) ஐயாவின் வீட்டிலே நடத்தியிருந்தோம்.                                சில முரண்பாடான நிலைகள் தொடர்பில் இதன்போது கலுந்துரையாடப்பட்டது. இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் உள்ளிட்டோர் மறுதினம்(11 ஜனவரி) என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தில் கலந்துரையாடியிருந்தோம். அதன் பின்னர் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் நான் ஒரு திகதி கூறியிருந்தேன். சுமந்திரன் அதனை மறுத்து மற்றுமொரு திகதி குறிப்பிட்டார். எனினும் மத்திய செயற்குழு கூட்டம் நிறுத்தப்பட்டது. மாவை சேனாதிராஜா தான் நிறுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவர் சத்தியலிங்கம் பேசும் நிலையிலேயே இல்லை. இதற்கிடையில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.    https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-current-issues-1713545072
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.