Jump to content

ஈழத்தில் பரமேஸ் கோணேஸ்


Recommended Posts

ஈழத்தில் பரமேஸ் கோணேஸ்

 

 

ஈழத்தில் பரமேஸ் கோணேஸ் பற்றி வடமாகாணத்தில் சகல இசைக்குழுக்களிற்கும் ஒலியமைப்பு வழங்கிப் புகழ்பெற்ற எம்.பி.கோணேஸ் அவர்களின் நண்பன் மனிரோன் மகாலிங்கம் அவர்கள்.

 

paramesh-300x254.png

பரமேஸ் கோணேஸ். இந்தப் பெயர் எழுபதுகளில் இலங்கையின் இசைத்துறை வட்டாரங்களில் மிகப் பிரபலமானதாகவூம் தனித்துவமானதாகவும் திகழ்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. மெல்லிசைக்குழு என்பதையூம் கடந்து சொந்த ஆக்கங்களை (பாடல்களை) தமிழில் உருவாக்கி முதன்முதலில் இசைத்தட்டாக்கியவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் இவர்கள்.

 

1971ஆம் ஆண்டு திருகோணமலையைத் தளமாகக் கொண்டு ஷஷபரமேஸ் கோணேஸ் என்ற பெயரில் இலங்கை முழுவதும் மெல்லிசை நிகழ்ச்சிகளை மேடையேற்றி நடத்தி வந்தவர்கள் ஷஷபரமேஸ் கோணேஸ் இசைக்குழுவினர். இருந்தாலும் சொந்தமாக பாடல்கள் இசைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நம்பிக்கையுடன் பாடல்களை எழுதி இசையமைத்து அதனை இசைத்தட்டில் பதிவு செய்து மக்களை இரசிக்கச் செய்ததுடன் வியாபார ரீதியிலும் வெற்றி பெற்றுக் காட்டியவர்கள் இவர்கள் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் கூறி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்த இசைத் தட்டில் இடம் பெற்ற ஷஷஉனக்குத் தெரியுமா நான் உன்னை அழைப்பது ஷஷபோகாதே தூரப் போகாதே மற்றும் எங்கே நிம்மதி பாடலின் சாயலில் நிறைய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி உருவான ஷஷஅழைக்கும் ஓசை கேட்கலையா போன்ற பாடல்கள் இரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவை வரலாறு. இந்தப்பாடல்கள் அந்நாட்களில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகியமையே அதற்குச் சான்றாகும். இந்தப் பாடல்களுக்கான வரிகள் பரமேஸ் அவர்களாலும் இசை கோணேஸ் அவர்களாலும் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் 1971ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் இலங்கையின் மூலை முடுக்கெல்லாம் இவர்களின் மேடை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இசை மேடைகள் எல்லாம் தேனிசை கானங்களால் நிரம்பி வழிந்தன. திரைப்படப் பாடல்களை மட்டுமே வழங்கி வந்த ஏனைய இசைக்குழுக்களிலிருந்து வேறுபட்டு வித்தியாசமாகச் சொந்தப் பாடல்களையூம் சேர்த்து வழங்கும் தனித்துவமான இசைக்குழுவாக ஷஷபரமேஸ் கோணேஸ் இசைக்குழுவினர் திகழ்ந்தனர் என்று சொன்னால் அது மிகையாகாது.

மேடை நிகழ்ச்சிகளில்இ பாடல்களை மக்கள் காதுகளில் சரியாகக் கொண்டு சேர்க்கும் பணி ஒலியமைப்புக்கே உரியதாகும். இவர்களுக்கு அந்தப் பணியை செய்யும் சந்தர்ப்பம் மகா மினி சவூண்ட்ஸ் ஆகிய எமக்கு வாய்த்தது. யாழ்ப்பாணத்தில் நாம் இயங்கி வந்தாலும் கூட திருகோணமலையில் இருந்து எம்மை இவர்கள் ஒழுங்கு செய்வார்கள். நான் யாழ்ப்பாணத்தில் இருந்து இ.போ.ச. பேரூந்தில் ஒலியமைப்புக் கருவிகளுடன் அங்கு சென்று பின் இவர்களுடன் இணைந்து திருகோணமலை மட்டக்களப்பு என்று பல மாவட்டங்களிலும் ஊர்களிலும் நிகழ்ச்சிகள் செய்தமை என்னால் இன்னும் மறக்க முடியாததாகும்.

அதே போல் இவர்கள் அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்து நிகழ்ச்சிகள் செய்த காலங்களிலும் எமது ஒலியமைப்பையே பயன்படுத்துவார்கள். யாழ்ப்பாணத்தில் ஸ்ரீதர் திரையரங்கு நெல்லியடி வல்வெட்டித்துறை என யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் இவர்கள் இசை மழையில் மக்களை நனைய வைத்தனர் எனலாம்.

மேலும் 1977ஆம் ஆண்டு முதல் 1983 வரையான காலப்பகுதியில் திரு. கோணேஸ் அவர்கள் தனியாக ஷஷகோணேஸ் ஓகெஸ்ரா என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியமையூம் இப்போதும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளது. (அப்போதும் எனது ஒலியமைப்பையே கோணேஸ் அவர்கள் பயன்படுத்தினார்.) மேலும் அந்தக் காலப்பகுதியில் இந்தியாவில் இருந்தும் கொழும்பு உட்பட பிற மாவட்டங்களில் இருந்தும் கலைஞர்களை வருவித்து யாழ்ப்பாணத்தில் தங்க வைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர் கோணேஸ் அவர்கள் என்பதை இங்கு சொல்லியே ஆக வேண்டும். அத்தகைய கலைஞர்களில் முக்கியமாக குறிப்பிடத்தக்கவர் மிஸ்சின் பப்பா|| என்று செல்லமாக அழைக்கப்பட்ட சக்ஸ்போன் வாத்தியக் கலைஞர்.

இவர்களுக்கு நான் ஒலிபரப்பு செய்த காலங்கள் அந்த அனுபவங்கள் எப்போதும் மகிழ்ச்சியூடன் நினைவு கூரத்தக்கது. அதாவது மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தால் சரியாக டாண் என்று 6 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு குறித்த நேரத்தில் நிறைவு பெறும். சீருடைய அணிந்த கலைஞர்கள்! இயன்றளவு இயற்கையான கருவிகைள வாசித்தல் இசைக் குறிப்புகளை பயன்படுத்தல் இப்படி நிறையச் சொல்லலாம். அந்த நாட்களில் இது எல்லாம் புதிய அனுபவங்களே.

இவர்களுடனான எனது உறவு அன்றிலிருந்து இன்று வரை சுமூகமாகவூம் இனிமையாகவும் தொடர்ந்து வருவதை நான் மிகவும் மகிழ்வூடன் இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன். இவர்களின் இசைப்பணி மென்மேலும் சிறக்க வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்தி விடைபெறுகின்றேன்.

http://mpkonezsh.com/ஈழத்தில்-பரமேஸ்-கோணேஸ்/?fbclid=IwAR3bhQCwr54cCOV3UtIdWEs9vrcXC-vh1w-wELy6luvFs81dIIr8j8BGDq0

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.