pri

முதல்பதிவு

Recommended Posts

அப்பாவுக்கு கொழும்பில் சுங்கத்திணைக்களத்தில் வேலை. சம்பளத்துக்கு மேல் வருமானமும் நல்ல வசதிகளோடும் கூடிய அரசாங்க தொழில். அப்போது நாங்கள் கொழும்பின் புறநகர் பகுதியான ஹுனுப்பிட்டியில் குடியிருந்தோம். நான் பிறந்ததும் என் சின்ன வயது பள்ளிப்படிப்பும் அங்கேயே அமைந்தது. எங்களைப் போலவே வேலையின் நிமித்தம் கொழும்புக்கு குடிபெயர்ந்த நிறைய தமிழ்க்குடும்பங்கள் ஹுனுப்பிட்டியில் குடியிருந்தார்கள்.
பள்ளிக்கூட விடுமுறைக்கு பருத்தித்துறையில் இருந்த எங்கள் வீட்டுக்கு போய் வருவது வழக்கம்.

77 கலவரத்தில் ஒரே நாளில் எல்லாவற்றையும் இழந்து வெறும் கையோடு பருத்தித்துறைக்கு நிரந்தரமாக போக நேர்ந்தபோது மூன்றாம் வகுப்பில் இருந்தேன்.

சில ஆண்டுகளில் எதிர்பாராமல் அப்பா இல்லாமல் போக எல்லா சுமைகளும் அம்மாவின் தலைக்கு ஒரேநாளில் இடம் மாறியது. அப்போது மூத்த அண்ணனும் அக்காவும் பல்கலைக்கழகத்திலும் நானும் மற்ற அண்ணனும் தம்பியும் பள்ளிப் படிப்போடும் இருந்தோம். அப்பாவின் பென்சனில் ஐந்துபேரின் படிப்பையும் செலவையும் சமாளிக்க சிரமப்பட வேண்டிஇருந்தது. ஒருவருடைய படிப்பையாவது நிறுத்தி வெளிநாட்டுக்கு அனுப்பும்படி அக்கம்பக்கத்தில் சொன்னார்கள். பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்தி சிக்கலை கடப்பதில் அம்மாவுக்கு பெரிதாக நாட்டம் இருக்கவில்லை. செலவுகளின் துண்டு விழும் தொகையை சமாளிக்க அம்மாவின் ஒவ்வொரு நகையாக அடவு கடைக்கு போனது.

அண்ணா படிப்பை முடித்து வேலைக்கும் அக்கா மேல்படிப்புக்கு அமெரிக்காவுக்கும் போகிறபோது ஏறத்தாள அம்மாவின் எல்லா நகைகளும் அடவு கடைக்கோ அல்லது விற்பனைக்கோ போயிருந்தது. ஆயினும் அம்மா விரும்பியதை போலவே ஐந்து பேரும் இலங்கையிலேயே பல்கலைக்கழக படிப்பை பூர்த்திசெய்ய முடிந்தது.

பிறகு மீண்டும் வசதிகளும் வாய்ப்புகளும் வந்து சேர்ந்தபோது அம்மாவுக்கு நகைகளை போட்டு மகிழ்கிற வயது கடந்து போயிருந்தது.

இப்படித்தானே அம்மாக்களின் அர்ப்பணிப்புகளிலும் நம்பிக்கைகளிலும் துளிர்த்த குடும்பங்கள் ஊர் முழுக்க நிரம்பிக்கிடக்கிறது. அரைவயிரோடும கால்வயிரோடும் பிள்ளைகள் பற்றிய கனவுகளோடு வாழ்ந்த வாழ்கிற எல்லா அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

 • Like 11

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் பிரி (யா)...உங்கள் அனுபவப்பகிர்வு நன்று . அதிலும் அன்னையர் தினத்துக்கு அம்மாவை கெளரவிக்க  எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள் ...முதலில் உங்களை அறிமுகம் செய்து தொடருங்கள். இது கதைப்பகுதியில் வந்தால் நன்றாக இருக்கும்  நிர்வாகத்தை மாற்றிவிடும்படி கேளுங்கள் 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் !வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

முதல்பதிவே கனதியாக இருக்கு..... தொடர்ந்து எழுதுங்கள் .....!   

Share this post


Link to post
Share on other sites

கண் கலங்க வைக்கும் முதல் பதிவுடன் வந்திருக்கின்றீர்கள். வருக வருக என வரவேற்கின்றோம்.💐

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வணக்கம் வாங்கோ.

தமிழன் என்றாலே எதிர்நீச்சல் போட்டால்த் தான் தமிழன்.

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, நிலாமதி said:

வணக்கம் பிரி (யா)...உங்கள் அனுபவப்பகிர்வு நன்று . அதிலும் அன்னையர் தினத்துக்கு அம்மாவை கெளரவிக்க  எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள் ...முதலில் உங்களை அறிமுகம் செய்து தொடருங்கள். இது கதைப்பகுதியில் வந்தால் நன்றாக இருக்கும்  நிர்வாகத்தை மாற்றிவிடும்படி கேளுங்கள் 

ஆலோசனைக்கு நன்றி .

நீண்ட நாட்களாக அடிக்கடி மேச்சலிடுகிற இடம் .
 ஏதோ ஒரு அசட்டு துணிவில் முகநூலில் எழுதியதை  இங்கும் இறக்கி விட்டேன் .

4 hours ago, suvy said:

வணக்கம் !வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

முதல்பதிவே கனதியாக இருக்கு..... தொடர்ந்து எழுதுங்கள் .....!   

நன்றி .

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

கண் கலங்க வைக்கும் முதல் பதிவுடன் வந்திருக்கின்றீர்கள். வருக வருக என வரவேற்கின்றோம்.💐

நன்றி .

2 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் வணக்கம் வாங்கோ.

தமிழன் என்றாலே எதிர்நீச்சல் போட்டால்த் தான் தமிழன்.

நன்றி .

Share this post


Link to post
Share on other sites

வீட்டுக்கு வீடு வாசல் படி தானே!

கொஞ்சம் மனதைப் பாதித்த பகிர்வு!

வணக்கம் ....வாருங்கள்!

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்.... உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
உங்கள் அம்மா தன்னந்தனியாக.... ஐந்து பிள்ளைகளையும், 
இலங்கையிலேயே பல்கலைக்கழகம் வரை கற்பிக்க வைத்த,
தன்னம்பிக்கைக்கும், வைராக்கியத்துக்கும்... தலை வணங்குகின்றேன்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வரவேற்று ஊக்கப்படுத்திய எல்லா நண்பர்களுக்கும் நன்றியும் வணக்கமும் .

Share this post


Link to post
Share on other sites

வணக்கம், வாருங்கள், உங்கள் அம்மாவின் முயற்சி கண்கலங்க வைக்குது 

Share this post


Link to post
Share on other sites

வணக்கம், வாருங்கள். கண்கலங்க வைக்கும் பதிவு.

Share this post


Link to post
Share on other sites

நான்கு பிள்ளைகளும் இலங்கையில் பல்கலைக்கழகம் செல்வது இலகுவான காரியமல்ல.

உங்கள் தந்தையாரின் ஆசிகள், தாயாரின் அர்ப்பணிப்பு... 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, Nathamuni said:

நான்கு பிள்ளைகளும் இலங்கையில் பல்கலைக்கழகம் செல்வது இலகுவான காரியமல்ல.

உங்கள் தந்தையாரின் ஆசிகள், தாயாரின் அர்ப்பணிப்பு... 

நாதம்ஸ் அவங்க 5 என்கிறாங்க நீங்க 4 என்கிறீங்க?????

Share this post


Link to post
Share on other sites
27 minutes ago, MEERA said:

நாதம்ஸ் அவங்க 5 என்கிறாங்க நீங்க 4 என்கிறீங்க?????

🤦‍♂️

Share this post


Link to post
Share on other sites
On 6/1/2019 at 11:15 PM, pri said:

அப்போது மூத்த அண்ணனும் அக்காவும் பல்கலைக்கழகத்திலும் நானும் மற்ற அண்ணனும் தம்பியும் பள்ளிப் படிப்போடும் இருந்தோம்.

5 பேர் தான்!

Share this post


Link to post
Share on other sites

பிரி ,

யாழ் திண்ணைக்கு நல்வரவுகள்.

ஹுனுப்பிட்டி , சுங்கத் திணைக்களம் , 77 ம் ஆண்டு   கலவரம்,  ஐந்து பிள்ளைகள் , பருத்தித்துறை.  மிகவும் பழகிய குடும்பமொன்றினை ஞாபகப் படுத்துகின்றது. ஆயினும் வித்தியாசங்கள் அவர்கள் ஐவரும் ஆண் பிள்ளைகள் , தந்தையார் நெடுங்காலம் அவர்களுடன் இருந்தார் .

அவர்களில் இரண்டாமவன் மிகுந்த அழகும் துடி துடிப்பும் கொண்டவன் ,  கலவரத்தை தொடர்ந்து ஊருக்கு வந்து என்னை கண்டதும் கேட்ட முதல் கேள்வி " அண்ணா , எங்கே போக வேண்டும் சேர்வதற்கு " என்பது தான். முதலில் எனக்கு புரியவில்லை;  பின்பு அவனை  சற்று நிதானமாக இருக்கும் படி சொன்னேன்.

இயக்கங்களில் ஒன்றில் சேர்ந்து நிலை உயர்ந்து வந்தான் - உள்வீட்டு குத்துச் சண்டைகளில் நியாயம் கேட்கப் போனவன் திரும்பி வரவில்லை.  அந்த ஏக்கமும் தந்தையாரை கொண்டு போய் சேர்க்க காரணமாக இருந்தது.

 

உங்களின் கதை பழைய ஞாபகங்களை சற்றே தட்டி விட்டு விட்டது.      

Share this post


Link to post
Share on other sites
On 6/17/2019 at 10:06 PM, சாமானியன் said:

பிரி ,

யாழ் திண்ணைக்கு நல்வரவுகள்.

ஹுனுப்பிட்டி , சுங்கத் திணைக்களம் , 77 ம் ஆண்டு   கலவரம்,  ஐந்து பிள்ளைகள் , பருத்தித்துறை.  மிகவும் பழகிய குடும்பமொன்றினை ஞாபகப் படுத்துகின்றது. ஆயினும் வித்தியாசங்கள் அவர்கள் ஐவரும் ஆண் பிள்ளைகள் , தந்தையார் நெடுங்காலம் அவர்களுடன் இருந்தார் .

அவர்களில் இரண்டாமவன் மிகுந்த அழகும் துடி துடிப்பும் கொண்டவன் ,  கலவரத்தை தொடர்ந்து ஊருக்கு வந்து என்னை கண்டதும் கேட்ட முதல் கேள்வி " அண்ணா , எங்கே போக வேண்டும் சேர்வதற்கு " என்பது தான். முதலில் எனக்கு புரியவில்லை;  பின்பு அவனை  சற்று நிதானமாக இருக்கும் படி சொன்னேன்.

இயக்கங்களில் ஒன்றில் சேர்ந்து நிலை உயர்ந்து வந்தான் - உள்வீட்டு குத்துச் சண்டைகளில் நியாயம் கேட்கப் போனவன் திரும்பி வரவில்லை.  அந்த ஏக்கமும் தந்தையாரை கொண்டு போய் சேர்க்க காரணமாக இருந்தது.

 

உங்களின் கதை பழைய ஞாபகங்களை சற்றே தட்டி விட்டு விட்டது.      

நன்றி சாமானியன் .

நீங்கள் குறிப்பிட்ட தகவலோடு ஒத்துப்போகிற குடும்பம் ஒன்றை நானும் அறிவேன் .
அவர்களுடைய  கடைசி மகனோடு கொழும்பிலும் பின்னர் ஹாட்லியிழும்   ஒன்றாக  படித்திருக்கிறேன் .

அவனுடைய அப்பா வருமான வரி திணைக்களத்தில் வேலை செய்ததாக ஞாபகம் . சுங்க திணைக்களத்தில் அல்ல .
 

Share this post


Link to post
Share on other sites

வாங்கோ  பிரி

அம்மாக்களின் வலிகளோடு  வந்திருக்கின்றீர்கள்

தொடருங்கள்

கதைப்பகுதி  இருக்கிறது

அங்கே  பதியுங்கள்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் பிரி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • காலத்திற்கு காலம் இனவழிப்பு, அநீதி, தமிழருக்கு எதிரான அடக்குமுறைகள் நடந்த போது, நம் இனம் அழிந்து கொண்டிருந்தபோது எதோ ஒப்புக்கு சப்பாக கூக்குரல் போட்டுவிட்டு அடங்கியிருந்ததாலே அன்றைய இளைஞர் தம் இஉயிரை துச்சமென மதித்து , தங்களுக்கு தெரிந்த  முறையில் போராட வெளிகிட்டார்கள். அரசியல்  தலைவர்களும் விமர்சிப்பதை விடுத்து ராஜாதந்திர முறையில் கைகோத்து உதவி இருந்திருக்கலாம்; மக்களும் காட்டிக்கொடுப்பதை விட்டு சேர்ந்து உழைத்திருக்கலாம். இனிமேல் அந்தப்பிழை நடவாமல் எப்படி நடந்திருந்தால், வெற்றி அடைந்திருக்கலாம் என்கிற படிப்பினையை நமக்கு கற்றுத் தந்து விட்டு போயிருக்கிறார்கள். முடிந்தால் எல்லோரும் உங்களது ஆலோசனையை பின்பற்றி, "நீங்கள் முன்னேறுங்கள், நாங்கள் விடாமல் தட்டிப்பறிப்போம்". எனும் கொள்ளைக் கூட்டத்திடம் இருந்து தப்ப முடிந்தால், உங்கள் திட்டம் வெற்றி பெறும். முடிந்தால் எல்லோரையும் ஒரு திட்டத்தில் கூட்டிச் சேர்க்க முயலுங்கள். சிங்களவன் பிரித்தாள்வதில் வல்லவன், நாம் சோரம் போவதைத் தவிர வேறு வழியில் செல்லாதவர்கள். வீரம் பேசி, வாக்கு சேர்த்தவர்கள் சோரம் போனதும் அதற்கு  காரணம் சொன்னதும்ந்தான் வரலாறு. பூனைக்கு யார் மணி கட்டுவது?ஆலோசனை மட்டும் போதாது, நடைமுறைப்படுத்தப் போகும்போது வரும் தடங்கல்களைக் கையாண்டு, இறுதி வரை கொண்ட கொள்கையில் தடம் புரளாமல்,  கொண்டு செல்லக்கூடியவர். அந்தத் தலைவரைத் தவிர வேறொருவரை தேடிப்பிடிக்க முடியுமா? அவர் கொண்ட கொள்கை வெற்றியடையாமல் தோற்றுபோனதற்கும், அவரது போர் வியூகங்கள் காட்டிக்கொடுப்பினால், துரோகங்களினால் பிழைத்துபோய், இழப்புகளில் முடிந்ததே. இழப்புகளை தவிர்ப்பதற்காக, பல பிழையான திட்டமிடல் இல்லாத,  உடனடி முடிவுகளை எடுக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளியது.  விக்கினேஸ்வரன் இன்று கோமாளியாக சித்திரக்கப்படுகிறார், விமர்சிக்கப்படுகிறார். எதையும் செய்ய மாட்டார்கள் விடவும் மாட்டார்கள். இவரல்ல எவர் வந்தாலும்  இதுதான் வரலாறு.  
  • விதண்டாவாதம் கதைக்காதீர்கள் ரதி, சுமந்திரனை நிறுத்தியTNA. ஆனால் அவர் கூறிவது சுமந்திரன் தவிர்ந்த மற்றய TNA வினருக்கு  வாக்களிக்கும்படி. சுமந்திரனை முன்னிறுத்திய TNA யைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட கூறப்படவில்லை 😂😂 சுமந்திரனின் பெயரைக் கூறும்போது அவரது முலுப்பெயரும் ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரன் எனக் கூறப்படுகிறது. ஏன் ? கிறீத்துவர் என்பதைச் சுட்டிக்காட்டவா ? 😏 இவர் போன்று வேறு முன்னாள் ஆயுதப் போராளிகள் பகிரங்கமாக இவ்வாறு கருத்துத் தெரிவிக்கக்கூடிய சூழல் இலங்கையில் நிலவுகிறதா ? 😀 அவ்வாறு கருத்துக் கூற முனைந்தால் அவர்கள் வீடு போய்ச் சேர்வார்களா 😜 இவ்வாறு இவர் பகிரங்கமாகக் கருத்துக் கூறுவதற்குறிய சூழலை இவருக்கு யார் ஏற்படுத்திக் கொடுத்தது ? 🤔 தேர்தலில் சுமந்திரனுக்கு வாக்கு செலுத்துவோர் எல்லோருமே துரோகிகளா ? 😏 சுமந்திரன் வென்றால் அதன் பின்னர்  என்ன கூறுவார்கள் ? ☹️ போராளிகள், முன்னாள் போராளிகள் என்பதற்காக தமிழ் இனத்தைப் பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கைக்கும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்க முடியாது. 😡 அவருக்குக் கோபம் இருக்கும்போது கூடவே பொறுப்பும் இருக்கிறது. பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு கோபத்தை மட்டும் வெளிக்காட்ட முடியாது 😡
  • அரியன் முந்தி என்ன பேரிலை வந்து போனவர்? 😋
  • சிறித்தம்பி! உது மேலாலை பாயுற வேலியில்லை. கீழாலை புகுந்து போற வேலி.உது இன்னும் சுகம். ஆனால் கோதாரி விழுவார்  பெண்பிரசையள் இருக்கிற வீடுகளிலை உப்பிடி வேலி அடைக்கிறதில்லை தெரியுமோ?