யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
பிழம்பு

யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படுகின்றன

Recommended Posts

Posted (edited)
 
May 27, 2019

warning_sign.png?resize=800%2C514

யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் கோரியுள்ளது.

காணிகளுக்கு போலி (கள்ள) உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பட்டுகள் அதிகரித்துள்ளன.

அவ்வாறு கையகப்படுத்தும் காணிகளை குறைந்த விலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். அக்காணிகளை வாங்கியவர்கள் பின்னர் அதனை சட்டரீதியாக , சட்டத்தரணிகள் ஊடாக தமக்கு பெயர் மாற்றம் செய்ய முற்படும் போதே தாம் ஏமாற்றப்பட்ட விடயங்கள் அவர்களுக்கு தெரியவருகின்றன.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரையான கால பகுதியில் காணி பதிவாளரின் சார்பாக மேலதிக காணி பதிவாளர் நீதிமன்றில் 4 வழக்குகளை எதிர்கொண்டு உள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2019/122828/

Edited by பிழம்பு

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

காணியின் உண்மையான சொந்தக்காரருக்கு பிரச்சனை இல்லை.

வாங்குபவர், கவனமாக இல்லாவிடில் பணம் இழக்க வேண்டி வரும்.

ஒரு தனிப்பட்ட முகவர் ஒருவரை அமர்த்தி, காணிப் பதிவகத்தில், ஆய்வு செய்யாமல் பணத்தினை கைமாறல் செய்யக் கூடாது.

கள்ள காணி விற்பவர்களுக்கு  உடந்தையாக போலி பிராகிராசிமார் கூட திரியினம். அவரிடம் கட்டணம் குறைவு எண்டு விற்பவர் கதைவிட்டு மாட்டி விடுவார்.

காசு கைமாறியதும், அவையளும் போர்டினை கழட்டி கொண்டு போயிருவினம்.

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு