Sign in to follow this  
கிருபன்

ஈரானில் ஆண்கள் – பெண்கள் இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது

Recommended Posts

ஈரானில் ஆண்கள் – பெண்கள் இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது

May 25, 2019

 

yoga.jpg?resize=660%2C371ஈரானில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்கான் நகரில் இடம்பெற்ற இந்த கைதுச் சம்பவத்தில் யோகா பயிற்றுநரும் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பயிற்சியாளர் வகுப்புகள் நடத்த அனுமதி பெறவில்லை எனவும், இன்ஸ்ரகிராமில் தம் யோகா வகுப்புகள் குறித்து விளம்பரம் செய்ததாகவும் உள்ளூர் நீதித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் முறையற்று நடந்துகொண்டதாகவும், முறையற்ற ஆடைகளை அணிந்திருந்ததாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடான ஈரான் சட்டங்களின்படி ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதுடன் தொழில்முறையாக யோகா பயிற்றுவிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 #ஈரான்  #ஆண்கள்  #பெண்கள் #யோகாசனம் #கைது #iran #arrest

 

http://globaltamilnews.net/2019/122656/

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, கிருபன் said:

ஈரானில் ஆண்கள் – பெண்கள் இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது

May 25, 2019

 

yoga.jpg?resize=660%2C371ஈரானில்

இஸ்லாமிய நாடான ஈரான் சட்டங்களின்படி ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதுடன் தொழில்முறையாக யோகா பயிற்றுவிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 அய்யோ...அப்ப எப்படி அங்கு சனப்பெருக்கம்...

 

http://globaltamilnews.net/2019/122656/

அய்யோ...அப்ப எப்படி அங்கு சனப்பெருக்கம்...

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கோத்தாபயவின் பிரஜாவுரிமை விவகாரம்: விசேட மேன்முறையீட்டு மனு தாக்கல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், கோத்தாபய ராஜபக்ஸவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவை தள்ளுபடி செய்யுமாறு கோரி, காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் தேநுவர ஆகியோரால் உயர் நீதிமன்றத்தில் விசேட மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் கடந்த 4 ஆம் திகதி குறித்த மனு நிராகரிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை தள்ளுபடி செய்து தாம் கோரியிருந்த கட்டளையை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட மேன்முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.  https://www.virakesari.lk/article/68902
    • பிரேமதாசவின் காலத்திலும் வெள்ளை வேன் இருந்தது ; மஸ்தான் எம்பி முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் கூட வெள்ளை வேனும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/68903
    • (நா.தனுஜா) சஜித்திற்கு வாக்களிப்பதன் ஊடாகவே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருப்பதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானதாகும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் சுமந்திரன் மறுப்புத் தெரிவித்திருக்கிறார். சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிப்பதன் ஊடாக மாத்திரமே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்று வடமாகாண தமிழ் மக்களுக்கு சுமந்திரன் கூறியதாக நாட்டின் இரு பிரதான சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் இன்று செய்தியொன்று வெளியாகியிருந்து. அவ்விரு பத்திரிகைகளிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் தொடர்பில் அவருடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் சுமந்திரன், 'ஏற்கனவே இத்தகைய செய்தியை தனியார் பத்திரிகையொன்று வெளியிட்டிருந்த நிலையில் நான் அதனை மறுத்திருந்தேன். அதன் பின்னரும் இவ்விரு ஊடகங்களும் இந்தப் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளன' என்று பதிவிட்டிருக்கிறார். இந்நிலையில் கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான வர்ணகுலசூரிய மற்றும் அத்துகோரள ஆகியோரும் குறித்த இரு பத்திரிகைகளின் செயற்பாடு தொடர்பில் கண்டனம் வெளியிட்டனர். ஏற்கனவே ஊடகமொன்றினால் தான் கூறியதாக வெளியிடப்பட்ட செய்திக்கு சுமந்திரன் மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் அச்செய்தியை வெளியிடுவதென்பது ஊடக தர்மத்திற்குப் புறம்பானது மாத்திரமன்றி, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டதிட்டங்களையும் மீறுவதாகவே அமைந்துள்ளது. மக்களின் அனுதாப வாக்குகளைத் திரட்டிக்கொள்வதற்காக பொதுஜன பெரமுனவினால் ஒருபுறம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, மறுபுறம் எதிரணி வேட்பாளருக்கு சேறுபூசும் நோக்கில் அவர்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு இச் செய்தி சிறந்த உதாரணமாகும். இவற்றுக்கு மத்தியிலேயே சஜித் பிரேமதாஸ அவருடைய தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். https://www.virakesari.lk/article/68904
    • இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடலில் கொட்டும் குப்பைகள் அமெரிக்க நகரங்களுக்கு கரை ஒதுங்குவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.  உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளில் பருவநிலை மாறுபாடும், கழிவுகள் மேலாண்மையும் முக்கிய பங்கை வகிக்கின்றன. குறிப்பாக Electronics கழிவுகளை அப்புறப்படுத்துவது என்பது வளர்ந்த நாடுகளுக்கே பெரும் சவாலாக இருக்கிறது. இதனால், பெரிய நாடுகள் அவற்றின் மின்னணு கழிவுகளை அவ்வப்போது கடலில் கொட்டி விடுவதாக செய்திகள் அவ்வப்போது வருவதை பார்க்கலாம். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நியூயார்க்கில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது- இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கு எதையும் செய்யவில்லை. இந்த நாடுகளில் வெளியாகும் குப்பைகள், தொழிற்சாலை கழிவுகள் போன்றவை கடலில் கொட்டப்படுகின்றன. அவை மிதந்து மிதந்து அமெரிக்க நகரங்களுக்கு வந்து விடுகின்றன. பருவ நிலை மாற்றம் என்பது மிகப்பெரும் சவால். இதனை எதிர்கொள்ள பல வழிகளை கையாண்டு வருகிறோம். இது தொடர்பாக பாரிசில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் என்பது ஒரு தரப்பினருக்கு மட்டுமே சாதகமாக இருந்தது. அதனை நாம் ஏற்றுக் கொண்டு விட்டால் ஒரு சில ஆண்டுகளில் நம்முடைய தொழில்களை  மூடிவிட்டு போவதுதான் முடிவாக இருக்கும்.  பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஏராளமான அமெரிக்கர்களின் வேலையை பறித்துள்ளது. சுற்றுச் சூழலை நாசம் செய்பவர்களை  பாதுகாக்கும் கருவியாக இந்த ஒப்பந்தம் அமைந்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் 2030-ம் ஆண்டு வரைக்கும் சீனாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ரஷ்யாவை 1990-ம் ஆண்டுகளுக்கு கொண்டு சென்று விடும்.  ஒப்பந்தப்படி இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு நாம் பண உதவி செய்ய வேண்டும். அப்படிப் பார்த்தால் நாமே வளர்ந்து வடும் நாடுதான் என்று நான் கூறுவேன். இவ்வாறு ட்ரம்ப் பேசினார். 2015-ல் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி  இந்தியா உள்பட 188 நாடுகள் உலக வெப்பமயமாதலை எதிர்த்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு எதிராக இருப்பதாக கூறி அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். எதிர்வரும் 2020 நவம்பர் 4-ம்தேதிக்குள் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து முழுமையாக வெளியேறி விடும்.  https://www.ndtv.com/tamil/donald-trump-says-garbage-dropped-by-china-india-russia-into-sea-floats-into-los-angeles-2131930?pfrom=home-topscroll