• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • டென்மார்கில் Aarhus நகர பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் வார நிகழ்வு! தமது இனிய உயிர் அர்ப்பணிப்பால் தனியரசிற்கு வித்திட்டு ,உரமிட்ட மாவீரர்களை நினைவு கூரும்பு னித மாவீரர் வார நிகழ்வு Aarhus பல்கலைக்கழக மாணவர்களால் நான்காவது தடவையாக 20.11.19 அன்று மிகவும் உணர்வு பூர்வமாக நடாத்தப்பட்டது . முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழத்தேசியக்கொடியேற்றல், ஈகச்சுடர் ஏற்றல், அகவணக்கம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலிக்கப்பட்டு அதன் பின்பு மாணவர்களால் மலர்வணக்கம் உணர்வுபூர்வமாக செலுத்தப்பட்டது. மாவீரர் வார நிகழ்வில் எழுச்சி உரை,எழுச்சி நடனம்,கவிதை, பாட்டுகள் என்பன இடம்பெற்றன. அனைத்தும் மாவீரர்களின் தியாகத்தையும் ,அவர்களின் வீரச்செயல்களையும் உணர்த்துவகையாக அமைந்துள்ளன. எமது தேசியத் தலைவரின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் “ தேச விடுதலைப்பணியைத்தீ விரமாக முன்னெடுத்து வருகின்ற புலம் பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எமது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் “ என்று குறிப்பிட்டு இருக்கிறார். இளம் சமுதாயம் தலைவரின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள். மாவீரர்களின் கனவை எல்லோரும் சேர்ந்து நனவாக்க வேண்டும். அவர்களின் தியாகத்தை அடுத்த சந்ததிக்கு சொல்லவேண்டிய கடமையும் இளையோர்களாகிய எமது கையில் தான் உள்ளது என்பதில் நாம் தெளிவாக உள்ளோம். சத்திய இலட்சியத்தீயில் தம்மையே அழித்து சரித்திரமானவர்களின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடையும் வரை நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என உறுதி எடுத்துக்கொள்கிறோம். Aarhus பல்கலைக்கழக மாணவர்களின் மாவீர வார நிகழ்வைத் தொடர்ந்து 25.11.19 அன்று Odense பல்கலைக்கழகத்திலும் மாவீரர் வார நிகழ்வு நடைபெறும். பல்கலைக்கழக மாணவர்களின் மாவீர வார நிகழ்வைத் தொடர்ந்து எமது தேசத்தை காக்க எழுந்த வீரர்கள் சாவின் பின்பும் வாழ்கின்றனர். மகத்தான சாதனை படைத்த மாவீரர்களாக துயில்கின்றனர் எமக்கெல்லாம் வழிகாட்டி விழிமூடிய மாவீரர்களை நினைவு கூரும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் 27.11.19 அன்று Herning ,Holbæk நகரங்களில் நடைபெற உள்ளது. “ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” Aarhus பல்கலைக்கழக மாணவர்கள்  
    • மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!    தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்! ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்!   ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!  ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்! மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!   மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி   வதம் செய்யும் ஆட்சி தன்னை.. உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்.. உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்…. சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள்! துணிந்தெழும் ஞானவான்கள்! (மாவீரர்….) தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள் வீசிய இளம் தென்றல்கள்! விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும் விடுதலை ஆண்பெண் பொன்கள்! தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள் வீசிய இளம் தென்றல்கள்! விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும் விடுதலை ஆண்பெண் பொன்கள்! பற்றுகோடாகி எங்கள் பலமாகி நிற்கும் தூண்கள்! பலமாகி நிற்கும் தூண்கள்!
    • மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் தமிழர்களின் உரிமைக்காக தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நினை வேந்தல் வார நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன.          http://valampurii.lk/valampurii/content.php?id=19892&ctype=news