யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
ரதி

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது !

Recommended Posts

வடக்கு முஸ்லிம்களை பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். முஸ்லிம் தலைமைகளையோ மக்களையோ தண்டிப்பதைக் கூட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அதனை அவர் கொள்கையாக ஏற்று இறுதிவரையில் உறுதியாக இருந்தார்.

எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஏப்ரல் 11இல் அறிவிக்கப்பட்டிருந்தது. சர்வதேச ஒத்துழைப்புடன் தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அதுகுறித்த முழமையான விடயங்களை கண்டறியாத வரையில் இலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் தொடரும் நிலைமையே உள்ளது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

 

விடுதலைப்புலிகள் கூட தமது தாக்குதல்களை வெசாக், ஈஸ்டர் போன்ற பண்டிகை நாட்களில் நடத்துவதில்லை. தற்போதைய தாக்குதல் கல்வி கற்ற, செல்வந்தர்களால் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருக்கின்றது. இதனை திட்டமிடுவதற்கு இரண்டு ஆண்டுகளாவது தேவைப்பட்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வி வருமாறு,

கேள்வி:- ஈஸ்டர் தாக்குதல்கள் நிறைவடைந்து ஒருமாதமாகின்ற நிலையில் கிழக்கு மாகாண அன்றாட நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன?

பதில்:- தாக்குதல்கள் நடைபெற்று சரியாக ஒருமாதம் நிறைவடையும் தருணத்தில் கிழக்கு மாகாணம் மட்டுமன்றி முழு இலங்கையுமே அச்சமான சூழலுக்குள்ளே இருக்கின்றது. தேசிய அளவில் ஊடுருவப்பட்டு இத்தகைய தாக்குதலொன்று நடத்தப்பட்டிருப்பதை அரசாங்கம், புலனாய்வு, படைத்தரப்பினர் அறிந்திருக்கவில்லை என்பது வேடிக்கையானதும், வேதனையானதுமான விடமாகும்.

அரசாங்கத்தின் ஒட்டுமொத்த தவறே இந்த தாக்குதல் இடம்பெறுவதற்கு காரணமாகவும் இருக்கின்றது. எந்தவிமான இலக்குமற்ற சர்வதேச முஸ்லிம் தீவிரவாதத்தின் பிடிக்குள் இலங்கையும் உள்ளாகியுள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் அன்றாட செயற்பாடுகளில் ரூடவ்டுபடுவதற்கு கூட மிகுந்த அச்சமாகியுள்ள நிலைமை தான் உள்ளது.

கேள்வி:- ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை திட்டமிடுவதற்கு குறிப்பிட்ட காலம் அவசியப்பட்டிருக்குமல்லவா?

பதில்:- விடுதலைப்புலிகள் கூட தங்களது தாக்குதல்களை வெசாக்ரூபவ் ஈஸ்டர் அல்லது பொதுமக்கள் ஒன்றுகூடும் தருணங்களில் மேற்கொள்வது கிடையாது. ஆனால் தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் அவ்வாறு இல்லை. பொதுமக்களை இலக்குவைத்து திட்டமிட்டே நடத்தப்பட்டிருக்கின்றது.

தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் கல்விகற்ற, செல்வந்தர்களே பங்கேற்றுள்ளார்கள். அவர்களின் மத்தியில் ஏற்பட்ட சிந்தனையில் இருந்து தான் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆகக்குறைந்தது இந்த தாக்குதல்களுக்கான திட்டமிடல்களுக்கு இரண்டு ஆண்டுகளாவது தேவைப்பட்டிருக்கும்.

கேள்வி:- இலங்கைக்கு தொடர்ந்தும் தீவிரவாத அச்சுறுத்தல் காணப்படுகின்றதா?

பதில்:- அரசாங்கமும், படைத்தரப்பும் நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டதாகவும் கைதுகளைச் செய்து விசாரணைகளைச் செய்கின்றோம் என்று கூறினாலும் சர்வதேச ஒத்துழைப்புடன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால் அதுகுறித்த விடயங்களை முழுமையாக கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாத வரையில் தொடர்ந்தும் அச்சுறுதல் காணப்படுகின்றது என்று தான் கூறவேண்டியுள்ளது.

கேள்வி:- தாக்குதல்கள் குறித்த தகவல்கள் பாதுகாப்புத்தரப்பினால் 

முன்கூட்டியே அறியப்பட்டதாக கூறப்படுகின்றதே?

பதில்:- போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகளாக இலங்கைத்தீவிலே எந்தவிதமான வெடிச்சத்தங்களுக்கே இடமிருந்திருக்கவில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பும் சிறப்பாகவே இருந்தது. ஆனால் 2015இல் ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னர் தேசிய பாதுகாப்பு நலிவுற ஆரம்பித்தது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்ட பின்னர் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் முழுமையாக உடைத்தெறியப்பட்டன. வாராவாரம் நடைபெறும் பாதுகாப்புச்சபை கூட்டத்தில் பிரதமர் ஆறுமாதமாக அழைக்கப்படவில்லை என்று தற்போது கூறுகின்றார். தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூறுவதலிருந்து விலகுவதற்காக தற்போது எனக்குதெரியாது என்று கூறி பந்துபரிமாற்றமே செய்கின்றார்கள்.

ஏப்ரல் 11ஆம் திகதி பொலிஸ்தலைமையகத்திலிருந்து தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அதில் கிழக்கினைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம்களே தாக்குதல்களை நடத்தப்போகின்றார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்தக்கடிதம் பிரபுக்களின் பாதுகாப்பு கட்டமைப்புள்ள அனைவருக்கும் அனுப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில் தற்போது யாருக்கும் தெரியாது என்று கூறுவதும் ஜனாதிபதிரூபவ் பிரதமர் தமக்குத்தெரியாது என்று கையை விரிப்பதும் தான் வேடிக்கையாக இருக்கின்றது.

கேள்வி:- பாதுகாப்புக்கான எச்சரிக்கை கடிதம் உங்களுக்கு கிடைத்தவுடன் அதுகுறித்த எவ்விதமான நடவடிக்கைகையையும் எடுக்கவில்லையா?

பதில்:- பொலிஸ் தலைமையத்திலிருந்து பிரபுக்கள் பாதுகாப்பான பிரிவினால் தான் அந்த்கடிதம் எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கே அனுப்பட்டிருந்தது. அவர்கள் அக்கடிதத்தினை என்னிடம் காட்டினார்கள். அவர்கள் குறித்த தினத்தில் என்னை வெளியில் செல்வதை தவிர்த்திருக்குமாறு கோரினார்கள். எனது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பட்டினையே அவர்கள் மேற்கொண்டார்கள்.

கேள்வி:- கிழக்கைச் சேர்ந்த இருவர் தாக்குதலில் ரூடவ்டுபடவுள்ளதாக கூறப்பட்டிருந்ததாக கூறினீர்களே?

பதில்:- ஆம், குறித்த கடிதத்தில் புதிய காத்தான் குடியைச் சேர்ந்த இரு முஸ்லிம் நபர்களான சஹ்ரான்ரூபவ் ரில்வான் ஆகியோர் தாக்குதலில் ரூடவ்டுபடவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் எங்கு தாக்குதல்களை செய்யப்போகின்றார்கள் என்ற தகவல்கள் எதுவும் சொல்லப்பட்டிருக்கவில்லை. எமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கூறப்பட்டிருந்தது.

கேள்வி:- கிழக்கினைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்களில் ஈடுபடப்போகின்றார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்த நிலையில் நீங்கள் அம்மாகாணத்தினைச் சேர்ந்தவர், ஒரு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அதுகுறித்து ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியுமல்லாவா?

பதில்:- பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்பின் தலைமை அதிகாரியால் அப்பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கட்டளையே அதுவாகும். அதுகுறித்து நாம் கேள்விகளை எழுப்ப முடியாது. ஆனால் எட்டு மாதங்களுக்கு முன்னதாக நான் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில்ரூபவ் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்பதை வெளிப்படுத்தியிருந்தேன்.

கேள்வி:- தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்ற விடயத்தினை எந்த அடிப்படையில் முன்வைத்திருந்தீர்கள்?

பதில்:- அரசாங்கம் நாட்டின் தேசிய புலனாய்வுக்கட்டமைப்பினை உடைக்கின்றார்கள். இதனால் தேசிய பாதுகாப்பு பாரிய அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்ப

தை சுட்டிக்காட்டியிருந்தேன். அதுமட்டுமன்றி இலங்கையினுள் ஐ.எஸ் தீவிர ஊடுருவல்கள் இருந்துள்ளதாகவும் காத்தான்குடியை மையப்படுத்திய சில அமைப்புக்களின் போக்குகளில் மாற்றங்கள் காணப்படுகின்றதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. ஆனால் அவை குறித்து அரசாங்கம் கவலையீனமாகவே இருந்துள்ளது.

கேள்வி:- இத்தாக்குதலுக்கு எத்தகைய வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன? அவற்றை உள்நாட்டில் இலகுவாக உற்பத்தி செய்திருக்க முடியுமா?

பதில்:- தீவிரவாதத்தின் முதலாவது தாக்குதலுக்கே விடுதலைப்புலிகள்ரூபவ் மற்றும் படையினர் பயன்படுத்திய அதியுச்ச சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. படையினர் பயன்படுத்தும் ஆர்.டி.எக்ஸ் மற்றும் விடுதலைப்புலிகள் பயன்படுத்தும் சி -4 ஆகிய வெடிமருந்துகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை பாரியளவில் உபயோகிக்கப்பட்டுள்ளன. இவை எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பதை முதலில் கண்டறிய வேண்டும். நிச்சயமாக இந்த வெடிபொருட்கள் வெளிநாட்டிலிருந்து தான் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அதுகுறித்த முழுமையான தகவல்களை பெறவேண்டியது அவசியமாகின்றது.

கேள்வி:- கிழக்கில் வஹாப் சிந்தனை தலைதூக்கப்பட்டு தற்போது மதத்தின் பெயரால் தீவிரவாதமாக உக்கிரமடைந்துள்ளது என்ற கருதுகோளை ஏற்கின்றீர்களா?

பதில்:- இதனை விரிவாக பார்த்தால், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு முஸ்லிம்கள் மறறும் சர்வதேச மட்டத்தில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு தவறாக பிரதிபலிக்கப்படுகின்றது. குறித்த முடிவு எடுக்கப்பட்டபோது நானும் விடுதலைப்புலிகள் அமைப்பின் அங்கதவராக பணியாற்றிய ஒருவன் என்ற அதற்கான காரணத்தினை நன்கு அறிந்திருந்தேன்.

வடக்கு முஸ்லிம்களை பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் அன்று பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். விசேடமாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இனமுறுகலொன்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சிறந்த முறையில் திட்டமிட்டே அத்தகைய முடிவொன்றை எடுத்திருந்தார்.

தற்போதை அர்த்தப்படுத்தல்களின் பிரகாரம் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்றால் பலம்பொருந்திய கட்டமைப்பினைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளுக்கு வடக்கில் வாழ்ந்த அத்தனை முஸ்லிம்களையும் அழிப்பதற்கு இருபது விநாடிகள் போதுமாக இருந்தது.

ஆனால் விடுதலைப்புலிகள் வடக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பில் கரிசனை கொண்டிருந்தமையால் தான் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினார்கள். தமிழ் முஸ்லிம் இன ஐக்கியத்தினை பேணுவதற்காகவே அந்த செயற்பாடு இடம்பெற்றிருந்தது.

அதேநேரம் காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களில் பல மர்மங்கள் உள்ளன. அதேபோன்று முஸ்லிம்களால் பல தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே பழைய விடயங்களை மீண்டும் கிளறிப்பார்க்க வேண்டியதில்லை. இருந்தாலும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட தமிழ் அரசியல் தலைவர்களும் சிறந்த வெளிப்பாடுகளையே காட்டிவந்துள்ளார்கள். தற்போது வரையில் அதனை பேணிக்கொண்டே வருகின்றார்கள்.

மேலும் இலங்கையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சமயத்தவர்களை மையப்படுத்தியே தற்கொலைத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அதனை விடுதலைப்புலிகள் மற்றும் முஸ்லிம் தரப்புக்கிடையிலான விடயத்தினை மையப்படுத்தி ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஆரசியல் குளிர்காய நினைப்பவர்களே விடுதலைப்புகளை இத்தாக்குதலுடன் தொடர்பு படுத்த முனைகின்றார்கள். ஆகவே விடுதலைப்புலிகள் விடயத்தினை தவிர்த்து, சர்வதச தீவிரவாதம் என்ற அடிப்படையில் நோக்கினால் தான் இதனை முற்றாக களையலாம்.

விடுதலைப்புலிகள் அமைப்புடன் கருத்து முரண்பாட்டின் அடிப்படையில் நான் வெளியேறியிருந்தாலும் தலைவர் பிரபாகரன் மீது பொய்யாக ஒருபோதும் குற்றம்சாட்ட முடியாது. நான் இராணுவத்தளபதியாக செயற்பட்டிருந்த காலப்பகுதியில் ஒரு முஸ்லிம் நபரைக் கூட தண்டிப்பதற்கு எமக்கு உத்தரவிட்டதுமில்லை. அனுமதித்ததும் இல்லை. இறுதிவரையில் அவர் அவ்வாறான நிலைப்பாட்டுடன் தான் இருந்தார். அரசியல் குளிர்காய்வதற்காக உண்மைகளை மறைக்க முடியாது.

கேள்வி:- காத்தான்குடி, ஏறாவூர் சம்பவங்களின் பின்னர் ஹிஸ்புல்லா முஸ்லிம்களின் பாதுகாப்பதற்காக இலங்கை அரசிடமிருந்து ஆயுதங்களை பெற்றிருந்தார் என்பதை நீங்கள் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு அறிந்திருந்ததா?

பதில்:- ஆம், அது வெளிப்படையான தகவல். ஹிஸ்புல்லா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தான் முஸ்லிம் ஊர்காவல் படை உருவாக்கப்பட்டது. இதற்கு இலங்கை அரசாங்கமே ஆயுதங்களை வழங்கியிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட ஆயுதங்களின் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ் பெண்கள் பதிப்புக்குள்ளானார்கள்.

கேள்வி:-ஹிஸ்புல்லா தனது தலைமையில் மீராவோடை, மாஞ்சோலை கிராமங்களில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்ட பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுத்தபோது விடுதலைப்புலிகள் அவரை இலக்கு வைத்ததாக கூறுகின்றரே?

பதில்:- முஸ்லிம் தலைவரை இலக்கு வைப்பதையோ முஸ்லிம் மக்களின் மத்தியில் பதற்றத்தினை ஏற்படுத்துவதையோ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை. அதனை கொள்கையாகவும் வகுத்து பற்றுறுதியாக செயற்பட்டு வந்திருந்தார். தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அவர் என்றுமே விரும்பியது கிடையாது அதுவே அவருடைய முடிவாகவும் இருந்தது. இதனைவிடவும் தமிழ் முஸ்லிம் இன உறவைப் பேணுவதற்கான பலபேச்சுக்கள் விடுதலைப்புலிகளுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக மு.கா தலைவர் ஹக்கீமை வன்னிக்கு அழைத்து தலைவர் பிரபாகரன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். அப்பேச்சுக்களின்போது நானும் கலந்துகொண்டிருந்தேன். அதன்போது தலைவர் பிரபாகரன் நாங்கள் உரிமைகளுக்காக போராடுகின்றோம். நீங்களும் தமிழ் பேசுகின்ற சமுகம் ஆகவே உங்களுக்கு தேவையான ஒத்தாசைகளை வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம் என்று தான் ஹக்கீமிடம் கூறினார். மாறாக முஸ்லிம்களுக்கும் தானே தான் தலைவர் என்று கூறவில்லை.

கேள்வி:- கிழக்கு ஆளுநராக இருக்கும் ஹிஸ்புல்லாவின் அரசியல் நகர்வுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- கிழக்கு மாகாணத்தில் ஹிஸ்புல்லா, அலிசாஹிர் மௌலானா, அமீர் அலி என அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளுடன் நீண்ட காலமான நட்பு உறவுகள் எனக்கு உள்ளன. ஆனால் அரசியல் ரீதியாக முஸ்லிம் ஏகாதிபத்தியத்தினை நான் எதிர்த்தே வந்திருக்கின்றேன்.

ஹிஸ்புல்லாவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டவுடன் அதற்கு எதிராக கையெழுத்து வேட்டையை நடத்தினேன். இரண்டாயிரம் கையொப்பத்துடன் அவரை நீக்கும் கோரிக்கையை ஜனாதிபதி,பிரதமருக்கு அனுப்பி வைத்தபோதும் அதற்கு இதுவ

ரையில் எவ்விதமான பதிலும் அளிக்கப்படவில்லை. முன்னதாக பல்கலைக்கழகத்தினை நிர்மானிப்பதற்கான ஆரம்பச் செயற்பாடுகளை முன்னெடுத்தபோதே நான் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தேன்.

ஹிஸ்புல்லா அதிகாரத்தினை பயன்படுத்தி காணி சுவீகரிப்புக்கள், அரச நியமனங்களை பெருமளவில் செய்து வருகின்றார். குண்டுவெடிப்பின் சூத்திரதாரியான சஹ்ரானுடன் கைலாகு கொடுத்திருக்கின்றார். ஓட்டமாவடியில் இந்துக்கோவிலுக்கான காணி சுவீகரிப்பு, அமைச்சு அதிகாரத்தினைப் பயன்படுத்தி நீதிபதியை இடமாற்றியமை ஆகியவற்றை பகிரங்கமாகவே மேற்கொண்டுள்ளார். இவ்வாறு அதிகாரத்தினை கோலோச்சுவதற்காக பயன்படுத்தும் ஒருவர் ஆளுநராக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால் இத்தனை விடயங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிந்திருந்தோம் அவர் மீது எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமலிருக்கின்றார். அதற்கான பின்னணியை எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கேள்வி:- ஒக்டோபர் 26 அரசியல் புரட்சிக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை நிராகரித்தமையின் எதிரொலியாகவே கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றதே?

பதில்:- அதுவொரு புறமிருக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைபிடமும் தவறுகள் உள்ளன. கிழக்கில் தீவிரவாதம் தோன்றுவதற்கு கூட்டமைப்பே அத்திவாரமிட்டது. கிழக்கு மாகாணத்தில் ஏழு ஆசனங்களைக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸிடம், 11ஆசனங்களைப் பெற்றிருந்த கூட்டமைப்பு ஆட்சியைக் கையளித்தது. ஹாபீஸ் நஸீர் முதலமைச்சராகி பாரிய ஆதிக்கத்தினைச் செலுத்தினார்.

அப்போது கூட்டமைப்பு தட்டிக்கேட்கவில்லை. குண்டுத்தாக்குதலின் பின்னரே கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குரலெழுப்புகின்றார்கள். அன்று நாங்கள் வீதியிலிறங்கிப்போரடிய போது இவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். கருத்துக்களை முன்வைப்பதற்கு திராணி இருந்திருக்கவில்லை. கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சரி அதிலிருந்து வெளியேறியவர்களும் சரி தவறுகளைச் செய்துவிட்டு இப்போது கோசமிடுவதால் பயனில்லை.

 

(நேர்காணல்:- ஆர்.ராம்)

 

Share
 

http://www.virakesari.lk/article/56761?fbclid=IwAR3coU8BXthlJ3siTtV8NitzXt8aMgn6zNZNaHh98X-mL4PlM1JMiZlXAB0

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கனகாலத்துக்கு பிறகு சும்மான் அழ தொடங்கி உள்ளார்  இந்த திரி கொழுந்துவிட்டு எரியும் அதற்கு வாழ்த்துக்கள் .

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

அம்மானுக்கு உண்மையிலயே மு னாக்களை பிடிக்காது.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இவர் இயக்கத்தை விட்டு ஓடிய போது... இவரை பாதுகாப்பாக கொழும்புக்கு கொண்டு போனதே முஸ்லிம் தான். ஏன் இந்த இயக்க பிளவுபடுதலுக்கான தூண்டுதல்களை தாமே வழங்கியதாக மார்த்தட்டிய முஸ்லிம்கள் உண்டு.

தலைவர் முஸ்லிம்களை மதித்தார் என்பது உண்மை. ஆனால் தலைவருக்கு முதுகில் குத்தியோரில்.. இவர்களும் அடக்கம். அது.. மாவிலாறு சண்டை ஆரம்பித்த கையோடு மூதூர் கைப்பற்றப்பட்ட போதும் நிகழ்ந்தது. அன்று மூதூரில்.. முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்கி இருந்தால்... மாவிலாறு சண்டையின் போக்கே மாறி இருக்கும். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அவர் என்றுமே விரும்பிது கிடையாது

புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றதற்கு இவர் சொன்ன முதற்காரணம் வடக்கு கிழக்கு என்று போராளிகள் மக்களிடையே இயக்கத்தலைமினால் பிரிவினை காண்பிக்கப்படுகிறது என்ற பிரதேசவாதமே.

இன்று அதே வாயால் தலைமை என்றுமே அப்படி நினைத்ததில்லை என்று எப்படி சொல்லமுடிகிறது?

அன்று/தமிழர்களிடையே சிண்டுமுடிந்து  தனது எச்சில் பிழைப்பை ஓட்டியவர்,இன்று முஸ்லீம்களால்மேற்கொள்ளப்பட்ட ஈனசெயலை கையில் எடுத்து தமிழர்களிடம் கை தட்டல் வாங்கி தன் அரசியல் இருப்பை உறுதியாக்க பார்க்கிறார்.

யுத்தம் முடிந்து மஹிந்த குடும்பம் கோலோச்சிய காலஙகளில் இறந்த பொதுமக்கள் போராளிகளை நினைவு கூர்வதையே பயஙகரவாத ஆதரவு என்று.பிரகடனம் செய்த ஒரு கட்சிகுடும்பத்திலிருந்தபடி எப்படி இன்று பிரபாகரன் புகழ்பாட இவரால் முடிகிறது?

இதை எமது இனத்தின் இருப்புக்காக குரல் கொடுக்கிறார் என்று யாரும் சொன்னால் இவரின்  எஜமான மஹிந்தர் குடும்பமே மூக்கால் சிரிக்கும்

அவர் தனது பிழைப்பிற்க்காகவும் தனது சிங்கள தலமையின் அரசியல் பலத்திற்காகவும் தமிழர் மனஙகளை வெல்கிறாராமாம்.

எவன் வீடு எரிந்தாலும் அதில் நான் பீடி பத்த வைக்க முடியுமா என்று சிந்திக்கும் அரசியல் சாணக்கியத்தில்  அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கெல்லாம் அம்மான் அப்பன்.

Share this post


Link to post
Share on other sites

சமஸ்டியை கருணாவுக்கு அறிமுகப்படுத்தினதே திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தான்...  பிரச்சனையின் மூலம் அதிலிருந்து தான் ஆரம்பமாச்சுது...சமஸ்டியை தலைவர் ஏத்திருந்தால்  மு.வாய்க்கால்  வந்திருக்காது என்பது ஒரு புறம் இருக்க ...சமஸ்டியை அறிமுகம் செய்த பாலசிங்கத்தை மாவீரர் என்று சொல்லி மரியாதை செய்கிறீர்கள்...ஆனால்  அவரது சொற் கேட்டு நடந்த கருணா துரோகி 

Share this post


Link to post
Share on other sites
16 minutes ago, ரதி said:

சமஸ்டியை கருணாவுக்கு அறிமுகப்படுத்தினதே திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தான்...  பிரச்சனையின் மூலம் அதிலிருந்து தான் ஆரம்பமாச்சுது...சமஸ்டியை தலைவர் ஏத்திருந்தால்  மு.வாய்க்கால்  வந்திருக்காது என்பது ஒரு புறம் இருக்க ...சமஸ்டியை அறிமுகம் செய்த பாலசிங்கத்தை மாவீரர் என்று சொல்லி மரியாதை செய்கிறீர்கள்...ஆனால்  அவரது சொற் கேட்டு நடந்த கருணா துரோகி 

வைத்தியர் மூர்த்தி என்று ஒருவர் டூட்டிங்கில் இருந்து வேலை செய்தாரே நினைவிருக்கா ரதி.  அவரையே மாவீரர் என்று கூறி மாவீரர் நாள் படங்களுடன் வைத்திருந்தார்கள். 

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வைத்தியர் மூர்த்தி என்று ஒருவர் டூட்டிங்கில் இருந்து வேலை செய்தாரே நினைவிருக்கா ரதி.  அவரையே மாவீரர் என்று கூறி மாவீரர் நாள் படங்களுடன் வைத்திருந்தார்கள். 

ஆமாம் தெரியும் ...அவரை மாவீராக்கினது தெரியாது 

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, ரதி said:

ஆமாம் தெரியும் ...அவரை மாவீராக்கினது தெரியாது 

எனக்கே மாவீரர்கள் என்றால் யார் என்று சந்தேகம் வந்திட்டிது அங்கு வைத்திருந்த சிலரின் படங்களை பார்த்ததும்.😀:innocent:

 

Share this post


Link to post
Share on other sites
30 minutes ago, ரதி said:

தலைவர் ஏத்திருந்தால்  மு.வாய்க்கால்  வந்திருக்காது என்பது ஒரு புறம் இருக்க ...சமஸ்டியை அறிமுகம் செய்த பாலசிங்கத்தை மாவீரர் என்று சொல்லி மரியாதை செய்கிறீர்கள்...ஆனால்  அவரது சொற் கேட்டு நடந்த கருணா துரோகி 

கருணா இயக்கத்தில் பிளவை ஏற்படுத்தியது தவறு என்றும் பாலசிங்கம் சொல்லியிருந்தார். அந்த சொல்லை ஏன் கருணா ஏற்கவில்லை.

விடுதலை அமைப்பொன்றை சிதைத்து தன்னோட அலுவல் பாக்கிறதைவிட பேசாமல் அவர் பாலியல் தொழில் செய்திருக்கலாம் என்று மாவீரர்நாளில் பகிரங்கமாகவே அறிவித்தார் பாலசிங்கம்,,

ஆக அவரை துரோகியென்று இயக்க தலைமைகளில்  புலம்பெயர் சமூகத்தின்முன் அறிவித்தது சாட்சாத் பாலசிங்கமேதான்.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கே மாவீரர்கள் என்றால் யார் என்று சந்தேகம் வந்திட்டிது அங்கு வைத்திருந்த சிலரின் படங்களை பார்த்ததும்.😀:innocent:

 

அவரை நாட்டுப்பற்றாளர் என்று தகுதியளித்ததுதான் நிகழ்ந்தது என்று நினைக்கிறேன்.

நாட்டுப்பற்றாளர்களை... மாமனிதர்களை.. மாவீரர்களோடு வைத்திருந்ததில் தவறில்லை தானே. ஏன் இந்த முட்டையில் மயிர்புடுங்கல். மாவீரர் பட்டியலில்.. குட்டிமணி.. தங்கத்துரை போன்றோரும்.. பொன் சிவக்குமரன் போன்றோரும் உள்வாங்கப்பட்டிருந்தனர். 

அதுவும் மூர்த்தி போன்றோர்.. வெண்புறா அமைப்பினூடு தாயகத்தில் கண்ணிவெடி அகற்றுவது.. மக்களை அறிவூட்டுவதில்.. புலம்பெயர் சமூகத்தினூடாகப் பல பணிகளை ஆற்றி இருக்கிறார். அவர் நாட்டுப்பற்றாளர் என தகுதியடைய நிறையவே தகுதிகளைக் கொண்டிருந்தார். 

குறிப்பாக புலம்பெயர் தேச தமிழ் இளையோருக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தவர். 

திருத்தம்: மாமனிதர் அல்ல நாட்டுப்பற்றாளர் என்றே தகுதியளிக்கப்பட்டுள்ளார். 

Edited by nedukkalapoovan
 • Like 2

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, nedukkalapoovan said:

அவரை மாமனிதர் என்று தகுதியளித்ததுதான் நிகழ்ந்தது என்று நினைக்கிறேன்.

மாமனிதர்களையும் மாவீரர்களோடு வைத்திருந்ததில் தவறில்லை தானே. ஏன் இந்த முட்டையில் மயிர்புடுங்கல். மாவீரர் பட்டியலில்.. குட்டிமணி.. தங்கத்துரை போன்றோரும்.. பொன் சிவக்குமரன் போன்றோரும் உள்வாங்கப்பட்டிருந்தனர். 

அதுவும் மூர்த்தி போன்ரோர்.. வெண்புறா அமைப்பினூடு தாயகத்தில் கண்ணிவெடி அகற்றுவது.. மக்களை அறிவூட்டுவதில்.. புலம்பெயர் சமூகத்தினூடாகப் பல பணிகளை ஆற்றி இருக்கிறார். அவர் மாமனிதர் என தகுதியடைய நிறையவே தகுதிகளைக் கொண்டிருந்தார். 

குறிப்பாக புலம்பெயர் தேச தமிழ் இளையோருக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தவர். 

என்னதான் சேவை செய்திருந்தாலும் மூர்த்தி அவர்களை பற்றியும் ஏராளமான  கதைகள் இருந்தாலும் அவை பற்றி எதுவும் நான் இதில் கூறவில்லை நெடுக்ஸ். மாவீரர்கள் என்பவர்கள் வேறு. அவர்களுக்குரிய பெயரை மற்ற எவருக்கும் கொடுப்பது சரியானதன்று பாலசிங்கம் என்றாலுமே.  

 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வைத்தியர் மூர்த்தி என்று ஒருவர் டூட்டிங்கில் இருந்து வேலை செய்தாரே நினைவிருக்கா ரதி.  அவரையே மாவீரர் என்று கூறி மாவீரர் நாள் படங்களுடன் வைத்திருந்தார்கள். 

https://www.enfieldindependent.co.uk/news/902429.gp-arrested-in-us-on-arms-dealing-charge/

புலிகளுக்காக, தான் கொண்ட கொள்கைக்காக, தன் இனத்துக்காக் பெரிய பதவியில், வெளிநாட்டில் உங்கள் அனைவரையும் விட சொகுசாக இருந்தும் சிறைதண்டனை வரை போய்வந்த மனிதரை பற்றியா இப்படிக் கதைக்கிறீர்கள்?

இவர் தனது வீட்டை ரீமோர்ட்கேஜ் பண்ணி காசு அனுப்பியது சுனாமி நேரமே தெரிந்த விடயமே. படித்த, மேல்தட்டு, லண்டன் வாழ் தமிழர்கள் பலரையும் போராட்டப் பக்கம் இழுத்துவந்த ஒரு நேர்மையாளர் அல்லவா இவர்?

மாவீரர் என யாரும் மே 2009 க்கு பின் இல்லை என யாருக்கும் தெரியும். ஆனால் அவர்களோடு வைப்பதற்கு இவர் சகல விதத்திலும் பொருத்தமானவரே.

#நரம்பில்லா நாக்கு 😡

 • Like 6
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வைத்தியர் மூர்த்தி என்று ஒருவர் டூட்டிங்கில் இருந்து வேலை செய்தாரே நினைவிருக்கா ரதி.  அவரையே மாவீரர் என்று கூறி மாவீரர் நாள் படங்களுடன் வைத்திருந்தார்கள். 

அவரையே என்றால்..வேற யாரை மாவீரர் என்று அழைத்தால் நல்லாயிருக்கும் என்கிறீர்கள்?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னதான் சேவை செய்திருந்தாலும் மூர்த்தி அவர்களை பற்றியும் ஏராளமான  கதைகள் இருந்தாலும் அவை பற்றி எதுவும் நான் இதில் கூறவில்லை நெடுக்ஸ். மாவீரர்கள் என்பவர்கள் வேறு. அவர்களுக்குரிய பெயரை மற்ற எவருக்கும் கொடுப்பது சரியானதன்று பாலசிங்கம் என்றாலுமே.  

 

பாலா அண்ணரை பற்றி நாலு வசனம் சொல்லுங்கோவன் கேப்பம், பிறகு நானூறு வசனம் உங்களைப் பற்றி சொல்லுறன்.

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, goshan_che said:

https://www.enfieldindependent.co.uk/news/902429.gp-arrested-in-us-on-arms-dealing-charge/

புலிகளுக்காக, தான் கொண்ட கொள்கைக்காக, தன் இனத்துக்காக் பெரிய பதவியில், வெளிநாட்டில் உங்கள் அனைவரையும் விட சொகுசாக இருந்தும் சிறைதண்டனை வரை போய்வந்த மனிதரை பற்றியா இப்படிக் கதைக்கிறீர்கள்?

இவர் தனது வீட்டை ரீமோர்ட்கேஜ் பண்ணி காசு அனுப்பியது சுனாமி நேரமே தெரிந்த விடயமே. படித்த, மேல்தட்டு, லண்டன் வாழ் தமிழர்கள் பலரையும் போராட்டப் பக்கம் இழுத்துவந்த ஒரு நேர்மையாளர் அல்லவா இவர்?

மாவீரர் என யாரும் மே 2009 க்கு பின் இல்லை என யாருக்கும் தெரியும். ஆனால் அவர்களோடு வைப்பதற்கு இவர் சகல விதத்திலும் பொருத்தமானவரே.

#நரம்பில்லா நாக்கு 😡

சுனாமி நேரம் அங்கு நடந்த பல தில்லுமுல்லுகள் எனக்குத் தெரியும். அதை நான் இங்கு கூற விரும்பவில்லை. சில விடயங்களை சொல்லியும் ஒரு பயனும் இனி இல்லை. வீட்டை விற்று, கடன் எடுத்து  எத்தனையோபேர் விடுதலைப் போராட்டத்துக்குப் பணம் கொடுத்துள்ளனர்.அப்ப அவர்கள் எல்லாரும் மாவீர்கள் என்று சொல்லலாமா ??

Share this post


Link to post
Share on other sites

என் கணிப்பு சரியாக இருந்தால்,  நான் ஐரோப்பா வந்தபோது  ஐபிசி என்ற வானொலி அப்போது மிக பிரபல்யம், அப்போதெல்லாம் வைத்தியர் மூர்த்தி என்று அறியப்பட்டவர் இவர், இயற்கை வைத்தியத்தோடு மட்டும் நிற்காது, வன்னி  ஜெயசிக்குறு நடவடிக்கையின்போது வெளி உலகத்திலிருந்து முற்றாக துண்டிக்கப்பட்டு வெறும் அழுகையும் அவலங்களுமே பத்திரிகைகளில் வந்துகொண்டிருந்த நேரத்தில்

ஐபிசியின் சிற்றலையின் ஊடாக ஒருமணிநேரம் வன்னிவரை ஒரு வான்அலை ஒலிபரப்பினார்கள், அப்போதெல்லாம் இயற்கை மருத்துவம்மூலம் எப்படியெல்லாம் உடல்நலனை பேணிக்கொள்ளலாம் என்று இவர், பேசா பொருளாக அறிவிப்பாளர் கணேஷ் என்பவருடன் உரையாடுவார்,

அதைவிட மருத்துவ உதவிகள் என்று வானொலியில் நிதி சேகரிப்புக்கு ஊக்கமும் கொடுப்பார் 

கண்டிப்பாக அது இலண்டனில் வாழும் மக்களுக்கானது அல்ல என்று எல்லோருக்குமே தெரியும்.
லண்டனின் மருத்துவராக பணிபுரிய வழங்கபட்ட சான்றிதழ்களின் எல்லைகளை மீறி ஒரு போராட்ட இயக்கத்துக்கு சார்பாக நின்ற அந்த மூர்த்தி பற்றியா பேசுகிறீர்கள்?

அல்லது வேற மூர்த்தியா?

அந்த மூர்த்தி பற்றித்தான் என்றால்.

 எமது தியாகத்துக்கு முன்னால் எதுவும் செய்திருக்காத மூர்த்தியின் பெயர் மாவீரர் அல்லது நாட்டு பற்றாளர் பட்டியலில் இடம்பெற்றது தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட  மாபெரும் துரோகம்.

Share this post


Link to post
Share on other sites
9 minutes ago, valavan said:

அவரையே என்றால்..வேற யாரை மாவீரர் என்று அழைத்தால் நல்லாயிருக்கும் என்கிறீர்கள்?

மாவீரர்கள் என்றால் எனக்குத்தான் அர்த்தம் தெரியவில்லை போல் இருக்கு. இனிமேல் வெளிநாடுகளில் இயக்கத்துக்கு உதவி புரிந்தவர்களுக்கு எல்லாம் மாவீரர் படம் கொடுக்கலாம் போல.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

Dr. Namasivayam Sathiyamoorthy (N.S. Moorthy), a veteran Eezham Tamil activist who was instrumental in the organization of the humanitarian agencies TRO and Ve'n Pu'raa (White Pigeon), passed away at the age of 61 at London, UK. Dr. Sathiyamoorthy was involved in the national liberation struggle of the Eezham Tamils in the homeland from its early stages and was also a popularly recognized activist in democratic politics among the Tamil diaspora in the UK. Dr. Moorthy, as he was fondly called, was known for his dedication to the Tamils’ cause through his activism, his professional work and for his amicable nature, is mourned by a large number of Eezham Tamils across the world who personally knew his contributions. In UK, he was given the privilege of becoming a Freeman of the City of London in 1993, in recognition of his contribution in the field of medicine. 

Joining the LTTE in 1984 while being a medical student, he was arrested a year later in 1985. He was detained in the notorious Welikada prison for three months where he reportedly suffered torture during interrogations.

On his release, he left for Tamil Nadu, from where he was a founder-member of the Tamil Rehabilitation Organization (TRO). From then on, he had attended to fighters in camps across Tamil Nadu.

When the political climate changed and repression intensified during the IPKF period, he left Tamil Nadu for London in 1989. 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=36084

Edited by nedukkalapoovan
 • Like 2

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மாவீரர்கள் என்றால் எனக்குத்தான் அர்த்தம் தெரியவில்லை போல் இருக்கு. இனிமேல் வெளிநாடுகளில் இயக்கத்துக்கு உதவி புரிந்தவர்களுக்கு எல்லாம் மாவீரர் படம் கொடுக்கலாம் போல.

தன்னை பாதிக்காத வகையில் உதவி புரிவது ஒருவகை, தன் நிலையே பறிபோகும் என்று தெரிந்தும் உதவி வழங்குவது ஒரு வகை.

தன்னை பாதிக்காத வகையில் உதவி வழங்கியவர்கள்தான் புலம்பெயர் தேசத்தில் லட்சக்கணக்கில் அடங்கும்/

தன்னை சர்வதேசமே அறியும் ஒரு அங்கீகாரம்பெற்ற தொழில் முறையாளனாக இருந்துகொண்டும் போராட்டத்துக்கு ஆதரவாக பொது ஊடகங்களில் இனத்துக்காய் வலு சேர்த்தவரும், தன்னை தான்  தான் வாழும் நாடுகளுக்கு வெளி காட்டாமல் உதவி செய்தவர்களும் ஒன்றா?

அதற்காக உதவியின் தராதரத்தை கொச்சை படுத்தவில்லை, ஆபத்தை எதிர் கொள்ளும் நிலமையில் இருந்தும் வெளிப்படையாய் உதவி செய்த வீரம்பற்றி சொன்னேன்,

நீங்கள் சொன்னபடி அவரை மாவீரராக அறீவித்தார்களோ இல்லையோ நான் அறிந்திருக்கவில்லை,

அப்படி அறிவித்திருந்தாலும் அதிலேதும் தப்பிருக்க வாய்ப்பில்லை.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

ஒருவரைப் பற்றி சரியா தெரியாமல்.. அடுத்தவர் சொல்வதை வைச்சு.. தீர்மானிக்கக் கூடாது. அவர்கள் காழ்புணர்வோடும் சொல்லலாம்.. கெடு நோக்கிலும் சொல்லலாம்.. நல்லதும் சொல்லலாம். 

 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

சுமே,

மூர்த்தியின் படத்துக்கு முன்னால் மாவீரர் என போடப் பட்டிருந்ததா? இல்லையே? பிறகென்ன?

ஒரு காலம்வரை புலிகள், யுத்த காலத்தில் சுகவீனம் வந்து சாவடைந்தோரைக்கூட மாவீரர் பட்டியலில் இடுவதில்லை. சண்டை அல்லது சண்டை முன் ஆயத்தத்தில் சாவோர் மட்டுமே மாவீரர். இது பால்ராஜுக்கு தளர்த்தப் பட்டதாக நினைவு.

அமெரிக்க வழக்கினால் மூர்த்தி உடல் நிலை பெரிதும் பாதிக்கப் பட்டார். அடுத்து அவர் ஏன் அமெரிக்கா போனார் என்பதும் எமெக்கெல்லாம் தெரியும். அந்த வகையில் அவர் போராட்டத்துக்காகவே, போராட்டதினாலேயே இறந்தார்

 

 

Share this post


Link to post
Share on other sites