Jump to content

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல் - பிரக்சிட் கட்சி அமோக வெற்றி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் 29 இல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டிய கடமையை செய்யாததால்.. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்துள்.. பிரிட்டன் தள்ளப்பட்டது.

இந்தத் தேர்தலை நடத்த ஐரோப்பிய ஒன்றியம் தனது கூட்டமைப்பு நாடுகளுக்குப் பணப்பட்டுவாடா செய்கிறது. உண்மையில்.. இந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் அப்படி என்னத்தைத்தான் வெட்டிக் கிழிக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

பிரிட்டனின்.. பிரதான கட்சிகளான.. பழமைவாதக் கட்சியும் (கென்சவேட்டிவ்) மற்றும் தொழிற்கட்சியும் (லேபர்) 2016 மக்களின் தெரிவான பிரக்சிட் டை அமுல்படுத்தாமல் சடுகுடு ஆடி வந்த நிலையில்.. மீண்டும்.. பிரிட்டன்.. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான புதிய கால எல்லை 31 ஒக்டோபர் வரை நீட்டிக்கப்பட்ட நிலையில்...

இந்த தேர்தலை புதிய கட்சி ஒன்றின் கீழ்.. பிரக்சிட் கட்சி என்ற பெயரில் ஆறு வாரங்களுக்கு முன் ஆரம்பித்த கட்சியின் கீழ்.. முன்னாள் யுகிப் தலைவரின் வழிநடத்தலில் போட்டியிட்டு சந்தித்தனர். அப் புத்தம் புதிய கட்சி இத்தேர்தலில் எல்லா பிரதான கட்சிகளையும் வீழ்த்தி அமோக வெற்றி பெற்றுள்ளது.

பிரதான கட்சிகளின் மீதான வெறுப்பில்.. மக்கள் தமது வாக்குகளை வெறுப்பை வெளிக்காட்ட பிற கட்சிகளுக்கும் அளித்துள்ளனர். இதனால்.. லிப் டெம்.. மற்றும் கிறீன் பார்டிகளுக்கும் குறிப்பிடத்தக்க வாக்குகள் போய் சேர்ந்துள்ளது.

இதில் லிப் டெம்.. மற்றும் கிறீன் பார்டி பிரக்சிட் டுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பினும் வெளிப்படையாக அதைச் சொல்லி மக்களிடம் வாக்கைக் கேக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

European elections 2019: Brexit Party dominates as Tories and Labour suffer

https://www.bbc.co.uk/news/uk-politics-48417228

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு தேர்தல் வைத்தால் பிரிவுக்கு எதிராகத்தான் வாக்கு விழும் என்று சவுண்டு  விட்டவையலை தேட வேண்டி உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

இன்னும் ஒரு தேர்தல் வைத்தால் பிரிவுக்கு எதிராகத்தான் வாக்கு விழும் என்று சவுண்டு  விட்டவையலை தேட வேண்டி உள்ளது .

Results so far

 

சனம் இந்தத் தேர்தலை பிரதான கட்சிகளின் பிரக்சிட் தாமதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே தான் அதிகம் பாவிச்சிருக்குது.

ஆனால் பிபிசி.. ஐரோப்பிய ஒன்றிய கூட்டு வியாபாரிகள்..  அதை இப்படியும் காட்டினம்.

இதில் லிப் டெம்முக்கு வீழ்ந்த வாக்குகள்.. பிரதான கட்சிகளுக்குப் போடக் கூடாது என்ற வாக்குகள் தான் அதிகம். மக்களில் பலர் பிரக்சிட்டை விரும்பினாலும்.. கடும் பிரக்சிட்டை விரும்பாததால்.. பிரக்சிட் பாட்டிக்கோ.. யுகிப் புக்கு நேரடியாகவோ வாக்களிக்கவில்லை. ஆனால்.. லிப் டெம்.. கிறீன்.. எஸ் என் பி.. க்கு வீழ்ந்த வாக்குகளை எல்லாம் பிரக்சிட்டுக்கு எதிரான வாக்காகக் காட்ட நினைக்கிறார்கள். அது அபந்தம்.

அதுக்கும் மேல்.. இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 50% க்கும் குறைவான வாக்காளர்களே வாக்களித்துள்ள நிலையில்.. ஐரோப்பிய ஒன்றிய ஆக்களுக்கும் வாக்களிக்க அனுமதித்த நிலையில்.. பிபிசியின் உந்த சுத்துமாத்தல் வேலைக்காகாது. மீண்டும் மீண்டும் மக்களின் மன ஓட்டத்தை தவறாக இனங்காட்டுவதையே இது செய்வதாகும்.

பிரக்சிட் பாட்டி தோன்றி ஆறு வாரத்துக்குள்.. லிப் டெம்.. கிறீன்.. எஸ் என் பியை தூக்கிச் சாப்பிட்டுவிட்டதை ஏற்றுக் கொள்ள பிபிசிக்கு வெட்கமாக இருக்கிறது போலும். லிப் டெம்.. தனக்கென்று ஒரு பாரம்பரிய வாக்கு வங்கியை வைச்சிருக்குது. அதுபோல்.. கிறீன்.. மற்றும் எஸ் என் பி, 

 

How pro-Brexit (34.9%) and anti-Brexit parties have done (40.4%)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இந்தச் சட்டகங்கள் ஒரு செய்தியை தெளிவாகச் சொல்கின்றன.

Support for Brexit Party in Leave and Remain areas

Tory support by Leave and Remain area

https://www.bbc.co.uk/news/uk-politics-48402593

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வோட்டுப் போடாதவயளுக்குள நானும் சேர்ப்பு.

கொதியில போய் ஒண்டுக்கும் பிரயோசனம் இல்லாத நைஜலுக்கு சனம் போட்டிருக்கு.

ஜரோப்பிய ஒன்றியத்தில இருந்து வெளில வர வேணும் எண்டு நிண்டவர், அதே பாராளுமன்றன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதை கொண்டாடுறார்.

உதை வெளில வாரத்துக்கு வெற்றியெண்டு நிக்கிறார். போட்டியிடாமல், வாக்குசீட்டை செல்லுபடியாகாமல் செய்து எதிர்ப்பை காட்டுங்கோ என்று சொல்லியிருக்காம்.

வர, வர பிரிட்டன் அரசியல், நம்மூர் அரசியல் மாதிரி வந்திட்டுது.

எல்லாத்துக்கும் டேவிட் கமரோன் தான் காரணம்.

Link to comment
Share on other sites

இந்த தேர்தலை பற்றி எனக்கு கவலையில்லை. 😎

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு நானும் ஆதரவு. கால எல்லையை நீட்டித்துக்கொண்டு போகிறார்கள். அடுத்த முறையாவது ஒப்பந்தத்துடனோ ஒப்பந்தமில்லாமலோ விலகுங்கப்பா. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா பிரியிறம்.......பிரியப்போறம் எண்டவையள் ஏன் ஐரோப்பா தேர்தல்லை பங்கு பற்றினவையள்?
 மம் குயின் மண்டையை போடுறதுக்குள்ளை ஈரோப் யூனியனிலை இருந்து முடியரசு பிரியணும். இதுதான் மம்ஸ் பிளான்.😎

Link to comment
Share on other sites

11 hours ago, குமாரசாமி said:

இந்தா பிரியிறம்.......பிரியப்போறம் எண்டவையள் ஏன் ஐரோப்பா தேர்தல்லை பங்கு பற்றினவையள்?

ஒப்பந்த அடிப்படையில் பிரிய தேவைப்படும் ஆதரவு கிடைக்காவிட்டால் ஒப்பந்தமில்லாமல் பிரிய வேண்டும் அல்லது Brexit ஐயே cancel பண்ண வேணும். 

ஒப்பந்தமில்லாமல் பிரிந்தால் பிரிட்டன் அதனால் பெரும் சிக்கலை சந்திக்கும் என்பதால் Brexit ஐ cancel பண்ணும் நிலை கூட வர சாத்தியமிருக்கு.

என்ன நடக்குமெண்டு இவர்களுக்கே தெரியாததால் இத்தேர்தலில் பங்குபற்றியிருப்பார்கள். 😀

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகவுள்ளது என்றதும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க நினைத்திருந்தார்கள். பின் விலகும் கால எல்லையை 31 october வரை பிற்போட்டதால் அதை தவிர்த்தார்கள். விலகும் வரை இவர்கள் தேர்தலில் போட்டியிடுவதில் தவறில்லை என நினைக்கிறேன். 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.