Jump to content

யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்ட நாள் இன்று !

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்ட நாள் இன்று !

தென்னாசியாவில் பெரிய நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண பொது நூலகம் எரியூட்டப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் கழிந்துவிட்டன.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை அதன் அறிவுத்தடங்களை அதன் சரித்திரத்தை அழிக்கவேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்டுகின்றன.

அப்படித்தான் இலங்கையின் யாழ்ப்பாண நூலகமும் எரித்து அழிக்கப்பட்டது. இன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள் 1981 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளில் 31.05.1981- 01.06.1981 யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது.

Jaffna.jpg

இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமை குறித்து குரல் எழுப்பப்பட்ட காலத்தில் அவர்களின் குரலின் அறிவுத்தடங்களை, இன உரிமைப் போராட்டத்தின் சரித்திர வேர்களை அழித்து ஈழத் தமிழ் குரலை அழிக்கவும் அதன் சரித்திரத்தை அழிக்கவும் அன்றைய இன வன்முறையாளர்கள் திட்டமிட்டு யாழ்நூலகத்தை எரித்தனர்.

இதனால் ஈழத் தமிழ் மக்கள் மாபெரும் அறிவிழப்பை பாரம்பரிய சொத்திழப்பை , தொன்மை இழப்பை முகம் கொடுத்தார்கள்.  ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு அது. தெற்காசியாவில் மிகப் பெரும் நூலாகமாக கருதப்படும் யாழ் நூலகத்தில் கிட்டத்தட்ட 97 ஆயிரம் அரியவகையான  புத்தகங்கள் காணப்பட்டன.

பல நூற்றாண்டுகள் பழமைகொண்ட ஈழ ஓலைச்சுவடிகள், ஈழத்தின் பண்டைய நுல்கள், பல அரிய பண்டைய தமிழ் நூல்கள், ஈழத் தமிழ் பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என்று பல்வேறு வகைப்பட்ட அரிய ஆவணங்கள் இதில் அழிக்கப்பட்டன. மாபெரும் அறிவுப் பொக்கிசமாக யாழ் நூலகம் கருதப்பட்ட நிலையிலேயே அது வன்முறையாளர்களால் எரியூட்டப்பட்டது.

யாழ் நூலக எரிப்பு என்பது இருபாதம் நூற்றாண்டில் நடந்த மிகப் பெரும் இன நூலெரிப்பு வன்முறையாகும். எவ்வாறு 1983 இல் திட்டமிட்டு இனக்கலவரம் செய்யப்பட்டு ஈழத் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்பட்டார்களோ அதைப்போலவே மிகவும் திட்டமிட்டு இன அறிவழிப்பு செய்யப்பட்டது. தனி ஈழத்திற்கான அரசியல் குரல்கள் எழுந்த கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயல் தனி ஈழத்திற்கான ஆயுதப் போரட்டத்திற்கும் உரமூட்டியது.

யாழ்.நூலக அறிவழிப்பு  வன்முறை  ஈழத் தமிழர் போராட்டத்தை வலுப்படுத்தியது. ஈழத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஆறாத காயத்தை தோற்றுவித்து. ஒரு  அறிவற்ற பிற்போக்குத் தனமான கொடிய  இந்தச் செயல் இந்த நூலெரிப்பு வன்முறை ஈழத் தமிழ் மக்கள் மாத்திரமின்றி உலக மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இன மேலாதிக்கத்தின் அசிங்கமான வெளிப்படாகவும்  கொடிய இன வெறி அறிவுக்கு எதிரான வெளி மனோபாவத்தின் நடவடிக்கையாகவும் இந்த நிகழ்வு மதிப்பிடப்படுகிறது. இனத்தின் சரித்திரத்தை அழிக்க புத்தகங்களுடன் வன்முறை புரிந்த செயல் இது. அறிவுடன், சிந்தனையுடன் வன்முறை புரிந்த செயல் இது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த, ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இந்த சம்பவத்தில் அன்றைய அமைச்சர் காமினி திசாநாயக்கா உள்ளிட்ட பலர் நேரடியாக செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் வெளிப்பட்டன. அன்றைய அரசின் இனவெறிக் குண்டர்கள். இராணுவத்தினர், பொலிஸ் அதிகாரிகள், கூட்டாக இந்த நூல் எரிப்பு வன்முறையில் ஈடுப்பட்டார்கள்.

Jaffna_2.jpg

யாழ் நூலக எரிப்பு மிகவும் கண்டிக்கத்தக்க , அறிவுடைய, சிந்தனையுயைட மனித சமூகம் வெட்கப்படக்கூடிய ஒரு செயலாக இருக்கின்றது. ஆனால் கடந்த நாற்பது வருடங்களாக ஈழத்தில், அதன் பூர்வீகக் குடிகளான ஈழத் தமிழர்களின் சரித்திர தடங்கள் மிக திட்டமிட்டு - தெளிவான கொள்கையில் அழிக்கப்பட்டு வருகின்றன. அன்றைக்கு புத்தகங்களுடன் ஒரு நூலகம் எரியூட்டப்பட்டது. அதன் பின்னரான காலத்தில் போர் நடவடிக்கைகளின் மூலம் பல்வேறு நூலகங்கள் அழக்கப்பட்டுள்ளன. இலங்கையை ஆண்ட  அத்தனை அரசுகளும் அழித்துள்ளன. 

போரின் போது பாடசாலை நூலங்களின் புத்தகங்கள், தனிப்பட்ட வாசகர், எழுத்தாளர்களின் புத்தகங்கள், பிரதேச நூலகங்களின் புத்தகங்கள் எல்லாம் குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளன. போர் முடிந்தவுடன் கைப்பற்றபட்ட பகுதிகளில் இந்த அறிவழிப்பு நடைபெற்றது. இன நூலெரிப்பு வன்முறை என்பது 1981 இல் ஆரம்பிக்கபட்டு மிகவும் விரிவுபடுத்தப்பட்ட அத்துடன் சரித்திரத்தை , பண்பாட்டை, அழிக்கும் தொன்மங்களை அழிக்கும் செயற்பாட்டின் மற்றொரு செயல்தான் ஆலயங்கள், சிலைகள், சமாதிகள், தொல்லியல் மையங்கள், பண்பாட்டு புலங்கள் முதலியவற்றை அழித்தலும் ஆகும். இதுவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

http://www.virakesari.lk/article/57174

Link to comment
Share on other sites

மே 31 நள்ளிரவில் (ஜூன் 1 அதிகாலையில்). இலங்கையின் இரண்டு அமைச்சர்கள் மேற்பார்வையில் 
யாழ். நூலகம் காவற்றுறையினர், காடையர்களினால் எரித்து அழிக்கப்பட்டது.

யாழ் நூலக எரிப்பு நினைவுநாள்!

"சாம்பலை மூடிய சுவர்கள் 
அதிர்வினால் உடைந்து போய் விடுமோ? 
மீண்டும் மீண்டும் இந்தப் புத்தகங்கள்மீது
அவர்கள் கற்களோடு தீப்பந்தங்களை எறிய முற்படுகிறார்கள்
ஒட்டி உலர்ந்த சுவர்களில்
படிந்திருக்கிற சாம்பலை கிளற முற்படுகிறார்கள்
நமது நிலத்தைப்போல 
எல்லா வகையிலும் காட்சிப் பொருளாக 
புரிந்து கொள்ளாமலே இருக்கின்றன நமது புத்தகங்கள்
இந்தப் புத்தகங்களை விரிக்கும் பொழுது 
சாம்பல் உதிர்ந்து கொட்டுகிறது
இவர்கள் எங்கள் சாம்பலையும் திருடிச் செல்கிறார்கள்.
தாள்கள் மாற்றப்பட்ட நமது புத்தகங்களில்
புதிய கதைகள் எழுதப்பட்டு சேகரிக்கப்படுகின்றன
இவர்களும் தீ மூட்டிய தடிகளுடன் வந்தார்கள்
சிரில் மாத்தியூவும் 
காமினி திஸ்ஸநாயகேவும்
சாம்பல் வழியும் எரிந்த புத்தகங்களை தின்றுழல்வதை பார்த்தனர்"
- தீபச்செல்வன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது அரசியல் தலைவர்மாரின் மின்னஞ்சல் முகவரிகள் இருந்தா இந்த செய்திகளை கொஞ்சம் அனுப்பி வையுங்கப்பா.

Link to comment
Share on other sites

முகநூல் பக்கத்தில் இருந்து .....

சரவணபவான் எம். பியின் தந்தை ஈஸ்வரபாதம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்.

சிங்கள அரசு என்று இன்று சரவணபவான் கூறி வரும் அதே அரசின் சேவகனாக தொழில் புரிந்து வந்த ஓர் பொலிஸ் அதிகாரிதான் இவரது தந்தை ஈஸ்வரபாதம்.

யாழ் கொக்குவில் சம்பியன் வீதியில் இருந்தது சரவணபவானின் வீடு.

1981 மே 31 ஞாயிற்றுக்கிழமை மாலை வேளை தாண்டியும் சரவணபவானின் கொக்குவில் வீட்டில் ஒரே கூத்தும் கும்மாளமும் நடக்கிறது.

அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் காமினி திசநாயக்கா தலைமையில் தென்னிலங்கையில் இருந்து வந்த காடையர் கூட்டம் அந்த வீட்டு முற்றத்தில் குடி போதையில் கூத்தடித்துக் கொண்டிருந்தனர்.

சரவணபவானுக்கு அப்போது 28 வாலிப வயது. தந்தை ஈஸ்வரபாதத்துடன் இணைந்து மது போத்தல் உடைத்து காடையர்களுக்கு விருந்து பரிமாறினார் சரவணபவான்.

தென்னிலங்கையில் இருந்து வந்த காடையர்களுக்கு நிறை வெறி ஏறி கூத்தும் கும்மாளுமாய் சரவணபவானின் வீடு அல்லோல கல்லோலப்படுகிறது.

யாழ் நூலகத்தை எப்படி?.. எத்தனை மணிக்கு?… எரித்தழிப்பது என்று சரவணபவானின் கொக்குவில் வீட்டில் திட்டங்கள் தீட்டப்பட்டன.

அப்போது யாழ். துரையப்பா விளையாட்டரங்கின் அருகில் இருந்தது ஓர் தங்கு விடுதி(Rest House) அதன் மிக அருகேதான் யாழ். நூலகமும் நடக்கப் போவது தெரியாமல் அமைதியாக இருந்தது.

சரவணபவானின் கொக்குவில் வீட்டில் இருந்து கும்மாளம் அடித்த தென்னிலங்கை காடையர்களும், அமைச்சர் காமினி திசநாயக்காவும் துரையப்பா விளையாட்டரங்கின் அருகில் இருந்த தங்கு விடுதியிலும், அசோகா விடுதியிலுமாக இரவோடிரவாக கொண்டு வந்து இறக்கப்பட்டனர்.

அங்கு அமைச்சர் காமினிக்கும், காடையர் கூட்டத்திற்கும் சரவணபவானின் தந்தை விசுவாசமிக்க பொலிஸ் அதிகாரியாக இருந்து காவல் காத்து நின்றார்.

நள்ளிரவு வேளை தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் நூலகம் எரியத்தொடங்கியது.

நூலகத்தை எரித்துவிட்டு வெற்றிப்புன்னகையோடு வந்த காடையர்களுக்கு சரவணபவானின் தந்தை ஈஸ்வரபாதம் உற்சாகம் பானம் கொடுத்து வரவேற்றார்.

இன்று தமிழ்த் தேசியம் பேசித் திரியும் சரவணபவான் அவர்களும் 28 வயது வாலிப மிடுக்கில் அங்கே புன்னகைத்து நின்ற காட்சிகளை கண்டவர்கள் ஆதாரத்துடன் இன்றும் கூறுகின்றார்கள்.

தெற்காசியாவின் சிறந்த நூலகம் என போற்றப்பட்ட யாழ் நூலகத்தை எரிக்கும் நயவஞ்சகத் திட்டத்தைத் தீட்ட இடம் கொடுத்து விட்டு சரவணபவானின் வீடு எதுவும் அறியாதது போல் அமைதியாக இருந்தது.

தமிழ் பேசும் மக்களின் அறிவுக்களஞ்சியத்தை அழித்தொழித்து அங்கிருந்த தொன்னூற்றேழாயிரம் நூல்களை எரித்தழித்த பெருந்துயருக்குத் துணை போன தமிழினத் துரோகிகளான பொலிஸ் அதிகாரி ஈஸ்வரபாதமும் அவர் மைந்தன் சரவணபவானும் அதைப் பார்த்து ரசித்துச் சல்லாபமிட்டனர்.

மறு நாள் விடிந்ததும் யாழ் நூலகம் எரிக்கபட்ட செய்தி அறிந்து மொழியியல் பேரறிஞர் வணக்கத்திற்குரிய பிதா டேவிற் அடிகளார் அவர்கள் மாரடைப்பால் துடி துடித்து மரணமடைந்தார்.

“நேற்று என் கனவில்

புத்த பெருமான்

சுடப்பட்டு இறந்தார்.

சிவில் உடை அணிந்த

அரச காவலர்கள்

அவரை கொன்றனர்.

யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே

அவரது சடலம் குருதியில் கிடந்தது”.

இப்படி தனது துயரத்தை கவிதையில் வடித்தார் போராசிரியர் நுஃமான்.

அதே நிகழ்வில் பெரிதும் கவலையுற்ற ஆங்கிலேய அறிஞர் ஒருவர் யாழ்ப்பாண பொது மக்கள் நூலகம் எரிந்து கருகி நீறாகிக் கிடந்த சாம்பர் மேட்டிலே நின்ற வண்ணம் ஆங்கிலக்கவிதை ஒன்றையும் எழுதியிருந்தார்

யாழ் நூலகத்தின் வரலாறு, அதன் எரிப்பு குறித்த “The Jaffna Public Library rises from its ashes” என்ற பெயரில் ஓர் ஆவண நூலை கட்டிடக்கலை நிபுணர் வி. எஸ். துரைராஜா எழுதி வெளியிட்டுள்ளார்.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் யாழ் நூலக எரிப்புக் குறித்த கருத்தை மொழி பெயர்த்து ஆங்கில கவிஞன் ஒருவனே தனது துயரத்தை வெளிப்படுத்தியிருந்தான்.

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: à®à®°à¯

Link to comment
Share on other sites

ஒரு ஆங்கில ஆவணப்பதிவு, ஆஸ்திரேலியா நிருபர் 

தமிழில் ஆவணம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழ் மக்களின் இதயங்களில் மூட்டப்பட்ட தீ
விரைவில் இது அணையாது காலத்திற்கும் நின்று எரியும்    
  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

சரவணபவன் குடும்பம் இதில் சம்பந்தப்பட்டிருப்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன். இவரின் தந்தைக்கு, இவ்வளவு ஒரு கேவலமான விசயத்துக்கு துணை போக எப்பிடி மனம் வந்தது, முடியவில்லை. சரவணபவனுக்கு இதனால் பிறகு பிரச்னை ஏதும் வராதது ஆச்சரியமாக உள்ளது, இப்பொழுது தமிழ் தேசியவாதியாக  வேறு ஆகிவிட்டார்! எல்லாம் எங்கள் தலையெழுத்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

எமது அரசியல் தலைவர்மாரின் மின்னஞ்சல் முகவரிகள் இருந்தா இந்த செய்திகளை கொஞ்சம் அனுப்பி வையுங்கப்பா.

ஏன் அவையளுக்கு தெரியாதாக்கும்......

அவர்களின் ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனத்திலும் நூலக எரிப்பும்  அடங்கும்.

நாலு சனம் செத்தால் தான் சவப்பெட்டி விக்கிறவன் சந்தோசமாய் வாழலாம்.
அந்த சவப்பெட்டி விக்கிற கோஷ்டிதான் சம்சும் மாவை கும்பல்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அவர்களின் ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனத்திலும் நூலக எரிப்பும்  அடங்கும்.

ஓ அவர்கள் இன்னும் மறக்கவில்லை.நன்றி.

Link to comment
Share on other sites

இன்றும் எரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் வடக்கின் கல்வியை!

அன்று தீவைத்து எரித்தவர்கள்
இன்று பொறிகளால் எரிக்கிறார்கள்!!
தீயும் எண்ணெயும் கொண்டு எரித்தார்கள்
கஞ்சாவும், வாளும் வைத்து எரிக்கிறார்கள்!

நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அனைத்தும் ஒரே நாளில் சாம்பலாகிப் போனது.

யாழ். நூலகம் 1933ம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது.
 
பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: à®à®©à¯à®±à¯ à®à®²à¯à®²à®¤à¯ à®à®¤à®±à¯à®à¯ à®®à¯à®±à¯à®ªà®à¯à® நபரà¯à®à®³à¯, பலர௠நினà¯à®±à¯à®à¯à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®©à¯à®±à®©à®°à¯, à®à¯à®à¯à®à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ வà¯à®³à®¿à®ªà¯à®ªà¯à®±à®®à¯

Link to comment
Share on other sites

இது தற்செயலான சம்பவம் அல்ல 
நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு இனத்தின் மீதான இனவழிப்பு தாக்குதல்

தனியே ஒரு இனம் அழிக்க்கப்படுவது மட்டும் இனவழிப்பு அல்ல . இனத்தின் அடையாளங்கள் , பொருளாதாரம் , இனத்தின் வரலாறுகளை கூறும் சான்றுகள் அழிக்கப்படுவதும் இனவழிப்பே

ஆம் யாழ் நூலக எரிப்பை தொடர்ந்து அவர்கள் எரித்ததவையை கூர்ந்து பார்த்தால் அது புரியும்

#ஈழநாடுபத்திரிகை_அலுவலகம் 
#நாச்சிமார்கோவில்_கோபுரம் 
#யாழ்_கடை_தொகுதி 
#திருவள்ளுவர்_சிலை 
#தமிழர்விடுதலை_கூட்டணி_அலுவலகம் 
#தமிழ்_எம்பியின்_வீடு 
#ஒவ்வையார்சிலை 
#சுன்னாகம்கடைதொகுதி 
#இன்னும்_பல

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.