• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • இந்தியா எந்த காலத்திலும் இலங்கைத்தீவில் வேறு ஒரு நாடு உருவாக இடமளிக்காது. இலங்கைத்தமிழர் இந்தியாவிடம் ஓடுவது தொடரும் வரை, இந்தியா இலங்கையில் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும். இந்தியர்கள் இலங்கை பிரச்சினையில் தலையிடாதிருப்பதே இலங்கைத்தமிழருக்கு செய்யும் பெரும் நன்மையாக இருக்கும்.  தமிழருக்கு தனிநாடு வேண்டுமென்றால், தமிழ்நாட்டு தமிழரே அதற்கானவற்றை செய்ய வேண்டும், இலங்கை தமிழரை அழிக்காமல்.
    • தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆரல்வாய் மொழி பகுதியில் 2400 ஏக்கர் பரப்பளவில் இம்மாதிரி காற்றாலைகள் நிறுவப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் கயத்தார் அருகிலும் இம்மாதிரி காற்றாலைகள் உள்ளன.
    • "யார் யாருக்கெல்லாமோ தனிநாடு அமையுது, உசிரைக் குடுத்து போராடியும் சில பரதேசிகளினால் தடைபடுகிறது. இனியாவது நல்லது நடந்தால் சரி..!"
    • -சுப்பிரமணியம் பாஸ்கரன்  தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் எண்ணம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.  பூநகரி - வாடியடி சந்தைக்கான கட்டடத்தொகுதியைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு, பதவி ஏற்ற நாளிலிருந்து, “சிங்கள - பௌத்த மக்களின் வாக்குகளால் மட்டுமே, நான், இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டேன்” என்கிற மமதையில் கூறிக்கொண்டு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.  இதுவரை, வடக்கு மாகாணத்துக்கு ஆளுநரைக் கூட தெரிவுசெய்ய மனம் இல்லாதவர், தமிழர்களுக்கான பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பாரெனக் கேள்வியெழுப்பிய சிறிதரன் எம்.பி, இந்திய விஜயத்தின் போது, இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ் விடயங்களை, இந்தியாவில் வைத்தே நடைமுறைப்படுத்த முடியாது எனக் கூறுபவர், தமக்கான அதிகாரங்களைத் தருவாரா எனவும் வினவினார். எமது மக்களின் இலட்சக்கணக்கான கொலைகளுக்குக் காரணமான ஒரு போர்க் குற்றவாளியாக இருப்பவர், தம்மை இன்னும் அரவணைத்துச் செல்லும் மனப்பாங்குக்கு வரவில்லையெனவும், அவர் சாடினார்.  எனவே, தமக்கான உரிமைகள் கிடைக்கப்பெற்றால், தமது பிரதேசத்துக்கான அபிவிருத்திப் பணிகளை, தாம் சுயமாகவே மேற்கொள்வோமெனவும், சிறிதரன் கூறினார்.  http://www.tamilmirror.lk/வன்னி/பிரச்சினைகளைத்-தீர்க்கும்-எண்ணம்-கோட்டாவுக்கு-இல்லை/72-242345
    • பப்புவா நியூ கினியாவின் ஓர் அங்கமாக இருந்து வரும் போகைன்வில், தனி சுதந்திர நாடாக பிரியவுள்ளது. இயற்கை வளங்கள் நிறைந்த பிராந்தியமான போகைன்வில்லில்,  இன ரீதியாக பாரபட்சம் காட்டப்படுவதாகவும், பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவதாகவும் கூறி, தனி நாடு கோரிக்கை எழுந்தது. இதற்காக 1988ஆம் ஆண்டு முதல் 1997 வரை நடந்த உள்நாட்டு போரில் சுமார் 20ஆயிரம் பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 2005ஆம் ஆண்டு போகைன்வில் தன்னாட்சி அதிகாரத்தை பெற்ற நிலையில், தனி நாடு அமைப்பது தொடர்பாக அண்மையில் மக்களிடம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தனி நாடு கோரும் முடிவுக்கு ஆதரவாக ஏராளமானோர் வாக்களித்தனர். இதனால் போகைன்வில் புதிய தனி நாடாக அமையவுள்ளது. போகைன்வில்லின் மக்கள் தொகை, சுமார் மூன்று லட்சம் பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. https://www.polimernews.com/dnews/92378/தனி-நாடாகிறது-போகைன்வில்..