Sign in to follow this  
ampanai

தண்ணீர்

Recommended Posts

நகரத்துக்குள் இந்த காடு இருக்கும் இடம் மட்டும் கொட்டுகிறது மழை!

எப்படி சாத்தியம்?

 

Share this post


Link to post
Share on other sites

நகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எப்படி அதிகப்படுத்தலாம்? 

நெருக்கடியான நகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எவ்வாறு அதிகரிப்பது? மழைநீர் சேமிப்புத்தொட்டி அமைப்பதன் மூலம் சாத்தியமென்றால், இட வசதி இல்லாத ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளில் இது எப்படி சாத்தியமாகும்? - த. விக்னேஷ் நம் #DoubtOfCommon man பகுதியில் எழுப்பிய கேள்வி.

தண்ணீர் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையான தேவை. ஆனால் உலகில் கிடைக்கும் நன்னீரில் வெறும் 4 சதவிகிதத்தை மட்டுமே நம்மால் உபயோகிக்க முடியும். பூமியிலிருந்தும் கடலிலிருந்தும் நீரானது ஆவியாகி, கரு மேகங்களாக மாறி மழையாகப் பொழியும். இந்த இயற்கை நிகழ்வு ஒவ்வொருவருக்கும் போதுமான மழை நீரைக் கொடுக்கிறது. அவற்றைச் சேகரிக்க ஆறுகள், அணைகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் எனப் பல அமைப்புகள் இருக்கின்றன. ஆனாலும் நீர்த் தட்டுப்பாடு எப்படி உருவாகிறது? நிலத்தடி நீர்மட்டம் எப்படிக் குறைந்துபோனது?

 

மழைக் காலங்களில் இந்தியாவில் அதிக அளவு மழை பெய்யும், ஆனால் சேமிப்பு வரம்புகள் காரணமாக இந்த நீரில் 36%க்கும் குறைவான நீரே சேமித்து பயன்படுத்தப்படுகிறது. சேமிப்பு வசதிகள் இல்லாததால் 65 சதவிகிதம் மழை நீர் கடலில் கலக்கிறது. இந்திய நீர்ப் பாசன நீர் வள மேம்பாட்டு ஆணையத்தின் கூற்றுப்படி, நாம் எதிர்கொள்ளும் நீர்ப் பற்றாக்குறை பிரச்னையானது, நீரின் பற்றாக்குறையால் ஏற்படுவது அல்ல,அதற்கு மழை நீரை வீணாக்குவது மற்றும் சேமிக்காததே காரணம் என்று அறிவித்துள்ளனர். தண்ணீரை அதிகளவு வீணாக்குவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

மரபுவழியாக மழைநீர் சேமிக்க பல வழிகள் கையாளப்பட்டன. பெய்யும் மழை நீரை வீட்டிலேயே சேமிக்க வீட்டின் நடுப்பகுதியில் முற்றம் அமைத்துள்ளனர். கூரைக்கு நாட்டு ஓடுகள்தாம் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோயில்களில் குளங்களைக் கொண்டு மழைநீரைச் சேமித்தனர். அணைகளைக் கட்டினர். காலப்போக்கில் நகரமயமாக்கல், மக்கள் தொகைப் பெருக்கம், காடுகள் ஆக்கிரமிப்பு, அதிகரிக்கும் மாசுபாடு எனப் பல காரணங்களால் மழைநீர் சேமிப்பு குறைந்து போனது.

குழாயிலிருந்து 3 அடி தூரத்தில் சுமார் 3 அடி விட்டம் உள்ள நான்கு அடி ஆழமுள்ள ஒரு குழி தோண்ட வேண்டும். அதில் கூழாங்கற்களையும், ஆற்று மணலையும் அடுக்குகளாக இட்டு அந்தக் குழிக்குள் வீட்டு மாடியிலிருந்தோ அல்லது கூரையிலிருந்தோ வரும் மழைநீரைக் குழாய்கள் மூலம் இந்தக் குறிப்பிட தொட்டிக்குள் விட வேண்டும். இதன் மூலம் அவ்வப்போது பெய்யும் மழைநீரை வீணாக்காமல் சேகரிக்க இயலும். நிலத்தடி நீர் வற்றாமல் இருக்க இம்முறை உதவுகிறது.

 

இரண்டாவது முறையானது, கொள்கலனில் சேமித்தல். இந்த முறை அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு உகந்தது. நிலத்திற்கு அடியில் பெரிய தொட்டி அமைத்து அனைத்து வீடுகளிலும் குழாய்கள் மூலம் மழை நீரை ஒருமுகப்படுத்தி வடிகட்டிச் சேகரிக்கலாம். நில மட்டத்திற்கு மேல் தொட்டியில் சேமிக்கலாம். ஏற்கெனவே உள்ள கிணறுகளைத் தூர்வாரி, அதில் வடிகட்டும் அடுக்கு அமைத்து மழை நீரை வடித்து கிணறுகளிலும் சேமிக்கலாம்.

போர்வெல்லிலும் சேமிக்கலாம். போர்வெல் இல்லையென்றால் அந்த இடத்தினுடைய மண்ணின் தன்மையைப் பொறுத்து 10- 20 அடி ஆழம் வரை குழி தோண்டுவதன் மூலம் நீரை நிலத்திற்கு அனுப்பலாம்.

நகர்ப்புறங்களில் அதிக அளவில் கட்டடங்கள் கட்டப்படுவதாலும், பெய்யும் மழைநீர் நிலத்திற்குக் கீழ் இறங்க போதிய நிலப்பரப்பு இல்லாததாலும் மழைநீரைச் சேமிக்க இயலாமல் வீணாகிறது. அப்படியென்றால் ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளில், இடவசதி இல்லாத பல கட்டடங்களில் மழைநீரை எப்படிச் சேமிப்பது?

கட்டப்பட்ட வீடுகளிலோ அல்லது கட்டடங்களிலோ மழைநீரைச் சேமிக்க ஒவ்வொரு வீட்டின் மேற்பரப்பில் குழாய்களை ஒருங்கிணைத்து சேமிப்புத் தொட்டி அல்லது கிணறுகள் மூலம் நிலத்தடி நீரைச் சேமிக்கலாம். இதை வடிவமைக்க ஆறு முக்கியமான அமைப்பு அடிப்படை தேவையாகிறது.

 

1. கொட்டு பரப்பு அல்லது பெய்யும் பரப்பு : பெய்யும் மழைநீரைச் சேமிக்கும், வீடு அல்லது கட்டடத்தின் மேற்பரப்பு.

2. கொண்டு போகும் அமைப்பு: மேற்பரப்பில் பெய்யும் மழையை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்படும் குழாய்கள்.

3. கூரைகளைச் சுத்தம் செய்தல்: அசுத்தங்களை நீக்கி வேறு இடத்துக்கு அந்த நீரை எடுத்துச் செல்லும் சேமிப்புக் குழாய்கள்.

4. சேமிப்பு:கிருமிகள் அண்டாத வகையில் பாதுகாப்பாக தொட்டியில் சேமிக்கவேண்டும்.

5. சுத்திகரித்தல்: அறுவடை செய்த நீரை வடிகட்டி சுத்தம் செய்யும் அமைப்பு.

6. பகிர்தல் : சேகரித்த மழை நீரை உபயோகிக்கச் செய்ய ஒரு சிறிய மோட்டார் அல்லது தொட்டி தேவைப்படும்.

இந்தத் தண்ணீர் நிலத்தடிக்கோ அல்லது நிலத்தின் மேலுள்ள டேங்குகளுக்கோ அனுப்பப்படுகின்றன. டேங்குகளில் மழைநீர் சேமிக்கப்பட்டால் காற்று, சூரிய ஒளி, கழிவுப் பொருள்கள் உட்புகாத படி டேங்குகள் அடைத்து வைக்கப்பட வேண்டும். படிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நீரைத் தெளிவடையச் செய்யலாம். ப்ளீச்சிங் பவுடர் பாக்டீரியாக்களைக் கொல்லுகிறது. இந்தத் தண்ணீரை தோட்டத்திற்கும் கழிவறைக்கும் துணி துவைப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். சேமித்த பிறகும் தண்ணீர் அதிகமாக இருந்தால் கிணறுகளிலும் சேமிக்கலாம்.

குழாய்கள், மழைநீர் வடிகட்டியை அமைக்க சிறிது பணம் செலவிட வேண்டும். சேமிப்புத் தொட்டி அமைக்க இயலாத நிலையில் கிணறுகள் சிறந்த தீர்வாக இருக்கும். குழாய்களை ஒருங்கிணைத்து, நீரை வடிகட்டி கிணற்றில் விடலாம்.

மழை நீர் சேமிப்பு என்பது அனைத்து நிலப்பரப்புக்கும் தேவையான ஒன்று. மழைநீர் சேமிப்பு எந்தப் பகுதிகளுக்கு மிகவும் ஏற்றது என்ற கேள்வி எழலாம். நிலத்தடி நீர்வளம் குறைவாக இருக்கும் பகுதிகளுக்கும், அசுத்தமான நிலத்தடி நீர் இருக்கும் பகுதிகளுக்கும், மழை நீர் நில்லாமல் ஓடக்கூடிய பகுதிகளுக்கும், மக்கள் தொகை அதிகமாக இருக்கும் பகுதிகளுக்கும், மின்சாரம் மற்றும் நல்ல தண்ணீரின் விலை அதிகமாகக் காணப்படும் பகுதிகளுக்கும் மழை நீர் தேவைப்படுகிறது. இந்த இடங்களில் எல்லாம் மழை நீர் சேகரிப்பு மிக முக்கியமான ஒன்று.

1. மழைநீர் சேகரிக்கும் இடம் சுத்தமாக இருப்பது நல்லது.

2. மழைநீர் சேகரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் பொருள்கள் அனைத்தும் சுத்தப்படுத்திய பிறகே உபயோகப்படுத்த வேண்டும்.

3. முதலில் கிடைக்கும் மழை நீரைச் சேகரிக்காமல் சற்று நேரம் வெளியேற்றிவிட்டு சுத்தமான நீர் கிடைக்கும் போது மட்டுமே பாத்திரங்களில் சேமிக்க வேண்டும்.

4. மழை நீரைச் சேகரிக்க பயன்படும் பொருள்கள் அவ்வப்போது சுத்தமாக்கப்படுவதுடன் மூடி வைக்கவும் வேண்டும்.

5. சேமிக்கப்படும் மழைநீரில் பாசிப்படிதல் மற்றும் பூச்சிகள் சேர்தலைத் தவிர்க்க வேண்டும்.

6. சமையல் அறை மற்றும் குளியல் அறையிலிருந்து வரும் கழிவு நீர் அல்லாத தண்ணீரைச் செடிகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீரை அதிகரிக்கலாம்.

7. வற்றிவிட்ட கிணறுகளைத் தூர்வாரி விட்ட பிறகு மழைநீரைச் சேமிக்கப் பயன்படுத்தலாம்.

8. மரங்களை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். புதிதாக மரங்களை நட வேண்டும்.

அன்றாட தேவையை மட்டும் கருத்தில் கொள்ளும் மக்கள் அடுத்த தலைமுறைக்கான தேவையை மறந்து விடுகிறார்கள். இன்று வீணாக்கப்படும் நீர் அடுத்த தலைமுறையின் உயிர் காக்கும் நீராகக் கூட இருக்கலாம்.

https://www.vikatan.com/news/environment/how-to-increase-groundwater-level-in-cities

Share this post


Link to post
Share on other sites

விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்!

 

 

Share this post


Link to post
Share on other sites

இரண்டாம் தலைமுறைஅமெரிக்காவில் இருந்து  ஊருக்கு வந்து தூர் வாருவது என்பது பெருமைப்பட வேண்டிய, மாற்றையவர்களுக்கும் கூற வேண்டிய நிகழ்வு  !

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • " நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே " - என்பதை பல தமிழ் கட்சிகள் வெளிப்படையாக கூறும் ஒரு கருத்து. அதைக்கூறித்தான் ஆகவேண்டும்.  அவ்வாறு கூறும் கட்சிகளை சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு அரவணைத்து தமது குடைக்குள் கொண்டுவர  தவறி உள்ளது.  அதனால், ஒட்டுமொத்த தமிழர் தரப்பும் பலவீனமாக உள்ளது. முதல் எதிரி மகிந்த அணிதான் என்றும் அது தொடர்பான தெளிவு சம்பந்தருக்கு மட்டுமே இருக்கிறது என்றால், நாளை சம்பந்தரையும் மீறி மகிந்த அணி ஆட்சியை பிடித்துவிட்டால் சம்பந்தரால் அதற்கு என்ன மாற்று வழி? என்பதையும் அவர் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு என்றாலும் தெளிவு படுத்தி இருக்க வேண்டும்.  
  • ஏன் பிரான்ஸ் நாட்டில் காட் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் , காட் இல்லா உற‌வுக‌ளுக்கு அவ‌ர்க‌ளின் காட்டில் வேலை எடுத்து குடுத்துட்டு வார‌ ச‌ம்ப‌ள‌த்தில் காட் வைச்சு இருக்கிர‌ ஆட்க‌ளுக்கு மாச‌ க‌ட‌சியில் காசு குடுக்க‌னும் / எங்க‌டைய‌ளின் ந‌ரி புத்தியை பார்த்திங்க‌ளா 😉 /  த‌னி காட்டு ராஜா எம் நாட்டுக்கு வ‌ந்தா , அந்த‌ உற‌வை எப்ப‌டி வ‌ழி ந‌ட‌த்த‌னும் இந்த‌ நாட்டு அனுகுமுறையை சொல்லி குடுத்து ச‌ரியான‌ பாதையில் ப‌ய‌ணிக்க‌ வைக்க‌லாம் ந‌ல்ல‌ வேலையோட‌  👏/ அசூல் அடிச்சு போட்டு ,  க‌ள‌வாய் வேலையில் இற‌ங்க‌ வேண்டிய‌து தான் , அசூல் காசும் வ‌ரும் , வேலைக் காசு மாச‌க் க‌ட‌சியில் கையில் கிடைக்கும் , இப்ப‌டி ஒரு 4வ‌ருட‌ம் செய்தாலே , வ‌ந்த‌ க‌ட‌ன் ஒரு வ‌ருட‌த்தில் முடிந்துடும் , மீத‌ம் உழைச்சு எடுக்கிர‌ காசை கொண்டு போய் ஊரில் குடும்ப‌த்தோட‌ வாழுற‌து 👏/ திற‌மை இருந்தா எதையும் செய்ய‌லாம் /  க‌ள‌வாய் வேலை குடுக்கும் போது ஒரு சில‌ ர‌க‌சிய‌ங்க‌ள் இருக்கு , அத‌ன் ப‌டி செய்தா ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை வேலை செய்த‌ மாதிரியும் இருக்கும் காசு ச‌ம்பாதிச்ச‌ மாதிரியும் இருக்கும் 👏 /
  • ரோம்: கூட்டணிக்கு அளித்த ஆதரவு வாபஸ் பெற்றதால் இத்தாலி பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இத்தாலியில் ஆளும் இடதுமுன்னணி பைவ் ஸ்டார் இயக்கம் கட்சி , வலது லீக் கட்சி உடன் இணைந்து கடந்த 14 மாதங்களுக்கு முன் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பிரதமராக இடது முன்னணி பைவ் ஸ்டார் இயக்க கட்சியின் கியூசெப் கான்ட்டே உள்ளார். துணை பிரதமராக வலது லீக் கட்சியின் மேட்டியோ சால்வினி உள்ளார். சமீப காலமாக கூட்டணி கட்சிகளிடையே கருத்துவேறுபாடு நிலவியதையடுத்து, ஆதரவை திரும்ப பெற்று கூட்டணியில் இருந்து விலகுவதாக மேட்டியோ சால்வினி அறிவித்தார்.இதையடுத்து பிரதமர் கியூசெப்பி கான்ட்டே பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் கான்டாவுக்கு பெரும்பான்மை இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடித்தை அதிபர் செர்ஜியோ மெட்டரில்லாவிடம் அளித்தார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2348340
  • எனக்கு பெட் அனிமல்ஸ் பிடிக்கும், நான் விலங்கு நல ஆர்வலர் என யார் வேண்டுமானாலும் சோசியல் மீடியாவில் சொல்லிக் கொள்வது சுலபம். ஆனால், நிஜ வாழ்க்கையில் மற்ற உயிரினங்களின் மீது அளவு கடந்த அன்பு காட்டுபவர்கள் வெகு சிலரே. அப்படியான ஒருவர்தான் குரோசியாவைச் சேர்ந்த ஸ்டெஜபன் வோகிக். கடந்த 27 ஆண்டுகளாகத்தான் தத்தெடுத்த நாரையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். இந்தக் கட்டுரை வோகிக் பற்றியது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், கட்டுரையின் முடிவில் ஒரு அற்புதமான ரொமாண்டிக் மூவி பார்த்த உணர்வு உங்களுக்கு இருக்கும் என்பது நிச்சயம்.   குரோசியாவில், Brodski Varos என்னும் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்பட்ட நிலையில் கிடந்த நீர் பறவையை மீட்டு முதலுதவி செய்தார் வோகிக். வேட்டைக்காரர்களின் குண்டுகள் அந்தப் பறவையின் சிறகுகளில் ஆழமாகத் துளைத்திருந்தது. எனவே, அந்தப் பறவையால் இனி பறக்க முடியாது. பறவையின் காயத்துக்கு மருந்து வைத்த வோகிக், அதைப் பறவைகள் மீட்பு குழுவிடம் கொடுத்துவிடலாம் என நினைத்தார். ஆனால், பறக்க முடியாத நிலையில் இருக்கும் அந்த நாரையைக் கொடுக்க வோகிக்கு மனம் வரவில்லை. தன் வீட்டிலேயே வைத்து வளர்க்க முடிவெடுத்தார். அந்த நாரைக்கு மலேனா என்று பெயர் வைத்தார். தன் வீட்டின் கூரையின் மீது இரண்டு விதமான கூடுகள் அமைத்தார். ஒன்று கோடைக்காலத்துக்கு மற்றொன்று பனிக்காலத்துக்கு. இப்படி தான் மலேனா வோகிக்கின் வாழ்வில் வந்தது. மலேனாவுக்காக வோகிக் மீன்கள் பிடித்து வருவார். இலை தழைகளைக் கொண்டு வருவார். தன் 4 பிள்ளைகளைவிடவும் பாசமாகப் பார்த்துக்கொண்டார். 10 ஆண்டுகள் இப்படியாகக் கழிந்தன. ஒரு நாள் காலை வோகிக் தன் வீட்டின் கூரையின் மீது வேறொரு நாரையைப் பார்த்தார். அந்த நாரை தொடர்ந்து வந்து வந்து செல்வதைப் பார்த்த வோகிக்கு விஷயம் புரிந்துவிட்டது. மலேனாவை நோக்கி காதல் அம்புகள் விட்டுக்கொண்டிருந்த அந்த நாரைக்கும் மீன்கள் வைத்தார். சில நாள்கள் ஓகே சொல்லாமல் அலைக்கழித்த மலேனா, பின்னர் அந்த நாரையை தன் கூட்டுக்குள் அனுமதித்தது. வோகிக்கு தாங்க முடியாதா சந்தோஷம். பறக்க முடியாத தன் மலேனாவுக்கு புதிய வாழ்க்கை கிடைத்துவிட்டதாக எண்ணி மகிழ்ந்தார்.   மலேனாவுடன் காதல் கொண்ட அந்த நாரைக்கு க்லெப்டன் என்று பேர் வைத்தார். க்லெப்டன் திடீரென ஒருநாள் மலேனாவை விட்டு எங்கோ சென்றுவிட்டது. வோகிக் மனமுடைந்துப் போனார். ஆனால், மலேனா எந்த வித தவிப்புமின்றி இருந்தது. இப்படியாக சில காலம் கடந்தது. பனிக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியது. மலேனாவின் கூட்டில் இருந்து கீச் கீச் ஒலி வழக்கத்தைவிட உற்சாகமாகக் கேட்டது. க்லெப்டன் இஸ் பேக். ஆம் க்லெப்டன் கூடுத் திரும்பிவிட்டது. அப்போதுதான் வோகிக் புரிந்துகொண்டார். பனிக்காலம் முழுவதும் க்லெப்டன் தென்னாப்பிரிக்காவுக்கு குடிபெயர்ந்துவிடும். வெயில் காலம் தொடங்கியதும் தன் அன்பு காதலி மலேனாவின் கூடுக்கு வந்துவிடும். ஒவ்வொரு முறையும் கோடைக்காலம் தொடங்கியதும், க்லெப்டன் வரும் வரை வோகிக் பதற்றத்துடனேயே இருப்பார். காரணம், 5,000 மைல்கள் தாண்டி வரும் க்லெப்டன் வழியில் வேடர்களின் குண்டுகளுக்கு இறையாகிவிடக் கூடாது என்ற அச்சம். ஒரு கோடையின்போது வேறு ஏதோ ஆண் நாரை மலேனாவின் கூட்டுக்குள் வந்துவிட்டது. அவ்வளவுதான் கோவத்தில் மலேனா தன் கூட்டுக்குள் இருந்த அத்தனை உணவையும் எட்டி உதைத்து நாசம் செய்து அந்த நாரையை துரத்திவிட்டது. சில நாள்களுக்கு பின் க்லெப்டன் மீண்டும் வந்த பின்புதான் மலேனா இயல்பு நிலைக்குத் திரும்பியது. இவர்களின் ரியூனியனை பார்க்கவே ஒவ்வொரு கோடைக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறவை காதலர்கள் வோகிக்கின் வீட்டுக்கு வந்து செல்கின்றனர். 15 வருட காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக இதுவரை 62 குஞ்சிகளை ஈன்றெடுத்துள்ளது மலேனா. ஒவ்வொரு குஞ்சும் சற்று வளர்ந்தவுடன் சுதந்திரமாக வானத்தில் பறக்க கிளம்பிவிடும். இன்றையளவில் மலேனாவும் க்லெப்டனும் குரோசியாவில் செலிபிரிட்டி Couple. இவர்களை பற்றிய அப்டேட்ஸ்க்காகவே வோகிக்கை பலர் முகநூலில் பின் தொடர்கின்றனர். பறக்க முடியாத காதலியைப் பார்க்க கடந்த 15 ஆண்டுகளாக, தன் உயிரைப் பணயம் வைத்து 5,000 மைல்கள் தாண்டி வருகிறது ஒரு பறவை. காதலால் அன்றி வேறு எந்த சக்தியாலும் இந்த அற்புதத்தை நிகழ்த்த முடியாது. https://www.vikatan.com/living-things/animals/rescued-stork-malenas-love-story
  • சரி மதம் ஒரு திசை மாறக்கூடிய ஒரு விவாதப்பொருள்.  எங்கள் பலமான கல்விக்கு செல்வோம். ஒரு நடக்கும் திட்டத்தை எடுத்து அமுல்படுத்தலாம், அதன் மூலம் அடுத்த தலைமுறையை தாமாக சிந்தித்து தமது காலில் தமக்காக நிற்கும் சமூகமாக மாற்றலாமா?  - சகல தமிழ் குழந்தைகளும் ஆரம்ப கல்வியை, அதாவது ஐந்தாம் வகுப்பு வரை படித்து முடிக்க வேண்டும்  - அதற்கு என்ன தேவை ? என்ன செய்யலாம்? இவ்வரசு செய்யலாம்? .....  - இல்லை சகல பெண்களும் பத்தாம் வகுப்பு வரை கல்வி கற்று முடிக்க  என்ன செய்யலாம்?