Jump to content

'மோடியின் வெற்றி உல­கிற்கும், இந்­தி­யா­விற்கும் கெடு­தி­யா­ன­தொரு செய்­தி­யாகும்'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'மோடியின் வெற்றி உல­கிற்கும், இந்­தி­யா­விற்கும் கெடு­தி­யா­ன­தொரு செய்­தி­யாகும்'

 

இந்­தியப் பொதுத்­தேர்­தலில் நரேந்­திர மோடிக்குக் கிடைத்­தி­ருக்கும் பிரம்­மாண்­ட­மான வெற்றி இந்­தி­யா­விற்கும், உல­கிற்கும் நல்­ல­தொரு செய்­தியல்ல. குறிப்­பாக இந்­தி­யாவின் ஆன்­மா­வுக்குத் தீங்­கா­னது என்று லண்டன் கார்­டியன் பத்­தி­ரிகை இந்­தியத் தேர்தல் முடிவு குறித்து எழு­திய ஆசி­ரியர் தலை­யங்­கத்தில் குறிப்­பிட்­டி­ருக்­கி­றது.   

modi.jpg

அதில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, 

வர­லாற்றில் மிகப்­பெ­ரிய தேர்­தலில் மோடி என்ற ஒரு மனிதன் வெற்றி பெற்­றி­ருக்­கிறார். சுதந்­திர இந்­தி­யாவின் அர­சியல் வர­லாற்றில் 1971 ஆம் ஆண்­டுக்குப் பிறகு தனி­யொரு கட்­சியை அறுதிப் பெரும்­பான்­மைக்கும் கூடு­த­லான பலத்­துடன் அடுத்­த­டுத்து ஒரு பொதுத்­தேர்­தலில் வெற்­றிக்கு வழி­ந­டத்­திய முதல் இந்­தியப் பிர­தமர் என்ற பெரு­மைக்­கு­ரி­யவர் ஆகின்றார் மோடி. 

2014 பொதுத்­தேர்­தலில் பார­தீய ஜனதா கட்சி அதன் வர­லாற்றில் பாரா­ளு­மன்­றத்தின் லோக்­ச­பாவில் முதற்­த­ட­வை­யாக அறு­திப்­பெ­ரும்­பான்மைப் பலத்தைப் பெற்­றது. ஊழல் காரண­மாக மக்­களின் செல்­வாக்கை இழந்த காங்­கிரஸ் கட்சி தோல்­வி­ கண்­டது. இந்­தி­யாவின் பொரு­ளா­தாரம் கடந்த 5 வரு­டங்­களில் தடு­மாற்­றத்­திற்கு உள்­ளா­கி­யி­ருந்தபோதிலும் கூட இத்­த­டவை பொதுத்­தேர்­தலில் மோடி தனது பாரா­ளு­மன்றப் பெரும்­பான்­மையை மேலும் விரி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். இது உல­கத்­திற்கும், இந்­தி­யா­விற்கும் கெடு­தி­யா­ன­தொரு செய்­தி­யாகும்.

பார­தீய ஜனதா இந்துத் தேசி­ய­வா­தத்தின் அர­சியல் பிரி­வாகும். இந்­தி­யாவை அது எதிர்­ம­றை­யான மாற்­றங்­க­ளுக்கு உள்­ளாக்கிக் கொண்­டி­ருக்கும். மோடிக்குக் கிடைத்­தி­ருக்கும் மகத்­தான தேர்தல் வெற்­றி­யை­ய­டுத்து இந்­தி­யாவின் ஆன்மா இருண்ட அர­சி­ய­லுக்குள் தொலை­யப்­போ­கி­றது. இந்­தி­யாவின் 19 கோடி 50 இலட்சம் முஸ்­லிம்­களும் இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளாக நோக்­கப்­படப் போகின்­றார்கள். மோடியின் வல­து­ க­ர­மாகத் திகழும் அர­சியல் தலை­வ­ரொ­ருவர் தேர்தல் பிர­சா­ரங்­களின்போது முஸ்­லிம்­களை கறை­யான்கள்" என்று தரந்­தாழ்த்திப் பேசினார். முஸ்லிம் மக்­களை அடிக்­கடி தாக்­கு­கின்ற கும்­பல்கள் எந்­த­வி­த­மான சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கும் உள்­ளா­காமல் சுதந்­தி­ர­மாகத் திரி­கி­றார்கள். முஸ்­லிம்கள் பெரும் எண்­ணிக்­கையில் இந்­தி­யாவில் வாழ்­கின்றபோதிலும் அவர்கள் அர­சியல் அநா­தைகள் போலா­கி­விட்­டார்கள். பெரும்­பான்­மை­யி­ன­ரான இந்­துக்­களின் ஆத­ரவைத் தாம் இழந்­து­விடும் ஆபத்­தி­ருப்­ப­தாக அஞ்­சு­கின்ற அர­சியல் வர்க்கம் முஸ்­லிம்­களை ஒதுக்­கு­கின்­றது.

கலைக்­கப்­ப­டு­கின்ற லோக்­ச­பாவில் முஸ்­லிம்­க­ளுக்கு 24 ஆச­னங்­களே இருந்­தன. இது லோக்­ச­பாவின் மொத்த ஆச­னங்­களில் சுமார் 4 சத­வீ­த­மே­யாகும். 1952 ஆம் ஆண்­டுக்குப் பிறகு லோக்­ச­பாவில் குறைந்­த­ளவு பிர­தி­நி­தித்­து­வத்தை முஸ்லிம் சமூகம் கொண்­டி­ருந்த சந்­தர்ப்­ப­மாக அது அமைந்­தது. தற்­போது நடை­பெற்று முடிந்­தி­ருக்கும் தேர்­தலில் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் மேலும் குறை­வ­டைந்­தி­ருக்­கின்­றது.

மக்கள் மத்­தியில் பிள­வு­களை ஏற்­ப­டுத்­து­கின்ற ஒரு தலை­வ­ரான மோடி மக்கள் ஜன­ரஞ்­ச­க­மான ஒரு அர­சியல் பிர­சா­ரகர் என்­பதில் சந்­தே­க­மில்லை. மதம், சாதி, பிராந்­தியம் மற்றும் மொழி என்று இந்­திய சமு­தா­யத்தில் இருக்கும் வெடிப்­புக்­களைக் கடந்து செயற்­ப­டு­வதை விடுத்து, மோடியின் அர­சியல் அந்த வெடிப்­புக்­களை மேலும் அக­லப்­ப­டுத்­து­வ­தா­கவே அமை­கின்­றன. மேட்­டுக்­கு­டி­யி­ன­ருக்கு எதி­ராக மக்­களின் சார்பில் பேசு­கின்ற ஒரு ஜன­ரஞ்­ச­க­மான அர­சி­யல்­வா­தி­யாக அவர் விளங்­கு­கின்றார்.

2017ஆம் ஆண்டு எடுக்­கப்­பட்ட அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்­பொன்று பலம் பொருந்­திய தலை­வ­ரொ­ரு­வரின் எதேச்­ச­தி­கார ஆட்­சிக்­கான ஆத­ரவு வேறெந்­த­வொரு நாட்­டையும்விட இந்­தி­யாவில் உயர்­வா­ன­தாக (5 சத­வீதம்) இருக்­கி­ற­தென்று தெரி­வித்­தது. சிறு­பான்மை இனத்­த­வர்­களை இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளாக நடத்­து­கின்ற தேசி­ய­வாத ஜன­ரஞ்­சகத் தலைவர் உல­கிற்குத் தேவை­யில்லை. இந்­தி­யாவின் மிகவும் பெறுமதியான ஒரு பண்பிற்கு, அதாவது பல கட்சி ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக மோடி விளங்குகின்றார். மோடி யின் அரசியல் குறித்து பெரும் பான்மைவாத அரசு" என்ற பெயரில் நூலொன்று அண்மை யில் வெளியிடப்பட்டது. அந்த நூலாசிரியர்கள் குறிப்பிடுவதைப் போன்று எந்தவொரு கட்சியும் தன்னுடன் போட்டிக்கு வரக் கூடாது என்பதை பாரதீய ஜனதா கட்சி தெளிவாக உணர்த்தி யிருக்கின்றது. போட்டியாளர்க ளின் கருத்துக்களை அது எதிரிக ளின் கருத்துக்களாகவே நோக்கு கின்றது"

 

http://www.virakesari.lk/article/56818

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.