அபராஜிதன்

பொன்னியின் செல்வனும் மணிரத்தினமும்,மற்றும் ஐஸ்வர்யாவும்

Recommended Posts

ஒரு சின்ன கேள்வி.. 
நீங்கள் பொன்னியின் செல்வன் வாசித்துவிட்டீர்களா?

இது பழுவேட்டரையர் எனும் பெயரில் உள்ள ஐடியினால் Twitter ல பல நாட்களிற்கு முன்  கேட்கப்பட்ட கேள்வி 

கேள்வியை இப்பிடி கேட்கனும் "பொன்னியின் செல்வன் எத்தனை முறை வாசித்திருக்கிறீர்கள்"? என comment உடன் Re Tweet பண்ணி இருந்தேன்  

 பிந்தைய நாட்களில் மணிரத்னம் பொன்னியின் செல்வனை படமாக்க இருப்பதாகவும் ஐஸ்வர்யா தனுஷ் பொன்னியின் செல்வன வெப்சீரிஸ் ஆக எடுக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன.

பொன்னியின் செல்வன் எடுப்பதில் உள்ள சிக்கலே பொன்னியின் செல்வனின் வாசகர்களின் கற்பனையில்  இருக்கும் கதாபாத்திரங்களிற்கு  வடிவம் கொடுப்பதற்கான நடிகர்கள் எவரும் இங்கு  இல்லை என்பதே..

ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தை யாரைக்கொண்டு நிரப்ப முடியும் 
குறும்பும் வாலிபத்திமிரும் மிக்க வந்தியத்தேவனை யார் பிரதியிடமுடியும் .யாரோ ஒருவர் சொல்லி இருந்தார்கள் மீண்டும் பொன்னியின் செல்வன் படிக்கப்போகிறேன் இம்முறையாவது மனம் வந்தியத்தேவனாக மாறாமல் இருக்கவேண்டும் என .
அந்தளவிற்கு வாசகர்மனங்களை ஆக்கிரமித்து நிற்கும்  பாத்திரங்கள் இவைகள். 

அழகும் அறிவும் மிக்க குந்தவைக்கு எந்த நடிகை வரமுடியும் ..துடிதுடிப்பும் வீரமும் நிறைந்த பூங்குழலி பாத்திரத்தை செய்வதற்கு  யார் தான் உண்டு 

அனுஷ்கா வை ஒரு இளவரசி பாத்திரத்திற்கு சரி சொல்லலாம் ஆனால் முன்பின்  தெரியாத  குந்தல இராச்சியத்தின்  இளவரசிக்கு பாந்தமா பொருந்திய அனுஷ்கா வாசகர்களின் கற்பனைகளில் இருக்கும் இளவரசிகளை ஈடுசெய்வது கடினமே 

மணிரத்னம் படம் எடுத்தாலும் நேரடியாக எடுக்க மாட்டார் .சத்தியவான் சாவித்ரி சுட்டு ரோஜா, மகாபாரதத்தை  சுட்டு தளபதி,இராமயணம் "ராவணன்"  போன்று தான் இதையும்  உல்டா பண்ணுவார் 

ஆனால் பொன்னியின் செல்வன வெப்சீரிஸ் ஆக எடுக்க ரஜினியின் மூத்தமகள் ஐஸ்வர்யாவை பிரபலநிறுவனம் அணுகி உள்ளதாகவும் அதுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெறுவதாகவும் கேள்விப்பட்ட போது எனக்கு ஐஸ்வர்யா தனுஸ் 
ஐ.நா சபையில் ஆடிய பரதநாட்டியம் தான் என்னையறியாமல் நினைவில் வந்து போனது 😝

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

அடிச்சுச் சொல்லுறன் எந்தவித பயமுமில்லாது இவர்கள் இக்கதையை சரியானபடி படமாக்கினால் எனது சொத்தையும் எழுதி வைக்கிறேன் எந்தக்கொம்பனாலும் இக்கதையை சரியானபடி படமாக்கமுடியாது

சிலவேளை மீம்ஸ்களைப் பார்த்து விமர்சனம் போடுகிறவர்களுக்கும் முக்கல் முனகல் பாடல்கள் கேட்பவர்கள் ரஜனி விஜை அஜித் படம்பார்ப்பவர்கள் பால் ஊத்துபவர்கள் இலக்கிய உலகின் அல்லக்கைகள் இவர்களுக்கு மணிரத்தினம் எடுக்கும் துக்கடாப்படம் பிடிக்கலாம் பொன்னியின்செல்வன் கதையை யாழ் நூல் நிலையம் எரிவதற்கு முன்பு இரவல் வாங்கி வாசித்த எம்போன்றவர்களுக்குத் திருப்தியளிக்கும் வண்ணம் யாராலும் படமாக்கமுடியாது. காரணம் அப்படிச்சிறந்த படமாக எடுக்கவேண்டுமாகில் விட்டுக்கொடுப்புகள் இல்லாதிருக்க வேண்டும். ஆனால் எல்லோரும் களைப்படைந்துவிடுவார்கள்.

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இன்றைய நடிகர்கள் முதலில் பொன்னியின் செல்வனை உள்ளார்த்தமாக வாசித்து தங்களை அதற்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.... மேலும் இரண்டரை மணித்தியாலத்துக்குள் அடங்குகிற விடயமா அது....!  😐

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

ஒரு  நாவலை படமாக்கும் நுட்பமும், திறனும், கலையும் தமிழ் சினிமாவில் இன்னும் இல்லை.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

பொன்னியின் செல்வன் நான் 2 தடவைகள் தான் வாசித்து இருக்கிறேன்...என்னிடம் இங்கு 5 பாகங்களும் உள்ளது...என்னுடைய பேவரிட் கதா பாத்திரம் "ஆதித்த கரிகாலன்."..யார் கொன்று இருப்பார்கள்?

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

பொன்னியின் செல்வன் எம்ஜிஆர் எடுத்து அது வெளியிடப்படவில்லை என்றொரு கதையும் அடிபட்டதே?

200px-Ponniyin_selvan_unfinished_tamil_film_poster.jpg

https://ta.wikipedia.org/wiki/பொன்னியின்_செல்வன்_(வெளிவராத_திரைப்படம்)

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

எனக்கென்னமோ இந்தப் படம் எடுப்பதற்கு யாராலும் முடியாது என்றே படுகிறது.

திருவருட்செல்வர் காலத்து சிவாஜி செய்தால் நல்லா இருக்கும் என முன்பு யோசிப்பேன். ஆனால் அண்மையில் ராஜராஜ சோழன் பார்த்தேன். அந்த நம்பிக்கையும் போச்சு.

ஆயிரத்தில் ஒருவன் (2) சோழனாக பார்தீபன் எவ்வளோ டிரை பண்ணினாலும் எனக்கு திரையில் உள்ளே-வெளியே பார்தீபனே தெரிந்தார்.

 பாரதி போல தமிழுக்கு முற்றிலும் அறிமுகமில்லாத ஒரு மேடைநாடக பின்புலமுள்ள நடிகர் சரிவரலாம்.

தமிழ் நடிகர்தான் வேணும் எண்டால் - சத்யராஜ். பாகுபலி, பெரியார் இரெண்டிலும் எமக்குத் தெரிந்த நக்கல் சத்தியராஜ் கண்ணில் வராமல் நடித்தார்.

குந்தவை - நடிகை அர்சனா போல ஒருவர்.

பூங்குழலி - யாராவது புதுமுகம்.

நல்ல ஒரு டைரக்டர் - ஞான ராஜசேகரன்

இசை - ராஜா

பாடல்கள் - வைரமுத்து

வசனம் - கமல்+ஞான சம்பந்தம்

மணிரத்னம் - லைட்பாய்

ரஜனி குடும்பம் - போஸ்டர் ஒட்டுதல்.

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, ரதி said:

பொன்னியின் செல்வன் நான் 2 தடவைகள் தான் வாசித்து இருக்கிறேன்...என்னிடம் இங்கு 5 பாகங்களும் உள்ளது...என்னுடைய பேவரிட் கதா பாத்திரம் "ஆதித்த கரிகாலன்."..யார் கொன்று இருப்பார்கள்?

நான் கிட்டத்தட்ட5-7 தடவைகள்வரை படித்திருக்கிறேன் அப்ஸ்ல  மட்டும் 3 தடவைக்கு மேல் ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என கல்கி பதில் அளிக்கவில்லை வரலாற்றிற்கே யார் என தெரியாததற்கு அவரால் எப்படி அளிக்க முடியும்  பூடகமாக நந்தினி யாகவோ பெரிய பழுவேட்டரையராகவோ அல்லது நிலவறையில் ஒளிந்திருந்த ரவிதாசன் குழுவினராலையோ அது நடந்திருக்கலாம் என கோடி காட்டி இருப்பார் உடனடி பழி விழுந்தது என்னவோ வல்லவரையன் வந்தியத்தேவன் மேல் தான் 19 ஆண்டுகள் கழித்தே அதாவது ராஜராஜ சோழன் ஆட்சிப்பீடத்திற்கு வந்த பின்னரே ரவிதாஸன் குழுவினர் தண்டிக்கப்பட்டனர்.. 

7 hours ago, குமாரசாமி said:

பொன்னியின் செல்வன் எம்ஜிஆர் எடுத்து அது வெளியிடப்படவில்லை என்றொரு கதையும் அடிபட்டதே?

200px-Ponniyin_selvan_unfinished_tamil_film_poster.jpg

https://ta.wikipedia.org/wiki/பொன்னியின்_செல்வன்_(வெளிவராத_திரைப்படம்)

எம் ஜி ஆர் ற்கு இந்த கதை எடுப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்த்து.. அதற்கான ஆயத்தவேலைகளும் நடைபெற்றனவாம் ,ஏற்படும் பொருட்செலவு அதிகம் என்பதாலும் எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டதனாலும் அதற்கான முயற்சிகள் இடை நடுவில் கைவிடப்பட்டன. 

Share this post


Link to post
Share on other sites

மணிரத்னம் அதுக்கு சரிவரமாட்டார் ஒரேயடியாய் சொதப்பி விடுவார்..... செல்வராகவன், ராஜமௌலி போன்றவர்களால் ஓரளவு செய்ய முடியும் என்று நினைக்கின்றேன்....! 

ஆனால் பொன்னியின் செல்வன், கடல்புறா, யவனராணி  போன்றவை வாசகர்களின் மனசுக்குள் கட்டி வைத்திருக்கும் அளவு பிரமாண்டமாய் யாராலும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம்.....!

Share this post


Link to post
Share on other sites
On 5/29/2019 at 12:55 PM, அபராஜிதன் said:

பொன்னியின் செல்வன் எடுப்பதில் உள்ள சிக்கலே பொன்னியின் செல்வனின் வாசகர்களின் கற்பனையில்  இருக்கும் கதாபாத்திரங்களிற்கு  வடிவம் கொடுப்பதற்கான நடிகர்கள் எவரும் இங்கு  இல்லை என்பதே..

அந்த நாளில் ஆனந்த விகடன் என்ற அந்த இரவல் புத்தகம் எங்கள் வீட்டுக்கு வந்ததும் அடுத்தநாள் அடுத்தவீட்டுக் குடும்பத்துக்குப் போய்விடவேண்டும் என்பது விதி. அதில் வந்த கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதிவந்த தில்லானா மோகனாம்பாள் என்ற தொடரை யார் முதலில் வாசிப்பது என்ற போட்டி. அக்காமார், அண்ணா என்று எங்கள் குடும்பத்தையே புரட்டிப்போடும். கடைக்குட்டி நான், பள்ளிக்கூடம், விளையாட்டு முடிந்து வீட்டுக்கணக்கும் செய்து முடித்தபின், இரவுச்சாப்பாடும் முடியத்தான் கையில் கிடைக்கும். நித்திரைத் தூக்கம், மண்ணெண்ணை விளக்கு என்றாலும், கண் எரிய எரியத் தில்லானா மோகனாம்பாள் தொடரை வாசிப்பதில் அப்படி ஒரு வெறி. வாசித்து முடித்தபின் என் கனவில்வரும் அந்தக் கதாபாத்திரங்களை எல்லாம் அப்படியே தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் பார்த்து மகிழ்ந்தேன்.

கல்கியின் பொன்னியின் செல்வன் தொடரும் அப்படி ஒரு அனுபவத்தை எனக்குத் தந்தது. ஆனால் இதில் சிறு மாற்றம். தில்லானா மோகனாம்பாள் தொடரில் வந்த பாத்திரங்களை கனவில் கண்டேன். பொன்னியின் செல்வன் தொடரில் வந்த சில வந்தியத்தேவன், ஆழ்வார்கடியான், அருள்மொழிவர்மன் என்ற பாத்திரங்களாக நானே மாறிப்போவேன். என்னிடம் 5 பாகங்களும் உள்ளன. எத்தனைமுறை வாசித்தேன் என்ற கணக்கு எனக்கே தெரியாது. இப்போதும் கையில்கிடைக்கும் பாகத்தை எடுத்து வாசிப்பதில் அப்படி ஒரு இன்பம். இந்த இன்பம் மாறாது பாத்திரங்களை அப்படியே வடிவம் தரக்கூடிய நடிகர்கள் இன்று உள்ளனரா? திரைப்படம் அதனைத் தருமா? என்பதில் எனக்கும் சந்தேகமே.!! 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

முன்பும் பலர் சரித்திர தழுவல் படம் எடுக்க முயற்சித்தவை ..

karikalan.jpg

பார்ப்பம்..👍

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனைக் கைப்பற்றுவதற்காக லண்டனிலிருந்து பறந்து வந்த தயாரிப்பாளர்.

manirathnam.jpg

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தைத் தயாரிக்க இருப்பதாக மும்பையின் ரிலையன்ஸ் நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் அப்படத்தை  லைகா நிறுவனம் தயாரிப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக வைத்து படம் எடுக்கவிருக்கிறார் மணிரத்னம்.அப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி,அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ்,சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகிய இந்தி நட்சத்திரங்களையும் வைத்து ‘எடுக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.அப்படத்திற்கான முன்தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

lyca%20productions.jpg

சரித்திரப்பின்னணி கொண்ட படம் என்பதால் இந்தப்படத்தின். பட்ஜெட், இதுவரை மணிரத்னம் இயக்கிய படங்களிலேயே அதிக பட்ஜெட் ஒண்ட படமாகும். அதாவது பட்ஜெட் சுமார் 350 கோடி என்று சொல்லப்பட்டு வருகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளரை முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டே வந்தது

இந்நிலையில் கடந்த வாரம் நடந்த இரு சந்திப்புகளுக்குப் பிறகு லைகா நிறுவனமே இப்படத்தை தயாரிப்பது உறுதியானது. இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தாகியிருக்கிறதாம். அதற்காக இலண்டனில் இருந்து லைகா நிறுவனர் சுபாஷ்கரன் பறந்து வந்துள்ளார். அவரும் மணிரத்னமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்களாம்.இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.

https://tamil.asianetnews.com/cinema/lyka-productions-to-produce-ponniyin-selvan-pu3qn0

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • அனுபவப் பகிர்வை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். தொடருங்கள்.
  • வணக்கம், விவசாயி விக்...! கண்டது மிகவும் மகிழ்ச்சி......! காலம் தன் பாட்டில்....பயணிக்கின்றது...! எமது கனவுகள் மட்டும்....வெறும் நினைவுகளாக....!
  • “நாங்கள் கோதபாயவிற்கு அஞ்சுகிறோம்” – சண்டே ஒப்சேர்வர் தலையங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் நாட்டின் நாடித்துடிப்பை வெளிப்படுத்தும் தென்னிலங்கை ஆங்கில ஊடகங்கள் தங்கள் ‘பிரசாரத்தை’ அமைதியாகவே செய்து வருகின்றன. பெரும்பாலானவை பொதுஜன பெரமுன வேட்பாளரான கோதபாயவுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்தாலும் பகிரங்கமாக அவரை விமர்சிக்க அஞ்சுகின்றன. இச் சூழலில் இந்று வெளியான ‘சண்டே ஒப்சேர்வர்’ மிகவும் உருக்கமான தலையங்கமொன்றை எழுதியிருக்கிறது. அதைத் தமிழிலாக்கி மீளப் பிரசுரிப்பது தேவையென்று கருதுகிறோம். We fear Gotabaya கோதபாய சஜித்தின் பகிரங்க விவாத அழைப்பை நிராகரித்து விட்டார். தனக்கு வேலை தான் முக்கியமே தவிரப் பேச்சல்ல என்பது அவரது காரணம். அவருக்குப் பேசத் தெரியாது. கடினமான கேள்விகளால் அவர் இலகுவாகக் கொதித்தெழுபவர். அண்ணன் மஹிந்த மாதிரி அவர் இனிக்கப் பேசுபவர் அல்ல. இவ்வளவு காலமும் கட்டியெழுப்பிய அவரது பிம்பத்தின் நிஜம் தெரிந்துவிடக்கூடாது; தேர்தல் முடியும் மட்டும் அவர் வாயைத் திறக்காமல் இருப்பதே நல்லது என அவரது மேய்ப்பர்கள் கருதியிருக்கலாம். அப்படியிருந்தும் அவரது உண்மையான முகம் அப்பப்போ வெளிவந்து விடுகிறது. பொலநறுவவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது ஐ.தே.கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுக்குத் தாவிய வசந்தா சேனநாயக்காவைச் ‘சுடச் சுட’ மேடையேற்ற முயன்றபோது ஊடகக் கமராக்கள் முகத்துக்குள் இருப்பதையும் உதாசீனம் செய்துவிட்டு “அவனைத் தூக்கிலிடுவேன்’ எனக் கத்தியவர் கோதபாய. கேகாலையில் நடைபெறவிருந்த கூட்டமொன்றிற்கு மக்களை அழைத்துச் சென்ற ஒரு பஸ் வண்டியில் புத்தி பாதிக்கப்பட்ட (Down syndrome) ஒரு இளம் பெண் ஐந்து தடவைகள் வன்புணர்வு செய்யப்பட்டாள். அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவோ அல்லது அவளிடமிருந்து வாக்குமூலத்தைப் பெறவோ அச்சம் காரணமாகக் காவற்துறை முனையவில்லை. முறைப்பாடு செய்யக்கூடாது என அவளது குடும்பத்துக்கு அழுத்தம் வேறு கொடுக்கப்படுகிறது. இச் சம்பவத்தைப் பற்றி அறிந்த மூன்று கேகாலை காவற்துறை அதிகாரிகள் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். ராஜபக்சவின் கூட்டமொன்றில் கலந்துகொள்ள மறுத்தமைக்காக மாத்தளை மாவட்டத்தில் புத்த பிக்கு ஒருவர் பொதுஜன பெரமுன பிரதேச சபைத் தலைவரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளார். கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் 25% வாக்குகள் ராஜபக்சவுக்கே போடப்பட வேண்டுமென நாவலப்பிட்டி பொதுஜன பெரமுன நாட்டாமை மஹிந்தானந்த அளுத்கமகே முஸ்லிம் சமூகத்துக்கு விடும் எச்சரிக்கை காணொளியாக வலம் வருகிறது. “உங்களுக்காக நாங்கள் போராட வேண்டுமானால் எங்களுக்கு முஸ்லிம்களின் 25% வாக்குகள் வேண்டும்” என அவர் முஸ்லிம் சமூகத் தலைவர்களுக்கு எச்சரிப்பதாக அதில் காட்டப்படுகிறது. வடக்கில், முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீர் வீதித் தடைகள் மூலமும், இராணுவ மறிப்புகள் மூலமும், வாகாளர்களை எச்சரிப்பது சமீபகால சம்பவங்கள். வெள்ளை வான் காலத்து சூழ்நிலை மீளவும் ஒப்புவிக்கப்படுவது தெரிகிறது. கோதபாய வெற்றி பெற்றால் நாடு முழுவதும், சகல இனங்களும், ஒரு புதிய இருளான காலத்துக்குள் தள்ளப்படுவார்கள் என்பதற்கு மேற்கூறிய சில உதாரணங்களே போதும். மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் மூன்று விடயங்கள் உறுதிப்படுத்தப்படும். குடும்ப நிர்வாகம், ஊழல், மிருகத்தனம். உலகம் ஜனநாயகத்தை நோக்கி நகரும் வேளையில் கணிசமான எண்ணிக்கையான மக்கள் காடைத் தனத்தால் ஆளப்படுவேண்டுமென்று விரும்பும் நாடு இதுவாகத்தான் இருக்க வேண்டும். பெருந்தெருக்களுக்காகவும், துறைமுகங்களுக்காகவும், விமான நிலையங்களுக்காகவும், தாமரைக் கோபுரங்களுக்காகவும் சிறுபான்மையினரின் உரிமைகளை அடகுவைக்க விரும்பும் மக்கள் இந்நாட்டில் மட்டும்தான் வாழமுடியும். நேற்றய வெள்ளை வான் பயங்கரவாதத்தின் சூத்திரதாரிகள் தான் இன்றய நாளின் அறிவுசார் கோட்பாட்டாளர்கள். இது தேர்தலுக்கு முன்பான கடைசிப் பதிப்பு. வருகிற ஞாயிறு இந் நாட்டின் 7வது நிறைவேற்று ஜனாதிபதி தெரிசெய்யப்பட்டிருப்பார். நவம்பர் 16 ம் திகதி எம் வாசகர்கள் சரியான வகையில் உங்கள் வாக்குகளைப் பதிவுசெய்துகொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறோம். ஆசியாவின் மூத்த ஜனநாயகத்தை ஒளிரச் செய்யுங்கள். உண்மையைச் சொல்ல முயற்சிக்கும் இப் பத்திரிகையின் ஊடகவியலாளர்களினதும், நாடெங்கிலுமுள்ள இதர ஊடகவியலாளர்களினதும் உயிர்கள் அச்சுறுத்தப்படாது இருப்பதற்காகவாவது சிந்தித்து வாக்களியுங்கள். நவம்பர் 16 தேர்தலில் 35 வேட்பாளர்கள் நிற்கின்றார்கள். ஆனால் இந்த ஜனாதிபதி தேர்தல் இரண்டு பேர்களுக்கிடையேயான தேர்வு பற்றியது மட்டுமே. அவர்களில் ஒருவர் எங்களுக்குத் தீராத அச்சத்தைத் தருபவர். https://marumoli.com/நாங்கள்-கோதபாயவிற்கு-அஞ/
  • வெளிவரும் ராஜபக்ச கொடூரங்கள் | ஒப்புக்கொள்ளும் வெள்ளை வான் சாரதி! கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் முதலைகளுக்கு இரையாக வீசப்படும் வெள்ளை வான் சாரதி மற்றும் கடத்தப்பட்டுத் தப்பியவருடன் அமைச்சர் ராஜித சேனாரத்ன – பட்ம்: கெலும் லியனகே / டெய்லி மெயில் ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின் கட்சி அலுவலகத்தில் அவசரமாகக் கூட்டப்பட்ட ஊடக மாநாட்டில் ராஜபக்ச காலத்தில் கடத்தலுக்குப் பாவித்ததாகக் கருதப்படும் வெள்ளை வான் சாரதி ஒருவரும் கடத்தல் முயற்சியிலிருந்து தப்பியோடிய ஒருவரும் பல திடுக்கிடும் தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கினர். ராஜபக்ச காலத்தில் நடைபெற்ற பல ஆட்கடத்தல்கள், கொலைகள் என்பனவற்றைச் செய்தவர் எனக் கருதப்படும் வெள்ளை வான் சாரதியென, அந்தோனி பெர்ணாண்டோ என்பவரையும், வெள்ளை வானில் கடத்தப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டவர் என, அத்துள மதநாயக்கா என்பவரையும் அமைச்சர் இம் மாநாட்டில் அறிமுகப்படுத்தினார். ராஜபக்ச காலத்தில் நடைபெற்ற அத்தனை கடத்தல்களும், கொலைகளும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோதபாய ராஜபக்சவின் நேரடி உத்தரவின் பேரிலேயே நடைபெற்றதாக பெர்ணாண்டோ தெரிவித்தார். கடத்தப்பட்டவர்கள் நாட்டின் பல இடங்களிலும் இருந்த சித்திரவதைக் கூடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பலவகையான துன்புறுத்தல்களுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்ட பின்னர் கொல்லப்படுவர் என்றும் பெர்ணாண்டோ தெரிவித்தார். மொனராகலவிலுள்ள இப்படியொரு சித்திரவதை கூடத்திற்கு அருகிலிருந்த, முதலைகள் வாழும் குளம் ஒன்றினுள் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் வீசப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இக் குளத்தின் சரியான இடத்தைத் தன்னால் தற்போது அடையாளம் காட்ட இயலவில்லை எனவும் கூறினார். இராணுவத்தின் ஒரு பிரிகேடியரும், ஒரு மேஜரும் இக் குற்றங்களோடு தொடர்புபட்டிருக்கிறார்கள் என அறியப்படுகிறது. மதநாயக்கா ஊடகங்களுக்குக் கூறுகையில், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பஸ் ஒன்றில் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட தங்கம், பணம் போன்றவற்றைக் களவெடுத்ததற்காகத், தான் அக்டோபர் 2013 இல் ராகம பகுதியில் வைத்துக் கடத்தப்பட்டதாகவும், “பிரபாகரனுக்குச் சொந்தமான அத் தங்கமும், 8 மில்லியன் யூரோக்களும் கோதபாய ராஜபக்சவுக்காகக் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டன” எனத் தனக்குக் கூறப்பட்டதாகவும் தெரிவித்தார். தாங்கள் கூறிய இவ்விடயங்களுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க முடியுமென இவ்விருவரும் கூறினார்கள். அமிச்சர் சேனாரத்ன பேசுகையில், விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 7000 மெட்றிக் தொன் தங்கத்துக்கு என்ன நடந்தது எனத் தெரியாது எனவும் இது பற்றிய விசாரணைகள் உடனே ஆரம்பிக்கப்படுமெனவும், அதுவே இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.   https://marumoli.com/வெளிவரும்-ராஜபக்ச-கொடூரங/?fbclid=IwAR2UEV6BwrpOFu5R8OvxZ0FW2M-4iKpuPmU4gwRpHRDpXD7v8u-mKTRhbjk