Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சி : மங்கள


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச பயங்கரவாதம் இலங்கையில் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், தமது அரசியல் தேவைகளுக்காக இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தி பயங்கரவாத நிலையை தோற்றுவிக்க, சில மோசடி அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நிதியமைச்சில் இன்று (30) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய நிதியமைச்சர் மங்கள சமரவீர

''உலக நாடுகளும் ஐ.எஸ். பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ளன. இலங்கையும் அண்மையில் எதிர்கொண்டது. ஆனால் இலங்கையில் சர்வதேச பயங்கரவாதம் குறுகிய காலத்திற்குள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளத. எனினும், இலங்கையில் இன்னுமொரு பயங்கரவாதத்திற்கு குரூர அரசியல் நோக்கம் கொண்ட ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர். இனவாத பிரச்சினையை ஏற்படுத்தி, இரு தரப்பினருக்கிடையே மோதலை உண்டு பண்ணில் அதில் பயனடைய முயற்சிக்கின்றனர். இதற்கு எதிராக இலங்கையர்கள் அணி திரள வேண்டும். 83ஆம் ஆண்டு நடந்த கறுப்பு ஜூலை கலவரத்தின் பின்னரே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பக்கம் தள்ளப்பட்டனர்.

முஸ்லிம் மக்களையும் இ ந்தச் சந்தர்ப்பத்தில் அவ்வாறான நிலைக்கு தள்ளிவிடக் கூடாது. முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் இடையூறுகள் அவர்களை அடிப்படை வாதத்திற்குள் தள்ளிவிடக் கூடும். அதில் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். இலங்கையில் உள்ள 99.9 வீதமான முஸ்லிம்களுக்கும் இதற்கு எவ்வித தொடர்பும் கிடையாது. ஆனால், இன்றைய நிலையில், முஸ்லிம் மக்கள் வெளியே செல்லும்போது அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக அறியக்கிடைக்கிறது. அவ்வாறு செய்ய வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கிறோம். நான் ஒரு மதத்தையோ, இனத்தையோ நேசிப்பதற்கு மேலாக இலங்கையை நேசிக்கிறேன். அதனால் இதனைக் கூறுகிறேன். நாமே தீவிரவாதிகளை உருவாக்குகிறோம். அதனால் அனைத்துத் தரப்பினரம் ஆபத்தில் இருக்கிறோம்.

48ஆம் ஆண்டு காலப்பகுதியில் தெற்காசியாவில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கை இருந்தது. ஆனால் 70 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், தெற்காசியாவில் பின்தள்ளப்பட்ட நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது. இன, மத, குல ரீதியாக வேறுபட்டுள்ளதே இதற்குக் காரணமாகும். எனவே, இன, மத, குல ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தி, நாட்டை நாசப்படுத்தி, தமது குறுகிய இலக்கை அடைவதற்கு சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.'' என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


https://newsline.lk/news/6689-2019-05-30-12-13-02

Edited by Kashni
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆம், " 48ஆம் ஆண்டு காலப்பகுதியில் தெற்காசியாவில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கை இருந்தது. ஆனால் 70 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், தெற்காசியாவில் பின்தள்ளப்பட்ட நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது. இதற்குக் காரணம்,"

இன்று ஒரு பின்தங்கிய நாடாக மாறிவருகின்றது. காரணம் என்ன என்பது மங்களவுக்கும் தெரியும்,

தெரிந்தவர்கள், பதவியில் இருக்க, பதவியை தக்கவைக்க சிறுபான்மை இனத்தை பந்தாடுவதும், அரசியலுக்காக நாட்டை ஒரு 'அரச' பயங்கரவாதத்தை வளர்ப்பதும் இந்த 70 ஆண்டு கால சாதனை. 

இந்த விடயத்தில் இரண்டு சிங்கள பெரும்பான்மை கட்சிகளும் ஒற்றுமையாக தொடர்ந்து இருக்கும் வரை விடிவு இல்லை.  

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மத வழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! மத வழிபாடுகளுக்காக மக்களை ஒன்றிணைக்கும் போது 50 பேருக்கு குறைந்த நபர்களை ஒன்றிணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேடமாக எதிர்வரும் போயா தினத்தில் அதிகளவான கவனம் செலுத்துமாறு இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வழமை போன்று மத வழிபாடுகளை முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/மத-வழிபாடுகளில்-ஈடுபடுபவ/
    • கொரோனா பாதிப்பு – சர்வதேச ரீதியில் 112 ஆவது இடத்திற்கு முன்னேறிய இலங்கை உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 112ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் மக்களை அச்சுறுத்திவரும் நிலையில், இலங்கையிலும் அதன் பாதிப்பு தற்போதைய காலங்களில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணி காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் மாத்திரம் பதிவாகியுள்ள மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 205ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் காரணமாக நாட்டில் 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வாறான நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கடந்த மாதமளவில் சுமாராக 30ஆவது இடத்தில் இருந்த இலங்கை கடந்த சில தினங்களில் சடுதியாக முன்னேறி 112ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன்னர் இலங்கையில் கொரோனா பரவல் ஆரம்பமாகிய காலப்பகுதியில் கடந்த ஜுன் மாதமளவில் இலங்கை 100ஆவது இடத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொரோனா-பாதிப்பு-சர்வதேச/
    • கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்து தொற்றுநோயியல் நிபுணர் வெளியிட்ட தகவல் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களில் உயிரிழந்தவர்கள் வேறு ஆபத்தான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுடத் சமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ், ஆபத்தான நோய்கள் உள்ள சிரேஸ்ட பிரஜைகளுக்கு ஆபத்தை உருவாக்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக சிரேஸ்ட பிரஜைகள் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம், அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், உடல்நிலை பாதிக்கப்பட்டால் மருத்துவர்களை நாடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றினால் கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் இலகுவாக வெற்றிபெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://athavannews.com/கொரோனாவால்-உயிரிழந்தவர-2/
    • அமெரிக்காவில் வன்முறையாக மாறிய போராட்டம் – பிலடெல்பியா நகரில் ஊரடங்கு அமுல்! அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் கருப்பின வாலிபர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக நகரம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் கடந்த 26ஆம் திகதி மாலை கறுப்பின வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸாருக்கும் குறித்த வாலிபருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் அந்த வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கறுப்பினத்தைச் சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் வால்டர் வாலஸ் (வயது 27) என்பது தெரியவந்தது. இதற்கிடையில் பொலிஸ் அதிகாரிகளால் கறுப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அந்நகரில் காட்டுத்தீ போல பரவியது. அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது இந்தப் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டங்கள், பொலிஸ்-போராட்டக்காரர்கள் இடையேயான மோதல் ஆகியவற்றால் பென்சில்வேனியா நகரமே வன்முறை களமாக மாறியது. இந்த வன்முறையில் பொலிஸ் அதிகாரிகள் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பதுடன், அந்த நகரில் தொடர்ந்தும் அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது. இந்த நிலையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் விதமாக பிலடெல்பியா நகரம் முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரவும் போராட்டங்கள் நடத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்டமாக கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பிலடெல்பியா நகரமே பரபரப்பாக காணப்படுகிறது. இதேவைளை, கையில் கத்தியுடன் சுற்றிய வால்டர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியிலும் பேசுபொருளாகியுள்ளது. எதிர்வரும் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குடியரசு கட்சியினருக்கும் ஜனநாயக கட்சியினருக்கும் இடையே இவ்விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அமெரிக்காவில்-வன்முறையா/
    • இவ்வாண்டில் 4 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை விநியோகிக்கத் தயாராகிறது ஃபைசர்! இவ்வாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி வழங்க முடியும் என பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் (Pfizer Company) தெரிவித்துள்ளது. தற்போது நடந்துவரும் கிளினிக்கல் சோதனை முடிவுகள் வெற்றிகரமாக அமையும் என அந்த நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதியும் கிடைத்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் நான்கு கோடி தடுப்பூசி மருந்துகளை அமெரிக்காவில் விநியோகிக்க முடியும் என ஃபைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். அத்துடன், வரும் மார்ச் மாதமளவில் 10 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்க முடியும் என அவர் கூறியுள்ளார். மேலும், அடுத்த மாதம், தங்களது தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://athavannews.com/இவ்வாண்டில்-4-கோடி-கொரோனா/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.