Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா? காரணம் என்ன? #TechBlog


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா? காரணம் என்ன? #TechBlog

சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ்
ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா? காரணம் என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"Designed by Apple in California. Assembled in China" இந்த வரிகளைதான் ஆண்டாண்டு காலமாக உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் பல்வேறு தயாரிப்புகளில் பார்த்து வருகிறோம்.

ஆனால், இந்தியா, வங்கதேசம், இந்தோனீசியா போன்ற அதிக மக்கள் தொகையை கொண்ட ஆசிய நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நாடுகளில் 'Made in China' என்ற வார்த்தையை திறன்பேசி மட்டுமல்லாது தினசரி வாழ்க்கையின் அனைத்து நிலையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

ஆம், தொழில்நுட்பத்தின் எந்த சாராம்சத்தை எடுத்தாலும், சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 'அமெரிக்கா' என்ற வார்த்தையை சொல்ல வைத்த காலம் மாறி, தற்போது அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் நிலையை சீன நிறுவனங்கள் எட்டியுள்ளன என்று கூறினால் அது மிகையாகாது.

அமெரிக்கா - சீனா இடையிலான மூன்றாண்டுகால வர்த்தகப் போர் தற்போது தொழில்நுட்ப போர் என்றழைக்கப்படும் அளவுக்கு பிரச்சனையின் வீரியம் அதிகரித்துள்ளது.

'ஹுவாவே' எனும் சீனாவை சேர்ந்த உலகின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை மையமாக கொண்டு நடந்து வரும் இந்த தொழில்நுட்ப போர், தற்போது அதனுடன் சிறிதும் தொடர்பில்லாத பல்வேறு நாடுகளை சேர்ந்த சாமானிய மக்களை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

என்னதான் பிரச்சனை?

ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா? காரணம் என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் சீனாவின் தவறான பொருளாதார கொள்கைகள் தனது நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்பதாக குற்றஞ்சாட்டி வருகிறார்.

2017ஆம் ஆண்டு ஒருபடி மேலே சென்று, சீனாவின் பொருளாதார கொள்கைகள் குறித்த விசாரணை ஆணையத்தை அமைத்த டிரம்ப், அதன் இறுதி அறிக்கையின் அடிப்படையில், சீனாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகப்படுத்தினார்.

இலங்கை இலங்கை

அதாவது, 2018ஆம் ஆண்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் 250 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு டிரம்ப் கூடுதல் வரி விதிக்க, அதற்கு போட்டியாக தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் 110 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க தயாரிப்புகளுக்கு சீனா கூடுதல் வரி விதித்தது.

இருநாடுகளிடையேயான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து வரும் நிலையில், இருநாடுகளும் அடுத்தடுத்து இறக்குமதி வரிகளை அதிகரிக்கப் போவதாக அச்சுறுத்தி வருகின்றன.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம், உள்நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்க முடியுமென்று நம்பும் டிரம்ப், சீன இறக்குமதிகளின் மீது இவ்வாறு கூடுதல் வரிகளை விதிப்பதன் மூலம், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலை மலிவடைந்து அவற்றின் பயன்பாடு அதிகரிக்கும் என்று டிரம்ப் நம்புகிறார்.

வர்த்தகப் போர் எப்படி தொழில்நுட்ப போரானது?

ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா? காரணம் என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நிலைமை இவ்வாறு சென்றுகொண்டிருக்க, சாம்சங்கிற்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹுவாவே நிறுவனம், இரான் மீது தான் விதித்துள்ள தடைகளை மீறி அந்நாட்டுடன் தொழிற் மேற்கொள்வதாகவும், தனது நாட்டின் கண்டுபிடிப்புகளை திருடுவதாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டியது.

மேற்கூறிய குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்க, கனடாவிற்கு சென்ற ஹுவாவே நிறுவனத்தின் தலைமை நிதியதிகாரியும், அதன் நிறுவனரின் மகளுமான மெங் வாங்சோ அமெரிக்காவின் கோரிக்கைக்கிணங்க கடந்த ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக கனடா - சீனா இடையிலான உறவும் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. பிணையில் வெளிவந்துள்ள மெங்கை கனடாவிலிருந்து நாடுகடத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

அதே வேளையில், ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகத்தையும் ஆளப் போகும் ஐந்தாம் தலைமுறைக்கான 5ஜி தொழில்நுட்பத்தைஉருவாக்குவதில் அமெரிக்க மற்றும் கொரிய நிறுவனங்களை முந்திய சீனாவின் ஹுவாவேவின் வளர்ச்சி மற்ற நாடுகளை திடுக்கிட வைத்தது. ஆனால், ஹுவாவே நிறுவனத்தின் மீது சமீப காலமாக பாதுகாப்பு சார்ந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் டிரம்ப், இம்மாதத்தின் மத்திய பகுதியில் அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப துறையில் அயல்நாட்டு சக்திகளின் ஊடுருவலை தடுப்பதாக கூறி அவரசநிலையை பிரகடனம் செய்தார்.

இந்நடவடிக்கையின் மூலம், அமெரிக்க நிறுவனங்களுடன் ஹுவாவே மேற்கொள்ளும் தொழிற் பரிமாற்றங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டன. இதன் படி, ஹுவாவே நிறுவனத்தின் திறன்பேசிகளில் பதியப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான புதிய பதிப்புகளையும், செயலிகளின் பயன்பாட்டையும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் கூகுள் நிறுவனம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து மற்ற முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹுவாவேயுடனான ஒப்பந்தங்களை கைவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா? காரணம் என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஹுவாவே அபாயகரமான நிறுவனமா?

அமெரிக்க வர்த்தக நிறுவனங்களுடன் தொழில்புரிவதற்கு தடை செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஹுவாவே மீது டிரம்ப் வைக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்வலைகளை எழுப்புகின்றன.

ஹுவாவே நிறுவனத்தை வைத்து சீனா உலக நாடுகளை உளவுப் பார்ப்பதாகவும், அதன் காரணமாக தங்களது நாட்டின் பாதுகாப்பில் பிரச்சனை எழுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் டிரம்ப் கூறுகிறார்.

இலங்கை இலங்கை

அதிவேக இணையதள பயன்பாடு, முகமறிதல் தொழில்நுட்பத்தை மையமாக கொண்ட கண்காணிப்புத் திட்டம், மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து மற்றும் நகர மேலாண்மை உள்ளிட்டவற்றில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் 5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் ஹுவாவே முன்னோடியாக உள்ளது. எனவே, அந்நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுவதன் மூலம் தங்களது நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடுமோ உலக நாடுகள் அஞ்சுகின்றன.

அந்த அச்சத்திற்கு பின்னால் ஒரு பெருங்கதையும் உள்ளது. எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் அமைந்துள்ள பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆப்பிரிக்க யூனியனின் தலைமையகம் முழுவதும் சீனாவின் நிதியுதவியில் கட்டப்பட்டதாகும். அதுமட்டுமின்றி, ஆப்பிரிக்க நாடுகளின் தொலைத்தொடர்புத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன நிறுவனங்களே அதன் கணினிகள் மற்றும் இணையதள கட்டமைப்பையும் உருவாக்கியிருந்தன.

ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா? காரணம் என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்நிலையில், பிரெஞ்சு மொழி பத்திரிகையான 'லீ மோண்டே அப்ரிக்', ஆப்பிரிக்க யூனியனின் தலைமையகத்திலுள்ள கணினியிலுள்ள ரகசிய தகவல்கள் ஐந்தாண்டுகளாக சீனாவிற்கு சென்றதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்ட செய்தி உலக நாடுகளை அதிர வைத்தது.

"2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை, அதாவது தொடர்ந்து 1,825 நாட்களுக்கு, தினமும் நள்ளிரவு 12 மணிமுதல் 2 மணிவரை, ஆப்பிரிக்க யூனியனின் தலைமையகத்திலுள்ள கணினிகள் தகவல்கள் திருடப்பட்டு அவை 8,000 கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள சீனாவின் ஷாங்காய் நகரத்துக்கு சென்றன" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டது.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஆப்பிரிக்க யூனியனின் தலைமையகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவை கட்டமைத்தது ஹுவாவே நிறுவனம்தான். இருப்பினும், இந்த பத்திரிகை வெளியிட்ட குற்றச்சாட்டை ஆப்பிரிக்க ஒன்றியமும், சீன அரசாங்கமும் மறுத்துவிட்டன.

ஹுவாவே மீதான சர்ச்சையும், வளரும் நாடுகளின் எதிர்காலமும்

ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா? காரணம் என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தனது திறன்பேசிகளுக்கான தொழில்நுட்ப ஆதரவை கூகுள் விலக்கி கொள்வதாக அறிவித்தவுடன், ஹுவாவேயின் தலைவர் ரென் சங்ஃபே அளித்த பதில் இதுதான் - "அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிடுகிறது. இது நாங்கள் எதிர்பார்த்ததுதான். அமெரிக்காவின் தடை எங்களை பாதிக்காமல் இருப்பதற்காக ஏற்கனவே நாங்கள் சொந்த தயாரிப்புகளை மேம்படுத்திவிட்டோம்."

அமெரிக்கா விதித்துள்ள தடையால் பாதிக்கப்படுவது சீனா மட்டுமல்ல. இந்த தடையால், ஹுவாவே தொழில்நுட்பத்துக்காக சார்ந்திருக்கும் அமெரிக்க நிறுவனங்களும், ஹுவாவேவின் மிகப் பெரிய சந்தையான ஆப்பிரிக்காவும் பாதிக்கப்படும்.

சீனாவின் மீது அமெரிக்கா என்ற ஒற்றை நாடு முன்னெடுக்கும் நடவடிக்கையால் உலக தொழில்நுட்ப சந்தையே ஆட்டம் கண்டுள்ளது. கூகுள், ஃபேஸ்புக், வாட்சாப் போன்ற மிகப் பெரிய பயன்பாட்டாளர்களை கொண்ட சேவைகளுக்கு மாற்று தயாரிப்புகளை கொண்டிருக்கும் சீனாவுக்கே இந்த நிலை என்றால், பெரும்பாலும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களையே சார்ந்திருக்கும் இந்தியா, பிரேசில், இந்தோனீஷியா உள்ளிட்ட அதிக இணையதள பயன்பாட்டாளர்களை கொண்ட நாடுகள் தங்களுக்கான பிரத்யேக தொழில்நுட்பங்களை முழுவீச்சில் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

https://www.bbc.com/tamil/science-48415890

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா? காரணம் என்ன? #TechBlog

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அந்தக்காலத்திலையே சீனா மற்றவனை பாத்து கொப்பி பண்ணுற நாடு ஒரு பட்டப்பெயர் இருக்கு.....சீனன் உசுக்குட்டி கண்ணாலை கூசிக்கூசி பாத்து உலகம் முழுக்க பரவீட்டான்...இனி பண்ணியில் பண்ணி பாருமன்..:cool:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அந்த அச்சத்திற்கு பின்னால் ஒரு பெருங்கதையும் உள்ளது. எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் அமைந்துள்ள பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆப்பிரிக்க யூனியனின் தலைமையகம் முழுவதும் சீனாவின் நிதியுதவியில் கட்டப்பட்டதாகும். அதுமட்டுமின்றி, ஆப்பிரிக்க நாடுகளின் தொலைத்தொடர்புத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன நிறுவனங்களே அதன் கணினிகள் மற்றும் இணையதள கட்டமைப்பையும் உருவாக்கியிருந்தன. 

ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா? காரணம் என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்நிலையில், பிரெஞ்சு மொழி பத்திரிகையான 'லீ மோண்டே அப்ரிக்', ஆப்பிரிக்க யூனியனின் தலைமையகத்திலுள்ள கணினியிலுள்ள ரகசிய தகவல்கள் ஐந்தாண்டுகளாக சீனாவிற்கு சென்றதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்ட செய்தி உலக நாடுகளை அதிர வைத்தது.

"2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை, அதாவது தொடர்ந்து 1,825 நாட்களுக்கு, தினமும் நள்ளிரவு 12 மணிமுதல் 2 மணிவரை, ஆப்பிரிக்க யூனியனின் தலைமையகத்திலுள்ள கணினிகள் தகவல்கள் திருடப்பட்டு அவை 8,000 கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள சீனாவின் ஷாங்காய் நகரத்துக்கு சென்றன" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டது. 

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஆப்பிரிக்க யூனியனின் தலைமையகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவை கட்டமைத்தது ஹுவாவே நிறுவனம்தான். இருப்பினும், இந்த பத்திரிகை வெளியிட்ட குற்றச்சாட்டை ஆப்பிரிக்க ஒன்றியமும், சீன அரசாங்கமும் மறுத்துவிட்டன.

இது எல்லோரையும் முட்டாளாக்கும் கதை. குறிப்பாக ஆபிரிக்க யூனியனை.

ஓர் டெலிகம்யூனிகேஷன் வலையமைப்பு உருவாக்கப் படும் போது, எத்தனையோ விதமான, சுயாதீனமான risk assurance, security validation and verification proceeses  ஊடாக கடந்து, அதுவும் paper-proof-of-concept, real-proof-of-concept, security-model, model-security என்று எத்தனையோ செயல்முறை கடந்தே  வடிவமைக்கப்படும்.

இது சாதாரண பல்தேசிய, தேசிய coporate அமைப்புக்களிலேயே business-as-usual ஆக நடைபெறுபவது.

security and risk assurance ஒருபோதும் நிர்வாக மற்றும் தமைத்துவ வெற்றிடத்தில் அறுதியாக இருக்க முடியாது, ஏனெனில் security and risk assurance  என்பது பொருளியல், நிர்வாகம், தலைமைத்துவம், தொழில்நுட்பம், செயல்முறைகள் (processes), திறனுள்ள மனித வளம் என்பதோடு பின்னிப்பிணைந்தது, அதனால் நிச்சயமாக trade-off(s) கடந்தே வடிவமைக்கப்படும்.

இங்கு, ஆகியன தகவல்கள் சீனாவோ அல்லது வேறு யாரோ தகவல்களை எடுத்ததை நான் மறுக்கவும் இல்லை ஏற்றுக் கொள்ளவும் இல்லை, அதுவும் 5 வருடங்கள் தொடர்ந்து நடை பெற்றதை.

அப்படி  நடந்திருப்பின், அது HUAWAVEI அந்த வலையமை ஆக்கியாதால் தான் நடைபெற்றது என்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது, விஞ்ஞான பகுப்பாய்வு அடிப்படையில்.

குறிப்பு: சீன மற்றும் HUAWAVEI ஆதரவாளனும் அல்ல, எதிர்ப்பாளனும் அல்ல.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக அமெரிக்கா மிரள்கிறது என்பதே உண்மை ...
சமீபத்தில் இரண்டு சிம்கள் பாவிக்கவேண்டிய தேவை ஏற்பட்டதால் நீண்டகால ஆப்பிள் மோகியான நான் 
பலவித Reviewகள் பார்த்து Huawei Mate20 Pro வாங்கினேன், இரண்டு வருட ஒப்பந்தம் என்பதால் 520 சிங்கை டாலர்  முதல் தவணையாகவும்  மாதாந்தம்  53 டாலரும் என்ற கணக்கில் வந்தது, பாவிக்கத்தொடங்கியவுடன் தெரிந்தது இவ்வளவு காலமும் எப்படியொரு குப்பையை உபயோகித்து வந்துள்ளேன் என்று...
Wirless Charging , 4200 mAh கொள்ளளவு மின்கலம் ,Reverse Charging ,40 நிமிடத்தில் 100 வீத மின்கல பூர்த்தி 
IR பிளாஸ்டர், Facial regognition, Screen inbuilt fingerprint sensor,பிரமாதமான கேமரா  என்று  போட்டு தாக்குறான் பயல்  , இதை விடுத்து 150 டாலர் பெறுமதியான Wireless charging Kit ஒன்றும் இலவசமாக தந்தார்கள்.
கொடுத்த பணத்திற்கு வாயூற நாவூற பாவிக்கிறேன். 
Huawei யின் சமீபத்திய  வளர்ச்சி என்பது தாறுமாறு , பழைய மாவையே அரைத்து புதிய தாழியினுள் போட்டு 
அதன் மேல் ஆப்பிள் ஸ்டிக்கரை ஒட்டி லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் அமெரிக்க குப்பை கூடைகளுடன் ஒப்பிட்டால் Huawei இனை தொழிநுட்ப ரீதியில் நெருங்க நினைத்து கூட பார்க்க முடியாது. ஆப்பிளின் பங்குகள்  சரிந்து குத்தி முறிந்துகொண்டிருப்பதெல்லாம் தனிக்கதை. திறன் பேசி வர்த்தகத்தில் முதலிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் Huawei ஐ எப்படி நிறுத்தலாம் ,போட்டது அமெரிக்கா தடையை android வடிவத்தில் அதற்க்கு தந்த நொண்டிச்சாக்கு தான் தகவல் திருட்டு கண்டது கடியது எல்லாம் . 

உண்மையில் ஆப்பிள், கூகிள், முகப்புத்தகம் என்று உலகத்தில் பில்லியன் கணக்கானவர்கள் தகவல்கள் அமெரிக்காவிடம் தான் இருக்கிறது, இதையெல்லாம் அமெரிக்கா அரசாங்கத்திடம் நாங்கள் அளிப்பதில்லை என்று அந்நிறுவன CEO க்கள் அடிக்கும் புருடாவை குழந்தை கூட நம்பாது. அதைவிட அதிகமான வேவினையா சீனா பார்க்கப்போகிறது, இது Huawei இன் அசுர வளர்ச்சியை பார்த்து வயிறை கலக்கிக்கொண்ட அமெரிக்காவின் எதிர்வினையே அன்றி வேறில்லை   

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

ஹுவாவே - ''உலகத்துக்குமுன் ஒளிவுமறைவின்றி நிற்கிறோம்''

ஹுவாவேபடத்தின் காப்புரிமைAFP

சீன அரசுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என ஹுவாவே நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஹுவாவே நிறுவனத்துக்கும் டிரம்பின் அமெரிக்க அரசுக்கும் மோதல் நீடித்து வருகிறது. ஹுவாவேவின் தொழில்நுட்பத்தால் தேசிய பாதுகாப்பு குறித்து கவலை ஏற்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.

அமெரிக்க வர்த்தக நிறுவனங்களுடன் தொழில் புரிவதற்கு தடை செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில் ஹுவாவேவைச் சேர்த்தார் டிரம்ப்.

அமெரிக்க அரசின் நடவடிக்கையை அடுத்து, ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் சில மேம்படுதல்களை ஹுவாவே அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது.

ஹுவாவே நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தை விட அதிக திறன் பேசிகளை உருவாக்கி வந்தது. அடுத்த தலைமுறை 5 ஜி சேவை வழங்குவதில் உலகின் முன்னணி நிறுவனமாக ஹுவாவே கருதப்படுகிறது.

இந்நிலையில், பிரிட்டனின் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் தேர்வுக் குழுவிடம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளை எதிர்கொள்ள ஹுவாவே நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு தலைவர் ஜான் சுஃபோல்க் அழைக்கப்பட்டிருந்தார்.

ஹுவாவே நிறுவன தயாரிப்புகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், அந்நிறுவனத்துக்கும் சீன அரசுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

''சீனாவோ அல்லது வேறு அரசுகளோ எங்களிடம் எதையும் எதிர்பார்த்து கேட்கவில்லை'' என்றார்.

''வெளியாட்கள் எங்களது தயாரிப்புகள் குறித்து பகுப்பாய்வு செய்யவும் தொழில்நுட்ப ரீதியாக அல்லது கோடிங்கில் ஏதாவது குறைபாடு இருக்கிறதா என சோதிப்பதையும் ஹுவாவே வரவேற்கிறது,'' எனக் குறிப்பிட்டார்.

''நாங்கள் இந்த உலகத்துக்குமுன் எவ்வித ஒளிவுமறைவின்றி நிற்கிறோம். நாங்கள் அப்படிச் செய்யவும் விரும்புகிறோம். ஏனெனில் அது எங்கள் தயாரிப்புகளை மேம்படுத்த உதவுகிறது.''

ஹுவாவேபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

''அவர்கள் எங்களிடம் இருந்து ஏதாவது கண்டுபிடிக்க விரும்புகிறோம். அவர்கள் ஒன்று கண்டுபிடித்தாலும் சரி ஓராயிரம் கண்டுபிடித்தாலும் சரி. நாங்கள் அதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. மக்கள் கண்டறிவதால் நாங்கள் சங்கடப்படப்போவதில்லை'' என்றார்.

அமெரிக்கா தனது கூட்டாளி நாடுகளையும் ஹுவாவே தயாரிப்புகளை பயன்படுத்த தடுக்கக் கோருகிறது. சீன அரசு ஹுவாவே தயாரிப்புகளை கண்காணிப்புக்காக பயன்படுத்த முடியும் என்கிறது அமெரிக்கா.

'' சீன அரசோ அல்லது வேறு எந்த அரசோ எங்களிடம் எதையும் கேட்கவில்லை. இன்னொன்று சொல்கிறேன். அப்படி ஏதாவது செய்வது எங்களது தயாரிப்புகளின் பாதுகாப்பை பலவீனப்படுத்திவிடும்,'' என்கிறார் சஃபோல்க்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து தங்களது கவலைகளை எழுப்பினர். ஷின்ஜியங் மாகாணத்தில் தடுப்பு மையத்தில் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் குறித்த செய்திகளை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஹுவாவேபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஷின்ஜியங் மாகாணத்தில் கண்காணிப்புக்காக ஹுவாவே நிறுவன தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டதா? குறிப்பாக 2017 சீன உளவு சட்டத்தின்படி, தனிப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகள் சீன உளவுத்துறை நிறுவனங்களுக்கு இணங்க வேண்டுமே என்பது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர் .

''சீன அரசுடன் நாங்கள் பேசினோம். முழுவதுமாக விளக்கமளித்து தெளிவு பெற சில காலம் பிடித்தது. அதன் முடிவில், சீன அரசுக்கு எந்தவொரு நிறுவனமும் உளவுத் தகவல்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்பது அவசியமில்லை என்பது தெளிவானது. '' எனக் கூறினார்.

தொலைநிலை அணுகல்

பிரிட்டனின் 5 ஜி மொபைல் சேவை நெட்வொர்க்குகளை ஹுவாவே நிறுவனம் தொலை நிலையில் இருந்து அணுகமுடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த சஃபோல்க், ''ஹுவாவே மொபைல் நெட்வொர்க் ஆப்பரேட்டர்களுக்கு தேவையான தொலைத் தொடர்புக்கான பொருள்களை வழங்கும் ஒரு நிறுவனம்'' என அழுத்தமாகச் சொன்னார்.

''நாங்கள் நெட்வொர்க்கை நடத்துவதில்லை. எங்களுக்கு நெட்வொர்க்கில் முழுவதும் இயங்கும் எந்தவொரு தரவையும் அணுகுவதற்கான அனுமதி இல்லை'' என அவர் தெரிவித்தார்.

மேலும், பிரிட்டனில் 5 ஜி நெட்வொர்க் அமைக்கத் தேவைப்படும் வெவ்வேறு விதமான உபகரணங்களை வழங்க முடியக்கூடிய ஒரே நிறுவனம் ஹுவாவே என்றார்.

ஹவாய் நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு தலைவர் ஜான் சுஃபோல்க்படத்தின் காப்புரிமைPARLIAMENT TV Image captionஹுவாவே நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு தலைவர் ஜான் சுஃபோல்க்

இருப்பினும், ஒரு ஆப்பரேட்டருக்கு ஹுவாவே உபகரணங்களில் ஏதேனும் பிரச்சனை எனில், ரோமானியாவில் உள்ள எங்களது சேவை மையத்தின் வாயிலாக நாங்கள் தொலைநிலை அணுகல் மூலமாக பிரச்சனையை சரி செய்ய முடியும் என கூறினார்.

5 ஜி நெட்வொர்க் மூலமாக தனிப்பட்ட ஒரு பயனரை பின்தொடர முடியுமா எனத் தெரிந்துகொள்ள ஒரு கேள்வி எழுப்பினர் எம்.பிக்கள்.

அலைப்பேசி தொழில்நுட்பத்துக்கு மொபைல் ஆப்பரேட்டர்கள் பயனரின் அலைப்பேசியை தொடர்ச்சியாக பின்தொடரவேண்டியது அவசியம். பயனரை மொபைல் நெட்வொர்க்குடன் இணைக்க அப்படிச் செய்ய வேண்டும். ஆகவே, இந்த தொழில்நுட்பத் தேவையின்படி எல்லா நேரமும் தனது பயனரை ஆப்பரேட்டர் பின்தொடர்வார் என்றார் சஃபோல்க்

''ஹுவாவே நிறுவனத்தின் தயாரிப்புகளில் 30% கூறுகள் மட்டுமே ஹுவாவேவில் நேரடியாக தயாரிக்கப்படுகின்றன. மற்ற கூறுகள் உலகளாவிய விநியோக சங்கிலி வாயிலாக பெறப்படுகின்றன. அவற்றில் பாதுகாப்பு குறைபாடு ஏதும் இருக்கிறதா என்பதை அறிய ஹுவாவே தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது'' என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-48590603

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழர்களை வைத்தே முஸ்லிம்களுக்காக ஓங்கி குரல் கொடுக்கிறது வீரகேசரி.  பயங்கரவாத தடை சட்ட காலத்தில் அதை கொடூரமாக தமிழர்கள்மீது ஏவிவிட  புலனாய்வாளர்களாக, ராணுவத்தினராக, பொலிஸ் அதிகாரிகளாக  தமிழர்கள்பற்றி தகவல் கொடுப்போராக , பல படுகொலைகள் காணாமல் போதலுக்கு சிங்களவர்களுடன்  தோளோடு தோள் நின்று பாடுபட்டது இஸ்லாமிய சமூகம். அந்நாட்களின் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றி முஸ்லீம்களை வைத்து ஒரு நேர்காணலை வீரகேசரி நடத்தியதாக நினைவிலேயே இல்லை. இலங்கை மட்டுமல்ல உலகம் எங்கிலும் முஸ்லீம்கள் தினசரி  இந்த உலகுக்கு இழைக்கும் அநீதிகளைபற்றி பேசுவதைக்காட்டிலும், முஸ்லீம்களுக்கு சிறு அநீதி இழைக்கப்பட்டால் அதை உலகம் முழுவதும் பாரிய மனித உரிமை மீறலாக பார்க்கப்படுவதே அதிகம்.
  • சிறுமி மீதான வன்புணர்வு வினோதச் செய்தியா கிருபன்ஜீ க்கு?
  • திருகோணமலை ஆலங்கேணியைச் சேர்ந்த செல்வி கேதீஸ்வரன் சாமினி (வயது17) என்ற மாணவி எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் அக்கிராமத்தைச் சேர்ந்த தேவராஜா கபில்ராஜ், உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்கள் கிண்ணியா பொலிசாரினால் கைது செய்திருந்தனர். இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக இம்மாதம் 15 ஆம் திகதி  எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கு விசாரணை 27 ஆம் திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பான வழக்கு விசாரணை மேல் நீதிமன்றத்தில் இம்மாதம் 25 ஆம் திகதி அன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது. இக்கொலைச் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அன்று அதிகாலை 3.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எரியூட்டப்பட்ட மாணவி கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  குறித்த மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட தேவராஜா கபில்ராஜ், உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்கள் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பிணையில் எடுப்பதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முயற்சித்து வரும் நிலையில் இவர்களை வெளியே விட்டால் இன்னும் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பார்கள் இவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என அக்கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றார்கள். அத்துடன் இவர்களுக்காக மனச்சாட்சியுள்ள எந்த சட்டத்தரணிகளும் ஆஜராகக்கூடாது என்றும் தங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றார்கள். ஆலங்கேணி மகா வித்தியாலயத்தில்  கல்வி கற்ற இம் மாணவி சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வந்தார். இவர் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகக்கூடியவராகவும் விளங்கினார். இவருடைய இழப்பு பாடசாலைக்கும் பெரியதொரு இழப்பாக கருதப்படுகின்றது. திருகோணமலையில் மாணவி எரியூட்டப்பட்டு படுகொலை ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு | Virakesari.lk
  • கிளிநொச்சி வைத்தியசாலையில் 1.9 கோடி ரூபாவில்  இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை நிலையம் நேற்று (17.10.2021) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்ட வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் அதிகரித்துள்ள சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்ட இரத்த சுத்திகரிப்பு தேவையுடையவர்கள் இதுவரை காலமும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அதிகரித்த போக்குவரத்து செலவுகள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியில்  சென்று வந்த நிலைமை காணப்பட்டது. இந்த இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை நிலையத்தின் மூலம் இவர்களுடைய பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்  நிலவி வந்த இக் குறைப்பாட்டை கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகம் அவுஸ்திரேலிய மருத்துவ நலச் சங்கத்தின் நிதி அனுசரணையில் 1.9 கோடி ரூபா நிதிச் செலவில் 5 இரத்தச் சுத்திகரிப்பு இயந்திர தொகுதிகளை கொண்ட சிகிச்சை நிலையத்தை அமைத்துக்கொடுத்துள்ளனர். மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ். சுகந்தனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்எம். சமன்பந்துல சேனா, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், மத்திய சுகாதார அமைச்சின்  பிரதி பணிப்பாளர் நாயகம் திட்டமிடல்  எஸ் சிறிதரன் வடக்கு மாகாண சுகாதார  அமைச்சின் செயலாளர்  பி. செந்தில்னந்தன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந.சரவணபவன்  கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகத்தின் தாலைவர் ஜெயசுந்தர மற்றும் வைத்தியர்கள் தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.   கிளிநொச்சி வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை நிலையம் திறப்பு | Virakesari.lk
  • முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையினை அரசாங்கம் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை 2013 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியான பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறை சம்பவங்களை அனுபவித்து வருவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. இது சிறுபான்மை குழுவை வெளிப்படையாக குறிவைக்கும் அரசாங்கக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. எரியும் வீடுகள் முதல் எரியும் உடல்கள் வரை இலங்கையில் முஸ்லிம் துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் வன்முறை, சிங்கள- பெளத்த தேசியவாதத்தின் மத்தியில் 2013 முதல் இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வின் வளர்ச்சியைக் கண்டறிந்துள்ளது.  இந்த பாகுபாடு, தண்டனையின்றி தொடர்ச்சியான கும்பல் தாக்குதல்களிலிருந்து, முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையாக பாகுபாடு காட்டும் அரசாங்கக் கொள்கைகளாக உருவானது. இதில் கொவிட் -19 இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது மற்றும் நிகாப் (முகத்திரை) மற்றும் மதரசாக்கள் (மதப் பாடசாலைகள்) இரண்டையும் தடை செய்ய தற்போதைய திட்டங்கள் ) போன்ற திட்டங்களும் உள்ளடங்கும். இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு ஒன்றும் புதிதல்ல என்றாலும், சமீபத்திய ஆண்டுகளில் நிலைமை கடுமையாக பின்னடைவை சந்தித்துள்ளது.  இலங்கை அதிகாரிகள் இந்த ஆபத்தான போக்கை கைவிட்டு, முஸ்லிம்களை மேலும் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பது, குற்றவாளிகளை பொறுப்பேற்கச் செய்வது மற்றும் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து, துன்புறுத்துதல் மற்றும் பாகுபாடு காட்டுவதற்கான அரசாங்கக் கொள்கைகளின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையினை அரசாங்கம் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை | Virakesari.lk
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.