கிருபன்

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் வியாழேந்திரன்

Recommended Posts

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் வியாழேந்திரன்

முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் அதுரலிய ரத்ன தேரருக்கு  ஆரவளிக்கும் முகமாக மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுளள்ளார்.

இந்நிலையில் அதுரலிய ரத்ன தேரர் நேற்று முதல் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அமைச்சரான ரிசாத்  பதியுதீன் , கிழக்கு மாகாண ஆளுநரான எம் .எல்.ஏ.எம் ஹிஸ்பல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநரான அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு கோரியே அத்துரலிய ரத்ன தேரர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Viyalandern.jpg

http://www.virakesari.lk/article/57246

Share this post


Link to post
Share on other sites

இப்படியே  போனால்

வியாழனை  மாத்த 

தமிழர்கள்  உண்ணாவிரதம்   மட்டுமல்ல

உயிரையே  கொடுக்கவேண்டி  வரும்..

Share this post


Link to post
Share on other sites

நல்ல முற்போக்கான முடிவு உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் ..👍

Share this post


Link to post
Share on other sites

நல்ல முடிவு. ராஜதந்திரமென்று ஒன்றும் சொல்லாமலும் செய்யாமலும் இருப்பதிலும் பார்க்க ஐஎஸ் ஐஎஸ் உடன் தொடர்புடையவர்கள் நிச்சயமாக பதவி இறக்கப்பட வேண்டும். இந்த உண்ணாவிரதத்துக்கு முஸ்லிம்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, விசுகு said:

இப்படியே  போனால்

வியாழனை  மாத்த 

தமிழர்கள்  உண்ணாவிரதம்   மட்டுமல்ல

உயிரையே  கொடுக்கவேண்டி  வரும்..

இவர் செய்வதில் என்ன தவறு......!!!!

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள்.உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்.

Share this post


Link to post
Share on other sites
21 minutes ago, Dash said:

இவர் செய்வதில் என்ன தவறு......!!!!

சரி

உங்களது கேள்வி  பின்னர் வருவோம்

இப்போ

இந்த வியாழன்  எங்க  நிற்கிறார்??

கூட்டமைப்பிலா?

புளட்டிலா??

மைத்திரியுடனா??

ரணிலுடனா??

அல்லது  மகிந்தவுடனா??

Share this post


Link to post
Share on other sites
21 minutes ago, விசுகு said:

சரி

உங்களது கேள்வி  பின்னர் வருவோம்

இப்போ

இந்த வியாழன்  எங்க  நிற்கிறார்??

கூட்டமைப்பிலா?

புளட்டிலா??

மைத்திரியுடனா??

ரணிலுடனா??

அல்லது  மகிந்தவுடனா??

அவர் எங்கு நின்றாலும்  பரவாயில்லை, ரிஷட் பதவி நீக்கம் செய்ய வேண்டும், விசாரணை செய்ய வேண்டும்; இவரது கடந்த 10 வருட கால நடவடிக்கைகள் முழுமையாக விசாரணை  செய்ய வேண்டும்; இவரால் மன்னார் மாவட்டம் இஸ்லாமிய மயப்படுத்தப்பட்டு விட்டது.

எனவே எமக்கு எம்மை காப்பாற்ற வேண்டும் எனவே தமிழ்  மக்கள் ரிஷட் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரை அழுத்தம். கொடுக்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites
Just now, Dash said:

அவர் எங்கு நின்றாலும்  பரவாயில்லை, ரிஷட் பதவி நீக்கம் செய்ய வேண்டும், விசாரணை செய்ய வேண்டும்; இவரது கடந்த 10 வருட கால நடவடிக்கைகள் முழுமையாக விசாரணை  செய்ய வேண்டும்; இவரால் மன்னார் மாவட்டம் இஸ்லாமிய மயப்படுத்தப்பட்டு விட்டது.

எனவே எமக்கு எம்மை காப்பாற்ற வேண்டும் எனவே தமிழ்  மக்கள் ரிஷட் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரை அழுத்தம். கொடுக்க வேண்டும்.

அனுபவமும்

வரலாறும்

தப்பான  மனிதர்களிடம்  பொறுப்புக்கள் போகக்கூடாது  என்பதை  எடுத்துரைக்கின்றன  சகோ

ஆத்திரத்தில்  எம்மால்  எடுக்கப்படும் முடிவுகள்  தவறுக்கு மேல் தவறாகிவிடும்

 

Share this post


Link to post
Share on other sites

 

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, விசுகு said:

இந்த வியாழன்  எங்க  நிற்கிறார்??

கூட்டமைப்பிலா?

புளட்டிலா??

மைத்திரியுடனா??

ரணிலுடனா??

அல்லது  மகிந்தவுடனா??

காசுக்கு விலைபோய் மகிந்த கும்பலுடன் சேர்ந்த இவர் வேறுவழிகளின்றி இப்போது கொஞ்சகாலமா மகிந்தவின் சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலின் சதித்திட்டங்களுக்கு ஏற்ப சதிராடி வருகிறார்!

இன்னொரு விதமாக சொல்லப்போனால் முன்னர் முஸ்லிம்கள் எப்படி சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலுடன் இணைந்து தமிழின அழிப்புக்கு துணை போனார்களோ அதைப் போன்றதொரு வழியில் வியாழேந்திரன் பயணிக்க எத்தனிக்கிறார்!

தமிழினப் படுகொலைகாரர்களுக்கு ஆதரவாக இருந்த ஒரு முஸ்லிம் பயங்கரவாதக் கும்பலுக்கு எதிராக நடக்கும் எதையும் அமைதியாக வேடிக்கை பார்ப்பதில் தவறில்லை!

  • Like 4

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, விசுகு said:

இந்த வியாழன்  எங்க  நிற்கிறார்??

புதனுக்கு அடுத்ததா நிற்கிறார்.

  • Haha 2

Share this post


Link to post
Share on other sites

உண்ணாவிரத்தை நிறைவுசெய்தார் வியாழேந்திரன்

Viyalenthiran-Protest-700x450.jpg

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனால் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தினை அவர் இன்று இரவு நிறைவுசெய்தார்.

அவர், நிறைவு செய்ததைத் தொடர்ந்து தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் குறித்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே, உண்ணவிரதத்தை முடித்துக்கொண்டு கருத்துத்தெரிவித்த வியாழேந்திரன்,  “கிழக்கு மாகாண ஆளுநர், மேல்மாகாண ஆளுநர், அமைச்சர் ரிசாட் ஆகியோரை பதிவி நீக்கும் வரையில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்தர்.

http://athavannews.com/உண்ணாவிரத்தை-நிறைவுசெய்/

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, விசுகு said:

சரி

உங்களது கேள்வி  பின்னர் வருவோம்

இப்போ

இந்த வியாழன்  எங்க  நிற்கிறார்??

கூட்டமைப்பிலா?

புளட்டிலா??

மைத்திரியுடனா??

ரணிலுடனா??

அல்லது  மகிந்தவுடனா??

வியாழேந்திரனை போன வருடம் கூட்டமைப்பிலிருந்து நீக்கியிருந்தார்கள். 

போன வருடம் நடந்த குளறுபடியின் போது அதுரலிய ரத்ன தேரர் மைத்திரி மகிந்த கூட்டணி பக்கம் நின்றார். வியாழேந்திரனும் மைத்திரி மகிந்த கூட்டணி பக்கம் நின்றார். இப்ப அதுரலிய ரத்ன தேரரை ஆதரித்து இவரும் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால் பின்னணியில் அரசியல் உள்ளது.

இலங்கையில் தாக்குதல் நடக்கவிருப்பது மைத்திரி, ரணில், மகிந்த, முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரிந்தே நடந்தது. இப்பொழுது அவர்கள் அரசியலுக்கு மீண்டும் ஒருமுறை வியாழேந்திரன் பலிக்கடாவாக்கப்படுகிறார்.

Edited by Lara
  • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, விசுகு said:

அனுபவமும்

வரலாறும்

தப்பான  மனிதர்களிடம்  பொறுப்புக்கள் போகக்கூடாது  என்பதை  எடுத்துரைக்கின்றன  சகோ

ஆத்திரத்தில்  எம்மால்  எடுக்கப்படும் முடிவுகள்  தவறுக்கு மேல் தவறாகிவிடும்

 

கருணாவை எதிர்த்து முடிந்து,வியாழேந்திரனை எதிர்ப்பதில் வந்து நிக்கினம் 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ரதி said:

கருணாவை எதிர்த்து முடிந்து,வியாழேந்திரனை எதிர்ப்பதில் வந்து நிக்கினம் 

வியாழன் நல்லவரா தங்கச்சி? 

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, குமாரசாமி said:

வியாழன் நல்லவரா தங்கச்சி? 

ஒருக்கா ராசிபலன் பாத்திட்டாப்போச்சு

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இப்பிடியான கடைந்தெடுத்த இனவிரோதிகளுடன் சேர்ந்து நாங்கள் இதில் பங்கு பற்றுவது தேவையற்றது. இவர்கள் எங்களை கணக்கிலேயே எடுக்க மாட்டார்கள், தேவையேற்படின் எங்களுக்கு எதிராக உடனடியாகவே திரும்புவார்கள். வரலாறு அப்பிடித்தான்  எங்களுக்கு சொல்லி தந்திருக்கு. இது பெயரைக் கெடுக்கவே உதவும். பேசாமல் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்தாலே போதுமானது. 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, ரதி said:

கருணாவை எதிர்த்து முடிந்து,வியாழேந்திரனை எதிர்ப்பதில் வந்து நிக்கினம் 

தப்பு தப்பான கருத்துக்கள் பதியும்போது உங்களையும்தான் 
எதிர்த்திருக்கிறோம் ..... தப்புக்களை எதிர்ப்பதில் தப்பில்லையே? 

நாங்கள் ஆரம்பத்தில் எதிர்க்காது இருந்திருந்தால் நீங்களும் தப்பாகவே 
இருந்து இருக்கலாம் ..... 
இன்று யாழ் களத்தில் உங்களை ஒரு ரதியாக நிறுத்தி இருக்கிறோமே?

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, குமாரசாமி said:

வியாழன் நல்லவரா தங்கச்சி? 

அவர் அரசியலுக்காய் தான் இதைத் செய்கிறார். அங்கு இருப்பவர்களும் அப்படித் தான் சொல்கிறார்கள்...ஆனால் இங்கிருப்பவர்கள் அவரை எதிர்க்க காரணம் மட்டக்களப்பான் தங்களுக்கு அடிமையாய் இருக்கோணும் அல்லது தங்களுக்கு கீழ் இருக்கோணும் என்ட நல்லெண்ணம் தான் ...ஒரு சிலரைத் தவிர அநேகமானோருக்கு யாழ்ப்பாண மெண்டாலிட்டி மாத்துவது கஸ்டம்

.
அவரை எதிர்க்க வேண்டும் என்று இங்கிருந்து காசு அனுப்பி அவருக்கு எதிராய் சில பேரை கிளப்பி விடுவினம்..இரண்டு பேரும் புடுங்குப்பட  மூனாக்கள்  எதிர்ப்பில்லாமல் முன்னுக்கு வந்து விடுவினம். அது தான் அன்று தொட்டு இன்று வரை நடந்து கொண்டே இருக்கு 
 

7 hours ago, Maruthankerny said:

தப்பு தப்பான கருத்துக்கள் பதியும்போது உங்களையும்தான் 
எதிர்த்திருக்கிறோம் ..... தப்புக்களை எதிர்ப்பதில் தப்பில்லையே? 

நாங்கள் ஆரம்பத்தில் எதிர்க்காது இருந்திருந்தால் நீங்களும் தப்பாகவே 
இருந்து இருக்கலாம் ..... 
இன்று யாழ் களத்தில் உங்களை ஒரு ரதியாக நிறுத்தி இருக்கிறோமே?

நான் அன்றிலிருந்து இன்று வரை கொண்ட கொள்கையில்😄 உறுதியாய் இருப்பதால் தான் நீங்கள் எவ்வளவு எதிர்த்த போதும் விடாது நின்று பிடிக்கிறேன் ...யாழ் நிறைய கற்றுத் தந்து இருக்கிறது. அதை மறப்பதற்கு இல்லை 
 

Share this post


Link to post
Share on other sites
23 minutes ago, ரதி said:

 

நான் அன்றிலிருந்து இன்று வரை கொண்ட கொள்கையில்😄 உறுதியாய் இருப்பதால் தான் நீங்கள் எவ்வளவு எதிர்த்த போதும் விடாது நின்று பிடிக்கிறேன் ...யாழ் நிறைய கற்றுத் தந்து இருக்கிறது. அதை மறப்பதற்கு இல்லை 
 

என்ன கொள்கை? 

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, Lara said:

வியாழேந்திரனை போன வருடம் கூட்டமைப்பிலிருந்து நீக்கியிருந்தார்கள். 

இவரை கூட்டமைப்பிலிருந்து நீக்கியதாக போன வருடம் ஊடகங்கள் முன் கூறியிருந்தாலும் “உத்தியோகபூர்வமாக” நீக்கப்பட்டாரா என்பது கேள்வி.

பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலேயே இவர்கள் போட்டியிட்டிருந்தார்கள். அதன்படி பாராளுமன்ற உறுப்பினராக வந்தவர் இன்னும் அவ்வாறே உள்ளார்.

https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/3251 

இவரை உத்தியோகபூர்வமாக நீக்கியிருந்தால் இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் ஆப்பு வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அடுத்த முறை இவரை சேர்த்துக்கொள்ளாமல் விடக்கூடும்.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, Lara said:

அடுத்த முறை இவரை சேர்த்துக்கொள்ளாமல் விடக்கூடும்.

அதற்குத்தான் தனி ஆவர்த்தனம் செய்கிறார் 

7 hours ago, ரதி said:

ஆனால் இங்கிருப்பவர்கள் அவரை எதிர்க்க காரணம் மட்டக்களப்பான் தங்களுக்கு அடிமையாய் இருக்கோணும் அல்லது தங்களுக்கு கீழ் இருக்கோணும் என்ட நல்லெண்ணம் தான் ...

கண்டபடி சாபம் இட்டு விடுவேன் என்று பயமா இருக்கு போங்க தங்கச்சி ஓரமாக போய் விளையாடுங்க 

Share this post


Link to post
Share on other sites

புட்டும் தேங்காய் பூவும் என்று சொந்தம் கொண்டாடிய தமிழர்களைக் கூட இருந்தே சிங்களவனோடும் அரேபியர்களோடும் பாகிஸ்தானியர்களோடும்.. கூட்டு நின்று.. கருவறுத்த.. கருவறுக்கும்.. முஸ்லீம்களை விட... எதிரியாக தன்னை இனங்காட்டிக் கொண்டு தமிழர்களுக்கு எதிராக நின்ற சிங்களவன் எவ்வளவோ மேல்.

சம் சும் கும்பல்.. சொறீலங்கா சுதந்திர தினத்தில் போய் குந்தி இருந்து.. இனப்படுகொலை சிங்கள இராணுவ அணிவகுப்பை பார்த்துக் கொட்டாவி விட்டுக் கொண்டிந்ததை விட..

தமிழ் மக்களுக்கு எதிரான இன்னொரு காட்டிக்கொடுப்பு எதிரியை.. அவர்களின் முன்னை நாள் நண்பர்களோடு நின்று எதிர்ப்பது நல்லது. அப்போது தான் இரு தரப்பும் தமிழர்களுக்கு தாம் செய்த துரோகத்தை அடையாளம் கண்டுகொள்ளும். 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.