Jump to content

திரு­ம­லையில் சீன முத­லீட்­டுடன் இரும்பு உருக்கு தொழிற்­சாலை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திரு­ம­லையில் சீன முத­லீட்­டுடன் இரும்பு உருக்கு தொழிற்­சாலை?

திரு­கோ­ண­மலை கப்­பற்­றுறை பகு­தியில் இரும்பு உருக்கு தொழிற்­சாலை ஒன்­றினை சீன முத­லீட்­டுடன் அமைப்­ப­தற்கு 600 ஏக்கர் காணி­யினை வழங்க வேண்டும் என்று சர்­வ­தேச முத­லீட்டு ஊக்­கு­விப்பு அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம விடுத்த கோரிக்­கைக்கு அமைச்­ச­ரவை அனு­மதி கிடைக்­க­வில்லை.

 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று முற்­பகல் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்­றது. இதன்­போது திரு­கோ­ண­மலை கப்­பற்­றுறைப் பகு­தியில் இரும்பு உருக்கு தொழிற்­சா­லையை சீன முத­லீட்­டுடன் அமைப்­ப­தற்கு 600 ஏக்கர் காணி வழங்­கப்­பட வேண்டும் என்ற அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை அமைச்சர் மலிக் சம­ர­விக்­கிர சமர்ப்­பித்தார். இதற்கு துறை­மு­கங்கள் அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரட்­நா­யக்க கடும் எதிர்ப்புத் தெரி­வித்தார். துறை­முக அதி­கார சபைக்குச் சொந்­த­மான 600 ஏக்கர் காணியை இதற்கு வழங்க முடி­யாது என்று அமைச்சர் வாதிட்­டுள்ளார். 

இத­னை­ய­டுத்து இரு­வ­ருக்கும் இடையில் வாக்­கு­வாதம் இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போது கருத்துத் தெரி­வித்த அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க, இப்­ப­கு­தியில் இரும்பு உருக்கும் தொழிற்­சாலை அமைக்­கப்­பட்டால் சூழல் மாச­டையும் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

இதன்­போது கருத்துத் தெரி­வித்த அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம, சூழல் பாது­காப்பு அதி­கார சபையின் சான்­றி­தழைப் பெற்றே இதற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று கூறி­யுள்ளார். ஆனாலும் இதற்­கான காணியை வழங்க அமைச்சர் சாகல ரட்­நா­யக்க மறுத்­த­தை­ய­டுத்து இரும்பு உருக்கு தொழிற்­சா­லைக்கு காணியை வழங்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வலி­யு­றுத்­தி­யுள்ளார். ஆனாலும் இவ்­வி­டயம் குறித்து இறுதித் தீர்­மானம் நேற்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் எடுக்­கப்­ப­ட­வில்லை.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், உங்களது பிரச்சினைக்கு நீங்கள் அலரிமாளிக்கைக்குள் தீர்வைக் காண வேண்டும். அதன் பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/56981

Link to comment
Share on other sites

போரின் பின்னர் இதுவரைக்கும் கடைப்பிடிக்கபட்ட நடைமுறைக்கு மாறாக வடகிழக்கில் சீன பகிஸ்தானிய முதலீடுகள் அனுமதிக்கபடுமென நம்பவில்லை. அனுமதித்தால் அது சம்பந்தர் செய்துவரும் தேசிய சர்வதேசிய அரசியலின் மீழமுடியாத படு தோல்வியாகவே முடியும்.
.
சீனா தொடற்ச்சியாக தமிழரின் நலன்களுக்கு எதிரான நிலைபாட்டில் உறுதியாக உள்ளது. சம்பந்தர் போரின் தோல்விக்குப்பின்னர் அதலபாததில் வீழந்துகிடக்கும்  தமிழர் நலன்களை மீட்க்க இந்தியா சக மேற்க்கு நாடுகள் ஜப்பான் அணியின் கயிற்றையே இறுக பற்றியுள்ளார்.
.
தொடரும் வளமைக்கு மாறாக மேற்க்கு நாடுகளையும் இந்தியாவையும் ஜப்பானையும் புறம்தள்ளிவிட்டு சீனாவை வடகிழக்கில் காலூன்ற அனுமதிக்கும் சாத்தியமில்லையென்றே நம்புகிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, poet said:
போரின் பின்னர் இதுவரைக்கும் கடைப்பிடிக்கபட்ட நடைமுறைக்கு மாறாக வடகிழக்கில் சீன பகிஸ்தானிய முதலீடுகள் அனுமதிக்கபடுமென நம்பவில்லை. அனுமதித்தால் அது சம்பந்தர் செய்துவரும் தேசிய சர்வதேசிய அரசியலின் மீழமுடியாத படு தோல்வியாகவே முடியும்.
.
சீனா தொடற்ச்சியாக தமிழரின் நலன்களுக்கு எதிரான நிலைபாட்டில் உறுதியாக உள்ளது. சம்பந்தர் போரின் தோல்விக்குப்பின்னர் அதலபாததில் வீழந்துகிடக்கும்  தமிழர் நலன்களை மீட்க்க இந்தியா சக மேற்க்கு நாடுகள் ஜப்பான் அணியின் கயிற்றையே இறுக பற்றியுள்ளார்.
.
தொடரும் வளமைக்கு மாறாக மேற்க்கு நாடுகளையும் இந்தியாவையும் ஜப்பானையும் புறம்தள்ளிவிட்டு சீனாவை வடகிழக்கில் காலூன்ற அனுமதிக்கும் சாத்தியமில்லையென்றே நம்புகிறேன்.

சம்பந்தருக்கு என்ன அதிகாரம் ஐயா இருக்கு தடுத்து நிறுத்த...... அரசாங்க அமைச்சர்கள் நினைத்தால் எதையும் செய்யலாம் ....

Link to comment
Share on other sites

putthan நண்பா,   மனம் தளராமல் சம்பந்தர் மேற்க்கு நாடுகள் இந்தியா யப்பானோடு செய்கிற அரசியலை சொன்னேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

putthan நண்பா,   மனம் தளராமல் சம்பந்தர் மேற்க்கு நாடுகள் இந்தியா யப்பானோடு செய்கிற அரசியலை சொன்னேன். 

இந்தியா ,மேற்குலகு ,மற்றும் ஜப்பான் போன்றவை ,சிறிலங்கா வின் அதிகாரமையம்  கையசைத்தால் சம்பந்தரை கணக்கில் எடுக்க மாட்டார்கள்

Link to comment
Share on other sites

3 hours ago, poet said:

சீனா தொடற்ச்சியாக தமிழரின் நலன்களுக்கு எதிரான நிலைபாட்டில் உறுதியாக உள்ளது. சம்பந்தர் போரின் தோல்விக்குப்பின்னர் அதலபாததில் வீழந்துகிடக்கும்  தமிழர் நலன்களை மீட்க்க இந்தியா சக மேற்க்கு நாடுகள் ஜப்பான் அணியின் கயிற்றையே இறுக பற்றியுள்ளார்.

உண்மையை அப்பிடியே உல்ட்டா செய்து இப்பிடி ஒரு பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுவது ஒரு தனித்திறமைதான்!

சம்பந்தர் தன்றை வாழ்நாளில் செய்யாத ஒன்றை செய்ததா கூறுறது கொஞ்சம் இல்லை எக்கச்சக்கமான ரீல் தான்.

Link to comment
Share on other sites

5 hours ago, poet said:
போரின் பின்னர் இதுவரைக்கும் கடைப்பிடிக்கபட்ட நடைமுறைக்கு மாறாக வடகிழக்கில் சீன பகிஸ்தானிய முதலீடுகள் அனுமதிக்கபடுமென நம்பவில்லை. அனுமதித்தால் அது சம்பந்தர் செய்துவரும் தேசிய சர்வதேசிய அரசியலின் மீழமுடியாத படு தோல்வியாகவே முடியும்.
.
சீனா தொடற்ச்சியாக தமிழரின் நலன்களுக்கு எதிரான நிலைபாட்டில் உறுதியாக உள்ளது. சம்பந்தர் போரின் தோல்விக்குப்பின்னர் அதலபாததில் வீழந்துகிடக்கும்  தமிழர் நலன்களை மீட்க்க இந்தியா சக மேற்க்கு நாடுகள் ஜப்பான் அணியின் கயிற்றையே இறுக பற்றியுள்ளார்.
.
தொடரும் வளமைக்கு மாறாக மேற்க்கு நாடுகளையும் இந்தியாவையும் ஜப்பானையும் புறம்தள்ளிவிட்டு சீனாவை வடகிழக்கில் காலூன்ற அனுமதிக்கும் சாத்தியமில்லையென்றே நம்புகிறேன்.

வடக்கு கிழக்கில் சீனா, பாக்கிஸ்தான் காலடி வைத்தால் இந்தியாவை விட உங்களுக்கு தான் அதிக கவலை போல. நல்ல இந்திய விசுவாசி நீங்கள். 😀

கொழும்பு, அம்பாந்தோட்டை என்று ஹாயா அபிவிருத்திகளை செய்யும் சீனா திருகோணமலை பக்கமும் வரும் காலம் தொலைவிலில்லை.

சீனா தொடர்ச்சியாக தமிழர்களின் நலன்களுக்கு எதிராக உள்ளதென்றால் இந்தியா என்ன தமிழர்களின் நலன்களுக்கு ஆதரவாக இருக்குதோ? ஹிஹிஹி.

போர் முடிந்த பின் அதள பாதாளத்தில் விழுந்து கிடக்கும் தமிழர் நலன்களை இன்னும் குழிதோண்டிப்புதைக்கும் வேலையை தான் சம்பந்தன் செய்கிறார். தேசிய, சர்வதேச அரசியலில் அவர்கள் வாலை பிடித்து தொங்குவதை விட ஏதும் ஸ்பெஷலா சம்பந்தன் செய்யவில்லை, இனி அவர் படுதோல்வியடைவதற்கு.

முஸ்லிம்கள் தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்ததையே தடுக்காத ஒருவர் சீனா வாறதை தடுக்கப்போறாரோ? வேணுமெண்டால் 2 அறிக்கை விடலாம். 😎

Link to comment
Share on other sites

நன்றி putthan . உங்கள் ஊகத்துக்கு அடிபடை இல்லையென்று மறுக்கவில்லை. எனினும் நான் ஊங்கங்களின் அடிப்படையில்  பேசவில்லை. இன்றுள்ள நிலமை தொடர்பான தகவல்கள் அடிப்படையிலேயே பேசுகிறேன்.  Rajesh  Lara அவர்களே,   தயவுசெய்து subjective தனிமனித கொச்சை படுத்தலை கைவிடுங்கள்.  கொச்சைப்படுத்தல் விவாதமல்ல. விடயத்தை புரிந்துகொண்டு உங்கள் கருத்தை முன் வையுங்கள்  வடகிழக்கில் மட்டும் இதுவரை சீன முதலீடுகளை  கூட்டமைப்பின் எதிர்பதும் தொடர்ந்து அதனை  மேற்க்கு நாடுகள்  இந்தியா ஜப்பான்  தலையிட்டு தருத்து நிறுத்துவதும் வெற்றிகரமாக இடம்பெறுகிறது.   இதுவரை வடகிழக்கினுள் சீனாவை கொண்டுவர அரசும் சிங்கள கட்சிகளும் எடுத்த நடவடிக்கைகள் முறியடிக்கபட்டுள்ளது. இது குறிப்பிடத் ட்தக்க முன்னேற்றம்.   விவாதத்தை ஆய்ந்து அறிந்து objective ஆக முன்வையுங் கள் பதில் அளிக்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

நன்றி putthan . உங்கள் ஊகத்துக்கு அடிபடை இல்லையென்று மறுக்கவில்லை. எனினும் நான் ஊங்கங்களின் அடிப்படையில்  பேசவில்லை. இன்றுள்ள நிலமை தொடர்பான தகவல்கள் .  

சம்பந்தன் ஐயா இவ்வளவு செல்வாக்குடன் இருப்பவர் என்றால் பல நல்ல விடயங்களை  சமுகத்திற்கு செய்திருக்கலாம் செய்யவில்லை .....செய்திருந்தால் அதை மக்களுக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும்....பணபலத்துடன் மத்தியகிழக்கு நாடுகள் செய்யும் அபிவிருத்தியை (முஸ்லீம் மக்களுக்கு) அளவுக்கு தானும் ஐயாவினால் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி செய்ய முடியவில்லை...

Link to comment
Share on other sites

9 hours ago, poet said:

Rajesh  Lara அவர்களே,   தயவுசெய்து subjective தனிமனித கொச்சை படுத்தலை கைவிடுங்கள்.  கொச்சைப்படுத்தல் விவாதமல்ல. விடயத்தை புரிந்துகொண்டு உங்கள் கருத்தை முன் வையுங்கள்  வடகிழக்கில் மட்டும் இதுவரை சீன முதலீடுகளை  கூட்டமைப்பின் எதிர்பதும் தொடர்ந்து அதனை  மேற்க்கு நாடுகள்  இந்தியா ஜப்பான்  தலையிட்டு தருத்து நிறுத்துவதும் வெற்றிகரமாக இடம்பெறுகிறது.   இதுவரை வடகிழக்கினுள் சீனாவை கொண்டுவர அரசும் சிங்கள கட்சிகளும் எடுத்த நடவடிக்கைகள் முறியடிக்கபட்டுள்ளது. இது குறிப்பிடத் ட்தக்க முன்னேற்றம்.   விவாதத்தை ஆய்ந்து அறிந்து objective ஆக முன்வையுங் கள் பதில் அளிக்கிறேன்.  

நீங்கள் இந்தியாவுக்கு வெள்ளையடிப்பது போல் எழுதியிருந்ததற்கே என் பதிலை தந்திருந்தேன். சில நேரங்களில் உண்மை கசக்கும்.

வடக்கு கிழக்கில் சீனாவை கொண்டுவருவதற்கான முயற்சி சம்பந்தனால் முறியடிக்கப்பட்டதல்ல. அவர் அறிக்கை விடுவதோ, எதிர்ப்பு தெரிவிப்பதோ ஒரு மாற்றத்தையும் கொண்டு வந்ததில்லை, இனியும் கொண்டு வராது.

அமெரிக்காவுக்கு திருகோணமலை துறைமுகத்தில் தான் கால் பதித்து அங்கு நிலைகொள்ளும் எண்ணமுள்ளது. அதனால் அப்பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. இந்தியா, ஜப்பானுக்கும் அதே நிலை. (அபிவிருத்தி பற்றி கூறவில்லை)

சீனாவை வடக்கு கிழக்கில் புக விடாததில் அமெரிக்காவின் பங்கும் உள்ளது, அதே போல் இந்தியா தனது சுயநலம் கருதி இன்னொரு பக்கம் வடக்கு கிழக்கை தன் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கவும் முயல்கிறது.

ஆனால் எவ்வளவு காலத்திற்கு அவர்களால் சீனாவை தடுக்க முடியும் என்பதை காலம் சொல்லும். சீனாவும் வடக்கு கிழக்கினுள் புகும் முயற்சியை கைவிடவில்லை.

Link to comment
Share on other sites

அதுக்காக சீன முதலீட்டில் இரும்பு உருக்கு தொழிற்சாலை ஆரம்பிக்கப்படும் என்று நான் கூற வரவில்லை. நான் கூற வந்தது சீனா வடக்கு கிழக்கினுள் நுழையும் காலம் விரைவில் வரும் என்பதே.

Link to comment
Share on other sites

மதிப்புக்குரிய Lara. ”சீனா வடக்கு கிழக்கினுள் நுழையும் காலம் விரைவில் வரும் என்பதே.” என்கிற உங்கள்  ஆசை நிராசையாக வேண்டும் என்பதே என் அரசியலும் என் ஆய்வும் என்பதை தெரிவிக்க கடமைப்  பட்டுள்ளேன்.  

Lara அவர்களே இதுவரை தடுக்கபட்ட சீனா விரைவில் வடகிழக்கில் நுழையுமென்று எதை வைத்துக் கூறுகிறீங்க. உங்கள் விருப்பம் நிறைவேறக்கூடாது என்பதுதான் என் விருப்பமாக இருக்கு. இதுவரை வடகிழக்கில் சீனா இறங்க முயன்றபோதெல்லாம் கூட்டமைப்பு /சம்பந்தர் எதிர்பதும் அதை ஆதரித்து இந்தியா அமரிக்கா ஜப்பான் மேற்க்குநாடுகள் தலையிட்டு வடகிழக்கில் சீனா திட்டங்கள் செயல்படுவதை தடுப்பதும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இது தமிழர் நிலம் தனி அலகாக செயல்படுகிற அரசியலாகும். இந்த அடிப்படையிலேயே நான் பேசுகிறேன். சீனா விரைவில் நுளையும் என்கிற உங்கள் கருத்துக்கு ஏதாவது சிறு அடிப்படையாவது இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும். Lara அவர்களே கற்றுக்கொள்ள தயாராக உள்ளேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சனாதிபதியாக இருந்த போது கிழக்கில் நடந்த அனைத்து அபிவிருத்திகளும் சீன உபயமே! சீனத் தொழிலாளர்கள் உட்பட.

Link to comment
Share on other sites

1 hour ago, poet said:

மதிப்புக்குரிய Lara. ”சீனா வடக்கு கிழக்கினுள் நுழையும் காலம் விரைவில் வரும் என்பதே.” என்கிற உங்கள்  ஆசை நிராசையாக வேண்டும் என்பதே என் அரசியலும் என் ஆய்வும் என்பதை தெரிவிக்க கடமைப்  பட்டுள்ளேன்.  

Lara அவர்களே இதுவரை தடுக்கபட்ட சீனா விரைவில் வடகிழக்கில் நுழையுமென்று எதை வைத்துக் கூறுகிறீங்க. உங்கள் விருப்பம் நிறைவேறக்கூடாது என்பதுதான் என் விருப்பமாக இருக்கு. இதுவரை வடகிழக்கில் சீனா இறங்க முயன்றபோதெல்லாம் கூட்டமைப்பு /சம்பந்தர் எதிர்பதும் அதை ஆதரித்து இந்தியா அமரிக்கா ஜப்பான் மேற்க்குநாடுகள் தலையிட்டு வடகிழக்கில் சீனா திட்டங்கள் செயல்படுவதை தடுப்பதும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இது தமிழர் நிலம் தனி அலகாக செயல்படுகிற அரசியலாகும். இந்த அடிப்படையிலேயே நான் பேசுகிறேன். சீனா விரைவில் நுளையும் என்கிற உங்கள் கருத்துக்கு ஏதாவது சிறு அடிப்படையாவது இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும். Lara அவர்களே கற்றுக்கொள்ள தயாராக உள்ளேன்.  

நான் சீனாவுக்கெதிராக வேறு திரியில் எழுதியிருக்கிறேன். உங்களுடைய இந்தியா, சம்பந்தன் கதைக்கு தான் இங்கு விளக்கம் தந்தேனே தவிர நான் சீனா வர வேண்டுமென்ற ஆசையுடன் எழுதவில்லை. முதலில் எழுதினதை ஒழுங்கா வாசித்து விளங்கிக்கொள்ள பழகுங்கோ. சம்பந்தன் சொன்னதை ஆதரிச்சு இங்கு ஒரு நாடும் சீனா வாறதை தடுக்கேல்லை. அந்த நாடுகள் தமது நலன் கருதி சீனாவை வடக்கு கிழக்கினுள் விடாமல் சீனாவின் பல முயற்சிகளை தடுத்தார்கள்.

வடக்கு கிழக்கிற்கு சீனா வந்தாலென்ன இந்தியா வந்தாலென்ன தமிழர்களுக்கு ஒரு நன்மையும் அவர்கள் செய்யப்போவதில்லை. அதென்ன இந்தியா, ஜப்பான், அமெரிக்கா வரலாம், சீனா வரக்கூடாது?

Link to comment
Share on other sites

1 hour ago, MEERA said:

மகிந்த சனாதிபதியாக இருந்த போது கிழக்கில் நடந்த அனைத்து அபிவிருத்திகளும் சீன உபயமே! சீனத் தொழிலாளர்கள் உட்பட.

மகிந்த காலத்தில் மட்டுமல்ல, மைத்திரி காலத்திலும் சீனாவின் உதவியுடன் சில சில அபிவிருத்திகளை செய்கிறார்கள்.

ஆனாலும் சீனா கொழும்பு, அம்பாந்தோட்டையில் நிலை கொண்டது போல் வடக்கு கிழக்கில் இன்னும் நிலை கொள்ளவில்லை. 

Link to comment
Share on other sites

Lara அவர்களே. நான் அரசியல் கட்ச்சிக்காரனல்ல. மேலும் நான் என் சிற்றறிவுக்கு எட்டியவரை உறுதிப்படுத்தபட்ட  தரவுகளையே கையாழுகிறேன்..  எனக்கு தெரிந்தவற்றை நான் சொல்லவேண்டியதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஆதலால் இந்த விவாதத்தை விதண்டா வாதமாக்காமல் விடைபெறுகிறேன்.  

Link to comment
Share on other sites

1 hour ago, poet said:

Lara அவர்களே. நான் அரசியல் கட்ச்சிக்காரனல்ல. மேலும் நான் என் சிற்றறிவுக்கு எட்டியவரை உறுதிப்படுத்தபட்ட  தரவுகளையே கையாழுகிறேன்..  எனக்கு தெரிந்தவற்றை நான் சொல்லவேண்டியதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஆதலால் இந்த விவாதத்தை விதண்டா வாதமாக்காமல் விடைபெறுகிறேன்.  

உங்களை நானும் அரசியல் கட்சிக்காரன் என்று நினைக்கவில்லை. நீங்கள் தான் “சீனா தொடர்ச்சியாக தமிழரின் நலன்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது” என்று சொல்லிக்கொண்டு வந்தீர்கள். ஏதோ இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மட்டும் தமிழர் நலன்களுக்கு ஆதரவான நாடுகள் போலும் அவற்றுடன் சேர்ந்து சம்பந்தன் தமிழர் நலன்களை மீட்க முயல்பவர் போலும் சம்பந்தன் சொல்லி தான் இந்த நாடுகள் சீனாவுக்கு செல்லவிருக்கும் திட்டங்களை தடுக்கிறது போலும் எழுதியதற்கே என் எதிர்ப்பு.

சீனா உள்ளே வர நினைத்தால் சம்பந்தனால் எதுவும் செய்ய முடியாது. அறிக்கை விடுவதையும் எதிர்ப்பு தெரிவிப்பதையும் விட. இலங்கை அரசு நினைத்தால் இந்தியா, ஜப்பான், அமெரிக்காவை மீறி சீனாவுக்கு வடக்கு கிழக்கில் ஆழ வேரூன்ற அனுமதி கொடுக்கலாம். இப்ப மைத்திரி ரணிலுடன் கூட்டு சேர்ந்திருப்பதால் பின்னடிக்கிறார். மகிந்த என்றால் திருகோணமலை துறைமுகத்தை அப்படியே சீனாவுக்கு கொடுத்திருப்பார்.

Link to comment
Share on other sites

ACSA இலங்கையின் அனைத்து துறைமுகம், விமான நிலையங்களை (வடக்கு கிழக்கு உட்பட) உள்ளடக்கிய பகுதிக்குரியது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்குமிடையிலான இவ் ஒப்பந்தத்திற்கெதிரா இப்ப இவை சொல்லி அதை cancel பண்ண மாட்டினம். ஆனாலும் ஒரு செய்திக்காக இணைக்கிறன். சீனா சீனா என்று கத்தி இந்தியா, ஜப்பான், அமெரிக்கா பற்றி கோட்டை விடுவோரின் கவனத்திற்கு.

ULTRA-RIGHT PARTY OF SRI LANKA JOINS WITH ULTRA-LEFT PARTY TO CAMPAIGN AGAINST THE US DEFENSE PACTS

41068508-C792-430A-BDCA-2036A14833D4.jpg

Sri Lanka appears to be a battleground of a cold war between US and China super powers. Political sources say two small-time political parties have been hired by China for a campaign against the defense treaties of Sri Lanka with the US. 

Acquisition and Cross-Service Agreement (ACSA) was signed in 2007 between Sri Lanka and the United States during the time the Jathika Nidahas Peramuna aka National Freedom Front (NFF) which is one party that has published this set of posters was a coalition member of the government under President Mahinda Rajapakse. The agreement was extended in 2017 by the current government. 

ACSA paves access for the US military to enter Sri Lankan territory and bring in basic requirements including ammunition. Now the NFF is in the opposition and wants the agreement abolished. 

Meanwhile, US has proposed Status of Forces Agreement (SOFA) of which the content is yet to be revealed. However, it is alleged that SOFA seeks exemption for visiting US personnel from criminal jurisdiction under Sri Lankan law, while in Sri Lanka. Another such alleged clause is one that would give effect to the agreement through an ‘exchange of notes.’ 

SOFA is currently a Doesy under negotiation that seeks to update a 1995 agreement between the US and Sri Lanka which also carried an immunity clause.However, Sri Lanka passed Diplomatic Privileges Act No. 9 in 1996 under which granting of any diplomatic privileges and immunity needs to be published in a gazette and tabled in parliament.

However, the campaign against the two agreements with the US might be triggered with China backing, political sources say. While the United National Party (UNP) of the ruling alliance is maintaining close relations with the US, Sri Lanka Freedom Party (SLFP) the party led by President Maithripala Sirisena is closely tagged with China. 

President Sirisena visited China from May 14 to 16 while his home country had subjected to communal violence against Muslims after the Islam extremists launched a series of attacks taking more than 250 lives. The President held talks with his Chinese counterpart, Xi Jinping. 

The two political parties have proven through this poster campaign launched together that they have secretly joined hands to campaign against ACSA and SOFA. The posters appear to have been designed, printed and pasted by one service. The two parties have split from the moderate leftist People’s Liberation Front (JVP). Interestingly, NFF is ultr-right wing Sinhala Buddhist nationalists while the other party Frontline Socialist Party (FSP) is ultra-leftist.

http://praja.lk/english/ultra-right-party-of-sri-lanka-joins-with-ultra-left-party-to-campaign-against-the-us-defense-pacts/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.