• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

ஈழத்தில் பரமேஸ் கோணேஸ்

Recommended Posts

ஈழத்தில் பரமேஸ் கோணேஸ்

 

 

ஈழத்தில் பரமேஸ் கோணேஸ் பற்றி வடமாகாணத்தில் சகல இசைக்குழுக்களிற்கும் ஒலியமைப்பு வழங்கிப் புகழ்பெற்ற எம்.பி.கோணேஸ் அவர்களின் நண்பன் மனிரோன் மகாலிங்கம் அவர்கள்.

 

paramesh-300x254.png

பரமேஸ் கோணேஸ். இந்தப் பெயர் எழுபதுகளில் இலங்கையின் இசைத்துறை வட்டாரங்களில் மிகப் பிரபலமானதாகவூம் தனித்துவமானதாகவும் திகழ்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. மெல்லிசைக்குழு என்பதையூம் கடந்து சொந்த ஆக்கங்களை (பாடல்களை) தமிழில் உருவாக்கி முதன்முதலில் இசைத்தட்டாக்கியவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் இவர்கள்.

 

1971ஆம் ஆண்டு திருகோணமலையைத் தளமாகக் கொண்டு ஷஷபரமேஸ் கோணேஸ் என்ற பெயரில் இலங்கை முழுவதும் மெல்லிசை நிகழ்ச்சிகளை மேடையேற்றி நடத்தி வந்தவர்கள் ஷஷபரமேஸ் கோணேஸ் இசைக்குழுவினர். இருந்தாலும் சொந்தமாக பாடல்கள் இசைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நம்பிக்கையுடன் பாடல்களை எழுதி இசையமைத்து அதனை இசைத்தட்டில் பதிவு செய்து மக்களை இரசிக்கச் செய்ததுடன் வியாபார ரீதியிலும் வெற்றி பெற்றுக் காட்டியவர்கள் இவர்கள் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் கூறி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்த இசைத் தட்டில் இடம் பெற்ற ஷஷஉனக்குத் தெரியுமா நான் உன்னை அழைப்பது ஷஷபோகாதே தூரப் போகாதே மற்றும் எங்கே நிம்மதி பாடலின் சாயலில் நிறைய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி உருவான ஷஷஅழைக்கும் ஓசை கேட்கலையா போன்ற பாடல்கள் இரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவை வரலாறு. இந்தப்பாடல்கள் அந்நாட்களில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகியமையே அதற்குச் சான்றாகும். இந்தப் பாடல்களுக்கான வரிகள் பரமேஸ் அவர்களாலும் இசை கோணேஸ் அவர்களாலும் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் 1971ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் இலங்கையின் மூலை முடுக்கெல்லாம் இவர்களின் மேடை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இசை மேடைகள் எல்லாம் தேனிசை கானங்களால் நிரம்பி வழிந்தன. திரைப்படப் பாடல்களை மட்டுமே வழங்கி வந்த ஏனைய இசைக்குழுக்களிலிருந்து வேறுபட்டு வித்தியாசமாகச் சொந்தப் பாடல்களையூம் சேர்த்து வழங்கும் தனித்துவமான இசைக்குழுவாக ஷஷபரமேஸ் கோணேஸ் இசைக்குழுவினர் திகழ்ந்தனர் என்று சொன்னால் அது மிகையாகாது.

மேடை நிகழ்ச்சிகளில்இ பாடல்களை மக்கள் காதுகளில் சரியாகக் கொண்டு சேர்க்கும் பணி ஒலியமைப்புக்கே உரியதாகும். இவர்களுக்கு அந்தப் பணியை செய்யும் சந்தர்ப்பம் மகா மினி சவூண்ட்ஸ் ஆகிய எமக்கு வாய்த்தது. யாழ்ப்பாணத்தில் நாம் இயங்கி வந்தாலும் கூட திருகோணமலையில் இருந்து எம்மை இவர்கள் ஒழுங்கு செய்வார்கள். நான் யாழ்ப்பாணத்தில் இருந்து இ.போ.ச. பேரூந்தில் ஒலியமைப்புக் கருவிகளுடன் அங்கு சென்று பின் இவர்களுடன் இணைந்து திருகோணமலை மட்டக்களப்பு என்று பல மாவட்டங்களிலும் ஊர்களிலும் நிகழ்ச்சிகள் செய்தமை என்னால் இன்னும் மறக்க முடியாததாகும்.

அதே போல் இவர்கள் அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்து நிகழ்ச்சிகள் செய்த காலங்களிலும் எமது ஒலியமைப்பையே பயன்படுத்துவார்கள். யாழ்ப்பாணத்தில் ஸ்ரீதர் திரையரங்கு நெல்லியடி வல்வெட்டித்துறை என யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் இவர்கள் இசை மழையில் மக்களை நனைய வைத்தனர் எனலாம்.

மேலும் 1977ஆம் ஆண்டு முதல் 1983 வரையான காலப்பகுதியில் திரு. கோணேஸ் அவர்கள் தனியாக ஷஷகோணேஸ் ஓகெஸ்ரா என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியமையூம் இப்போதும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளது. (அப்போதும் எனது ஒலியமைப்பையே கோணேஸ் அவர்கள் பயன்படுத்தினார்.) மேலும் அந்தக் காலப்பகுதியில் இந்தியாவில் இருந்தும் கொழும்பு உட்பட பிற மாவட்டங்களில் இருந்தும் கலைஞர்களை வருவித்து யாழ்ப்பாணத்தில் தங்க வைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர் கோணேஸ் அவர்கள் என்பதை இங்கு சொல்லியே ஆக வேண்டும். அத்தகைய கலைஞர்களில் முக்கியமாக குறிப்பிடத்தக்கவர் மிஸ்சின் பப்பா|| என்று செல்லமாக அழைக்கப்பட்ட சக்ஸ்போன் வாத்தியக் கலைஞர்.

இவர்களுக்கு நான் ஒலிபரப்பு செய்த காலங்கள் அந்த அனுபவங்கள் எப்போதும் மகிழ்ச்சியூடன் நினைவு கூரத்தக்கது. அதாவது மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தால் சரியாக டாண் என்று 6 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு குறித்த நேரத்தில் நிறைவு பெறும். சீருடைய அணிந்த கலைஞர்கள்! இயன்றளவு இயற்கையான கருவிகைள வாசித்தல் இசைக் குறிப்புகளை பயன்படுத்தல் இப்படி நிறையச் சொல்லலாம். அந்த நாட்களில் இது எல்லாம் புதிய அனுபவங்களே.

இவர்களுடனான எனது உறவு அன்றிலிருந்து இன்று வரை சுமூகமாகவூம் இனிமையாகவும் தொடர்ந்து வருவதை நான் மிகவும் மகிழ்வூடன் இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன். இவர்களின் இசைப்பணி மென்மேலும் சிறக்க வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்தி விடைபெறுகின்றேன்.

http://mpkonezsh.com/ஈழத்தில்-பரமேஸ்-கோணேஸ்/?fbclid=IwAR3bhQCwr54cCOV3UtIdWEs9vrcXC-vh1w-wELy6luvFs81dIIr8j8BGDq0

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் குழாம் அறிவிப்பு   By Mohamed Azarudeen -   © BCCI   தற்போது நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாதம் 24ஆம் திகதி ஆரம்பாகும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் நியூசிலாந்துடன் விளையாடவுள்ளது. இந்த T20 தொடரின் பின்னர் இந்திய – நியூசிலாந்து அணிகள் இடையில் 3 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களும் இடம்பெறவுள்ளன. இந்த சுற்றுப்பயணத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் மோதும் 15 பேர் அடங்கிய இந்திய ஒருநாள் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.  அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் குழாத்தில் முன்வரிசை துடுப்பாட்ட வீரரான சிக்கர் தவான் தோற்பட்டை உபாதை காரணமாக விலகியிருக்கின்றார். அண்மையில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரினை வெற்றி கொள்வதில் முக்கிய பங்கு வகித்த சிக்கர் தவான் தற்போது விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான  பிரித்வி சாஹ் மூலம் இந்திய ஒருநாள் குழாத்தில் பிரதியீடு செய்யப்பட்டிருக்கின்றார்.  இதுவரையில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் பெறாத பிரித்வி சாஹ் நியூசிலாந்தின் பதினொருவர் அணிக்கு எதிராக அண்மையில் இடம்பெற்ற List A போட்டி ஒன்றில் 150 ஓட்டங்கள் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரித்வி சாஹ்வின் மாற்றம் தவிர இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற அதே அணியினையே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் களமிறக்குகின்றது.  அதன்படி, இருக்கும் இந்திய ஒருநாள் அணியின் துடுப்பாட்டம் அதன் அணித்தலைவர் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் லோக்கேஷ் ராகுல் ஆகியோர் மூலம் பலப்படுத்தப்படுகின்றது.  இவர்கள் ஒருபுறமிருக்க ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி சாஹ் மற்றும் மனீஷ் பாண்டே ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணிக்கு மேலதிக துடுப்பாட்ட வீரர்களாக வலுச் சேர்க்கின்றனர். இந்திய அணியின் பந்துவீச்சுத் துறையினை நோக்கும் போது அதன் வேகப் பந்துவீச்சுத் துறை ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சமி, நவ்தீப் சைனி போன்றோரினால் பலப்படுத்தப்பட குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் ரவிந்தீர ஜடேஜாவுடன் இணைந்து சுழல் பந்துவீச்சாளர்களாக இந்திய கிரிக்கெட் அணிக்கு பலம் சேர்க்கவுள்ளனர். நியூசிலாந்து – இந்திய அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி ஹேமில்டன் நகரில் ஆரம்பமாகின்றது. இந்திய ஒருநாள் குழாம் 
  • நான் கேட்ட அளவில் அவர் உச்சரிப்புத்தான் தமிழ்-தனமாக இருந்ததே ஒழிய மொழிநடையில் பிழையேதும் இல்லை. தவிரவும் ஒரு முன்னாள் போராளி, இந்தளவுக்காவது முயற்சிக்கிறாரே? எமது பிரச்சினைகள் பற்றி எடுத்துச் சொல்ல, நெஞ்சுரமும், பிரட்சினை பற்றிய தெளிவான புரிதலுமே போதும். மொழியை பார்த்துக்கொள்ள ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் போதும். பிரபாவும் தமிழ்செல்வனும் எடுத்து சொல்லாததையா நன்கு படித்த, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் சம்பந்தனும், சுமந்துரனும் விக்கியும் கூறி விட்டார்கள்? குருசாமியை படித்தவர் என வரவேற்கும் நீங்கள், அந்த படித்தவரை நியமிக்கும், நீங்கள் ஆதரிக்கும் நல்ல முடிவை, எடுத்தது செல்வம் என்ற படிக்காத முன்னாள் ஆயுததாரி என்பதை மறுக்க முடியுமா? செல்வத்தின் மீதோ அவரின் அரசியல் மீதோ எனக்கு துளியூண்டும் நம்பிக்கை இல்லை. ஆனால் இதற்கும் படிப்புக்கும் மொழி ஆற்றலுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.  
  • உபாதைக்குள்ளாகிய இஷாந்த் சர்மா நியூஸி. டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவாரா? By Mohammed Rishad -     தோள்பட்டை காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் நியூஸிலாந்து தொடரில் இருந்து விலகிய நிலையில், வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவும் கணுக்கால் காயம் காரணமாக நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ரஞ்சிக் கிண்ண போட்டியில் டெல்லி அணிக்காக இஷாந்த் சர்மா விளையாடினார். விதர்பா அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் பந்துவீசும் போது இஷாந்த் சர்மாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலி தாங்க முடியாத இஷாந்த் சர்மா பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார்.  அதன்பின் இஷாந்த் சர்மாவுக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்–ரே பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இஷாந்த் சர்மாவின் கணுக்கால் தசைநார் கிழிந்துள்ளது. ஆனால் எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை.  இந்த தசைநார் கிழிவு சற்று தீவிரமானது என்பதால் குறைந்தபட்சம் 6 வாரங்கள் ஓய்வில் இருக்க இஷாந்த் சமாவுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.  இதனால் நியூஸிலாந்துக்கு எதிராகப் பெப்ரவரி 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா பங்கேற்க வாய்ப்பில்லை என்று டெல்லி கிரிக்கெட் அமைப்பின் பொதுச்செயலாளர் வினோத் திஹாரா தெரிவித்துள்ளார். ஆனால், பிசிசிஐ விதிமுறைப்படி, பிசிசிஐ சார்பில் மருத்துவர்கள் குழு இஷாந்த் சர்மாவைப் பரிசோதித்து, ஸ்கேன், எக்ஸ்–ரே போன்ற ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அதன்பின் இறுதியாக பிசிசிஐயின் முடிவு அறிவிக்கப்படும்.  நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இந்த காயத்தால் அவர் அணியில் இடம் பெறுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  இந்த நிலையில், இஷாந்த் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக டெஸ்ட் தொடருக்கு இளம் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறலாம் என இந்திய கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.thepapare.com/ishant-sharma-suffers-ankle-injury-ahead-of-new-zealand-test-series-tamil/
  • ஷேன் வோர்னின் அணிக்கு பயிற்சியளிக்கும் சச்சின் டெண்டுல்கர்   By Mohammed Rishad -   ©Getty image   அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டுவதற்கான நல நிதி கிரிக்கெட் போட்டியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர்களான ரிக்கி பொண்டிங், ஷேன் வோர்ன் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் பெயரிடப்பட்டுள்ளன.  ரிக்கி பொண்டிங்கின் அணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் கோர்ட்னி வோல்ஷ் பயிற்சியாளராகவும், ஷேன் வோர்ன் தலைமையிலான அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பாக எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி புஷ்பயர் கிரிக்கெட் பேஷ் என்ற பெயரில் இந்த கண்காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.  காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள தீயணைப்பு வீரர்கள், மீட்பு மற்றும் நிவாரண பணியாளர்கள், தன்னார்வலர்கள், அவசரகால பணியாளர்கள் ஆகியோரை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்படும். இந்தப் போட்டியின் மூலம் கிடைக்கும் டிக்கெட் கட்டணம் அனைத்தும் காட்டுத் தீயை அணைக்க உதவி வரும் ரெட் க்ரொஸ் அமைப்புக்கு வழங்கப்பட உள்ளது. இந்தப் போட்டியில் ரிக்கி பொண்டிங், ஷேன் வோர்ன், ஜஸ்டிங் லேங்கர், ஆடம் கில்கிறிஸ்ட், பிரட் லீ, ஷேன் வொட்ஸன், அலெக்ஸ் பிளாக்வெல், மைக்கல் கிளார்க் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்;. இந்நிலையில் ரிக்கி பொண்டிங் அணிக்கு சச்சின் டெண்டுல்கரும், ஷேன் வோர்ன் அணிக்கு கோர்ட்னி வோல்ஷும் பயிற்சியாளர்களாகச் செயல்படுவார்கள் என்ற தகவலை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைவர் கெவின் ரொபர்ட்ஸ் வெளியிட்டுள்ளார்.  இதேவேளை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி கென் ரொபர்ட் கூறுகையில், “சச்சின் டெண்டுல்கர், கோர்ட்னி வோல்ஷ் இருவரின் பங்களிப்பையும் நாங்கள் மனமுவந்து வரவேற்கிறோம்.  இருவரும் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவுஸ்திரேலிய மக்கள் இந்தப் போட்டியை நேரில் பார்க்க வந்து நிதியுதவி அளிக்க வேண்டும்” என தெரிவித்தார்.  அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உருவாகியுள்ள காட்டுத் தீயால் இதுவரை 29 பேர் பலியாகியுள்ளார்கள். 2,000 மக்கள் வீடுகளை இழந்துள்ளார்கள். இந்தக் காட்டுத் தீயில், 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் பலியாகின.  சுமார் 60 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு காட்டுத் தீக்கு இரையாகியுள்ளன. http://www.thepapare.com/sachin-tendulkar-courtney-walsh-to-coach-aussie-bushfire-relief-match-tamil/
  • மத்திய வங்கி மோசடிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து இரண்டு நாள் விவாதம்!        by : Jeyachandran Vithushan மத்திய வங்கி பிணைமுறி ஊழல் மோசடிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றில் இரண்டு நாள் விவாதம் இடம்பெறவுள்ளது. அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறும் முதல் நாடாளுமன்ற அமர்வின்போது இந்த விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பான தடயவியல் கணக்கறிக்கையை சபையில் சமர்பிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று நடவடிக்கை எடுத்திருந்தார். அந்தவகையில் இன்று (புதன்கிழமை) தடயவியல் கணக்காய்வு அறிக்கையின் பிரதியை தான் பெற்றுக்கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்த மாதம் இடம்பெரும் நாடாளுமன்ற அமர்வின்போது இந்த விவகாரம் குறித்து விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/மத்திய-வங்கி-மோசடிகள்-தொ/