Jump to content

ஞான­சார தேரர், கலீல் மௌலவி ஆகியோரை விசாரணைக்கு அழைக்கும் தெரிவுக்குழு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஞான­சார தேரர், கலீல் மௌலவி ஆகியோரை விசாரணைக்கு அழைக்கும் தெரிவுக்குழு

(ஆர்.யசி)

பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர்  ஞான­சார தேரர் மற்றும் ,கலீல் மௌலவி உள்­ளிட்ட  பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு தகவல் தெரிவித்ததாக  கூறிய  சக­ல­ரையும்  விசா­ர­ணைக்கு அழைக்க பாராளு­மன்ற தெரி­வுக்­குழு தீர்­மானித்துள்ளது.

galagoda-athe.jpg

அடுத்த விசா­ரணை அமர்­வு­க­ளுக்கு முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெய­சுந்­தர, பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு பிர­தானி ரவி சென­வி­ரத்ன, பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணை  பணிப்­பாளர் வருண ஜெய­சுந்­தர ஆகி­யோ­ருக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்­தவும் அறிக்கை ஒன்­றினை பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு நேற்று முதல் தட­வை­யாக கூடி­யது. இதில் பாது­காப்பு செய­லாளர் மற்றும் தேசிய புல­னாய்வு பிர­தானி சிசிர மென்டிஸ் ஆகியோர் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். 

இதன்­போது புல­னாய்வு பிர­தானி சிசிர மென்­டி­ஸிடம் விசா­ர­ணையை நடத்­திய வேளையில் சிங்­கள மொழி  பத்­தி­ரிகை ஒன்றில் பிர­தான செய்­தி­யாக வெளி­யி­டப்­பட்­டி­ருந்த பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் கூறிய கருத்­தொன்றை சுட்­டிக்­காட்­டிய உறுப்­பினர் சரத் பொன்­சேகா இவ்­வா­றான கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­வது இப்­போ­துள்ள நிலையில் பாதிப்­பா­ன­தில்­லையா? என வின­வினார். 

இதற்கு பதில் தெரி­வித்த புல­னாய்வு பிர­தானி சிசிர மென்டிஸ் :- ஆம் இந்த கருத்­துகள் நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் ஒன்­றுதான். இவ்­வாறு கருத்­துக்­களை முன்­வைக்­கக்­கூ­டாது என்றார். 

இதன்­போது தெரி­வுக்­கு­ழுவில் இருந்த உறுப்­பினர் ரவி கரு­ணா­நா­யக்க:- கலீல் மௌலவி, ஞான­சார தேரர், மற்றும் பலர் சஹரான் குறித்தும் குறித்த அமைப்பு தொடர்­பிலும் தகவல் தெரி­வித்­த­தாக கூறு­கின்­றனர். உண்­மையில் அவ்­வா­றான தகவல் உங்­க­ளுக்கு வழங்கப் பட்­டதா? என கேள்வி எழுப்­பினார். 

இதற்கு பதில் தெரி­வித்த புல­னாய்வு பிர­தானி சிசிர மென்டிஸ் :- ஊட­கங்­களில் இவ்­வாறு அவர்கள் கூறு­வதை நானும் பார்த்தேன். ஆனால் இவர்கள் எவ­ருமே எனக்கு தகவல் தர­வில்லை. இவர்­களின் எந்த தக­வலும் எனக்கு கிடைக்­க­வில்லை என்றார். 

இதன்­போது குழு உறுப்­பினர் நலிந்த ஜெய­திஸ்ஸ கூறு­கையில்:- இந்த கருத்­துக்­களை முன்­வைத்த ஞான­சார தேரர், கலீல் மௌலவி மற்றும் இது குறித்து தகவல் கூறி­ய­தாக ஊட­கங்­களில் கூறிய சகல நபர்­க­ளையும் விசா­ர­ணைக்கு அழைக்க வேண்டும் என்றார். 

இதன்­போது குழு­விற்கு தலைமை தாங்­கிய கலாந்தி ஜெயம்­பதி விக்­ர­ம­ர­தன;- ஆம் இந்த குழு­விற்கு சக­லரும் சாட்­சி­ய­ம­ளிக்க முடியும் என கூறி­யுள்ளோம். பொது­மக்­களும் சாட்­சி­யங்­களை வழங்க முடியும் என்ற அறி­விப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. எனவே விசா­ர­ணைக்கு நபர்­களை அழைக்­கலாம் என்றார். அதற்­க­மைய ஞான­சார தேரர், கலீல் மௌலவி மற்றும் தகவல் தெரி­வித்­த­தாக கூறிய சகல நபர்­க­ளையும் விசா­ர­ணைக்கு அழைக்க தெரி­வுக்­குகு இணக்கம் தெரி­வித்­தது. 

மேலும் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவின் அடுத்த அமர்வு எதிர்­வரும் 4 ஆம் திகதி பிற்­பகல் 3 மணி தொடக்கம் 9 மணி­வ­ரையில் இடம்­பெ­ற­வுள்­ளது. இந்த விசாரணைக்கு முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு பிரிவு பிரதானி ரவி செனவிரத்ன, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை  பணிப்பாளர் வருண ஜெயசுந்தர ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 

http://www.virakesari.lk/article/57071

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.