Jump to content

1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....

 

கடந்த 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆறாவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி இலங்கை அணி முதல் தடவையாக சம்பியனானது.

ranatunga_fbsport_647_041916045122.jpg

* இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெற்றது.

* கிண்ணத்தின் பெயர் - வில்ஸ் உலகக் கிணண்ம் ( Wills world cup)

* 26 மைதானங்களில் மொத்தமாக 37 போட்டிகளில் 

* 12 அணிகள் கலந்துகொண்டன (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து, நியூஸிலாந்து, சிம்பாப்வே ஆகிய நாடுகளுடன் தேர்வு அந்தஸ்துப் பெறாத ஐக்கிய அரபு எமிரகம், கென்யா, நெதர்லாந்து)

உலக கோப்பை போட்டியில் 10 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது இதுவே முதல் முறையாகும். போட்டியில் கலந்து கொண்ட 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டன. 

இலங்கை, அவுஸ்திரேலியா, இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள், சிம்பாப்வே, கென்யா அணிகள் 'A' பிரிவிலும், தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமீரகம், நெதர்லாந்து அணிகள் ‘‍B’ பிரிவிலும் இடம் பெற்றன. 

* லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

  • குழு 'A' யின் லீக் போட்டி முடிவுகள் :

இலங்கை 5 போட்டிகளில் விளையாடி ஐந்திலும் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடம்.

அவுஸ்திரேலியா 5 போட்டிகளில் விளையாடி 3 இல் வெற்றியையும், 2 இல் தோல்வியையும் சந்தித்து 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடம்.

இந்தியா 5 போட்டிகளில் விளையாடி 3 இல் வெற்றியையும், 2 இல் தோல்வியையும் சந்தித்து 6 புள்ளிகளுடன் மூன்றாம் இடம்.

மே.இ.தீவுகள் 5 போட்டிகளில் விளையாடி 2 இல் வெற்றியையும், 3 இல் தோல்வியையும் சந்தித்து 4 புள்ளிகளுடன் நான்காவது இடம்.

சிம்பாப்வே 5 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியையும், 4 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து 2 புள்ளிகளுடன் ஐந்தாவது இடம்.

கென்யா 5 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியையும், 4 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து 2 புள்ளிகளுடன் ஆறாவது இடம்.

a.JPG

  • குழு '‍B' யின் லீக் போட்டி முடிவுகள் :

தென்னாபிரிக்க ஐந்து போட்டிகளில் விளையாடி ஐந்திலும் வெற்றிபெற்று, 10 புள்ளிகளுடன் முதல் இடம்.

பாகிஸ்தான் ஐந்து போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும் ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் இரண்டம் இடம்.

நியூஸிலாந்து ஐந்து போட்டிகளில் விளையாடி 3 இல் வெற்றியையும், 2 இல் தோல்வியையும் தழுவி 6 புள்ளிகளுடன் மூன்றாம் இடம்.

இங்கிலாந்து 5 போட்டிகளில் விளையாடி 2 இல் வெற்றியையும், 3 இல் தோல்வியையும் சந்தித்து நான்காவது இடம்.

ஐக்கிய அரபு எமிரெட்ஸ் 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியையும், 4 இல் தோல்வியையும் சந்தித்து 2 புள்ளிகளுடன் ஐந்தாவது இடம்.

நெதர்லாந்து 5 போட்டிகளில் விளையாடி, ஐந்திலும் தோல்வியை சந்தித்து புள்ளிகள் எதையும் பெறாது ஆறாவது இடம்.

b.JPG

லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் காலிறுக்கு தகுதி பெற்றன. குழு 'A' யில் இலங்கை, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் மே.தீ.வுகள் அணிகளும், குழு 'B'  யில் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும் காலிறுதிக்குள் நுழைந்தன.

குழு 'A' யின் லீக் சுற்றில் அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இலங்கையில் போதிய பாதுகாப்பு இல்லை என்று காரணம் காட்டி இலங்கை வந்து விளையாட மறுத்தமையினால் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இலங்கை காலிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை உறுதி செய்ததமையும் குறிப்பிடத்தக்கது.

1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி காலிறுதியில் இரண்டு போட்டிகள் இடம்பெற்றன.

இங்கிலாந்து - இலங்கை

இங்கிலாந்து 235/8 (50 overs)

இலங்கை 236/5 (40.4 overs)

5 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்ற இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா 287/8 (50 overs)

பாகிஸ்தான் 248/9 (49 overs)

39 ஓட்டங்களினால் வெற்றிபெற்ற இந்தியா அணி அரையிறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி காலிறுதியில் இரண்டு போட்டிகள் இடம்பெற்றன.

மே.இ.தீவுள் - தென்னாபிரிக்கா

மே.இ.தீவுகள் 264/8 (50 overs)

தென்னாபிரிக்கா 245 (49.3 overs)

19 ஓட்டத்தினால் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அரையிறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

நியூஸிலாந்து - அவுஸ்திரேலியா

நியூஸிலாந்து 286/9 (50 overs)

அவுஸ்திரேலியா 289/4 (47.5 overs)

6 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

காலிறுதிப் போட்டிகளின் முடிவில் இலங்கை, இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்ற முதல் அரையிறுதிப் போட்டி : இலங்கை - இந்தியா

இலங்கை 251/8 (50 overs)

இந்தியா 120/8 (34.1 overs)

கொல்கத்தாவில் இடம்பெற்ற இப் போட்டியில் இந்திய அணி 31.1 ஓவருக்கு 8 விக்கெட்டினை இழந்து 120 ஓட்டங்களை பெற்று தோல்வியை நோக்கி சென்றது.

ஆத்திரமடைந்த இந்திய ரசிகர்கள் மேற்கொண்ட கலவரத்தினால் போட்டியை தொடர்ந்தும் கொண்டு செல்ல முடியாது. இடையில் நிறுத்தியதுடன் இலங்கை அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டி : அவுஸ்திரேலியா - மே.இ.தீவுகள்

அவுஸ்திரேலியா 207/8 (50 overs)

மே.இ.தீவுகள் 202 all out (49.3 overs)

5 ஓட்டத்தினால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூரில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜூனா ரணதுங்கா தலைமையிலான இலங்கையும், மார்க் டெய்லர் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிகளும் மோதின.

 

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ஓட்டங்களை குவித்தது. 

அவுஸ்திரேலிய அணி சார்பில் மார்க் டெய்லர் 74 ஓட்டத்தையும், ரிக்கி பொண்டிங் 45 ஓட்டத்தையும் மைக்கல் பெவன் 36 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை  அணி சார்பில் அரவிந்த டிசில்வா 3 விக்கெட்டுகளையும், முரளிதரன், சமிந்தவாஸ், குமார் தர்மசேன மற்றும் சனத் ஜெயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

242 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி ஆரம்பித்த இலங்கை அணி அணி 46.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 245 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Capture.JPG

இலங்கை  அணி சாரபில் அரவிந்த டிசில்வா 107 ஓட்டங்களையும், குருசிங்க 65 ஓட்டத்தையும், அர்ஜூன  ரணதுங்க 47 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பிளம்மிங் மாத்திரம் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி முதல் முறையாக உலக கிண்ணத்தை முத்தமிட்டது. 

sri-lanka_650_013015064518.jpg

* போட்டியின் ஆட்டநாயகனாக 107 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்ற அரவிந்த டிசில்வா தெரிவானார்.

* தொடரில் அதிக ஓட்டம் - இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் (523 ஓட்டம்)

* தொடரில் அதிக விக்கெட் - இந்திய அணியின் அனில் கும்லே ( 15 விக்கெட்)

*  இந்த தொடரில் லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான மேற்கிந்தியத்தீவுள் அணி 1996 ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக இடம்பெற்ற லீக் போட்டியில் 73 ஓட்டங்களினால் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

*  கடந்த 5 உலக கோப்பை போட்டிகளில் மொத்தம் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று இருந்த இலங்கை அணி இந்த போட்டியில் பெரும் எழுச்சி பெற்று அசத்தியதுடன், ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்ல‍ை.

*  1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் திகதி இடம்பெற்ற லீக் போட்டியொன்றில் கென்னிய அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 398 ஓட்டங்களை குவித்தது. இது ஒரு நாள் போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஓட்டமாக 2006 ஆம் ஆண்டு வரை நீடித்தது.

*  1996 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தகதி இடம்பெற்ற லீக் போட்டியொன்றில் ஐக்கிய அரபு எமிரட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி வீரர் கேரி கிரிஸ்டன் 159 பந்துகளை எதிர்கொண்டு 13 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்கலாக 188 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இது உலக கோப்பை போட்டியில் தனிநபரின் அதிகபட்ச ஓட்டமாக நீண்ட காலம் நீடித்தது. எனினும் 2015 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இந்த சாதனையை மேற்கிந்தியத் தீவுவகள் அணியின் கிறிஸ் கெய்ல், நியூஸிலாந்தின் மார்ட்டின் குப்தில் ஆகியோர் தகர்த்தனர்.

*  கடந்த 1992 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் முதல் 15 ஓவர்களில் களத்தடுப்பு கட்டுப்பாடு முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதனை இத் தொடரில் இலங்கை அணி சாதகமாக பயன்படுத்தி, கிரிக்கெட்டில் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

 

(தொகுப்பு : ஜெ.அனோஜன்)

http://www.virakesari.lk/article/56725

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.