யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
தமிழ் சிறி

'காண்ராக்டர்.. நேசமணி'

Recommended Posts

Posted (edited)

நà¯à®à¯à®à®¿à®à®©à¯à®à®³à¯

PrayForNesamani | டிவிட்டரில் டிரெண்டாகும் 'காண்டிராக்டர் நேசமணி' ஹேஷ்டேக்- வீடியோ

தேசிய அளவில் இன்று நேசமணிதான் ஒரே பேச்சாக உள்ளது. அந்த அளவுக்கு மறந்து போன நேசமணியைத் தூக்கிக் கொண்டு நாட்டையே அல்லோகல்லப்படுத்திக் கொண்டுள்ளனர் வடிவேலு ரசிகர்கள். ஹூ இஸ் திஸ் நேசமணி.. நேஷன் வான்ட்ஸ் டு நோ என்று அர்னாபே அலறும் அளவுக்கு டிரெண்டிங்கில் உள்ளது நேசமணி.

தமிழக மக்களின் வாழ்வில் ஒரு அங்கம்தான் நேசமணி. ஒவ்வொரு தெருவிலும் ஒரு நேசமணி கேரக்டரை சந்திக்க முடியும். அந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கையில் உள்வாங்கிப் போனவர் இந்த நேசமணி.

பிரண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலு கேரக்டர் பெயர்தான் நேசமணி. மின்னலென வந்து மனங்களை அள்ளிச் சென்ற காமெடிக் காட்சிகள் அவை. அதை வைத்துத்தான் இப்போது இணையதளங்களை கலக்கி வருகின்றனர். இன்று இந்த நேசமணி ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேசமணிக்கு என்னாச்சு, நேசமணி குணமடைய பிரார்த்திக்கிறோம் என்று பல விதமான பெயர்களில் நேசமணியை டிரெண்ட் ஆக்கி வளைத்து வளைத்து விளையாடி வருகின்றனர் நெட்டிசன்கள். ஏன் இப்படி திடீரென கிளம்பினர் என்று தெரியவில்லை. ஆனால் பிரதமர் மோடி இன்று பதவியேற்கவுள்ள நிலையில் இந்த டிரெண்ட் கிளம்பியுள்ளதால் மோடி பதவியேற்பை இருட்டடிப்பு செய்யும் நோக்கமா என்ற சிந்தனையும் நமக்கு வருகிறது.

à®à¯à®¤à¯à®¤à®¿à®¯à®²à¯


சுத்தியல்: சரி அதை விடுங்க.. நேசமணி மேட்டர் இந்த அளவுக்கு பரபரப்பாக யார் காரணம் தெரியுமா.. அந்த விக்னேஷ் பிரபாகர்தான் காரணம். ஒரு பேஸ்புக் போஸ்ட்டில் சுத்தியல் குறித்து அவர் கொடுத்த விளக்கம்தான் இன்று வைரலாகி நேசமணி ஹேஷ்டேக்கை உலா வர வைத்து விட்டது.

டங்.. டங்: அந்த பேஸ்புக் போஸ்ட்டில் சுத்தியல் குறித்து பிரபாகர் கூறுகையில், இதுதான் சுத்தியல். இதை எது மீதாவது அடித்தால் டங் டங் என சத்தம் வரும். இதேபோன்ற ஒரு சுத்தியலால்தான் பெயிண்டிங் காண்டிராக்டர் நேசமணியின் மண்டையை ஜமீன் பாலஸில் உடைத்தனர். பாவம் என்று கூறப் போக, இன்னொருவர் பின்னாடியே வந்து இப்படி எப்படி இருக்கிறார் நேசமணி என்று கேட்க, பரவாயில்லை, குணமாகி வருகிறார் என்று பிரபாகர் பதிலளிக்க.. அவ்வளவுதான் இது காட்டுத் தீ போல பரவி விட்டது.

View image on Twitter

கலாய்ப்பு: பிறகென்ன ஆளாளுக்கு விளையாட ஆரம்பித்து இன்று விதம் விதமான டிசைன்களில் கலாய்த்துக் கொண்டுள்ளனர் மக்கள். அதில் ஒன்று இது. அதாவது எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், நேசமணியின் இந்த நிலைக்குக் காரணமான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று கடிதம் எழுதுவது போல ஒரு டிவீட்

தமிழர்களே.. தமிழர்களே....: ஒரே ஒரு மனுஷன் போட்ட ஒரே ஒரு கமெண்ட். மொத்த டிவிட்டரும் குளோஸ். .தமிழர்களே. தமிழர்களே.. உங்களை கடலில் தூக்கிப் போட்டாலும் மீம்ஸ் போட மறக்க மாட்டீர்கள்... இப்படித்தான் நமக்குத் தோணுது. என்னவோ போங்கப்பா.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/nesamani-hashtag-national-trending-in-twitter-352461.html

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

This man brings back Nesamani

அப்பலோவில் நேசமணி 2 இட்லி, கலக்கி சாப்பிட்டார்

:ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நேசமணி இரண்டு இட்லி, கலக்கி சாப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணமூர்த்தி கையில் இருந்த சுத்தியல் கான்டிராக்டர் நேசமணி தலையில் விழுந்ததால் அவர் சுயநினைவை இழந்தார். இதையடுத்து சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேசமணி விரைவில் குணமடைய தமிழக மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிகிச்சை செலவு:  நேசமணியின் சிகிச்சை செலவை தானே ஏற்றுக் கொள்வதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளாராம்.

முன்னாள் முதல்வர்:  நேசமணியின் தந்தை முன்னாள் தமிழக முதல்வர் என்பதும், தமிழகத்தை டெல்லிக்கு அருகில் கொண்டு செல்ல திட்டமிட்டவர் என்பதும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

என்.ஜி.கே.:  நேசமணியை இந்த நிலைக்கு ஆளாக்கிய சந்துரு போலீசிடம் சிக்கினார். ஆனால் விசாரணையில் தனது பெயர் நந்த கோபாலன் குமரன் என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்:  நேசமணி கான்டிராக்டர் ஆகும் முன்பு கிரிக்கெட் வீரராக இருந்தார்.

View image on Twitter

அறிக்கை:  நேசமணியின் உடல்நலம் நன்றாக உள்ளது. அவர் 2 இட்லி, கலக்கி சாப்பிட்டார் என்று கலாய்த்துள்ளனர்.

பிற மாநில மக்கள்:  தமிழக மக்கள் நேசமணிக்காக பிராத்தனை செய்ய பிற மாநில மக்கள் நடப்பது புரியாமல் உள்ளனர். ஃபேக்ட்டு, ஃபேக்ட்டு.

Read more at: https://tamil.filmibeat.com/news/nesamani-eats-2-idli-kalakki-at-the-hospital/articlecontent-pf95699-059873.html

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

அப்பலோவில் நேசமணி: சாப்பாட்டு செலவு மட்டும் ரூ. 1.5 கோடிப்பு

நேசமணியை சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சேர்த்ததில் சாப்பாட்டு செலவு மட்டும் ரூ. 1.5 கோடி ஆகியுள்ளது என்று நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

மமதா:  நேசமணியின் நிலையை கண்டறிய மமதா பானர்ஜி அப்பலோ மருத்துவமனைக்கு வருகிறார். டெல்லியில் நடக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவை விட எனக்கு நேசமணி தான் முக்கியம் என்று அவர் தி இந்து நாளிதழிடம் தெரிவித்துள்ளார் என நெட்டிசன் ஒருவர் கலாய்த்துள்ளார்.

சிகிச்சை:  சித்தப்பா நேசமணியின் சிகிச்சை செலவுக்காக நிதி எல்லாம் திரட்டத் துவங்கிவிட்டார்கள். ஆஹா, கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்டாங்கய்யா

உணவு செலவு:  நேசமணியை அப்பலோவில் சேர்த்ததில் உணவுக்கான செலவு மட்டும் ரூ. 1.5 கோடிப்பு.

சூர்யா:  மருத்துவமனையில் இருக்கும் நேசமணியை விஜய் மற்றும் சூர்யா சென்று பார்த்தார்களாம்.

அய்யோ பாவம்:  யாரோ நேசமணி தலையில் சுத்தியலை போட்டுட்டாங்கடா

Read more at: https://tamil.filmibeat.com/news/nesamani-admitted-in-apollo-hospital-food-expense-is-rs-1-5-crore/articlecontent-pf95693-059872.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

 

Image may contain: 1 person, text

 

 

Image may contain: 4 people, people smiling, hat and text

 

Image may contain: one or more people and text

 

Image may contain: 3 people, text

 

Image may contain: text

பிபிசி வரைக்கும் நேசமணி போயிட்டுது 😆

Image may contain: text

 

Australia முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான sbs தொலைக்காட்சியின் இணையத்தில் வந்த வந்த நேசமணி.

 

 

Image may contain: 4 people, meme and text

 

Image may contain: 2 people, text

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • வெளிநாட்டிலென்று பார்த்தா நமது ஆட்களுமா?
  • அப்படியெல்லாம் விடுதலை என்ற வார்த்தையை வைத்து யாரையும் கண்மூடித்தனமாக சுட்டுவதில்லை. ஒரு பேச்சுக்கு சொல்கிறேன்(நான் அப்படியல்ல):  உங்கள் பார்வைப்படி பார்த்தால், கோடம்பாக்கம், சிறீபெரும்புதூர் கடந்து செல்லும்போதெல்லாம் 'இவர்களை ஆதரித்தோமே, ஏன் இப்படி நடந்தார்கள்..?' என இந்தியப் பற்றுள்ள எவருக்கும் 'அந்த துன்பியலை மறக்க முடியாது' என அவர்கள் சொல்வதும் சரிதானா..? இதே மனநிலை சிலருக்கு இருப்பதால்தான் ஏழு தமிழர்களின் விடுதலையும் தள்ளிச் செல்கிறது. இப்படி காலம் பூராவும், ஒருத்தர் மாற்றி ஒருத்தர் மனக்குறையுடன் குற்றம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான், விடிவு வராது சாமிகளே, ஆளை விடுங்கள்..!
  • மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...
  • இத்தாலி நாட்டில் வாழும் இலங்கையருள் தமிழரை காட்டிலும் சிங்களவர்களே அதிகம். கத்தோலிக்கர்களாக இருக்கும் இவர்கள் இலங்கையில் மேற்கு கரையோர சிங்களவர்களே. இத்தாலி நாட்டில் அதிகம் வசிப்பவர்கள் இருக்கும் இடம் என்ற அர்த்ததில் கொழும்பான் வென்னபுவவில் “இத்தாலி சிங்களவர்” அதிகம் என்கிறார்.
  • வாஷிங்டன் : அமெரிக்காவில் நடைபெறும் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து 25 பேர் வரை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில் ஜூலை 4ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், உலகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேலான நாடுகளில் இருந்து அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.தமிழகத்தில் இருந்து  பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் தாக்கல் செய்தவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படும் என்றும் கூறினார்.  மாநாட்டில் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள், அதன் பின்னர் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மாநாட்டிற்கு வேண்டிய நிதியுதவியை தமிழக அரசு வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  வட அமெரிக்கா தமிழ்ச் சங்கமும் சிகாகோ தமிழ்ச் சங்கமும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஜூலை 4ம் தேதி சிறப்பு பட்டிமன்றம், ஈழத் தமிழ் நாட்டியமும் மரபுகளும், தமிழ் இசை, இளைஞர் போட்டிகள், குறும்பட போட்டிகள், கங்கை கொண்ட சோழன் இராஜேந்திர சோழன் நாட்டிய நாடகம் நடக்க இருக்கிறது. ஜூலை 5ம் தேதி தமிழ் இசை, கவியரங்கம், இலக்கிய விநாடி வினா நடக்க உள்ளது. அன்று மாலை சிகாகோவில் ஐயன் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இயற்கையில் பிறந்த தமிழ் - இசைப்பெரும் நாட்டிய நாடகம் நடக்க உள்ளது.  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=505379 மாநாடு நிகழ்வுகள்: ·        நிகழ்த்துநர் : அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) & சிகாகோ தமிழ்ச் சங்கம் (CTS). ·        நிகழிடம் : சாம்பர்க் (Schamburg) கருத்தரங்கு மையம், சிகாகோ-அமெரிக்கா. ·        நிகழும் நாள் : 4th, 5th, 6th, & 7th ஜூலை 2019. பெரும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் : ஜூலை 4 & 5. ·        உலகத் தமிழ் தொழில்முனைவோர் கூடல் (GTEN) : ஜூலை 6. ·        அணிவகுப்பு & பெருவிருந்து : ஜூலை 6, மாலை. ·        தமிழ் ஆராய்ச்சி மாநாடு : ஜூலை 5 & 6. ·        நினைவேந்தல் : அமரர், முனைவர் வா.செ.குழந்தைசாமி துணைத் தலைவர் – IATR & முன்னாள் துணைவேந்தர் – அண்ணா பல்கலைக்கழகம். இம்மாநாடு, அமெரிக்காவில் நிகழ விழைந்து பெரும்பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தகக்து. ஜூலை 4, 5ம் தேதிகளில் தமிழ் ஆராய்சி நகர்வுகளுக்கும், 6ம் தேதி நடக்கவிருக்கும் உலகத்தமிழ் தொழில்முனைவர் கூடலில் அமெரிக்க வாழ் இளம் தொழில்முனைவர்கள், வெற்றியடைந்த தொழிலதிபர்கள் மற்றும்  இந்தியா உட்பட உலக நாடுகளில் வசிக்கும் பிரபல தொழில்முனைவர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளனர் என GTEN அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவா மூப்பனார் தெரிவித்தார். 10ஆம் ஆண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அறிவிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சி, தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தன் துறை சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் மாநாட்டுக்கு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்தார். https://yourstory.com/tamil/10th-world-tamil-research-conference-in-chicago-ykpc1kms5o