Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                               எரிதழல்

                                                                                             -சுப.சோமசுந்தரம்

          நான் இதற்கு முன் எழுதிய ‘என்னே இந்த நகைமுரண் !’ என்ற கட்டுரைக்குப் பின்னூட்டம் அளித்த நண்பர் ஒருவர் பின்வரும் கருத்துக்களைக் கூறியிருந்தார் :

   “ பாண்டிய மன்னனும் கோப்பெருந்தேவியாரும் தம் தவறுக்குத் தண்டனையாக தம் உயிர் மாய்த்த பின் கண்ணகி மதுரையை எரித்தது ஏற்புடைத்தன்று.”

   “ இராவணன் சூழ்ச்சிப் படலத்தில் இலக்குவன் மீது சீதை கடுஞ்சினம் பொழிந்ததன் விளைவே இலக்குவனால் மூட்டப்பெற்ற சிதையில் சீதை பாய நேரிட்டது.”

இவ்விரண்டினையும் ஒன்றாய்க் கட்டும் இழையாக ‘எரிதழல்’ எனும் இத்தலைப்பு அமைந்ததுடன், இலங்கையில் அனுமன் இட்ட தீயும் இணைந்தது எனலாம்.

காட்சி 1 : ஆராயாமல் பாண்டிய மன்னனால் தன் கணவன் கொலையுண்டதைக் கேள்வியுற்ற கண்ணகி அவலத்தில் புழுவாய்த் துடித்துப் பின் அடிபட்ட வேங்கையாய்ச் சீறி எழுகிறாள். பாண்டியன் அவையில் தன் தலைவன் மாசற்றவன் என்பதை நிறுவுகிறாள். மன்னனும் பாண்டி மாதேவியும் உயிர் துறக்கின்றனர். பாண்டியன் குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனை கிடைத்தாகியதே ! இன்னும் ஏன் மதுரையும் கோவலன் கொலையில் பிழையறியாத மக்களும் கண்ணகியிட்ட எரிதழலுக்கு இரையாக வேண்டும் எனும் கேள்வி எழுவது இயல்பு. எந்தவொரு இலக்கியமும் வெறுமனே ஒரு கதைக்களம் அன்று. உயர்வு நவிற்சியும் (Exaggeration) குறியீடும் (Symbolism) இலக்கியத்தின் அங்கங்களே. அவ்வகையில் கண்ணகி இட்ட தீயும் அனுமன் இட்ட தீயும் கோபக் கனலின் குறியீடாகவும், ஊரையே எரித்தல் உயர்வு நவிற்சியாகவும் கொள்ளுதல் சால்புடைத்து. ‘Hell hath no fury like (that of) a woman scorned’ என்ற ஆங்கிலப் பழமொழியின் மெய்ய்யாக்கலாக இவற்றைக் கொள்ளலாம். இங்கு அனுமன் இட்ட தீயும் சீதைக்காக எனக் கொள்வதால், சீதை இட்டதாகவே கொள்க.

 ‘ எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்

  சொல்லினால் சுடுவேன் அது தூயவன்

  வில்லின் ஆற்றற்கு மாசுஎன்று வீசினேன் ’

என்று சுந்தர காண்டம் சூடாமணிப் படலத்தில் சீதையின் வாயிலாக, எரித்தலில் சீதைக்கு மாறுபாடு இல்லை எனவும், தன் தலைவனின் ஆற்றலுக்குக் களங்கம் வருமாதலின் எரிக்கவில்லை என்பதும் தெளிவு. இவற்றிற்கப்பால் இவ்விரு தழல்களிலும் ஊரார் குற்றமற்றவர் என்பதை முற்றிலும் ஏற்பதற்கில்லை. கொள்கையளவில் மன்னனின் தவறுக்கு மக்களும் பொறுப்பாவர் என்பதையும் குறியீடாகக் காட்டுவதாய்க் கொள்ளலாம். மன்னன் தவறிழைக்கையில் தட்டிக் கேட்கும் பொறுப்பு மக்களுக்கு உண்டு. ஒரு செயலைச் செய்யுமுன் ‘மக்கள் நீதி கேட்பர்’ என்ற உணர்வை மன்னனுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். இன்றைய கால அளவையில் இது அதிகமாகத் தோன்றலாம். ஆனால் உலகின் தலைசிறந்த நாகரிகமான சங்க கால வாழ்வு முறைக்குள் சென்று வந்தவன் தமிழன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.     ஒரு சிறந்த முடியாட்சி மக்களாட்சியே. மேலும் ‘ The world suffers not so much due to the violence of the bad as to the silence of the good ’ என்ற நெப்போலியனின் வாக்கும் ஈண்டு குறிக்கத்தக்கது. அநீதியைக் கண்டு அமைதியாய் இருப்பவன் சட்டத்திற்கு முன் நிரபராதியாகலாம். அறத்தின் முன் அவன் குற்றவாளியே. இக்குற்றத்தில் சிலருக்கு விலக்கு அளித்ததும் எண்ணத்தக்கது. கம்பன் காவியத்தில் இராவண தேசத்தில் அனைவரும் அரக்கர் குலம் எனக் கொண்டதால் எவருக்கும் விதிவிலக்கு அளிக்கவில்லை போலும். கண்ணகியோ,

  ‘ பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர்

   மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டு

   தீத்திறத்தார் பக்கமே சேர்க ’

என மதுரைக் காண்டம் வஞ்சின மாலையில் தீக்கடவுளுக்குக் கட்டளையிடுகிறாள். யாரெல்லாம் அநீதிக்கெதிராய் எழும் வலிமையற்றவரோ, அவரையெல்லாம் விட்டு தீத்திறத்தாரை அழிக்கச் சொல்வது கண்ணகி மூலமாய் இளங்கோவடிகள் வழங்கும் தீர்ப்பு.  (இவ்வகையில் இலங்கையின் தமிழினம் எதிரிகளின் இன அழிப்பு முயற்சிக்கு ஆளாகையில், அருகாமையில் தமிழ் கூறும் நல்லுலகம் வாளாவிருந்தமையின், அஃது இத்தகைய எரிதழலுக்கு ஆளாகி, நான் முதலில் எரிந்து போக அவாவுறுவேன்)

             எனவே கண்ணகியிட்ட தழலும் அனுமன் இட்ட தழலும் மேற்கூறிய நியாயங்களுக்கு உட்படுவன. இனி சீதையின் கற்புநிலைச் சோதனையாய் இடப்பட்ட எரிதழல் காண்போம்.

காட்சி 2 :   இராவணன் சூழ்ச்சிப் படலம். அண்ணனின் ஆணையை மீறி அறியாத இலக்குவன், இராமனின் (இராமன் குரலில் மாரீசனின்) அபயக் குரல் கேட்டு, அது பகைவர் தம் சூழ்ச்சியே என உணர்ந்து பர்ணசாலையை நீங்க மறுக்கிறான். 

       “ எடுத்த சீற்றத்தள்

        கொன்றன இன்னலள்

        கொதிக்கும் உள்ளத்தள்

        ‘நின்ற நின்நிலை இது நெறியிற்று

        அன்று’ எனா

        வன் தறு கண்ணினள் ( சீதை )

        வயிர்த்துக் ”    கூறுகிறாள்.

    அஃதாவது இலக்குவனை நோக்கி மிகுந்த சீற்றத்துடன், தான் கொலையுண்டதைப் போன்ற துன்பம் கொண்டும், கொதிக்கும் உள்ளத்துடனும், “ (இராமனின் துயர்நிலை அறிந்தும்) நீ இவ்விடமே நின்றது நெறியின்பாற் பட்டதன்று ” எனச் சினந்த கண்களுடன் பகை பாராட்டிக் கூறுகிறாள் சீதை. அத்தோடு நில்லாமல்,

   “ ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்

    பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் நீ

    வெருவலை நின்றனை வேறுஎன் யான்இனி

    எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு ”

என்று கோபக்கனல் உமிழ்கிறாள். “ ஒரு நாள் பழகினாலே இராமனுக்கு எவரும் உயிர் கொடுப்பர் (குகனைப் போல). அவ்வாறிருக்க தலைவன் இராமன் அங்கு இன்னலுக்குள்ளாக நீயோ இங்கு வாளாவிருந்தது என்னே ! நான் நெருப்பில் பாய்ந்து என் உயிரை மாய்ப்பேன் ” என்று தீயினும் சுடும் சொற்களை வீசிகிறாள்; தீப்பாய முயல்கிறாள்.

   இவ்விரண்டு பாடல்களில் இலக்குவனைச் சினந்து கூறுகிறாள். வால்மீகி சொன்னதைப் போல், “அண்ணன் இறந்தால் என்னைப் பெண்டாள நினைத்தாயோ? ” என்றெல்லாம் நாகரிகமற்றவளாய் சீதையைக் காட்டவில்லை கம்பன். மீண்டும் சொல்வோம். சங்க கால நாகரிகத்துள் சென்று வந்தவர் தமிழ் மாந்தர் என்பதை உணர்ந்தவன் கம்பன். எனினும் தன் சொற்கள் இலக்குவனைத் தீயினும் சுட்டிருக்கும் என்பதைச் சீதையின் வாயிலாகவே அறிகிறோம். சுந்தர காண்டம் காட்சிப் படலத்தில்,

   “ என்னை நாயகன் இளவலை எண்ணலா வினையேன்

    சொன்ன வார்த்தை கேட்டு அறிவிலள் எனத் துறந்தானோ ( என்             

    தலைவன் இராமன் )”

என அரற்றுகிறாள்.

           யுத்த காண்டம் மீட்சிப் படலத்தில் மீட்கப்பட்ட சீதை இராமனைக் கண்டதும் கரை காணா உவகையுற்று  ‘நான் இனி மறப்பினும் நன்று; இனி மாறு வேறு வீழ்ந்து இறப்பினும் நன்று’ ( இப்பிறவியின் பேறனைத்தும் பெற்றேன்; இனி நான் அவனை மறந்தால்தான் என்ன, வீழ்ந்து இறந்தால்தான் என்ன !) என ஏக்கம் நீங்கிய கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை அத்தலைவனும் அமைய நோக்குகிறான். அடுத்து வந்தது பார் வினை. பின்னர் வரும் எட்டுப் பாடல்களிலும் சொல்லம்புகளால் அவளைத் துளைத்தெடுக்கிறான்; வார்த்தைக் கனலில் அவளை எரிய விடுகிறான்.

  ‘ பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும்

   திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும்

   உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால்

   வண்மைஇல் மன்னவன் புகழின் மாய்ந்தவால் ’

( நற்பண்புகள் அனைத்தும் நீ ஒருத்தி தோன்றியதால் வள்ளன்மை ஒழிந்த அரசனின் புகழ் மாய்ந்தமை போல் மாய்ந்தன. )

இதற்கெல்லாம் உச்சமாய்,

 ‘ உன்னை மீட்பான் பொருட்டு உவரி தூர்த்து . . . . .

   - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

   - - - - - - உறுபகை கடந்திலேன் பிழை

   என்னை மீட்பான் பொருட்டு இலங்கை எய்தினேன் ’

( உன்னை மீட்பதற்காக கடலினைத் தூர்த்து உறுபகை கடக்கவில்லை; என்னைப் பழிச்சொல்லில் இருந்து மீட்பதற்காகவே இலங்கை அடைந்தேன் ) என்றது ஆணாதிக்கத் திமிரின் எல்லை. இனி கண்ணகியாகிறாள் சீதை (தமிழைப் பொறுத்தமட்டில் சீதைக்கு மூத்தவளாயிற்றே கண்ணகி !). தன் தலைவன் முன் இதுவரை பேசாத பெண்மை பேசுகிறது. ஆங்கிருந்த ஆன்றோர் சான்றோர் முன் தன் வழக்குரைத்து இறுதியில், “புறத்து இனி யாருக்காக என் கோது அறு (குற்றமற்ற) தவத்தினைக் கூறிக் காட்டுகேன்? சாதலின் சிறந்தது ஒன்றில்லை” என முடிவெடுக்கிறாள். இளையவன் (இலக்குவன்) தனை அழைத்து ‘இடுதி தீ’ எனக் கூற, மனதினால் அதனை ஏற்காத இளவல் தமையனை நோக்க, அவனும் பார்வையால் சம்மதம் தருவது உலகில் ஊழிக்காலம் வரையிலான கொடுமைகளில் ஒன்று.

  “ இளையவன் தனை அழைத்து இடுதிதீ என

   வளையொலி முன்கையாள் வாயின் கூறினாள்

   உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்

   களைகணைத் தொழஅவன் கண்ணின் கூறினான் ”

                உலகிற்குத் தன் தூய்மை காட்டவே தீப்பாய முனைந்தாள் என்ற வார்த்தையெல்லாம் புறந்தள்ள இராமனின் கடுஞ்சினமும் சீதையின் வழக்குரையும் போதுமானது. இராவணன் சூழ்ச்சிப் படலத்தில் மாரீசனின் மாய வலையில் விழுந்த இராமனைக் காக்க இலக்குவனை அனுப்ப சீதையின் கடுஞ்சொற்களே பின்னாளில் இராமன் மூலம் சீதைக்குத் திரும்பின என்றும், அங்கு தீப்பாய முனைந்து இலக்குவனை மிரட்டியதே இங்கு அவளைத் தீப்பாய வைத்தது என்றெல்லாம் முனைந்தேற்றும் வாதங்கள் நமக்கு ஏற்புடைத்தன்று. இங்கு எரிதழல் சோதனைக்கு உட்படுத்தப்படுவது சீதையென்னும் தனியொருத்தி அல்ல; வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்ட ஒரு பெண்ணின் கற்பு நிலை. அவதார புருஷராயினும் மானிடராய் வாழ்தலினால் அவர்க்கான குறையோடுதானே நிற்க முடியும் எனலாம். அதற்கு மானிடரே போதுமே ! அவதாரத்தின் நோக்கமே வாழ்ந்து காட்டி மனிதரை நல்வழிப் படுத்துவதுதானே !

                 எனவே எந்த வகையிலும் இந்த எரிதழலை நம்மால் நியாயப் படுத்த இயலவில்லை. தரணி உள்ள மட்டும் தமிழ் வாழும்; தமிழ் வாழுமட்டும் இத்தழல் எரியும்.                       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான விளக்கங்கள்.....சுப. சோமசுந்தரம்.....! 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/30/2019 at 3:39 AM, சுப.சோமசுந்தரம் said:

அவதார புருஷராயினும் மானிடராய் வாழ்தலினால் அவர்க்கான குறையோடுதானே நிற்க முடியும் எனலாம். அதற்கு மானிடரே போதுமே ! அவதாரத்தின் நோக்கமே வாழ்ந்து காட்டி மனிதரை நல்வழிப் படுத்துவதுதானே !

                 எனவே எந்த வகையிலும் இந்த எரிதழலை நம்மால் நியாயப் படுத்த இயலவில்லை. தரணி உள்ள மட்டும் தமிழ் வாழும்; தமிழ் வாழுமட்டும் இத்தழல் எரியும்.                       

அவதாரத்தின் நோக்கம் மானிடரை நல்வழிப்படுத்துவது என்றால் இராமாயணம்/இராம அவதாரம் மானிடரை நல்வழிப்படுத்தவில்லை என்று கூறினால் தவறா?

ஏனெனில்  சீதைகளும், முகமூடி அணிந்த இராமன் பலரும் இன்னமும் வாழ்கிறார்கள்.. 

ஆனாலும் உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவதாரத்தின் நோக்கம் மானிடரை நல்வழிப்படுத்துவது என்றால் இராமாயணம்/இராம அவதாரம் மானிரை நல்வழிப்படுத்தவில்லை என்று கூறினால் தவறா?

பொதுவாக எந்த இலக்கியத்திலும் நம் காலத்திற்கு உகந்தவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு, ஏனையவற்றைத் திறனாய்வு செய்து அனுபவித்துப் பின்னர் கால வெள்ளத்தில் விட்டு விடுதல் சரியாக அமையும் என நினைக்கிறேன். அவ்வாறு வெள்ளத்தில் நாம் விட்டதைப் பிடித்து நம் சந்ததியினர் அவர் காலத்துக்கேற்ப மீள் ஆய்வு செய்து இன்பறுவர். நம் முன்னோரும் இதைத்தான் செய்தனர். நீரை விடுத்துப் பாலை மட்டும் ஏற்கும் அன்னப் பறவையின் நிலைப்பாடு கொள்ளும்போது எந்த இலக்கியமும் மானிடரை நல்வழிப்படுத்தும் என்பது என் எண்ணம் (அன்னப் பறவையின் இப்பண்பு வெறும் இலக்கியக் கற்பனையாக இருக்கலாம்). உங்கள் கேள்விக்கு நான் மேலோட்டமாகப் பதில் சொல்லிவிட்டேனோ என்னவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, சுப.சோமசுந்தரம் said:

பொதுவாக எந்த இலக்கியத்திலும் நம் காலத்திற்கு உகந்தவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு, ஏனையவற்றைத் திறனாய்வு செய்து அனுபவித்துப் பின்னர் கால வெள்ளத்தில் விட்டு விடுதல் சரியாக அமையும் என நினைக்கிறேன்.

நீங்கள் கூறுவது சரியே.. காலவோட்டத்திற்கேற்பவும், தனிமனித இரசனைகளுக்கு ஏற்பவும் இலக்கியங்களை திறனாய்வு செய்து அனுபவிப்பதும் மற்றவர்களுடன் ஆரோக்கியமான முறையில் பகிர்வதும் நன்மை தரும் எனலாம்.. 

விளக்கத்திற்கு நன்றிகள் ஐயா..

Link to comment
Share on other sites

On 5/31/2019 at 8:25 PM, சுப.சோமசுந்தரம் said:

பொதுவாக எந்த இலக்கியத்திலும் நம் காலத்திற்கு உகந்தவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு, ஏனையவற்றைத் திறனாய்வு செய்து அனுபவித்துப் பின்னர் கால வெள்ளத்தில் விட்டு விடுதல் சரியாக அமையும் என நினைக்கிறேன். அவ்வாறு வெள்ளத்தில் நாம் விட்டதைப் பிடித்து நம் சந்ததியினர் அவர் காலத்துக்கேற்ப மீள் ஆய்வு செய்து இன்பறுவர். நம் முன்னோரும் இதைத்தான் செய்தனர். நீரை விடுத்துப் பாலை மட்டும் ஏற்கும் அன்னப் பறவையின் நிலைப்பாடு கொள்ளும்போது எந்த இலக்கியமும் மானிடரை நல்வழிப்படுத்தும் என்பது என் எண்ணம் (அன்னப் பறவையின் இப்பண்பு வெறும் இலக்கியக் கற்பனையாக இருக்கலாம்). உங்கள் கேள்விக்கு நான் மேலோட்டமாகப் பதில் சொல்லிவிட்டேனோ என்னவோ?

அருமையான விளக்கம், எளிமையாக விளக்கியதைக் கண்டு வியப்பாகவுள்ளது !!

.."வெள்ளத்தில் நாம் விட்டதைப் பிடித்து நம் சந்ததியினர் அவர் காலத்துக்கேற்ப மீள் ஆய்வு செய்து இன்பறுவர். நம் முன்னோரும் இதைத்தான் செய்தனர். நீரை விடுத்துப் பாலை மட்டும் ஏற்கும் அன்னப் பறவையின் நிலைப்பாடு கொள்ளும்போது எந்த இலக்கியமும் மானிடரை நல்வழிப்படுத்தும் என்பது என் எண்ணம்"

Link to comment
Share on other sites

On 5/29/2019 at 9:39 PM, சுப.சோமசுந்தரம் said:

                                                               எரிதழல்

                                                                                             -சுப.சோமசுந்தரம்

          நான் இதற்கு முன் எழுதிய ‘என்னே இந்த நகைமுரண் !’ என்ற கட்டுரைக்குப் பின்னூட்டம் அளித்த நண்பர் ஒருவர் பின்வரும் கருத்துக்களைக் கூறியிருந்தார் :

   “ பாண்டிய மன்னனும் கோப்பெருந்தேவியாரும் தம் தவறுக்குத் தண்டனையாக தம் உயிர் மாய்த்த பின் கண்ணகி மதுரையை எரித்தது ஏற்புடைத்தன்று.”

   “ இராவணன் சூழ்ச்சிப் படலத்தில் இலக்குவன் மீது சீதை கடுஞ்சினம் பொழிந்ததன் விளைவே இலக்குவனால் மூட்டப்பெற்ற சிதையில் சீதை பாய நேரிட்டது.”

இவ்விரண்டினையும் ஒன்றாய்க் கட்டும் இழையாக ‘எரிதழல்’ எனும் இத்தலைப்பு அமைந்ததுடன், இலங்கையில் அனுமன் இட்ட தீயும் இணைந்தது எனலாம்.

காட்சி 1 : ஆராயாமல் பாண்டிய மன்னனால் தன் கணவன் கொலையுண்டதைக் கேள்வியுற்ற கண்ணகி அவலத்தில் புழுவாய்த் துடித்துப் பின் அடிபட்ட வேங்கையாய்ச் சீறி எழுகிறாள். பாண்டியன் அவையில் தன் தலைவன் மாசற்றவன் என்பதை நிறுவுகிறாள். மன்னனும் பாண்டி மாதேவியும் உயிர் துறக்கின்றனர். பாண்டியன் குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனை கிடைத்தாகியதே ! இன்னும் ஏன் மதுரையும் கோவலன் கொலையில் பிழையறியாத மக்களும் கண்ணகியிட்ட எரிதழலுக்கு இரையாக வேண்டும் எனும் கேள்வி எழுவது இயல்பு. எந்தவொரு இலக்கியமும் வெறுமனே ஒரு கதைக்களம் அன்று. உயர்வு நவிற்சியும் (Exaggeration) குறியீடும் (Symbolism) இலக்கியத்தின் அங்கங்களே. அவ்வகையில் கண்ணகி இட்ட தீயும் அனுமன் இட்ட தீயும் கோபக் கனலின் குறியீடாகவும், ஊரையே எரித்தல் உயர்வு நவிற்சியாகவும் கொள்ளுதல் சால்புடைத்து. ‘Hell hath no fury like (that of) a woman scorned’ என்ற ஆங்கிலப் பழமொழியின் மெய்ய்யாக்கலாக இவற்றைக் கொள்ளலாம். இங்கு அனுமன் இட்ட தீயும் சீதைக்காக எனக் கொள்வதால், சீதை இட்டதாகவே கொள்க.

 ‘ எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்

  சொல்லினால் சுடுவேன் அது தூயவன்

  வில்லின் ஆற்றற்கு மாசுஎன்று வீசினேன் ’

என்று சுந்தர காண்டம் சூடாமணிப் படலத்தில் சீதையின் வாயிலாக, எரித்தலில் சீதைக்கு மாறுபாடு இல்லை எனவும், தன் தலைவனின் ஆற்றலுக்குக் களங்கம் வருமாதலின் எரிக்கவில்லை என்பதும் தெளிவு. இவற்றிற்கப்பால் இவ்விரு தழல்களிலும் ஊரார் குற்றமற்றவர் என்பதை முற்றிலும் ஏற்பதற்கில்லை. கொள்கையளவில் மன்னனின் தவறுக்கு மக்களும் பொறுப்பாவர் என்பதையும் குறியீடாகக் காட்டுவதாய்க் கொள்ளலாம். மன்னன் தவறிழைக்கையில் தட்டிக் கேட்கும் பொறுப்பு மக்களுக்கு உண்டு. ஒரு செயலைச் செய்யுமுன் ‘மக்கள் நீதி கேட்பர்’ என்ற உணர்வை மன்னனுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். இன்றைய கால அளவையில் இது அதிகமாகத் தோன்றலாம். ஆனால் உலகின் தலைசிறந்த நாகரிகமான சங்க கால வாழ்வு முறைக்குள் சென்று வந்தவன் தமிழன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.     ஒரு சிறந்த முடியாட்சி மக்களாட்சியே. மேலும் ‘ The world suffers not so much due to the violence of the bad as to the silence of the good ’ என்ற நெப்போலியனின் வாக்கும் ஈண்டு குறிக்கத்தக்கது. அநீதியைக் கண்டு அமைதியாய் இருப்பவன் சட்டத்திற்கு முன் நிரபராதியாகலாம். அறத்தின் முன் அவன் குற்றவாளியே. இக்குற்றத்தில் சிலருக்கு விலக்கு அளித்ததும் எண்ணத்தக்கது. கம்பன் காவியத்தில் இராவண தேசத்தில் அனைவரும் அரக்கர் குலம் எனக் கொண்டதால் எவருக்கும் விதிவிலக்கு அளிக்கவில்லை போலும். கண்ணகியோ,

  ‘ பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர்

   மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டு

   தீத்திறத்தார் பக்கமே சேர்க ’

என மதுரைக் காண்டம் வஞ்சின மாலையில் தீக்கடவுளுக்குக் கட்டளையிடுகிறாள். யாரெல்லாம் அநீதிக்கெதிராய் எழும் வலிமையற்றவரோ, அவரையெல்லாம் விட்டு தீத்திறத்தாரை அழிக்கச் சொல்வது கண்ணகி மூலமாய் இளங்கோவடிகள் வழங்கும் தீர்ப்பு.  (இவ்வகையில் இலங்கையின் தமிழினம் எதிரிகளின் இன அழிப்பு முயற்சிக்கு ஆளாகையில், அருகாமையில் தமிழ் கூறும் நல்லுலகம் வாளாவிருந்தமையின், அஃது இத்தகைய எரிதழலுக்கு ஆளாகி, நான் முதலில் எரிந்து போக அவாவுறுவேன்)

             எனவே கண்ணகியிட்ட தழலும் அனுமன் இட்ட தழலும் மேற்கூறிய நியாயங்களுக்கு உட்படுவன. இனி சீதையின் கற்புநிலைச் சோதனையாய் இடப்பட்ட எரிதழல் காண்போம்.

காட்சி 2 :   இராவணன் சூழ்ச்சிப் படலம். அண்ணனின் ஆணையை மீறி அறியாத இலக்குவன், இராமனின் (இராமன் குரலில் மாரீசனின்) அபயக் குரல் கேட்டு, அது பகைவர் தம் சூழ்ச்சியே என உணர்ந்து பர்ணசாலையை நீங்க மறுக்கிறான். 

       “ எடுத்த சீற்றத்தள்

        கொன்றன இன்னலள்

        கொதிக்கும் உள்ளத்தள்

        ‘நின்ற நின்நிலை இது நெறியிற்று

        அன்று’ எனா

        வன் தறு கண்ணினள் ( சீதை )

        வயிர்த்துக் ”    கூறுகிறாள்.

    அஃதாவது இலக்குவனை நோக்கி மிகுந்த சீற்றத்துடன், தான் கொலையுண்டதைப் போன்ற துன்பம் கொண்டும், கொதிக்கும் உள்ளத்துடனும், “ (இராமனின் துயர்நிலை அறிந்தும்) நீ இவ்விடமே நின்றது நெறியின்பாற் பட்டதன்று ” எனச் சினந்த கண்களுடன் பகை பாராட்டிக் கூறுகிறாள் சீதை. அத்தோடு நில்லாமல்,

   “ ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்

    பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் நீ

    வெருவலை நின்றனை வேறுஎன் யான்இனி

    எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு ”

என்று கோபக்கனல் உமிழ்கிறாள். “ ஒரு நாள் பழகினாலே இராமனுக்கு எவரும் உயிர் கொடுப்பர் (குகனைப் போல). அவ்வாறிருக்க தலைவன் இராமன் அங்கு இன்னலுக்குள்ளாக நீயோ இங்கு வாளாவிருந்தது என்னே ! நான் நெருப்பில் பாய்ந்து என் உயிரை மாய்ப்பேன் ” என்று தீயினும் சுடும் சொற்களை வீசிகிறாள்; தீப்பாய முயல்கிறாள்.

   இவ்விரண்டு பாடல்களில் இலக்குவனைச் சினந்து கூறுகிறாள். வால்மீகி சொன்னதைப் போல், “அண்ணன் இறந்தால் என்னைப் பெண்டாள நினைத்தாயோ? ” என்றெல்லாம் நாகரிகமற்றவளாய் சீதையைக் காட்டவில்லை கம்பன். மீண்டும் சொல்வோம். சங்க கால நாகரிகத்துள் சென்று வந்தவர் தமிழ் மாந்தர் என்பதை உணர்ந்தவன் கம்பன். எனினும் தன் சொற்கள் இலக்குவனைத் தீயினும் சுட்டிருக்கும் என்பதைச் சீதையின் வாயிலாகவே அறிகிறோம். சுந்தர காண்டம் காட்சிப் படலத்தில்,

   “ என்னை நாயகன் இளவலை எண்ணலா வினையேன்

    சொன்ன வார்த்தை கேட்டு அறிவிலள் எனத் துறந்தானோ ( என்             

    தலைவன் இராமன் )”

என அரற்றுகிறாள்.

           யுத்த காண்டம் மீட்சிப் படலத்தில் மீட்கப்பட்ட சீதை இராமனைக் கண்டதும் கரை காணா உவகையுற்று  ‘நான் இனி மறப்பினும் நன்று; இனி மாறு வேறு வீழ்ந்து இறப்பினும் நன்று’ ( இப்பிறவியின் பேறனைத்தும் பெற்றேன்; இனி நான் அவனை மறந்தால்தான் என்ன, வீழ்ந்து இறந்தால்தான் என்ன !) என ஏக்கம் நீங்கிய கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை அத்தலைவனும் அமைய நோக்குகிறான். அடுத்து வந்தது பார் வினை. பின்னர் வரும் எட்டுப் பாடல்களிலும் சொல்லம்புகளால் அவளைத் துளைத்தெடுக்கிறான்; வார்த்தைக் கனலில் அவளை எரிய விடுகிறான்.

  ‘ பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும்

   திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும்

   உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால்

   வண்மைஇல் மன்னவன் புகழின் மாய்ந்தவால் ’

( நற்பண்புகள் அனைத்தும் நீ ஒருத்தி தோன்றியதால் வள்ளன்மை ஒழிந்த அரசனின் புகழ் மாய்ந்தமை போல் மாய்ந்தன. )

இதற்கெல்லாம் உச்சமாய்,

 ‘ உன்னை மீட்பான் பொருட்டு உவரி தூர்த்து . . . . .

   - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

   - - - - - - உறுபகை கடந்திலேன் பிழை

   என்னை மீட்பான் பொருட்டு இலங்கை எய்தினேன் ’

( உன்னை மீட்பதற்காக கடலினைத் தூர்த்து உறுபகை கடக்கவில்லை; என்னைப் பழிச்சொல்லில் இருந்து மீட்பதற்காகவே இலங்கை அடைந்தேன் ) என்றது ஆணாதிக்கத் திமிரின் எல்லை. இனி கண்ணகியாகிறாள் சீதை (தமிழைப் பொறுத்தமட்டில் சீதைக்கு மூத்தவளாயிற்றே கண்ணகி !). தன் தலைவன் முன் இதுவரை பேசாத பெண்மை பேசுகிறது. ஆங்கிருந்த ஆன்றோர் சான்றோர் முன் தன் வழக்குரைத்து இறுதியில், “புறத்து இனி யாருக்காக என் கோது அறு (குற்றமற்ற) தவத்தினைக் கூறிக் காட்டுகேன்? சாதலின் சிறந்தது ஒன்றில்லை” என முடிவெடுக்கிறாள். இளையவன் (இலக்குவன்) தனை அழைத்து ‘இடுதி தீ’ எனக் கூற, மனதினால் அதனை ஏற்காத இளவல் தமையனை நோக்க, அவனும் பார்வையால் சம்மதம் தருவது உலகில் ஊழிக்காலம் வரையிலான கொடுமைகளில் ஒன்று.

  “ இளையவன் தனை அழைத்து இடுதிதீ என

   வளையொலி முன்கையாள் வாயின் கூறினாள்

   உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்

   களைகணைத் தொழஅவன் கண்ணின் கூறினான் ”

                உலகிற்குத் தன் தூய்மை காட்டவே தீப்பாய முனைந்தாள் என்ற வார்த்தையெல்லாம் புறந்தள்ள இராமனின் கடுஞ்சினமும் சீதையின் வழக்குரையும் போதுமானது. இராவணன் சூழ்ச்சிப் படலத்தில் மாரீசனின் மாய வலையில் விழுந்த இராமனைக் காக்க இலக்குவனை அனுப்ப சீதையின் கடுஞ்சொற்களே பின்னாளில் இராமன் மூலம் சீதைக்குத் திரும்பின என்றும், அங்கு தீப்பாய முனைந்து இலக்குவனை மிரட்டியதே இங்கு அவளைத் தீப்பாய வைத்தது என்றெல்லாம் முனைந்தேற்றும் வாதங்கள் நமக்கு ஏற்புடைத்தன்று. இங்கு எரிதழல் சோதனைக்கு உட்படுத்தப்படுவது சீதையென்னும் தனியொருத்தி அல்ல; வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்ட ஒரு பெண்ணின் கற்பு நிலை. அவதார புருஷராயினும் மானிடராய் வாழ்தலினால் அவர்க்கான குறையோடுதானே நிற்க முடியும் எனலாம். அதற்கு மானிடரே போதுமே ! அவதாரத்தின் நோக்கமே வாழ்ந்து காட்டி மனிதரை நல்வழிப் படுத்துவதுதானே !

                 எனவே எந்த வகையிலும் இந்த எரிதழலை நம்மால் நியாயப் படுத்த இயலவில்லை. தரணி உள்ள மட்டும் தமிழ் வாழும்; தமிழ் வாழுமட்டும் இத்தழல் எரியும்.                       

அன்னையின் ஈமச்சடங்கில் பட்டினத்தார் பாடியது ஞாபகத்திற்கு வருகிறது.

முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

எரிதழல்...அருமையான கட்டுரை, வாழ்த்துகள். இதுபோன்ற பதிவுகளைத் தொடர்ந்து பதிவிடுங்கள், வாசிக்க ஆர்வமாக உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.