Jump to content

சஹ்ரான் குறித்தும் தாக்குதல் தொடர்பிலும் அறிவித்தும் கவனம் செலுத்தப்படவில்லை - புல­னாய்வுப் பிரிவின் தலைவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலைவர்…

Sisira-mendis.png?resize=694%2C463

இலங்­கையில் பயங்­க­ர­வாத தாக்­குதல் ஒன்று இடம்­பெ­றப்­போ­கின்­றது என்ற கார­ணியை பாது­காப்பு செய­லா­ள­ ருக்கும், காவற்துறை மா அதிபருக்கும் எடுத்துக் கூறி­ய ­போ­திலும் அது குறித்து கவனம் செலுத்­த­ப்ப­ட­வில்லை.

தாக்­குதல் நடத்­தப்­படும் வரையில் பாது­காப்பு சபைக் கூட்­டத்தை கூட்­ட­வில்லை என்று தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் தெரி­வித்தார்.

சஹ்ரான் குறித்த தக­வல்­க­ளையும் சிரியா சென்­ற­வர்கள் இலங்கைக்கு வரு­கின்­றார்கள் கைது செய்து விசா­ரிக்­கலாம் என்றும் பல சந்­தர்ப்­பங்­களில் தெரியப்படுத்தினேன் ஆனால் அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து விசா­ரணை செய்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவின் முத­லா­வது அமர்வு நேற்று காலை பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் நடை­பெற்­றது. பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி நாட்டில் இல்­லாத கார­ணத்­தினால் கலா­நிதி ஜெயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன தலை­மையில் நேற்­றைய கூட்டம் நடத்­தப்­பட்­டது. இதில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்­காக அழைக்­கப்­பட்ட தேசிய புல­னாய்­வுப்­பி­ரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் தெரி­வுக்­குழு முன்னால் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் இந்த தக­வல்­களை கூறினார்.

இங்கு அவர் மேலும் சாட்­சி­ய­ம­ளிக்­கும்­போது, இலங்­கையில் தாக்­குதல் ஒன்று நடத்­தப்­ப­ட­வுள்­ள­தாக ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இடப்­பட்ட கடிதம் ஒன்று 7 ஆம் திகதி எனக்குக் கிடைத்­தது. எங்­கி­ருந்து வந்­தது, யார் அனுப்­பி­யது என்ற விப­ரங்கள் அதில் இருக்­க­வில்லை. ஆனால் மத தலங்கள், ஹோட்­டல்கள் மற்றும் இந்­திய  உயர்ஸ்தானிகர்  ஆலயம் ஆகி­யன தாக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அதில் தகவல் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்த தக­வலை ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி காலை 11 மணிக்கு பாது­காப்பு செய­லா­ள­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தினேன். அந்த நாளில் (8 ஆம் திகதி) இந்­திய பாது­காப்பு செயலாளர்  இலங்­கைக்கு வந்­தி­ருந்தார். அன்­றைய தினம் எமது பாது­காப்பு செய­லா­ள­ருக்கும் இந்­திய பாது­காப்பு செய­லா­ள­ருக்கும் இடையில் காலையில் 10  மணியளவில்  சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது.

அந்த சந்­திப்பு நண்­பகல் வரையில் நீடித்­தது. ஆகவே அன்­றைய தினம் என்னால் பாது­காப்பு செய­லா­ளரை சந்­திக்க முடி­ய­வில்லை. ஆனால் தக­வலை கொடுத்திருந்தேன். அடுத்த நாள் 9 ஆம் திகதி தேசிய புல­னாய்வுப் பிரிவின் கூட்டம் இடம்­பெற்­றது. இதில் இந்த தாக்­குதல் குறித்த தகவல் தொடர்பில் முக்­கி­ய­மா­கவும் பிர­தா­ன­மா­கவும் பேசி­யி­ருக்க வேண்டும். ஆனால் அன்­றைய தினம் இது குறித்து பேசப்­ப­டவே இல்லை.

மீண்டும் நினை­வூட்­டினேன்

அந்த கூட்­டத்தில் என் அருகில் பாது­காப்பு செய­லாளர் இருந்தார். ஆகவே நான் எனது கோப்­பு­க­ளுக்கு மேல் இந்த கடிதம் குறித்த அறிக்­கையை வைத்­தி­ருந்து இது குறித்து பேச வேண்டும் என பாது­காப்பு செய­லா­ள­ருக்கு தெரி­வித்தேன். அதனை ஏனை­ய­வர்கள் கவ­னித்­தி­ருக்க வாய்ப்­பில்லை. ஆனால் பாது­காப்பு செய­லாளர் இதனை காவற்துறை  மா அதி­ப­ருக்கு அறி­யப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் நீங்­களும் ஒரு­முறை நினை­வு­ப­டுத்தி விடுங்கள் என்று கூறி சாதா­ர­ண­மாக அதனை தட்டிக்கழித்தார். அதன் பின்னர் இந்த பிர­தி­யொன்றை காவற்துறை  மா அதி­ப­ருக்கும் நான் வழங்­கினேன்.

அதன் பின்னர் இந்த விடயம் குறித்து எவரும் அக்­கறை கொண்­ட­தாக எனக்கு தெரி­ய­வில்லை. என்­னிடம் இது குறித்து எவரும் வின­வவும் இல்லை. காவற்துறை  மா அதிபர் தக­வலை அறிந்­தி­ருந்த கார­ணத்­தினால் நான் அதன் பின்னர் அவ­ரிடம் வின­வவும் இல்லை. ஆனால் நான் காவற்துறை  மா அதி­ப­ருக்கு வழங்­கிய கடி­தத்தில் (eyesolny) என்று குறிப்­பிட்டு அனுப்­பினேன்.

இந்த வார்த்தை ஒரு இர­க­சிய குறி­யீ­டாக நாம் பயன்­ப­டுத்தும் ஒன்­றாகும். இந்த விட­யத்­திற்கு அதிக முக்­கி­யத்­துவம் கொடுங்கள் என்று இதற்கு அர்த்தம். ஆனால் அதன் பின்னர் 21 ஆம் திகதி தாக்­குதல் நடத்­தப்­படும் வரையில் இது குறித்து பேசவும் இல்லை. தேசிய பாது­காப்பு சபைக் கூட்டம் ஒன்று கூட்­ட­ப­டவும் இல்லை. பாதுகாப்பு  செய­லாளர் பாது­காப்பு குழுக் கூட்­டத்தை கூட்­ட­வில்லை.

உண்­மையை கூற­வேண்டும் என்றால் வாரத்­திற்கு ஒரு தடவை பாது­காப்பு சபைக் கூட்டம் கூட்­டப்­பட வேண்டும். ஆனால் மாதம் ஒன்று என்ற வகையில் தான் பாதுகாப்புச் சபைக் கூட்டம் கூடி­யது. தாக்­குதல் நடத்­தப்­பட முன்னர் இறு­தி­யாக இந்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் 19 ஆம் திக­தியே பாது­காப்பு சபைக் கூட்டம் கூடி­யது. அதன் பின்னர் 22 ஆம் திகதி அதா­வது தாக்­குதல் இடம்­பெற்ற அடுத்த நாள் ஜனா­தி­பதி தலை­மையில் கூடி­யது. தாக்­குதல் நடந்­துள்­ளது. யார் நடத்­தி­யது என்ற காரணிகள்  மாத்­திரம் பேசப்­பட்டு வரு­கின்­றதே தவிர உண்­மை­யான கார­ணிகள் நான் கூறிய விட­யங்கள் குறித்து இன்­று­வரை அக்­கறை செலுத்­தப்­பட்­ட­தாக இல்லை.

நான் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் பத­வியை ஏற்­று­கொண்­டதில் இருந்து இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத அமைப்பு குறித்து (isis) ஆராய்ந்து வரு­கின்றேன். உலகில் நடக்கும் செயற்­பா­டுகள் குறித்து கண்­கா­ணித்து வரு­கின்றேன். இலங்­கையில் காத்­தான்­கு­டியில் ஒரு தாக்­குதல் சம்­பவம் இரு முஸ்லிம் குழுக்கள் இடையில் ஏற்­பட்­டது. அப்­போதில் இருந்து இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் மற்றும் இந்த சம்­பவம் குறித்து இணைத்து பார்த்­துள்ளேன்.

சிரியா சென்று வந்­தோரை விசா­ரிக்­கு­மாறு கோரினேன்

மேலும் இலங்­கையில் சிலர் சிரியா சென்­றுள்­ளது கண்­ட­றி­யப்­பட்ட பின்னர் அவர்கள் மீண்டும் இலங்­கைக்கு வரு­கின்ற தகவல் கிடைத்­தது. அவர்­களை கைது­செய்து விசா­ரிக்க வேண்டும் என்­ப­தையும் நான் வலி­யு­றுத்­தி­யுள்ளேன். வாராந்தம் செவ்­வாய்க்­கி­ழமை கூடும் புல­னாய்வு கூட்­டத்­திலும் அவ்­வப்­போது கூடிய பாது­காப்பு சபைக் குழுக் கூட்­டத்­திலும் தெரி­வித்­துள்ளேன். ஆனால் அவர்­களை கைது­செய்ய சட்டம் இல்லை என்ற கார­ணிகள் கூறப்­பட்­டது. அவர்­களை எவ்­வாறு விசா­ரிப்­பது என்­பது குறித்து ஆரா­ய­வேண்டும் என்ற பதில் கிடைத்­தது.

சஹ்ரான் குறித்தும் தகவல் வழங்­கினேன்

2018 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 9 ஆம் திகதி இது குறித்து காவற்துறை  மா அதி­ப­ருக்கு கடிதம் ஒன்றின் மூலம் தெரி­வித்தேன். அதனை கருத்தில் கொள்­ள­வில்லை. சில தினங்­களில் முதல் அனுப்­பிய கடி­தத்தை நினை­வு­ப­டுத்தி மீண்டும் கடிதம் அனுப்பினேன். ஆனால் இது குறித்து அவ்வப்போதும் பேசப்பட்டதே தவிர அதனை தாண்டிய நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக கூற முடியாது. அதேபோல் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி சஹ்ரான் குறித்து தனிப்பட்ட தகவல் ஒன்றினை தயாரித்து குற்றப்புலனாய்வு பிரிவு, பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் காவற்துறை  மா அதிபருக்கு தெரிவித்துள்ளேன். ஆனால் இதற்கான விசாரணைகள் ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து என்னால் எதையும் தெரிவிக்க முடியாது. எனக்கு இது குறித்து ஒன்றும் தெரியவில்லை என்றார். #தேசியபுலனாய்வுப்பிரிவின்தலைவர் #காவற்துறைமாதிபர் #சிசிரமென்டிஸ் #சஹ்ரான் #ISIS #சிரியா

http://globaltamilnews.net/2019/123095/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.