• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • கூட்டமைப்பைச் சிதைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடனும், பலவீனப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடனும் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற டெலோவின் 50 ஆவது நிறைவு விழா நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்பு இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பெரும்பான்மை பிரதிநிதிகளாக உலகம் முழுக்க அங்கீகரிக்கப்பட்டு அரசுகளாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற ஒரு கட்சி. 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டாலும் கூட நாங்கள் 2011ஆம் ஆண்டுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தோம். யுத்தம் முடிவடைந்த பின்னரான காலத்திலே தமிழ் மக்கள் மிகப் பலவீனமாக இருக்கிறார்கள் எனவே நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைய வேண்டும் என்று பலர் வலிந்து கூறினார்கள். அத்தோடு மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியதாலும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டையினாலும் நாங்கள் அதில் இணைந்து கொண்டோம். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச ரீதியாகவும் இலங்கையிலும் தமிழர்களின் ஏக பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்குரிய விடயங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. இன்று இந்த கூட்டமைப்பைச் சிதைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடனும், பலவீனப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடனும் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றது. மக்களுடைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்று நிச்சயமாக எங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த ஒற்றுமை குழைக்கப்பட்டால் இத்தனை வருடமாகக் கண்ணீர் விட்டோம் இழந்தோம் செந்நீரால் காத்தோம் இப்படியாக வளர்த்து வந்த போராட்ட கதைகள், போராட்ட வரலாறுகளைச் சிதைத்து விட முடியாது. அந்த ஒற்றுமை கட்சிகளுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமை அல்ல அது மக்களுக்கிடையே இருக்கின்ற ஒற்றுமைதான் அந்த ஒற்றுமை. அந்த மக்கள் நிச்சயமாக ஒற்றுமையாகவே இன்றும் இருக்கிறார்கள் என்றும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே தொடர்ந்தும் நாங்கள் எங்களது விடுதலைக்கான பாதையிலே போய்க்கொண்டு இருக்கிறோம். அது ஒரு வெற்றி அடைய வேண்டும். அடையும் என்ற நம்பிக்கையில் போய்க்கொண்டு இருக்கிறோம். நாங்கள் ஒற்றுமையாக இருக்கும் வரை அந்த நம்பிக்கையை இழக்கமாட்டோம் என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/75870
    • மிகவும் கெட்ட பெயரெடுத்த தளபதிகளில் ஒருவரை இராணுவத்தளபதியாக நியமித்தபோது அதனால் எந்த விளைவும் ஏற்படாது என்று இலங்கை அரசாங்கம் எவ்வாறு நினைத்திருக்க முடியும்? இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும், அவரது குடும்பத்துக்கும் எதிராக அமெரிக்க அரசாங்கம் விதித்திருக் கும் பயணத்தடை தொடர்பில் பி.பி. சி.யின் முன்னாள் செய்தியாளரும், இலங்கையில் பாரிய குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்காக வாதி டும் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயல்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான பிரான்சிஸ் ஹரிஸன் இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறார். 'இராணுவத்தளபதியா கவும் பின்னர் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் சவேந்திர சில்வாவை பதவியுயர்த்திய இலங்கை அரசாங்கத்தின் செயல் சர்வதேச சட்டத்தை முற்றாக அவமதிப்பதாக அமைந்ததுடன், உள்நாட்டு யுத்தத்தில் பாதிக் கப்பட்டவர்களுக்கும் மரணமடைந்தவர்களுக்கும் செய்யப்பட்ட அவமதிப்புமாகும். 'போரின் கடைசிநாளில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சரணடைந்தபோது சவேந்திர சில்வா அங்கு காணப்பட்டார் என்றும் நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் இராணுவத்தடுப்புக்காவ லில் வைக்கப்பட்டதன் பின்னர் காணாமல்போய்விட்டனர். பல வருடங்களாகத் தாய்மார்கள் தங்களது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய நம்பிக்கை இழந்த நிலையில் புகைப்படங்களுடன் சுட்டெரிக்கும் வெயிலில் வீதியோரம் அமர்ந்திருந்து போராட் டம் நடத்துகிறார்கள். இது நீதி யல்ல, அவமதிப்பாகும்' என்றும் பிரான்சிஸ் ஹரிஸன் கூறியிருக்கி றார். https://www.virakesari.lk/article/75882  
    • ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள 40 - 1 பிரேரணையிலிருந்துஇலங்கை அரசாங்கம் விலகுவதற்குஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என்று பேரவையின் உறுப்பு நாடுகள்உறுதியளித்ததாகஜெனிவா சென்று திரும்பிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். எதிர்வரும்2021 ஆம் ஆண்டுவரை அமுலில் உள்ள இந்த ஜெனிவா பிரேரணையைகால அட்டவணையின் அடிப்படையில்விரைவாக அமுல்படுத்தவேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர்எதிர்வரும்24 ஆம் திகதிஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில்இந்தக் கூட்டத் தொடரில்இலங்கை குறித்துஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள நிலையில் அது தொடர்பில் ஆராயஜெனிவா சென்றிருந்த தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்எம்.ஏ. சுமந்திரன் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். அந்த சந்திப்புக்கள் மற்றும் அங்கு பேசப்பட்ட விடயங்கள் குறித்து விளக்கமளிக்கையிலேயேஅவர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார். சுமந்திரன் எம்.பி. மேலும் குறிப்பிடுகையில், கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக நான் ஜெனிவா சென்றிருந்தேன்.இதன்போது ஐக்கிய நாடுகள்மனித உரிமை அலுவலகததின்பிரதிநிதிகள்மற்றும் மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை சந்தித்துபேச்ச நடத்தினேன். இதன்போது பாதிக்கப்பட்ட மக்களின் நிலை மற்றும்ஜெனிவாவின் அடுத்தக்கட்ட நகர்வுகள்இலங்கையின் நிலைப்பாடு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சு நடத்தப்பட்டது. எமது நிலைப்பாட்டை நான்தெ ளிவாக எடுத்துரைத்தேன். அரசாங்கம் 40-1 என்ற பிரேரணையை ஏற்க மறுத்தால் அல்லது அதில் ஏதாவதுமாற்றங்களை செய்தால் உறுப்பு நாடுகள்அதுதொடர்பில் என்ன செய்யவேண்டும் என்று  சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் விளக்கமளித்தேன். இந்த நிலையில் 40-1 பிரேரணையிலிருந்துஇலங்கை அரசாங்கம் விலகுவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என்று பேரவையின் உறுப்பு நாடுகள்உறுதியளித்தன. மிக முக்கியமாக எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுவரை அமுலில் உள்ள இந்த ஜெனிவா பிரேரணையைகால அட்டவணையின் அடிப்படையில் விரைவாக அமுல்படுத்தவேண்டும்என்பதேமனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் நிலைப்பாடாக உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/75880
    • இரா­ணு­வத்­ த­ள­ப­திக்கு எதி­ரான அமெ­ரிக்கப் பய­ணத்­த­டைக்குத் தமிழ்­ மக்கள் வர­வேற்பு - விக்­கி­னேஸ்­வரன் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சில்வாவிற்கு எதிராகக் கடந்த வாரம் விதிக்கப்பட்ட அமெரிக்கத் தடையை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று விக்கினேஸ்வரனிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் பேசுவதாகக் கூறிய அவர், 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக இலங்கையில் அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த 3 அரசாங்கங்களின் பிடிவாதப்போக்கைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது இப்போது சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும். நீதிக்கான தமிழ் மக்களின் நேரம் வந்துவிட்டது என்று அவர் தெரிவித்திருக்கிறார். அவர் பதிலின் முழுவிபரம் வருமாறு: இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் எதிராக அமெரிக்கா விதித்த பயணத்தடையை வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள். சில்வா கட்டளைப் பொறுப்பின் ஊடாக பாரதூரமான மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற நம்பகமான தகவல்களின் காரணமாக அவரை அமெரிக்காவில் வேண்டத்தகாதவர் என்று பிரகடனம் செய்வதற்கு முடிவெடுத்தமைக்காக அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவை முழு மனதுடன் நாம் பாராட்டுகிறோம். 2009 ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டங்களில் சட்டவிரோதமான கொலைகளுக்கு சில்வா உத்தரவிட்டார் என்ற நம்பகமான குற்றச்சாட்டுக்களை பி.பி.சியின் சனல் - 4 ஆவணப்படுத்தியிருக்கிறது. 'என்னவானாலும் செய்யுங்கள். அது செய்யப்படவே வேண்டும். ஆனால் முடித்துக்கட்டப்பட வேண்டி முறையில் அதை முடித்துவிடுங்கள்' என்று அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டளையொன்றை சில்வா இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவில் தனக்குக் கீழ் பணியாற்றியவர்களுக்குத் தெரியப்படுத்தியதற்கான சான்று சனல் - 4 ஒளிபரப்பிய காணொளி அறிக்கைகளில் உள்ளடங்கியிருக்கிறது. அந்தக் கட்டளை குடிமக்களும், சரணடைந்த போராளிகளும் உட்பட (அபகீர்த்தி மிக்க வெள்ளைக்கொடி சம்பவம் உட்பட) பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்ததாகக் கூறப்பட்டது. எனவே அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முடியாதவாறு சில்வா மீது விதிக்கப்பட்ட தடை ஏனைய நாடுகளும் பின்பற்றுவதற்கான ஒரு உதாரணமாக அமைகிறது. போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையாக அமையக்கூடிய செயற்பாடுகளுக்காக இலங்கை அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் சர்வதேச சமூகத்திற்கு இருக்கும் கடமையையும், அமெரிக்காவின் இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கை மேலும் உறுதிப்படுத்துகிறது. அத்தகைய குற்றவாளிகள் என்று கூறப்படுபவர்களை விசாரிப்பதற்குக் கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்குமாறு பணித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பல தீர்மானங்களுக்கு இணங்கமுடியாது என்று இலங்கை தொடர்ச்சியாகக் கூறிவந்திருக்கிறது. அப்பாவி குடிமக்களை வேண்டுமென்றே பயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டு கொலை செய்வது எந்த வகையிலுமே வீரசாகசத்துக்கு ஒப்பாகிவிடாது என்பதை லெப்டினன்ட் ஜெனரல் சில்வாவை ஒரு ஹீரோவாகக் காண்பிக்க முயற்சிப்பவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். குற்றவியல் பொறுப்புத் தொடர்பான அத்த்கைய தெளிவான குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகும் சகல அதிகாரிகளினதும் வழக்குகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் அல்லது தகுதி வாய்ந்த எந்தவொரு சர்வதேச மன்றினால் விசாரணை செய்யப்பட வேண்டும். அத்தகைய குற்றங்கள் தொடர்பில் வழக்குத் தொடுப்பதற்கு சர்வதேச சமூகத்திற்கு இருக்கக்கூடிய அதிகாரம் (ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஏழாவது அத்தியாயத்தில் உள்ளவாறான) சர்வதேச நியாயாதிக்கக் கோட்பாட்டிலும், ரோம் சட்டத்தில் கைச்சாத்திடாத நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு எதிராக அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட நடைமுறையிலும் குறித்துரைக்கப்பட்டிருக்கிறது. 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த 3 இலங்கை அரசாங்கங்களின் பிடிவாதத்தைக் கருத்திற்கொண்டு நோக்கும் போது இப்போது சட்டத்தின் ஆட்சி கட்டாயம் நிலைநிறுத்தப்பட வேண்டும். நீதிக்கான தமிழ் மக்களின் தருணம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/75879
    • இலங்கை அரசாங்கமானது தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதிசெய்யும் வகையில் ஐக்கிய அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனா சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா நேற்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராசம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா சம்பந்தன், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். ஆனால் தற்போதைய அரசாங்கம் வேறுவிதமான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாகவும் பெரும்பான்மை மக்கள் அதிகாரபரவலாக்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை எனவும் அத்தகைய சந்தர்ப்பத்தில் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் எனவும் உண்மைக்கு புறம்பாக அறிக்கைகள் வெளியிடுவதனையும் சுட்டிக்காட்டினார்.     இங்கு தொடர்ந்து கருத்துரைத்த சம்பந்தன்,     தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளன. அவை அனைத்தும் பதியப்பட்டவையாக உள்ளன. எனவே இத்தகைய நிலையில் சர்வதேச சமூகம் வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதனை உறுதி செய்ய வேண்டும். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் விடுதலைப்புலிகளின் காலத்தில் கொடுக்கப்பட்டவை. தற்போது விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்கிற காரணத்தினால் வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியாது. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கமுடியாது. உலகின் பலவேறு பகுதிகளில் உள்ளவாறு ஒரு அதிகாரபரவலாக்கத்தின் மூலமான அரசியல் தீர்வொன்றினை நாம் எதிர்பார்க்கின்றோம். இலங்கை எனது நாடு இங்கே சம உரிமையுள்ள பிரஜையாக நான் மதிக்கப்படவேண்டும். அண்மையில் இலங்கை பிரதமருடனான ஊடக சந்திப்பில் இந்திய பிரமர் இலங்கை மக்கள் நீதியுடனும் சமத்துவத்துடனும் அமைதியுடனும் வாழ்வதற்கான சூழல் அமைய வேண்டும் என்பதனை வலியுறுத்தி இருந்தார். நியாயமுள்ள அரசியல் தீர்வொன்றினை அடைய முடியாது போனால் அது பாரிய பின்விளைவுகளை கொண்டுவரும். தமிழ் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிங்கள தலைவர்கள் மதிக்காதன் விளைவே விடுதலைப்புலிகளின் உருவாக்கத்திற்கு காரணமாகும். உண்மையை கண்டறிந்து நஷ்ட ஈடு வழங்குவதில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலம் மற்றும் நஷ்ட ஈட்டு அலுவலகம் என்பன சேர்ந்து இயங்க வேண்டும். அது தற்போது நிகழ்வதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன. எம்மால் இயலுமான அனைத்தையும் நாம் செய்து விட்டோம். இனிமேல் இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவனத்தை சர்வதசேச சமூகம் உறுதி செய்ய வேண்டும். சர்வதேச சமூகத்தின் குரல் இலங்கை விடயம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் கேட்ட வேண்டும். தமிழ் மக்களிற்கான ஒரு அரசியல் தீர்வு எட்டப்படும் பணியில் சர்வதேசத்தின் பங்களிப்பு அத்தியாவசியமானது என்று எடுத்துக் கூறினார்.   சுமந்திரன் கருத்து இதன்போது கருது தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் 2012ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய இராஜ்ஜியம் மனித உரிமை பேரவையில் முன்வைத்த பிரேரணையின் அமுலாக்கத்தின் அவசியம் குறித்து தெளிவுபடுத்தினார். நிலையான அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றினை நிலைநாட்ட வேண்டுமெனில் பிரேரணையில் உள்ள விடயங்கள் அமுலாக்கப்படவேண்டும். இதற்கப்பால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படுவது அவசியமாகும். தம் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிந்துகொள்ளாமல் எந்தவொரு நஷ்ட ஈட்டிற்கும் எம்மக்கள் அணுமதிக்கப்போவதில்லை. அரச படைகளிடம் கையளிக்கப்பட்டவர்கள் இருந்திருப்பின் அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்ற உண்மை வெளிக்கொணரப்படவேண்டும். உண்மையை கண்டறிந்து நஷ்ட ஈடு வழங்குவதில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலம் மற்றும் நஷ்ட ஈட்டு அலுவலகம் என்பன சேர்ந்து இயங்க வேண்டும். அது தற்போது நிகழ்வதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன. எம்மால் இயலுமான அனைத்தையும் நாம் செய்து விட்டோம். இனிமேல் இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவனத்தை சர்வதசேச சமூகம் உறுதி செய்ய வேண்டும். சர்வதேச சமூகத்தின் குரல் இலங்கை விடயம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் கேட்ட வேண்டும். தமிழ் மக்களிற்கான ஒரு அரசியல் தீர்வு எட்டப்படும் பணியில் சர்வதேசத்தின் பங்களிப்பு அத்தியாவசியமானது என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். இச்சந்திப்பில் கருத்து தெரிவித்த குழுத்தலைவர் இலங்கை அரசாங்கமானது தனக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதிசெய்யும் வகையில் ஐக்கிய அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/75883