Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் பிரதான அமைச்சு ஒன்றில் பணியாற்றும் மொஹமட் அலி ஹசன் கைது இன்று செய்யப்படடுள்ளார்.

மல்வானையிலுள்ள அவரின் வீட்டினை பரிசோதனை செய்த போது 92 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக பியமக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொஹமட் அலி ஹசன் நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளராக செயற்பட்டு வருகிறார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் அடுத்து நாடு பூராகவும் இராணுவத்தினர் தேடுல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது பயங்கரவாத அமைப்பான தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை கைது செய்து வருகின்றனர்.

சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பின் இலங்கை கிளையாக தவ்ஹித் ஜமாத் அமைப்பு செயற்பட்டு வருகிறது. இதன் தலைவராக தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த சஹ்ரான் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.tamilwin.com/security/01/216096?ref=breaking-news

Link to comment
Share on other sites

 

ஊரில் இருக்கும் வீட்டில் தோட்டக்கள் இருந்ததாகக் கூறி நிதியமைச்சின் செய்திப் பிரிவுப் பணிப்பாளர் மொகமட் அலி அசன் இன்று காலை பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

https://newsline.lk/news/6673-malwana-mohamad-ali-hasan

மல்வானை பிரதேசத்தில் பாதுகாப்புத் தரப்பினர் நடத்திய தேடுதல்களின் போது குறித்த வீட்டுக் கூரையில் இருந்து இந்தத் தோட்டக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரூவான் குணசேகர தெரிவித்தார்.

இதுகுறித்து விசாரித்தபோது, மல்வானை பிரதேசத்தில் இன்று அதிகாலை பாதுகாப்புத் தரப்பினர் தேடுதல் மேற்கொண்டதாகவும், இதன்போது வீட்டுக் கூரையில் இருந்து ஒருதொகை துருப்பிடித்த தோட்டக்கள் (93) மீட்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

மொகமட் அலி அசனின் வீட்டில் இருந்து தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவே பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. எவ்வாறாயினும், ஊரில் இருக்கும் பழைமை வாய்ந்த வீட்டிலேயே இந்தத் தோட்டாக்கள் மீட்கப்பட்டுளளன.

இதுகுறித்து கைதுசெய்யப்பட்டவரின் மகனைத் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் இதன் பின்னணி குறித்து விளக்கமளித்தார்.

''அந்த வீடு எமது தாத்தாவிற்குச் சொந்தமானது. அதாவது அம்மாவின் அப்பாவின் வீடு. எமது தாத்தாவிடம் போர துப்பாக்கியொன்று இருந்துள்ளது. 88 - 89 ஆண்டு வன்முறை காலப்பகுதியில் தாத்தா அந்தத் துப்பாக்கியை பொலிசாரிடம் ஒப்படைத்ததாக அம்மா கூறியிருந்தார். தற்போது தாத்தா இறந்து 17 வருடங்கள் கடந்துவிட்டன. அதன்பின்னரே எமது தந்தை குடும்பத்துடன் இங்கு வந்துள்ளார். அதாவது அம்மாவைத் திருமணம் முடித்த பின்னர்.

 

இந்தத் தோட்டாக்களை தாத்தா மறைத்துவைத்திருந்தாரா என்பது பற்றி எமக்குத் தெரியாது. தோட்டாக்கள் மீட்கப்பட்டபோது, எமது அம்மா பாதுகாப்புத் தரப்பினருக்கு இதுகுறித்து கூறினார். அதுவரை இந்த விவகாரம் எமது தந்தைக்குக் கூட தெரியாது. இந்தத் தோட்டாக்கள் பழையவையா? புதியவையா? என்பதை பரிசோதனை செய்யுமாறு பாதுகாப்புத் தரப்பினரிடம் கேட்டுள்ளோம்.'' என்று விளக்கமளித்தார்.

இந்தத் தோட்டக்கள் சுமார் 35 வருடங்கள் பழைமையானவை என்பது தெரியவருகிறது.

கடந்த காலங்களில் வீட்டில் வைத்திருக்கும் பழைய கத்தி, கோடாரிகளுக்கும் கைதுகள் நடந்துவரும் நிலையில், தாத்தா காலத்தில் ஒழித்துவைக்கப்பட்டிருந்த தோட்டக்களுக்காக குறித்த அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரிக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

Newsline.lk

https://newsline.lk/news/6673-malwana-mohamad-ali-hasan

 

Link to comment
Share on other sites

''நிதி அமைச்சிற்குள் ஐ.எஸ் பயங்கரவாதியா? வெடிபொருட்களுடன் சிக்கிய மொஹமட் அலி ஹசன்''
என்று பொய்யான பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், செய்திகளை வெளியிட்டு, மக்களை பீதியாக வைத்திருக்க முனையும் இவ்வாறான ஊடகங்களை என்ன சொல்வது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் விசாரணைகளின் பின் விடுதலை

 
May 30, 2019

Hasan.jpg?resize=650%2C433

துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் மொஹமட் அலி ஹசன்  விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2019/123017/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.