Jump to content

நேசமணி புகழ்ந்த துபாய் துபாய் பஸ் & துபாய் பஸ் ஸ்டாப்..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நேசமணி புகழ்ந்த துபாய் பஸ் & துபாய் பஸ் ஸ்டாப்..

 

"காண்ட்ராக்டர் நேசமணி" அவர்கள் துபாயில் வேலை செய்து வெற்றிக் கொடி நாட்டியபோது அவர் துபாய் நகரின் முக்கிய அம்சமான துபாய் பஸ் ஸ்டாப் மற்றும் துபாய் பஸ் பற்றி விளக்கியதை அறிந்து நாமும் தெரிந்துகொள்வோமா..?

Let us #Pray_for_Nesamani 😢

யாழ்க்கள உறவு திரு.பாஞ் அவர்கள், துபாய் வந்தபோதும் துபாய் மியூசியம் அருகே இந்த பஸ் நிறுத்தத்தினுள்ளே சென்று சற்றே ஓய்வெடுத்தார்.

நீங்களும் பாருங்களேன்..!

 

 

 

Link to post
Share on other sites
 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By ராசவன்னியன்
   உலகளவில் டிரெண்டிங் ஆன வடிவேலு: ‘நேசமணி’க்காக விடிய விடிய பிரார்த்தனை செய்த ரசிகர்கள்!
    
   ஒரு சாதாரண ஃபேஸ்புக் பதிவும் அதற்கு அளிக்கப்பட்ட வேடிக்கையான பதிலும் இந்தளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. 
   சிவில் என்ஜினியர்ஸ் லேர்னர்ஸ் என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் சுத்தியலின் படத்தை வெளியிட்டு, உங்கள் நாட்டில் இதன் பெயர் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த விக்னேஷ் பிரபாகர் என்கிற தமிழர், இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். எதிலாவது இதை வைத்து அடித்தால் 'டங் டங்' எனச் சத்தம் எழும்பும். ஜமீன் பேலஸில் பெயிண்டிங் காண்டிராக்டர் நேசமணியின் தலை இந்தப் பொருளால் தாக்கப்பட்டது. பாவம் என்று கிண்டலாக ஃப்ரெண்ட்ஸ் படத்தின் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சியை மையமாக வைத்துப் பதில் அளித்தார். உடனே அவருடைய நண்பர் வெங்கடேஷ், நேசமணி இப்போது நலமாக உள்ளாரா? என்று கேள்வியெழுப்ப.. அவ்வளவுதான் ஒரு பெரிய ‘சம்பவத்தின்’ தொடக்கமாக அந்த உரையாடல் அமைந்தது.
   இதையடுத்து ட்விட்டரில் இந்த உரையாடலின் ஸ்க்ரீன் ஷாட் பகிரப்பட்டது. உடனே  #Pray_for_Neasamani என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் புதிதாக உருவாக்கப்பட்டது. உடனே இதனை வைத்து பலரும் நகைச்சுவையான பதிவுகளை வெளியிட ஆரம்பித்தார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையின்போது பேசப்பட்ட விஷயங்களை நேசமணியுடன் இணைத்து ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பதிவுகள் வர ஆரம்பித்தன. அப்பல்லோவில் சிகிச்சை பெறும் நேசமணி, இட்லி சாப்பிட்டார், கலக்கி சாப்பிட்டார் என்று எழுதப்பட்ட ட்வீட் அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. இதனால் ட்விட்டரில் இந்திய அளவிலான டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #Pray_for_Neasamani, உலகளவில் ஆறாம் இடமும் பிடித்து அசத்தியது. இதனால் ரசிகர்கள் மேலும் உற்சாகமாகித் தொடர்ந்து இதுகுறித்த பதிவுகளை எழுதினார்கள்.  
   நேற்றிரவு விடிய விடிய ஆங்கிலத்திலும் தமிழிலும் நேசமணி தொடர்பாகப் பலரும் நகைச்சுவையான பதிவுகளை வெளியிட்டதால் #Pray_for_Neasamani நீண்ட நேரம் டிரெண்டிங்கில் இருந்தது. ரசிகர்களுடன் இணைந்து செய்தியாளர்கள், ஹர்பஜன் சிங் போன்ற பிரபலங்களும் இதில் இணைந்துகொண்டதால் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்கள் களைகட்டின. கே டிவியில் நேற்றிரவு பஞ்சதந்திரம் படம் ஒளிபரப்பானது. ஃப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு மீது சுத்தியலை வீசிய ரமேஷ் கண்ணாவைப் பஞ்சதந்திரம் படத்துடன் இணைத்து கே டிவியின் ட்விட்டர் கணக்குப் பதிவு வெளியிட்டது. இது அதிக வரவேற்பைப் பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிப்பான் பெயிண்ட் போன்றவையும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளத் தவறவில்லை. மேலும் ஃப்ரெண்ட்ஸ் படத்தில் சூர்யா இடம்பெற்றதால் என்ஜிகே படக்குழுவும் இதை வைத்து விளம்பரம் ஒன்றை உருவாக்கியது. இப்படி நேற்றிரவு விடிய விடிய நேசமணிக்காக அனைவரும் நகைச்சுவையாகப் பிரார்த்தனை செய்து உலகளவில் கவனத்தை ஈர்த்துவிட்டார்கள்.
   சம்பவத்தின் பிள்ளையார் சுழி!


    
   தினமணி
    
   "அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நேசமணி, இட்லி சாப்பிட்டார்": டிவிட்டரில் டிரெண்டாகும் 'காண்டிராக்டர் நேசமணி' ஹேஷ்டேக்


    
   பிரெண்ட்ஸ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாபாத்திரத்தின் பெயர் நேசமணி. இவர் அந்த படத்தில் காண்டிராக்டராக நடித்திருப்பதால் பிரபலமாக 'காண்டிராக்டர் நேசமணி' என்று அழைக்கப்படுவார்.
   வடிவேலு தற்போது தமிழ்த் திரைப்படங்களில் தலை காட்டாத போதிலும், சமூக வலைதளங்களில் இன்னும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அரசியல், விளையாட்டு, சினிமா என எந்தவிதமான மீம்ஸ் டெம்பிளேட்கள் என்றாலும் அதில் வடிவேலுவின் ஆதிக்கம் இல்லாமல் இருக்காது. 
   அந்த வரிசையில், தற்போது மீம்ஸ்களைக் காட்டிலும் அடுத்தகட்டமாக டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளார் வடிவேலு. பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரமான 'காண்டிராக்டர் நேசமணி'  தற்போது டிரெண்டாகியுள்ளது. 
   பிரெண்ட்ஸ் படத்தில் வரும் ஒரு நகைச்சுவைக் காட்சியில், அவரது தலையில் சுத்தியல் விழும். இதையடுத்து, அந்தக் காட்சியில் அவர் தலை சுற்றி கீழே விழுவார். இதனை அடிப்படையாகக் கொண்டு #Pray for Neasamani (நேசமணிக்காக பிரார்த்திக்கவும்) மற்றும் Neasamani என்ற இரண்டு ஹேஷ்டேக்குகள் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது. 
   இதோடு இல்லாமல் நேசமணி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், நேசமணி இட்லி சாப்பிட்டார், நேசமணி நலமாக உள்ளார், நேசமணிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்ற வகையிலான டிவீட்களும் இந்த ஹேஷ்டேக்குடன் டிரெண்டாகி வருகிறது.

   இதைப் பார்த்தால் தமிழக மீம் கிரியேட்டர்கள், இதை தேசிய அளவில் இருந்து உலகளவில் டிரெண்டாக்காமல் ஓயமாட்டார்கள் போல் தெரிகிறது.
   தினமணி
    
 • Topics

 • Posts

  • ஏது... ஏது....? போகிற போக்கைப்பார்த்தால் நாளைக்கு வி. முரளிதரனுக்கும் வரவேற்பு நடக்கும் போலத் தெரிகிறது.
  • நீங்கள் வரவேற்புக்கா எழுதுவதாக நான் சொல்லவில்லை. அப்படி தொனித்தால் மன்னிகவும். நானும் அப்படி எழுதுவதில்லை. இல்லை என்றால் யாழில் மிக பெரும்பான்மை ஆதரிக்கும் கருத்துக்களை எதிர்து எழுதி கொண்டிருக்க மாட்டேன். உங்களது மேலே உள்ள நிலைப்பாட்டுக்கும் எனது நிலைப்பாட்டுக்கும் அதிக தூரம் இல்லை. ஆனால் ஊரில் இருப்பவர்களின் அன்றாட யாதார்தங்களின் அடிப்படையில் அவர்கள் சில கருத்துக்களை சொல்லும் போது, குறிப்பாக அவர்களின் முந்திய கொள்கை பற்றான நிலைப்பாடு தெரியும் பட்சத்தில் அந்த கருத்தின் நியாத்தையும் புரிந்து கொள்கிறேன். அதை எடுத்து சொல்லும் நெஞ்சுரத்தை வரவேற்கிறேன். யாரையும் உசுப்பேத்தும் எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை.   
  • வரவேற்புக்கும், உசுப்பேத்தலுக்கும் இடையில் நிறைய வித்தியாசமுண்டு. உங்களுடைய முன்னைய பதிவுகளை பார்த்தல் அது உங்களுக்கு விளங்கும்.   ஒரு போதும் நான் அப்படி நினைக்கவில்லை. என்னை யாரும் வரவேற்கவேண்டும் என்றோ, பாராட்ட வேண்டுமென்றோ எழுதுவதில்லை. நானும் எனது இனமும் பட்ட வேதனைகள், இழப்புகள், அழிவுகள் ஈடு செய்ய முடியாதவை. அதை விலத்தி கடந்து போக என்னால் முடிவதில்லை. அதை என்னால் மறந்து எமது இருப்பை அழித்தவன் நல்லது செய்வான் என்றோ, அல்லது அவனது மாயையில் நாம் இழந்ததை மீட்டு விடலாம் என்றோ நினைக்கவில்லை.
  • ச்சீசீ நான் அப்படி சொல்லுவனே. 1. தான் “இலங்கை தாய்நாடு” மீது “பேரபிமானம்” கொண்டு உள்ளதாயும். 2. இலவச கல்வி தந்த இலங்கைக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டுள்ளதாயும். 3. தளபதி பால்ராஜ் கூட சிகிச்சைக்காக போகும் போது இலங்கை பாஸ்போர்ட்டை பாவித்தார். பேச்சுக்கு வந்தவர்கள் கூட அப்படித்தான் ஆகவே நாம் எல்லோரும் இலங்கையர் என்பதே எம் அடையாளம் என்றும். 4. தனக்கு லண்டனில் உள்ள முன்னாள் இலங்கை இராணுவ அதிகாரிகளோடு வீட்டில் வைத்து தண்ணி சாப்பிடும் பழக்கம் உண்டு என்றும். 5. தனது கண்டிய மன்னன் தெலுங்கர் என்ற கட்டுரையை ஒரு இராணுவ அதிகாரி மொழி பெயர்த்து எழுதி இலங்கையில் பிரபல்ய படுத்தியதாயும், நாதம்ஸ் இதே யாழில் எழுதி உள்ளார். இடைக்கிடை இந்தியா இலங்கைக்கு மிரட்டல் கடிதம் கொடுத்தது போன்ற செய்தியில் வராத தகவல்களையும் காவி வருவார். அந்த அடிப்படையில்தான் அப்படி எழுதினேன்.   
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.