• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • மாசுபட்ட காற்றை சுவாசிப்பது மனிதர்களின் நுரையீரலையும், இதயத்தையும் பாதிக்கும் என்பது பொதுவான பிரச்சனை. காற்றில் உள்ள சிறிய தூசி துகள்களை நீண்ட காலமாக உள்ளிழுப்பதால் சுவாச பிரச்சினைகள், காற்றுப்பாதைகளின் எரிச்சல், ஆஸ்துமா, சிறுநீரக பிரச்சினைகள் போன்ற சுகாதார பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கும். சில நேரங்களில் அது புற்றுநோயையும் கூட ஏற்படுத்தும். ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, மாசுபட்ட காற்றை சுவாசிப்பது எடை அதிகரிப்பிற்கு கூட வழிவகுக்கும் என்று கூறுகிறது. உயிரியல் பரிசோதனைக்கான அமெரிக்க சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, காற்று மாசுபாடு நமது எடையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. இதற்காக ஆராய்ச்சியாளர்கள் எலிகளை வைத்து ஆய்வை மேற்கொண்டனர். பரிசோதனையின் போது கர்ப்பிணி எலிகள் மற்றும் அவற்றின் சந்ததிகளை ஒரு சில வாரங்களுக்கு தீவிரமாக மாசுபடுத்தப்பட்ட காற்று நிறைந்த பகுதியில் அடைத்து வைத்தனர். அதே நேரத்தில் மேலும் சில எலிகளின் குழுவை பிரெஷ்ஷான மற்றும் வடிகட்டப்பட்ட காற்றை சுவாசிக்க வைத்தனர் ஆராய்ச்சியாளர்கள். 19 நாட்களுக்குப் பிறகு, மாசுபட்ட காற்றுள்ள பகுதியில் அடைக்கப்பட்டிருந்த எலிகள் பின்வரும் சிக்கல்களை எதிர்கொண்டது கண்டறியப்பட்டது: * அவற்றின் நுரையீரல் வீக்கமடைந்து காணப்பட்டது * அவற்றின் எல்டிஎல் கொழுப்பின் அளவு 50 சதவீதம் அதிகரித்தது * இன்சுலின் எதிர்ப்பு அளவும் உயர்ந்தது இது தவிர, தீவிர மாசுபாடு காரணமாக குறிப்பிட்ட எலிகள் எட்டு வாரங்களுக்குப் பிறகு எடை அதிகரித்தன. எலிகளின் இரு குழுக்களுக்கும் ஒரே உணவை அளித்திருந்தாலும், காற்று மாசு சூழலில் அடைக்கப்பட்டிருந்த எலிகளின் எடை அதிகரித்திருந்தது. வீக்கம் காரணமாக எடை அதிகரிப்பு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த ஆய்வு எலிகள் மீது நடத்தப்பட்டாலும், மனித ஆரோக்கியத்தில் காற்று மாசுபாட்டின் மோசமான விளைவுகளை மறுக்க முடியாது. எனவே மாசுபட்ட காற்றை சுவாசித்தால் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதே ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது. https://www.polimernews.com/dnews/89823/மாசு-காற்றை-சுவாசித்தால்உடல்-எடைஅதிகரிக்குமா.?ஆய்வில்கிடைத்த-விடை
    • அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்பினாலும், தேவைப்படும்போது எதிர்த்துப் போராட அஞ்ச மாட்டோம் என சீன அதிபர் ஜின்பிங் கூறியுள்ளார். அமெரிக்கா-சீனா இடையே முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டிருப்பதாக அதிபர் டிரம்ப் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி அறிவித்திருந்தார். ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னும் எழுத்து வடிவம் பெறவில்லை. சீனா இன்னும் பல விஷயங்களில் இறங்கிவர மறுப்பதால் பேச்சுவார்த்தையை முடிவடையாமல் இருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், பெய்ஜிங்கில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சந்திப்பின்போது பேசிய சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்காவுடன் வர்த்தகப் போரை தொடங்க தாங்கள் ஒருபோதும் விரும்பியதில்லை என்றும், ஆனால் அதற்காக தங்கள் நாடு அச்சப்படுகிறது என்று அர்த்தமாகாது எனவும் ஜின்பிங் குறிப்பிட்டார். https://www.polimernews.com/dnews/89817/அமெரிக்காவுடன்-வர்த்தகஒப்பந்தத்தை-விரும்புவதால்பயப்படுவதாகஅர்த்தமில்லை-ஜின்பிங்
    • தண்ணியில் விழுந்ததாக கூறினாலும் யன்னலால் பக்கத்து அறைக்கு தாவும் போதே விழுந்ததாக கூறினார்கள்.பக்கத்து அறை யாரோ பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருந்ததாம். எனினும் இந்த செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.
    • -க. அகரன் “தலை முழுகுற அளவுக்கு நிலைமைகள் மாறும்” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வொன்று, இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில்  நடைபெற்றது. இந்‌நிகழ்வில்‌  கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இப்பொழுது தேர்தல் முடிந்திருக்கிறது. இந்த நாட்டிலே இரண்டு சமூகங்கள் வேறு  வேறு நிலைப்பாட்டை கொண்டவர்களாக  இருக்கிறார்கள். ஒன்று பெரும்பான்மை இனத்தை சார்ந்த ஒருவருக்கு தமிழ் சமூகம் தேசிய இனம் வாக்களித்தது. “அதே நேரத்திலே பெரும்பான்மை இனத்தை சார்ந்த ஒருவருக்கு சிங்கள தேசம் வாக்களித்தது. நாங்கள் இனத்துவேசம் கொண்டவர்கள் அல்ல என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம். “நாங்கள் எங்களுடைய தேசத்திலே நடைபெற்ற அத்தனை பிரச்சனைகளையும்  மறக்க முடியாத வடுக்களாக எங்களுடைய நெஞ்சங்களிலே நாங்கள் இன்றைக்கும் சுமந்திருக்கிறோம் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலிலே நீங்கள் அச்சப்படத்தேவையில்லை. “தேர்தல் முடிந்து என்ன நடக்கும் என்ற ஒரு அச்சத்தோடு நாங்கள் எங்களுடைய மக்கள் வாழுகிறார்கள். அச்சப்பட வேண்டாம். அச்சப்படத்தேவையில்லை. “எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தவர்கள் நாங்கள். எவ்வளவு வடுக்களை இன்றைக்கும் சுமந்து கொண்டு இருக்கின்ற இனம் எங்களுடைய இனம். தமிழ் பேசுகின்ற இனம். ஆகவே, அந்த நிலைக்கும் அதுக்கு மேல் தலை முழுகுற அளவுக்கு நிலைமைகள் மாறும்” எனவும் அவர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/வன்னி/தலை-முழுகுற-அளவுக்கு-நிலைமைகள்-மாறும்/72-241378
    • ’எத்தடைகள் வந்தாலும் எமது இலக்கும் பணிகளும் தொடரும்’ -எஸ்.றொசேரியன் லெம்பேட் மாவீரர் மற்றும் போராளிகளின் குடும்பங்களுக்கு மன்னார் நகர சபையின் தலைவரினால் சலுகைகள் மற்றும் அன்பளிப்புக்கள் வழங்கப்படுவதாகவும், குறித்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கோரி 'இலங்கையன்' எனும் பெயரில் கடிதம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை தனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, மன்னார் நகர  முதல்வர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன் தெரிவித்தார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மன்னார் நகர சபையில் தற்போது மாவீரர் மற்றும் போராளிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதிகலவான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாக அறிகின்றோம். சிறுவர் பூங்கா உட்பட பல பொது இடங்களில் புலிகளின் தேசிய கலரான சிவப்பு, மஞ்சல் பூசப்பட்டுள்ளது. “மன்னார் மக்கள் வங்கிக்கு பின் புறமாக தற்போது கட்டப்பட்டு வரும் கடைகளில் பல கடைகள், மாவீரர் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றன. “இவ்வாறான செயல்கள் இனியும் தொடரக் கூடாது.மாவீரர் மற்றும் போராளி குடும்பங்களுக்கு சலுகைகள் மற்றும் அன்பளிப்புகள் முன்னுரிமைகள் அளிக்கப்படக்கூடாது. நிறுத்தப்பட வேண்டும். “உங்களுக்குறிய அரச கடமையை மட்டும் சரியாக செய்யவும்.உங்கள் அனைவரையும் பற்றி தகவல்கள் சேகரிக்கப்படுகின்றது” என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன் தெரிவிக்கையில், “மக்களுக்கான பணிகளை நாங்கள் நேர்மையாகவும், கன்னியமாகவும், கட்டுக்கோப்புடனும் மேற்கொண்டு வருகின்றோம்.நாங்கள் எந்தவித அச்சுருத்தல்களுக்கும் அடி பணியப் போவதில்லை. எத்தடைகள் வந்தாலும் எமது இலக்கும்,எமது பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/வன்னி/எத்தடைகள்-வந்தாலும்-எமது-இலக்கும்-பணிகளும்-தொடரும்/72-241377