யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • இந்த வருடம் நல்லூர்த்திருவிழாவில் கலந்து கொள்வதுடன்  விட மழைநீரை நிலத்தடி நீராக மாற்ற உங்கள் அறிவை, நேரத்தை,பணத்தை செலவிடுங்கள்.  நிலத்தடி நீரை பாதுகாக்கவேண்டியுள்ளது.   வறட்சியுலிருந்து விடுபடவேண்டும். எஞ்சியமக்கள் பசுமையாக வாழவேண்டும்  நீர் இன்றி உலகமே இல்லை  இதற்கான இயக்கத்தை ஆரம்பியுங்கள்  உங்கள் பிரதேசத்தில் நீங்கள் முன்னெடுத்துச்செல்லவேண்டிய  முக்கியமான பணி நீரை பாதுகாத்தல்.  நீர், நிலம், காற்று, மரங்கள் உயிர்வாழ்வுக்கு மிகவும் அவசியம் ஆளுக்கொரு மரம் ஆண்டு தோறும் நடுங்கள் SAVE Land Air Water
    • ப‌ச்சை த‌ண்ணீர‌ முக‌த்துக்கு ஊத்த‌னா தான் அவ‌ர் விழிப்ப‌டைவார் தாத்தா😁😉 / இனி தான் உல‌க‌மே எதிர் பார்த்து இருக்கும் பினேல் ம‌ச் ந‌ட‌க்க‌ போகுது /  பெரும் பாலும் இந்தியா தான் கோப்பையை தூக்கும் என்று கிரிக்கெட் விம‌ர்ச‌க‌ர்க‌ள் சொல்லுகிறார்க‌ள் 😁😉 /  இத்துட‌ன் காமெடி செய்தி முடிவ‌டைகிறேன் , ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 😜 /
    • நோய்த்தடுப்பு மருந்துகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லாவிட்டால் அதன் வீரியம் குறையும், சிகிச்சை பலனளிக்காமலும் போகும். எனவே, குளிர்சாதன வசதி என்பது சில மருந்துகளுக்கு தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது. இதற்கு மாற்றுவழியாக ஜெல் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது மக்கள் பயன்பாட்டுக்கு வர தயாராகவும் உள்ளது.குளிர்சாதன பெட்டி வசதியில்லாத இடங்களிலும், பயணங்களிலும் தடுப்பு மருந்துகளை பாதுகாப்பாக  வைத்திருக்கக்கூடிய புதிய ஜெல் ஒன்றினை தற்போது கண்டுபிடித்திருக்கிறது அமெரிக்காவின் மெக்மாஸ்டர் வேதி பொறியாளர்களின் குழு.மலைப்பிரதேசங்கள், காட்டுப்பகுதிகள், புறநகர் சிற்றூர்கள் போன்ற போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் நோய் பரவினால், அந்த இடங்களுக்கு தடுப்பு மருந்துகளை குளிர்சாதன வசதியுடன் பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பது எப்போதும் சவால் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக பலவகை தடுப்பு மருந்துகள் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்க வேண்டிய சூழல் இருப்பதே இதற்குக் காரணம். தற்போது இதற்கு சிறந்த மாற்று வசதியாக உள்ள ஒரு புதிய வகை ஜெல்லினை பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து  உருவாக்கியிருக்கிறது இந்த பொறியாளர்கள் குழு. இந்த ஜெல் குளிர்சாதன பெட்டி இல்லாத சூழலிலும், 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் நிலவும் இடங்களிலும் மருந்துகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் இந்த கடும் வெப்பநிலையிலும் 8 வாரங்களுக்கு மருந்துகளை கிருமித் தொற்று ஏற்படாமலும், அதன் தரம் தாழ்ந்துவிடாமலும் காப்பாற்றுகிறது.   எபோலா, ஜிகா, இன்ஃபுளுயென்ஸா போன்ற கடுமையான நோய்களுக்கான மருந்துகளை பத்திரமாக எடுத்துச் சென்று கட்டுப்படுத்த இந்த தடுப்பு ஜெல் மிகவும் உதவியாக இருக்கப்போகிறது. இந்த புதிய ஜெல்லுக்கு அமெரிக்க உணவு மருந்து கட்டுப்பாட்டுக் கழகமும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனவே, இந்த ஜெல் விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருப்பது மகிழ்ச்சியான செய்தி.   http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7257
    • சரவண பவன்’ ராஜகோபால் காலமானார் உலக அளவில் பல கிளைகளை கொண்ட சரவணபவன் ஹோட்டல் குழுமத்தின் அதிபர் ராஜகோபால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. உடல்நலக்குறைவுக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவருக்கு ஒரு கொலைக்குற்றம் தொடர்பாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 2009-ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறை செல்வதற்கு எதிராக அவர் கடுமையாக போராடி வந்தார். கடந்த ஜூலை 9-ஆம் தேதியன்று மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி சிறை செல்வதை தவிர்க்க அவர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது. சரவணபவன் ஹோட்டல் குழுமத்துக்கு உலகெங்கிலும் 80-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது. நியூ யார்க், லண்டன், சிட்னி போன்ற பெரு நகரங்களிலும் இந்த ஹோட்டலுக்கு கிளைகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த குழுமத்தில் பணிபுரிகின்றனர். ஜோதிடர் ஒருவரின் ஆலோசனை பேரில் தனது பணியாளர்களில் ஒருவரின் மனைவியை திருமணம் செய்துகொள்ள அவர் விரும்பியதாக கூறப்பட்டது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த 2001-இல் இப்பெண்ணின் கணவர் காணாமல்போன நிலையில், அதுகுறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். பின்னர் காட்டுப்பகுதி ஒன்றில் அந்த பெண்ணின் கணவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. 2003-ஆம் ஆண்டில் அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தை அச்சுறுத்தியதாக ராஜகோபால் மீது குற்றம்சாட்டப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் ராஜகோபாலுக்கு உள்ளூர் நீதிமன்றம் ஒன்று 10 ஆண்டுகள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை ஆயுள் தண்டனையாக 2009-இல் உயர் நீதிமன்றம் அதிகரித்தது. கடந்த மார்ச் மாதத்தில் இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. https://www.bbc.com/tamil/india-49027217
    • ஈழப்பிரியன் அண்ணா!  மேசையையும் ,லாச்சியையைம் வடிவா பாருங்கோ  .கட்டுக்கட்டாக  அனுப்பினால்தான்  கிடைக்கும்.