• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • நன்றி சண்டமாருதன். உங்கள் விளக்கம் எனக்கு மேலும்  தெளிவை ஏற்படுத்தியுள்ளது.
    • உங்கள் எல்லோருக்கும் இப்போது என்னதான் பிரச்சனை ? கைக் கூலி என்று கூறுவதை தவிர்த்து அவர்களது தற்போதை சூழலையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்து எங்கள் வார்த்தைகளை கொஞ்சம் அவதானத்துடன் கதைப்போம் என்பதா ?   
    • எந்த  ஆதார  அடிப்படையில் இவ்வாறான கருத்தை பொதுவெளியில் அநாகரீகமாக முன்வைக்கின்றீர்கள்? போராட்ட காலம் முழுவதும் சிங்களப் பகுதியில் சிங்கள அரச இயந்திரத்தில் நீதித்துறையில் ஒரு அங்கமாக இருந்த விக்கினேஸ்வரன் வடக்குக்கு முதல்வராகும் போது முன்னாள் போராளிகள் அரசியலில்  ஈடுபடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ?    போராளிகளாக இருந்தால் போராளிகள் வழி தடுமாறினால் என்ற கேள்விக் குறிக்க என்ன அர்த்தம்? என்ன வழி தடுமாறினார்கள்?  முன்னாள் போராளிகளை முன்னாள் போராளிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது ? அவர்கள் முன்னாள் போராளிகள் இல்லை என்றால் அதை சிங்களம்  ஏற்றுக்கொள்ளுமா ? ஏற்றுக்கொண்டு சிறையில் உள்ளவர்களை விடுவிக்குமா ? முன்னாள் போராளிகள் என்பது தமிழர்கள் சூடிக்கொண்ட பெயர் கிடையாது மாறாக  முன்பு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்களம் அவ்வாறுதான் அடயாளப்படுத்துகின்றது. அந்த அடயாளத்தின் கீழ்தான் ஆயிரக்கணக்கான போராளிகள் என்னும் சிறையில் இருக்கின்றார்கள பலர் கொல்லப்பட்டார்கள் .  தாயகத்தில் வாழும்  முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் போராட்டத்திற்க ஆதரவளித்த மக்கள்  தனித்தனியாக சிதைந்து இருப்பதை விடவும்  சங்கங்கள் அமைப்புகள் அரசியல் கட்சிகள் என வாய்ப்புள்ள வகையில் ஏற்படுத்திக்கொள்வதே  அவர்கள் பாதுகாப்பக்கு நல்லது. கூட்டமைப்பையோ இதர கட்சிகளையோ நம்புவதும் இணைவதும் அவர்கள் வாழும் சூழலில் அவர்கள் எடுக்கும் முடிவு.  மேலும் தாயகத்தை விட்டு வெளியேறி வளர்ந்த நாடுகளில் பாதுகாப்பாக வாழும் நான் உட்ப எவருக்கும் தன் செந்த நிலத்தில் சிங்கள பேரினவாத அச்சுறுத்தல் பொருளாதார நெருக்கடிகள் என பல பிரச்சனைகளை முகம்கொடுக்கும் எந்த அமைப்பு கட்சி அல்லது சாதாரண மக்கள் கூறித்து கருத்துக் கூறுவதற்கு உரிமை இருக்கின்றது தவிர அதிகாரம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக அநாகரீகமாக விமர்சனம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக முடிவெடுக்கவோ முடியாது. தாயகத்தில் வாழும் மக்கள் மீதான தலையிட்டிற்கு ஒரு எல்லை தாயகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு இருக்கின்றது. அதை உணர்ந்து கருத்தை முன்வைப்பதே நல்லது.. 
    • மன்னிக்கவும் விசுக்கு. தவறுக்கு வருந்துகிறேன். கற்புள்ளவர் பட்டியலில்  நான் நிழலி மட்டுமல்ல நண்பர் விசுகு வும் இருக்கிறார். நண்பர் விசுகு வோடு சேர்த்து உலகில் மொத்தமாக  இரண்டரை கற்புள்ளவர்கள்  இருக்கிறோம்.
    • ஈழத்து தமிழர்கள் நாங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சொற்பதத்தை தயாராக வைத்திருப்போம், அடுத்தவனை பேசவிடாமல், அடுத்தவனை சிந்திக்க விடாமல், தேவைக்கேற்ப தூக்கி அடிப்போம்...  கைக்கூலி ,  சமூக விரோதி,  காவடித்தூக்கி ,  செம்பு தூக்கி, ஒட்டுக்குழு,   முட்டையில் மயிரை புடுங்கு,  சொட்டையில எண்ணெய்யை தடவு.. இதில் மட்டுமே நாங்கள் கைதேர்ந்த கில்லாடிகள்